இது சாத்தியமா…? வெள்ள சமயத்தில், அதிகப்படி நீரை வெளியேற்ற …..!!!


இப்போது தண்ணீர்ப்பஞ்சம் – அலையாய் அலைந்து
கொண்டிருக்கிறோம். இன்னும் 3 மாதங்களில் இதற்கு
நேர்மாறான ஒரு நிலை ஏற்படும். நவம்பர், டிசம்பரில் –
வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கும்போது,

நெல் விவசாயிகள்,
வயல்களில் மழைநீர் /வெள்ளம் தேங்கி விட்டது…
வடியவே இல்லை. பயிர்கள் அழுகுகின்றன என்று
கண்ணீர் விடுவார்கள்…

அத்தகைய நிலையில், வயல்களில் தேங்கியிருக்கும்
அந்த அதிகப்படி வெள்ள நீரை மீண்டும் பூமிக்கடியே அனுப்ப
ஒரு வழி இருந்தால் எப்படி இருக்கும்….?

இங்கே ஒரு விவசாயி அபூர்வமான ஒரு யோசனையை
முன்வைக்கிறார்…. இந்த காணொளியை காணுங்களேன்…

நடைமுறையில் இது சாத்தியமா…?

அடிப்படையில் ஒரு தடங்கல் என் பார்வையில் படுகிறது.

போர்வெல்லில் கீழே ஒரு foot valve இருக்கும்.
அதன் வழியே கீழேயிருந்து தண்ணீர் மேலே போக மட்டும்
தான் அது திறக்கும். மேலே வந்த தண்ணீரை அது மீண்டும்
கீழே போக விடாது. ஒரு பக்கம் மட்டுமே திறக்கும்
வால்வு அது. எனவே வெள்ள நீரை பூமிக்கு உள்ளே அனுப்ப
அந்த வால்வு தடங்கலாக இருக்கும்….

யோசித்தால், இதற்கு ஒரு மாற்று வழி
கண்டு பிடித்து விடலாம்….

வயலில் உள்ள நீரை இறைத்து, கிணற்றில் விடுவது
என்றால் ஒரு பிரச்சினையும் இல்லை.
ஆனால், அதிகபட்சம் 4 அங்குல விட்டமுள்ள போர்வெல்
மூலம், 200-300 அடி ஆழத்தில் கொண்டு போய் தண்ணீரை
விட்டால், அந்த இடத்தில் பூமி அதை சுலபமாக
உறிஞ்சிக்கொள்ளுமா…?

நண்பர்கள் யோசித்து, இதுபற்றி ஏதாவது யோசனை
தோன்றினால் சொல்லுங்களேன்…

.
————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.