குங்க்ஃபூ குரங்கு …. (இன்றைய சுவாரஸ்யம்…)


“யாங் யாங்” – தெரியுமா உங்களுக்கு…?
சீனாவில் ஹேஃபேய் விலங்கியல் பூங்காவில்
இருக்கும் ஒரு சிம்பன்ஸி மனிதக்குரங்கு …!!!

இந்த சிம்பன்ஸி மனிதக் குரங்கு சமீபத்தில்
திடீரென்று தனது கூட்டை விட்டு தப்பித்து வெளியே
வந்தது. இதைப் பார்த்த பூங்காவுக்கு வந்திருந்த
பார்வையாளர்கள், அதிர்ச்சியில் உறைந்தனர்.
பலர், குரங்கைக் கண்டு அஞ்சி, தலை தெறிக்க
ஓடினார்கள்.

சிம்பன்ஸியை எப்படியாவது கட்டுக்குள்
வைத்திருக்க வேண்டும் என்று பூங்கா ஊழியர்
ஒருவர் முயன்றார்.

குரங்குக்கும், அந்த மனிதனுக்கும் செம சண்டை…
யாங் யாங், துரத்தி துரத்தி, ஓங்கி ஓங்கி –
குங்க்ஃபூ உதை கொடுத்ததில்
நிலைதடுமாறி கீழே விழுந்தார் அவர்..

தொடர்ந்து ஆட்டம் போட்ட யாங் யாங்,
பூங்காவில் இருக்கும் ஒரு கட்டடத்தின்
மேற்கூரையின் மீது ஏறி, விளையாட்டுக் காட்டியது.
அந்த சமயம் பார்த்து, தூரத்திலிருந்தே மயக்க மருந்து
ஊசியை பயன்படுத்தி யாங் யாங்-ஐப் பிடித்தனர்.

யாங் யாங் ஆட்டத்தை பார்க்க வேண்டாமா…?

சீன செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டிருக்கும் வீடியோ….

…………

………….

கூடவே ஒரு பிபிசி போனஸ் ….

…………..

…………..

.
———————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to குங்க்ஃபூ குரங்கு …. (இன்றைய சுவாரஸ்யம்…)

 1. Prabhu Ram சொல்கிறார்:

  இப்பத்தான் படிச்சேன் –

  //சட்டம் யாராக இருந்தாலும் தன்
  கடமையை செய்யும். அதிமுகவினர்
  தவறு செய்தாலும் பாத்ரூமில்
  வழுக்கி விழுந்து கை உடையும்.
  திமுகவினர் தவறு செய்தாலும்
  பாத்ரூமில் வழுக்கி விழுந்து
  கை உடையும். எடப்பாடி ஆட்சி
  அப்படித்தான் இருக்கும்.
  யாரும் தப்ப முடியாது.”, //

  சூப்பர் மந்திரி இல்லையா சார் ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ” மாவுக் கட்டுகளை ” வரவேற்கிறேன்.
   நிஜமாகவே தவறு செய்கிறவர்களுக்கு
   மட்டுமே அவை
   போடப்படும் வரை….!!! 🙂 🙂 🙂

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.