சபாஷ் – யோகிஜி தருகிறார் – மாடு மேய்க்கும் வேலை….!!!


அப்போது – பகோடா …
இப்போது – மாடு மேய்க்கும் வேலை…

ஜெய் உத்தர் பிரதேஷ்…!!!

LUCKNOW: உத்தர பிரதேசத்தில் பசுக்களின்
நலத்திட்டத்துக்கும் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கும்
சேர்த்து முதல்வர் யோகி ஆதித்யநாத் புதிய திட்டம்
ஒன்றை அறிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் இளைஞர்களின் வேலை
வாய்ப்புக்காகவும் அதே சமயம் பசுக்களின் நலனுக்காகவும்
“முக்கிய மந்திரி பி சஹாரா கவு வன்ஷ் சபாகிதா
யோஜனா” (….????? ) என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.

இதுகுறித்து உத்தர பிரதேச அரசு வெளியிட்ட
அறிக்கையில் “2012 ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி
மாநிலத்தில் 2.46 கோடி கால்நடைகள் இருக்கின்றன.
இதில் 10 முதல் 12 லட்சம் கால்நடைகள்
உரிமையாளர்களின் பராமரிப்பின்றி சாலைகளிலும்
தெருக்களிலும் அலைகின்றன.

இந்த கால்நடைகளைப் பராமரிப்பதற்கான
அரசு சார்பில் 523 கோசாலைகள் செயல்படுகின்றன.
இருப்பினும் சாலைகளில் அலையும் பசுக்களை
பராமரிக்க முடியாத நிலை உள்ளது. இதற்காக
புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக
ஒரு லட்சம் பசுக்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
பசுக்களை பராமரிக்க விரும்புவோ ஒவ்வொருவருக்கும்
அவர்கள் கேட்கும் பசுக்கள் தரப்படும்.

இதுபோல் ஒருவர் எத்தனை பசுக்களை
வேண்டுமானாலும் சொந்தப் பராமரிப்பில் வளர்க்கலாம்.

பசுக்கள் ஒவ்வொன்றின் பராமரிப்புச் செலவுக்கு
தினம் தலா 30 ரூபாய் வீதம் மாதந்தோறும்
ஒரு பசுவின் பராமரிப்புக்கு ரூ. 900 வழங்கப்படும்.

( ஒரே ஒரு சின்ன சந்தேகம் –
யோகிஜி பெரிய மனது பண்ணி
தெளிவு படுத்த வேண்டும்…!

இந்த பணம் பசுக்களின் தீனிக்காக
போகிறதா…?
அல்லது அவற்றை வளர்ப்பவரின்
வயிற்றுக்கு போகிறதா
என்பதை எப்படி உறுதி செய்வது….?

பசுக்களை பட்டினி போட்டு விட்டு,
வளர்ப்பவனே வளர்ந்தால்…???

அவர்களை கவனிக்க, யாராவது
தண்டல்’காரர்கள் நியமிக்கப்படுவார்களா…? 🙂 🙂 )

https://www.ndtv.com/india-news/yogi-adityanath-government-looks-to-cows-for-new-employment-opportunities-2081294

.
———————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to சபாஷ் – யோகிஜி தருகிறார் – மாடு மேய்க்கும் வேலை….!!!

  1. Subramanian சொல்கிறார்:

    வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
    வேலை கொடுக்க மாடும் உதவும்.

    .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.