ரேப்பிஸ்டுகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் போலி சந்நியாசிகள் …..ரேப்பிஸ்டுகளுக்கும், கொலைகாரர்களுக்கும் –
அடைக்கலமும், ஆதரவும், பாதுகாப்பும் கொடுக்கும்
ஒரு மொட்டை வில்லன் எப்படி சாமியாராக
இருக்க முடியும்…?

மொட்டையடித்துக் கொண்டு,
காஷாயம் தரித்தவரை எல்லாம்
இந்த நாட்டின் சராசரி அப்பாவி மக்கள் –
நிஜமாகவே, பெரிய சந்நியாசி, புண்ணியாத்மா
என்று நினைத்துக் கொண்டு விடுகிறார்கள்….

அவர்கள் கால்களில் விழுந்து கும்பிடுவதோடு,
ஆட்சி அதிகாரத்தையும் அவர்களிடம் கொடுத்து
விடுகிறார்கள்.

சந்நியாசிக்கு ஏன் அரசியல் ஆசைகள்…
என்று நம் மக்கள் கேட்பதும் இல்லை;
யோசிப்பதும் இல்லை. அவர்கள் மனதில் மத உணர்வுகளே
முக்கியத்துவம் பெறுகின்றன.

ரேப்பிஸ்டுகளையும், தனக்கு எதிரானவர்களையும்,
சாட்சியங்களையும் – லாரி ஏற்றிக் கொல்லும்
கொலைகாரர்களையும் – தன் கட்சி எம்.எல்.ஏ.க்களாக்கி,

– அவர்கள் துணையுடன் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்து,
ஆட்டம் போடும் மொட்டை சந்நியாசிகளின்
அயோக்கியத்தனங்களை எல்லாம் எத்தனை நாட்களுக்கு
அந்த ஆண்டவனே பொறுப்பான் ….?

இந்து தர்மத்தில் நம்பிக்கையும், ஆழ்ந்த பற்றும்
உடையவர்களும், உண்மையான இந்து மதத்துறவிகளும்,
ஒன்று சேர்ந்து இதையெல்லாம் ஒரு முடிவிற்கு
கொண்டு வர வேண்டும்.

சந்நியாசிகளுக்கு எதற்கு அரசியல் என்று அவர்களே
கேள்வியெழுப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
அப்படியாவது அரசியல் செய்ய வேண்டுமானால் –
முதலில் காஷாயத்தைக் கழட்டு என்று
அவர்களே சொல்ல வேண்டும்.

இந்த மாதிரி மொட்டை வில்லன்கள்
எல்லாம் காவி உடை தரிக்கக்கூடாது;
இதனால் சமூகத்தில் உண்மையான துறவிகளுக்கும் கூட
மரியாதை இல்லாத நிலை ஏற்படுகிறது – இது
வெளிப்படையாக கண்டிக்கப்பட வேண்டிய விஷயம்…

இந்த நிலை இனியும் தொடருமேயானால் –
இத்தகைய கபட சந்நியாசிகளின்,
போலி வேடதாரிகளின் – ஒப்பனைகளை –
பொதுமக்களே கிழித்தெரியக்கூடிய நாள்
அதிக தூரத்தில் இல்லை.

.
———————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to ரேப்பிஸ்டுகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் போலி சந்நியாசிகள் …..

 1. Subramanian சொல்கிறார்:

  இவர்கள் எல்லாம் சந்நியாசிகள் என்று சொல்லிக்கொண்டு
  திரிவதே மிகப்பெரிய அயோக்கியத்தனம்.
  .
  பொறுக்கிகள், கொலைகாரர்கள்; அதிகாரத்தைப் பிடிக்கவும்,
  பிடித்த அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவும்
  எந்த பாவச்செயலையும் செய்யத் துணிந்தவர்கள்.
  இந்த மாதிரி போலிகளை –
  காணும் இடங்களில் காலில் விழுவதற்கு பதிலாக
  காரித்துப்பும் நிலை வந்தால் தான் இந்த நாடு உருப்படும்.

 2. புவியரசு சொல்கிறார்:

  நான் இதை வழிமொழிகிறேன்.
  சட்டத்திற்குட்பட்டு, இவர்களை எந்த அளவிற்கு
  அவமானப்படுத்தினாலும் அது தகும்.

  நாய்கள் ; ஓநாய்கள். சீச்சீ.

 3. Selvarajan சொல்கிறார்:

  அய்யா …! சாமி….யார்…? இடுகையின் படம் அருமை ..தலையில்லததை பாேட்டு அசத்துறிங்க…!

 4. புதியவன் சொல்கிறார்:

  //எப்படி சாமியாராக இருக்க முடியும்…?// – யாரோ ‘நான் தவ வாழ்க்கை வாழுகிறேன்’ என்று சொன்ன ஸ்டேட்மெண்ட் நினைவுக்கு வருகிறது. இதெல்லாம் அரசியல் ஸ்டேட்மெண்ட்ஸ். நாம் மூன்று விஷயங்களைக் கவனிக்கணும்

  1. இப்படிச் சொல்லிக்கிட்டு (தாங்கள் சாமியார்கள், யோகிகள்), தனிப்பட்ட முறைல அவங்க சொத்து சேர்க்கிறாங்களா.

  2. இன்றைய அரசியலில் 60%க்கும் மேல கிரிமினல்கள்தான் அரசியல்ல இருக்காங்க. இதுல கட்சி வித்தியாசமே கிடையாது. சில கட்சிகளில் 90% கிரிமினல்கள் உண்டு. அவங்கள்ள மேயரா இருந்தவங்க கொலை செய்வதும், மேயரைக் கொலை செய்யும் பொதுக்குழு உறுப்பினர்களும், மந்திரியைக் கொலை செய்யும் அமைச்சர்களும் உண்டு. அதுனால கிரிமினல்கள் மீது முழுவதுமாக நடவடிக்கை எடுப்பது எந்தக் கட்சிக்கும் கஷ்டம் என்று நினைக்கிறேன். அங்கொன்றும் இங்கொன்றுமாக நடவடிக்கை எடுக்கிறார்கள்.

  3. பாஜகவில் உள்ள காவி உடை அணிந்த எவரையும் தயவுசெய்து ‘சாமியார்’ என்ற கேடகரியில் சொல்லி உண்மை சாமியார்களின்மீது அவதூறு பரப்பாதீர்கள். 🙂 பாஜக காவி உடையில் உள்ளவங்க முற்று முழுக்க அரசியல்வாதிகள், ‘இந்து மதம்’ என்ற பெயரில் மத்த மதங்களில் உள்ள தீவிரவாதிகள் எப்படி அவங்க அவங்க மத ஆட்களை தவறான கருத்துக்களால் பொல்யூட் செய்கிறார்களோ (வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் நாயக் போல) அதற்கு முற்றிலும் குறைவில்லாதவர்கள் இவர்கள் என்பது என் எண்ணம். மத்திய அரசு, மத்தவங்க மேல எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்குதோ, அதே போன்று இவங்கள் மீதும் எடுக்கணும் என்பது என் ஆசை. என்னைப் பொறுத்த வரையில் இவங்களைக் குறை சொல்ல, மத்த மதத்துக்காரங்களுக்கு யோக்கியதை இல்லை, unless they had openly revolted against their own such people.

 5. Kani சொல்கிறார்:

  //பொதுமக்களே கிழித்தெரியக்கூடிய நாள் அதிக தூரத்தில் இல்லை// கா.மை. அய்யா மன்னிக்கவும் இது இந்த ஜென்மத்திலும் நடக்காது, இந்த நூற்றாண்டிலும் நடக்காது…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.