370-வது பிரிவு – நீக்கப்படுவதை வரவேற்போம்…


மிகுந்த சஸ்பென்ஸுடன் இருந்த காஷ்மீர் பற்றிய
அறிவிப்பு ஒருவழியாக இன்று வெளிவந்து விட்டது.

‘‘ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும்
370-வது சட்டப்பிரிவை ரத்து செய்வது என மத்திய அமைச்சவை
முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதா தாக்கல் செய்யப்டுகிறது’’
என்று பாராளுமன்றத்தில், உள்துறை அமைச்சர் திரு.அமீத் ஷா
அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.

பாஜக அரசு எடுத்துள்ள முடிவு என்பதாலேயே இதை எதிர்க்க
வேண்டிய அவசியமில்லை என்பது என் கருத்து.

இந்த நாட்டின் பொதுநலனை கருத்தில் கொண்டு பார்த்தாலும்
சரி – காஷ்மீர் மாநில மக்களின் நலனாக இருந்தாலும் சரி –
இது ஒரு வரவேற்கத்தக்க, நல்ல முடிவே.

கடந்த 70 ஆண்டுகளாக இது ஒரு முள்ளாகவே நமது
தொண்டையில் உறுத்திக்கொண்டிருந்தது.

அரசியல்வாதிகள் அல்லாத –
காஷ்மீர் தரை நிலவரம் புரிந்தவர்கள்
இதை நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள்.

நான் கடந்த முறை காஷ்மீர் சென்றபோது –
குறிப்பாக பொதுமக்கள், வியாபாரிகள், வாகன ஓட்டுநர்கள்,
ஓட்டல்களில் பணிபுரிபவர்கள் என்று
பல தரப்பட்ட மக்களிடம் பேசிக்கொண்டிருந்தேன்…. அவர்களில்
பெரும்பாலானவர்களுக்கு – இந்தியா மீதோ,
இந்தியாவின் இதர மாநில மக்களின் மீதோ எந்தவித விரோதமோ,
எதிர்ப்போ இல்லை என்பதை என்னால் உணர முடிந்தது.

அவர்களின் முக்கியமான பிரச்சினைகள் – வேலையின்மை…
பிள்ளைகளுக்கு நல்ல உயர்கல்வி கிடைக்காமை., வறுமை
ஆகியவை தான்.

அவர்களிடையே, இந்தியா மீதான விரோத மனப்பான்மையை
சுயநல அரசியல்வாதிகளும், பாகிஸ்தான் ஆதரவு
மனப்பான்மையுள்ள சிலரும் மட்டுமே ஊதிப்பெரிதாக்கி
வளர்த்து ஆதாயம் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தங்களது சுயநலத்திற்காக –
காஷ்மீரத்து சாதாரண அப்பாவி மக்களை,
தொடர்ந்து வறுமையில் வாடவும்,
கல்வியறிவோ, வேலைவாய்ப்போ கிடைக்காமலும்,
புதிய தொழில்களோ, தொழிற்சாலைகளோ
அங்கு வந்து விடாமலும் செய்து அவர்களை
அல்லாட விட்டுக் கொண்டிருந்தார்கள்.

மனதளவில் சாதாரண காஷ்மீர் மக்களிடையே
இந்த இணைப்பிற்கு பெரிய அளவில்
எதிர்ப்பு இருக்க வாய்ப்பில்லை.
ஆனால், சூழ்நிலை காரணமாக அவர்கள் தங்களது
மன ஓட்டத்தை வெளிப்படையாக தெரிவிக்கவும்
மாட்டார்கள்.

துவக்கத்திலேயே தற்காலிகமான ஏற்பாடு என்று சொல்லப்பட்ட
இந்தப் பிரிவு நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே விலக்கிக்
கொண்டிருக்கப்பட வேண்டும். இப்போது கோடாலி கொண்டு
பிளந்தெடுக்க வேண்டியிருக்கிறது.

அப்போது இந்த சட்டப்பிரிவை கொண்டு வந்த நேருஜியை
நான் குறை கூற மாட்டேன்…. அப்போதிருந்த சூழ்நிலை வேறு.
ஆனால், குறைந்த ஆண்டுகளிலேயே இது விலக்கிக்
கொண்டிருக்கப்பட வேண்டும்…..

எப்படி இருந்தாலும் சரி… இந்த மசோதா பாராளுமன்றத்தின்
இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு விடும் சூழ்நிலையே
காணப்படுகிறது.

காஷ்மீர் மக்களை இந்த நாட்டின் இதர மக்களுடன் சேர்ந்து
விடாமல் தடுத்து வந்ததன் மூலம் – காஷ்மீரைச் சேர்ந்த
இரண்டு-மூன்று பெரிய அரசியல் குடும்பங்கள் மட்டுமே
இதனால் தொடர்ந்து ஆதாயம் பெற்று வந்தன என்பது உண்மையே.
அவர்கள் இதை தொடர்ந்து எதிர்க்கவும் செய்வார்கள்.

தொடர்ந்து பாகிஸ்தான் நம்மை ப்ளாக்மெயில் செய்யவும்,
தீர்க்கப்படாத காஷ்மீர் பிரச்சினை அவர்களுக்கு உதவி வந்தது.

—————————–

எதிர்க்கட்சிகள் நிச்சயமாக இதை வரவேற்காது.
எனவே, புதிய சட்டம் அமலுக்கு வருவதையோட்டி,
துவக்க காலங்களில் நிறைய சட்டம் ஒழுங்கு
பிரச்சினைகள் ஏற்படலாம்.

மத்திய அரசு மிக நியாயமாகவும், நிதானமாகவும்,
பொறுமையுடனும் செயல்பட்டு, காஷ்மீரின் சாதாரண
பொதுமக்களுக்கு பிரச்சினைகள் இல்லாமல்
பார்த்துக் கொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையிலும்,
அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது.

இந்த மசோதா குறித்து, விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய
விஷயங்கள் இன்னும் இருக்கின்றன. நிதானமாகச் செய்வோம்.

உணர்வுபூர்வமாக பாதிப்புகளும், உளைச்சல்களும் இருந்தாலும்
கூட – எதிர்காலத்தில், காஷ்மீர் மக்களுக்கு இதனால் நிச்சயம்
நன்மையே உண்டாகும் என்று நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்.

எனவே, இந்த மாற்றத்தை வரவேற்போம்…
நமது சகோதரர்களாக காஷ்மீர் மக்களை அரவணைத்து
ஏற்றுக்கொள்வோம்.

.
————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to 370-வது பிரிவு – நீக்கப்படுவதை வரவேற்போம்…

 1. Sanmath AK சொல்கிறார்:

  Dear KM Sir,

  My experience with Kashmir, but it was before 2014, was that Kashmiris prefer to stay with India to get benefited like other states. Majority people over there have clearly understood the need for more jobs and also understood of negative impact on existing business in case Kashmir gets closer to Pakistan, as they were witnessing the state of POK. Article 370 is a special status. Scrapping that would have psychological negative impact in the minds of Muslims in Kashmir, as the Jammu hindus’ perspective is entirely different. I dont think, scrapping of article 370 would bring any good things to Kashmir( I am not sure here, how scrapping this would benefit those people). Above all, why this is being brought by BJP is a different reason and making JK an UT with legislature has a very long history(for Jana Sangh). Home-coming is on the way……

  Saddest part is, Mr.H.Raja’s interview today once this news broke out. The content explains the party’s aspirations.

  Thanks,
  Sanmath AK

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   .

   சன்மத்,

   நான் ஏற்கெனவே எழுதியிருப்பது போல்,
   பொதுவாக – சாதாரண காஷ்மீர் பொதுமக்களுக்கு
   இந்தியா மீதும், இந்தியர்கள் மீதும் எத்தகைய
   வெறுப்பும் இல்லை.

   இன்னும் சொல்லப்போனால், அவர்களுக்கு,
   இது குறித்தெல்லாம் தீவிரமாக எந்த கருத்தும் இல்லை.
   அவர்கள் கவலையெல்லாம் அவர்களின்
   அன்றாட ஜீவனம் குறித்தது தான்.

   பாவம்… அங்கே பெரும்பாலான மக்கள் மிகவும்
   ஏழ்மையான நிலையில் தான் வசிக்கிறார்கள்.
   இந்தியாவின் மற்ற மாநிலங்களில் ஏற்பட்டுள்ள
   எத்தகைய வளர்ச்சியும், கடந்த 70 ஆண்டுகளில்
   அங்கே ஏற்படவில்லை.

   இதற்கு முக்கியமான காரணம்..
   வெளியிலிருந்து யாரும் வந்து அங்கு சொந்தமாக
   தொழிற்சாலை துவங்கவோ, வியாபாரம் செய்யவோ,
   சொத்து வாங்கவோ சட்டப்பிரிவு 370 தடை
   விதிக்கிறது.

   காஷ்மீரில் பெரிய பெரிய
   தொழிற்சாலைகள் எதுவும் இல்லை;
   பெரிய பெரிய ஓட்டல்கள் இல்லை;
   வர்த்தக நிறுவனங்களோ, அவற்றின்
   கிளைகளோ இல்லை.
   நல்ல உயர்கல்வி நிறுவனங்கள் இல்லை.
   சிறப்பான மருத்துவமனைகள் இல்லை.

   வெளியாருக்கு சொத்துரிமை தடைகளை நீக்கினால் –
   நிறைய தொழில் முனைவர்கள் அங்கே முதலீடு செய்ய
   வருவார்கள்…காஷ்மீர் மக்கள் உள்ளுக்குள்ளே அதை
   விரும்புகிறார்கள். ஆனால் மக்களில் சிலருக்கு
   (அவர்கள் அதிகம் போனால் 10 % இருக்கலாம்…)
   இந்தியாவின் மீது துவக்கத்திலிருந்தே ஒரு வெறுப்புணர்வு
   இருக்கிறது. மதரீதியாக அவர்களுக்கு பாகிஸ்தானுடனான
   நெருக்கமே பிடித்திருக்கிறது.

   70 ஆண்டுகளாக அங்கே அரசியலில் கோலோச்சுவது
   மாற்றி மாற்றி இரண்டு-மூன்று குடும்பங்கள் தான்.
   ஏற்கெனவே சொன்னது போல் – அவர்களுக்கு
   காஷ்மீரில் ஒரு பங்களா, டெல்லியில் ஒரு பங்களா,
   துபாயில் ஒரு லக்சுரி ஃப்ளாட், இங்கிலாந்தில்
   ஒரு பங்களா என்று படு வசதியாக இருக்கிறார்கள்.
   அவர்களது வாரிசுகள் அயல்நாடுகளில்
   உயர்கல்வி கற்கிறார்கள்.

   வெளியேயிருந்து யாரையும் அனுமதிக்காமல் தடுப்பது,
   உள்ளூரில் பரம்பரை அரசியல் அதிகாரம் செய்ய
   அவர்களுக்கு வசதியாக இருக்கிறது.

   எனவே, உள்ளூர் மக்களை அவர்கள் எப்போதும்
   இந்திய அரசுக்கு எதிராக தூண்டிவிட்டு டென்ஷனிலேயே
   வைத்திருக்கிறார்கள்.

   நிறைய இளைஞர்கள் 10-வது வரை படித்து விட்டு,
   நல்ல வேலை எதுவும் கிடைக்காமல், பெயருக்கு
   எதையாவது செய்து வருகிறார்கள். காஷ்மீருக்கு
   டூரிஸ்டுகள் வருவது தான் அவர்களுக்கான ஒரே
   வேலை வாய்ப்பு… இதுவும் நின்று போனால்,
   அவர்கள் பாடு பெரும் திண்டாட்டம் தான்.

   எனவே, பிரிவு 370 நீக்கப்படுவது, காஷ்மீரில் புதிய
   தொழில் மற்றும் வர்த்தக வாய்ப்புகளை உருவாக்க
   பெரிய அளவில் உதவும். வெளி மாநிலங்களிலிருந்து
   நிறைய பேர் புதிய தொழில்களை துவங்கவும்,
   வர்த்தகம் தொடங்கவும் வருவார்கள்.
   நல்ல உயர்கல்வி நிறுவனங்கள் வரும்.
   மருத்துவ மனைகள் வரும்.
   காஷ்மீர் சீதோஷ்ணத்திற்கு பொருத்தமான –
   மருந்து உற்பத்தி, பழச்சாறுகள் உற்பத்தி என்று
   பல வித தொழிற்சாலைகளை அங்கே துவங்கலாம்.

   வேலைவாய்ப்புகள் உருவானால் தான்,
   அந்த மக்களின் வறுமை நீங்கும். வாழ்க்கைத்தரம்
   உயரும்.

   இந்த காரணங்களால் தான் நான் இதை ஆதரித்து
   எழுதினேன்.

   மற்றபடி பாஜக இந்த மசோதாவை கொண்டு வந்தது
   காஷ்மீர் மக்களின் நலனைக் கருதியல்ல –
   அவர்களது நோக்கங்கள் வேறு என்பதை
   நான் அறிவேன்.

   காஷ்மீர் மக்களுக்கும்,
   பொதுவாக இந்த தேசத்திற்கும்
   இது நல்லது என்பதால் தான்,
   நான் இதை வரவேற்கிறேன்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   சன்மத்,

   ஹெச்.ராஜாவின் பேட்டியை நான் எங்கும்
   காணவில்லையே… எதில் வந்தது…?
   லிங்க் கொடுங்களேன்.

   -காவிரிமைந்தன்

 2. ஜிஎஸ்ஆர் சொல்கிறார்:

  ஆனால் சார் அதை ஏன் யூனியன் பிரதேசமாக மாற்ற வேண்டும் இது அடிப்படை அரசியல் உரிமை சாசனத்துக்கு எதிராணது இல்லையா?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ஜிஎஸ்ஆர்,

   காஷ்மீரின் அந்தஸ்தை சுய அதிகாரம் உள்ள மாநிலம்
   என்பதிலிருந்து, யூனியன் பிரதேசம் என்கிற அளவிற்கு
   குறைப்பது நிச்சயம் தவறு தான்.

   மக்கள், மற்றும் அரசியல் கட்சிகள் கொடுக்கும்
   அழுத்தத்தைப் பொறுத்து, மத்திய அரசு
   இதை மாற்றும் என்றே நம்புகிறேன்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • ஜிஎஸ்ஆர் சொல்கிறார்:

    வணக்கம் சார்,
    இப்பவும் கூட 370 வது பிரிவை ஒத்த சலுகைகளை வழங்கும் அளவில் Himachal Pradesh at 371, Article 371 A at Nagaland, Article 371 B at Assam, Article 371 at Manipur, Article 371 F at Sikkim, and Article 371 G at Mizoram இருக்கிறதாக செய்திகளில் காண முடிகிறது ஆனால் இதெயெல்லாம் விட்டு விட்டு காஷ்மீரில் மட்டும் இவ்வளவு அவசரமாக செயல்படுத்த வேண்டியதன் பின்னனியில் வேறெதுவும் மறைமுக திட்டம் இருக்கலாமோ, நேரம் கிடைத்தால் இதை பற்றியும் எழுதுங்கள் சார்

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     ஜி.எஸ்.ஆர்.

     நியாயமான கேள்வி தான். எனக்கும் கூட
     இந்த கேள்வி உண்டு…
     ஆனால் யாரைப் போய் கேட்பது…?

     குறைந்த பட்சம் இன்றைய பாராளுமன்ற
     (லோக் சபா) விவாதத்திலாவது
     எதிர்க்கட்சிகள் இதை கேட்க வேண்டும்.
     பார்ப்போமே -எழுப்புகிறார்களா என்று.

     .
     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

 3. venkat சொல்கிறார்:

  Bold decisions! that is what I like about this Government. May appear as unilateral, undemocratic etc., but that is what the country needs now until all current mess is cleaned up. Such decisions are possible only because they have majority in both houses ( in Rajya sabha its not complete yet ). In order to control Rajya Sabha they need state government MLA. This is the reason why they play cheap politics at state level. We should see this as a ‘sacrifice small fish in order to catch big one’ !!!

  Iam happy!

 4. புவியரசு சொல்கிறார்:

  அய்யா வெங்கட்

  //Such decisions are possible only because they have
  majority in both houses ( in Rajya sabha its not complete yet ).

  ராஜ்ய சபாவில் உங்கள் பாஜகவால் அந்த பில்
  பாஸ் ஆகவில்லை. மற்ற சில எதிர்க்கட்சிகளும்
  இதை அவசியம் என்று எண்ணியதால் தான்
  பாஸ் ஆனது.
  அவர்கள் ஒத்துழைப்பு இல்லையென்றால்
  உங்கள் கட்சி ராஜ்ய சபாவில் மண்ணை கவ்வியிருக்கும்
  என்பதை நினைவில் வைத்துக்கொண்டு ஆட்டத்தை
  குறைத்துக் கொள்ளுங்கள்.

 5. Prabhu Ram சொல்கிறார்:

  காவிரிமைந்தன் சார்,
  நீங்கள் சொல்வது போல், பாஜக, காஷ்மீர் மக்களை பழிவாங்குவதாக நினைத்துக்கொண்டு செய்துள்ள ஒரு நல்ல காரியம்.
  எனவே அவர்கள் எந்தவித பாராட்டுகளுக்கும் தகுதியானவர்கள் அல்ல.
  சரி தானே ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   பிரபுராம்,

   கெட்டது என்று நினைத்து
   நல்லதை செய்தாலும் – சரி…

   நல்லது என்று சொல்லிக்கொண்டு
   கெட்டதை செய்தாலும் – சரி…

   புரிய வேண்டியவர்களுக்கு
   அவசியம் புரியும் …!!!

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.