” விமரிசனம் ” – காவிரிமைந்தன்


Selvarajan –
29/07/2019

இந்த இடுகை பற்றியது இல்லை — இந்த விமரிசனம் தளத்தை பற்றியது ….!!!

அய்யா …! இன்றோடு 10 ஆண்டுகளை நிறைவு செய்து — 11 -ம் ஆண்டில் பயணத்தை தொடர்கிற ” விமரிசனம் ” தளத்திற்கு எமது வாழ்த்துகள் …!

இந்த பத்து ஆண்டுகளில் இந்த தளம் தொடாத நாட்டுநடப்புகள் இல்லையென்றே கூறலாம் — அவ்வளவு செய்திகள் — அரசியல் — தலைவர்கள் — சமூகம் — பொதுவானவை — கட்டுரைகள் — மொழி — தொடர்கள் — ஆன்மீகம் — என்று பலவித தலைப்புகளை உள்ளடக்கிய பதிவுகள் நாள்தோறும் வெளிவந்து — பல வாசககர்களை தன்வசம் இழுத்து – இணைத்துக்கொண்டு அவர்களின் பின்னூட்டங்களையும் — கருத்து பரிமாற்றங்களையும் , விவாதங்களையும் பிரசுரித்து — தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டு தொடர்வது பெருமையே …!

முதல் ஐந்தாண்டுகள் மத்தியில் ” காங்கிரஸ் ஆட்சியையும் — அடுத்த ஐந்தாண்டுகள் பாஜக { மோடி 1 } ஆட்சியையும் மோடி 2 என்று இன்றுவரை கண்ட தளம் இது என்பது ஒரு வித கொடுப்பனையே … ! நடுநிலை — மேன்மை — மேற்கோள்கள்கள் என்று கடும் உழைப்பில் நிலைத்து நிற்கின்ற தளம் தன் பணி சிறக்க வாழ்த்துகள் .. !! இவ்வளவுக்கும் காரியமாற்றுகிற ” தளத்திதின் கர்த்தா ” திரு காவிரிமைந்தன் அவர்களை பாராட்ட கடமை எமக்கு உண்டு …!

காங்கிரஸ் காலத்தில் எப்படி ” எழுத்துதுணிச்சலோடு ” பதிவுகள் வந்தனவோ அதைப்போலவே…மோடி 1 -ல் மூன்றாண்டுகள் வரை — இடுகைகள் நிறைய வந்தது என்பது தின வாசகர்களுக்கு நன்கு தெரியும் — அதன் பின் இரண்டு ஆண்டுகள் முதல் இன்றுவரை அந்த எழுத்து துணிச்சல் கொஞ்சம் குறைந்ததை யாம் சுட்டிக்காட்டினால் தவறாகாது –அது திரு கா.மை அவர்களுக்குள்ளும் இருக்கும் என நம்புகிறோம் ..!

சாமிகளின் சாகசங்கள் –வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? — போன்ற இன்னும் பல தொடர்களையும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அதன் பிரதமர் – மற்ற மந்திரிகள் — அதன் தலைவரில் இருந்து
கூட்டணி வைத்துள்ள கட்சிகள் என்று — எழுத்து துணிச்சலோடும் — நடு நிலையோடும் விமரிசித்து வந்த தளம் — தற்போது அந்தளவு அந்த போக்கு கொஞ்சம் குறைந்து காணப்படுகிறது என்பது எமது கருத்து — இது தவறாக கூட இருக்கலாம் …!

எழுதுகிற — பதிக்கின்ற ஒவ்வொரு வார்த்தையும் – வரிகளும் பலகாலங்கள் நிலைத்து நிற்பவை என்பதும் — பல ஆண்டுகள் கடந்தப் பின்னும் இந்த தளத்தை வாசிக்கிற ஒருவருக்கு ” பல வரலாற்று ” நிகழ்வுகளை அவர்கள் முன் கொண்டுவந்து பலரைப்பற்றியும் — அரசியலைப்பற்றியும் — நாட்டு நடப்பைப்பற்றியும் நிறுத்தும் ஒரு கருவி என்பதை மனதில் கொண்டுதான் திரு.கா.மை .. அவர்கள் இடுகைகளை சமர்பிக்கிறார் என்பது எமது கருத்து …!

முக்கியமாக வாசகர்களின் பின்னூட்டங்களையும் வருங்கால தலைமுறையினர் வாசிக்கின்ற போது — இடுகையின் தலைப்பிற்கு ஏற்ற பின்னூட்டம் — மேற்கோள்கள்கள் என்று பாராட்டும் படியாக நமது கருத்து பதிவுகள் இருக்க வேண்டும் என்று நினைப்பவன் யாம் — ஒரு சிலதை அவர்கள் வாசித்தால் ஒரு வெறுப்பு — சலிப்பு வரும் வண்ணம் இருக்க கூடாது — இன்று எழுதுகிற பின்னூட்டம் அன்றோடு மறைந்து விடுவதில்லை என்கிற ண்ணத்தோடு பதிவாக்குவதே சிறந்ததாகும் என்பது எமது கருத்து …. இன்னும் வெளிப்படையாக நிறைய கூற ஆசைதான் –. !! மன மகிழ்ச்சியில் இருக்கும் போது அது தற்போது தேவையில்லை .. !

எழுதுகிற தள கர்த்தாவை — அவரது எழுத்துரிமையில் யாரும் இடைஞ்சல் செய்யாமல் முன்னைப்போலவே சுதந்திரமாக பதிவிட இறைவன் அருள அவனிடம் வேண்டிக்கொள்ளும் ஒரு வாசகன் …! வாழ்க — வளர்க விமரிசனம் தளம் மற்றும் அதன் உயிர்நாடியான திரு .காவிரிமைந்தன் … !!!

———————————————————

அன்புள்ள செல்வராஜன்,

நான் பத்து வருடங்களாக
இந்த வலைத்தளத்தில்
தொடர்ந்து எழுதி, இதை நிர்வகித்துக் கொண்டிருப்பதால்
எந்தவித பெரிய சாதனையையும் நிகழ்த்தி விட்டதாக
எனக்குத் தோன்றவில்லை….அதனால் தான்
இந்த
10 வருட நிறைவைப்பற்றி நான் எதுவும்
எழுதவும் இல்லை; கொண்டாடி,
விளம்பரப்படுத்த விரும்பவும் இல்லை.

ஆனால், நீங்கள் இதைப்பற்றி எழுதி விட்டதால்,
நான் இந்த விளக்கங்களை
எழுத வேண்டியது அவசியமாகி விட்டது.

————

எந்தவொரு அரசியல் கட்சியின்
செல்வாக்குக்கும் உட்படாமல்,

எந்த வித இஸ’த்துக்குள்ளும்
சிக்கிக் கொள்ளாமல் –

ஒரு சுதந்திர மனிதனாக
திறந்த மனதுடன், வெளிப்படையாக –
சமூகநலனை முன்னிறுத்தி
எழுத வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

இங்கு வரும் நண்பர்களும் நல்ல கருத்துகளை
வெளிப்படையாக, திறந்த மனதுடன்
கூறவேண்டுமென்றும்,
கருத்துப் பரிமாற்றத்திற்கான சிறந்த ஒரு
தளமாக இது இயங்கவேண்டும்
என்பதும் என் விருப்பம்.

இதுநாள் வரை இந்த நோக்கம், அனைவரின்
உதவியோடும், ஒத்துழைப்புடனும்
சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
என்று தான் நம்புகிறேன்.

என்னைப் பொருத்தவரையில் –
என் மனத் திருப்திக்காகத்தான்
எழுதிக் கொண்டிருக்கிறேன்….
நான் நினைப்பதையெல்லாம்,
என் மனதில் தோன்றுவதை
எல்லாம் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

என் கருத்துகளை ஏற்க வேண்டும்
என்று நான் யாரையும்
வற்புறுத்தவுமில்லை;
எதிர்பார்க்கவும் இல்லை…
அவரவர் கருத்து அவரவருக்கு.

என் மனதில் தோன்றுவதை,
எனக்குத் தெரிந்த நியாயத்தை –
எனக்கு தெரிந்த விதத்தில்
வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறேன்…
என் கருத்துகளுக்கு -எதிர்ப்போ,
மறுப்போ வரும்போது, எனக்குத் தெரிந்த,
என் தரப்பு உண்மைகளையும்,
நியாயங்களையும் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

என் அதிருஷ்டம் பல நண்பர்களுக்கு –
என்னையும், என் எழுத்தையும் – பிடிக்கிறது…
அதனால் இந்த வலைத்தளம் இன்றுவரை
வெற்றிகரமாகத் தொடர்கிறது.

இதற்காக என்னைப் படைத்த இறைவனுக்கும்,
என் மீது அன்பு செலுத்தும் இந்த வலைத்தள நண்பர்களுக்கும்
என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் இத்தனை நாள் அனுபவத்தில் உணர்ந்திருப்பீர்கள்….
என்னை வற்புறுத்தி, யாரும், எதையும் எழுத வைக்க
முடியாது; அதே போல் பயமுறுத்தி, நான் எழுதுவதை
நிறுத்தவும் முடியாது;

என்னைப் பொருத்தவரை –
எந்தவித சுயநலன் கருதியும் எழுதக்கூடாது.
மனசாட்சிக்கு விரோதமாக எழுதக்கூடாது…
எழுத்தில் நேர்மை முக்கியம்.
நிஜம் முக்கியம்;
அச்சமின்றி எழுத வேண்டும்…
ஆபாசமின்றி எழுத வேண்டும்…
அதற்கு இறை துணை நிற்கும் என்கிற நம்பிக்கை உண்டு.

என் எழுத்துக்களைப் பற்றி,
வேகத்தைப் பற்றி, மெத்தனத்தைப்பற்றி,
இந்த விமரிசனம் தளத்தைப்பற்றி –
உங்கள் கருத்தைத் தெரிவித்திருக்கிறீர்கள்.

அவற்றிற்கு “நன்றி” என்று ஒற்றைச் சொல்லில்
பதில் சொல்வதோடு நிறுத்திக் கொள்ள விரும்புகிறேன்.
அதற்கு மேல் பதில் விமரிசனம்
செய்ய விரும்பவில்லை.

இந்த வலைத்தளத்தில் பல நண்பர்கள் பின்னூட்டம்
எழுதுகிறார்கள்; அவர்கள் அத்தனை பேரும்
– நீங்கள் அல்லது நான் அல்லது வேறு யாராவது –
நினைக்கிறபடி, விரும்புகிறபடி தான் எழுத வேண்டும்
என்று எதிர்பார்ப்பது சரியல்ல. நான் ஏற்கெனவே
இதுகுறித்து உங்களுக்கு எழுதி இருக்கிறேன்.

அவரவர் வழி அவரவருக்கு.
என்னைப் பொருத்த வரையில் –
நாகரிகமான முறையில்
கருத்து சொல்லப்பட வேண்டும்.
அவ்வளவு தான்.

பிடிக்கவில்லை என்றால், சரியில்லை என்று தோன்றினால் –
அதைச் சொல்ல, மறுக்க எல்லாருக்குமே உரிமை இருக்கிறது.

இந்த தளத்தின் நண்பர்கள் உயர்ந்த பண்புடையவர்கள்;
இந்த தளத்தின் தரம் குறையாமல்,
ஆபாசம் தலை தூக்காமல் –
அழகான கருத்துகளைச் சொல்லி பின்னூட்டம் எழுதுபவர்கள்.

இன்று வரை இந்த விமரிசனம் தளம்
உயர்ந்த தரத்தோடு,
வலைத்தளத்தில் முதன்மையாகவும்
இருக்கிறது என்றால் –
அதற்கு இதன் வாசகர்களே முழு காரணம்.

நண்பர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.
தொடர்ந்து எழுத உங்கள் அன்பையும்,
பரிவையும் வேண்டுகிறேன். நன்றி.

.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
29/07/2019 – இரவு 12 மணி.

————————————————————————–

பின் குறிப்பு –

நேற்றிரவு நண்பர் செல்வராஜனிடமிருந்து வந்த
ஒரு பின்னூட்டத்தையும் –
அதற்கான என் விளக்கத்தையும் மேலே தனியாக
பதிப்பித்திருக்கிறேன்.

நண்பர்கள் அனைவரின் பார்வைக்கும் இது அவசியம்
செல்ல வேண்டுமென்பதாலேயே – இதனை
ஒரு தனி இடுகையாகப் போட்டிருக்கிறேன்.

10 வருடங்கள் நேற்றுடன் முடிவடைந்து விட்டன.

என்னைப் பற்றியோ, என் எழுத்தைப்பற்றியோ,
இந்த விமரிசனம் தளத்தைப் பற்றியோ –
கருத்து தெரிவிக்க விரும்பும் நண்பர்கள் –

-அது எத்தகையதாக இருந்தாலும் சரி –
அதனை தாராளமாக, வெளிப்படையாக –
இங்கே பின்னூட்டமாக எழுதுமாறு
கேட்டுக் கொள்கிறேன்.

என்னை நானே – ஒரு மறுபரிசீலனைக்கு
உட்படுத்திக் கொள்ளவும் அது உதவலாம்.
நன்றி.

.
——————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to ” விமரிசனம் ” – காவிரிமைந்தன்

 1. Subramanian சொல்கிறார்:

  காவிரிமைந்தன் சார்,

  உங்களைப்பற்றிய மற்றவர்களின் விமரிசனமும்,
  உங்களது சுயவிமரிசனமும் என்று இந்த இடுகை
  மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.
  நான் சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் இந்த
  வலைத்தளத்தை படிக்க ஆரம்பித்தேன். முதல்
  இடுகையே என்னை ஈர்த்தது. அந்த ஈர்ப்பு இன்றுவரை
  தொடர்கிறது. உங்கள் பழைய இடுகைகளை எல்லாம்
  நான் இன்னும் படிக்கவில்லை. சமயம் கிடைக்கும்
  போதெல்லாம், தோண்டியெடுத்து படித்து வருகிறேன்.
  ஒரு விஷயம் – சொன்னால் தவறாக நினைத்துக்
  கொள்ள மாட்டீர்களென்று நம்புகிறேன். subjectwise
  உங்கள் பழைய இடுகைகளை தேட முடியவில்லை;
  தேதி வாரியாகத்தான் தேட முடிகிறது. இதை சரி செய்ய
  முடிந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

  உங்களிடம் எனக்குப் பிடித்தது: உங்கள் நிஜம் தான்.
  எதைப்பற்றியும், மனதிற்குப் பட்டதை பளீரென்று
  சொல்லி விடுகிறீர்கள்; கட்சி சார்பற்ற உங்கள் தன்மை
  எனக்குப் பிடிக்கிறது. ஆனால் வாசகர்களில்
  பெரும்பாலானோர் எதாவதொரு கட்சி சார்ந்தே
  இருக்கிறார்கள்; எனவே, அவர்களுக்கிடையில்
  உங்களுக்கான ஆதரவு எந்த அளவிற்கு இருக்குமென்று
  தெரியவில்லை.

  நீங்கள் இதே போல் தொடர்ந்து இந்த வலைத்தளத்தை
  கட்சி சார்பற்றே நடத்த வேண்டுமென்பது என் விருப்பம்.
  உங்களுக்கும், இந்த வலைத்தளத்திற்கும் எனது
  உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  அன்புடன்,
  சங்கரன் சுப்ரமணியன்

  • Selvarajan சொல்கிறார்:

   நண்பரே ..! // subjectwise
   உங்கள் பழைய இடுகைகளை தேட முடியவில்லை;// இடுகையில் ” தேடு ” என்கிற கட்டத்தில் நீங்கள் தேட வேண்டியதின் பெயரை உள்ளீடு செய்யுங்கள் — உதாரணத்திற்கு பா.ஜ .க என்பதைப்பற்றி தேட வேண்டும் என்றால் அதை அங்கே தட்டச்சு செய்து அழுத்துங்கள் .. தளத்தில் உள்ள பாஜக சார்ந்த அனைத்து விவரங்களும் உங்கள் கண்முன்னே வரும் .. வாசியுங்கள் — மறக்காமல் அதில் உள்ள ” பின்னூட்டங்களையும் ” படியுங்கள் …!!!

 2. புதியவன் சொல்கிறார்:

  விமர்சனம் தளத்தை நான் கடந்த சில வருடங்களாகப் படித்துவருகிறேன்.

  உங்கள் கருத்துக்கள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், அதில் உள்ள உண்மைத்தன்மை தெரிகிறது.

  தளத்தில் 75 சதவிகிதம் அரசியல் செய்திகளும் மிகுதிக்குத்தான் மற்ற செய்திகள் இருக்கணும்னு விரும்புகிறேன். சமீப காலங்களில் இது மாறுகிறது.

  கட்சி சார்பற்று தளம் இருக்கிறது. ஆனால் ‘நடுநிலை இல்லை, அப்படி இருக்கவும் முடியாது. ஆனால் எழுத்து உங்கள் எண்ணத்தைத்தான் பிரதிபலிக்கிறது.

  தொடர்ந்து உடல் நலத்தோடும் ஆர்வத்தோடும் இந்தத் தளத்தை நடத்த வேண்டுகிறேன்.

 3. paiya சொல்கிறார்:

  Dear KM sir,
  Congratulations for your remarkable writings in the last 10 years covering history, politics, incidents,
  happenings and good old sunday special songs.
  Your writings were not only narrative but also useful to the society.
  We all wish and pray God that you should continue your writings for ever.
  Once again well done Mr.KM sir. God bless.

 4. Sanmath AK சொல்கிறார்:

  Dear KM Sir,

  Congratulations Sir…. and sorry that I had not said same in previous years, as I have been reading this site from 2012….Thanks for the varied information you provide and for portraying your perspective…..

  If I have to opine on this site, my view is that KM Sir has a soft corner towards JJ and her activities/policies etc and a soft stand towards JJ compared to MK. People who had seen Kamarajar’s rule and politics could not accept MK, as same is well visible in my own family….. Critics on NaMo and his team by this site is same as it used to be and I dont see any slow down in pace….

  What is required now is, more data from a person like you with good analysis…. Because present central govt is diluting autonomous bodies, hiding or altering facts about govt, threatening media etc and so on…..Ultimately we, people, get to know things what this govt want us to know…. In such a scenario, factual data with analysis will be of great help to youngsters to think and act…..

  My heartiest wishes to you for good health and peace !!!

  Thanks,
  Sanmath AK

 5. venkat சொல்கிறார்:

  your enthusiasm and social inclination is admirable. your writing style is impressive as well. Content has always been the right size/quantity so that readers start and complete reading the posts. your good work should continue!

  You are writing what appears as right or wrong to you. As a human being what appears as right or wrong to you is based on your OWN belief system and your own experience. Hence you should accept that your blogs are also colored – like pro J, anti MK, anti NaMo etc., There is nothing wrong in it. After all its your blog!

  you are taking critiques personally. you assume that all who oppose your view belong to some party or follow some ‘ism’ or part of an organized group with a planned agenda to oppose you. Please come out of that mold. We are all ordinary citizens like you with probably a slight different views.

  Wish you a very good health

 6. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  .

  சங்கரன் சுப்ரமணியன்,
  புதியவன்,
  செல்வராஜன்,
  பையா,
  சன்மத் ஏ.கே.,
  வெங்கட் –

  உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  உங்கள் பின்னூட்டங்களின் மூலம் உங்களது
  உணர்வுகளை புரிந்துகொண்டேன். வெளிப்படையாக
  உங்கள் கருத்தைச் சொன்னது எனக்கு மிகவும்
  பிடித்திருந்தது.

  பத்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய
  சில இடுகைகளை நேற்றிரவு –
  மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்தேன்.

  சில எனக்கு சிரிப்பைத் தந்தன…
  சில பிரமிப்பைத் தந்தன…
  நானும் மாறிக்கொண்டே தான் இருக்கிறேன்.
  என் எழுத்தும் மாறிக்கொண்டே தான் இருக்கிறது –
  என்பது எனக்கே நன்றாகப் புரிகிறது.

  என் எழுத்தில் மாற்றத்திற்கு முக்கியமான காரணம்,
  செல்வராஜன் நினைப்பது போல் –
  யார் கொடுக்கும் / எந்தவித அழுத்தமும் அல்ல.

  கோபத்தை கட்டுப்படுத்த, மட்டுப்படுத்த –
  தொடர்ந்து நான் எடுத்துக் கொண்டு வரும்
  பயிற்சிகளும், முயற்சிகளுமே
  அதற்கான காரணங்கள்.

  என் கோபமும், ஆத்திரமும் – குறைந்தது
  சில நண்பர்களுக்கு தெரிகிறது…
  ஆனால், அது கிண்டலாக, கேலியாக
  உருமாறி இருப்பதை –
  அவர்கள் கவனிக்கத் தவறி விட்டனரோ…?

  மாற்றம் – நல்ல திசையை நோக்கிச் சென்றால்,
  நல்ல விளைவுகளைக் கொடுக்குமானால் – நல்லதே.

  சமூகத்தின் மேல் எனக்கு இருக்கும் அக்கறை
  என் கடைசி மூச்சு வரை – எந்த விதத்திலும் குறையாது.

  அது வெளிப்படும் விதங்களில் –
  மாற்றங்கள் தெரியலாம்.

  நல்ல அரசியலும், சமூக நலனும் –
  நமது உணர்வில் – ரத்தத்தில் கலந்திருக்கிறது.

  இந்தியாவில் உண்மையான –
  ஜனநாயகம் வெற்றி பெற வேண்டும்.

  லஞ்ச ஊழல் ஒழிய வேண்டும்…
  குற்றவாளிகள் விரைவாக தண்டிக்கப்பட வேண்டும்.
  போலி அரசியல்வாதிகளின் முகமூடிகள்
  கிழித்தெறியப்பட வேண்டும் –

  ஜாதி மத பேதமற்ற சமுதாயம் உருவாக வேண்டும் ..
  ஏழை, பணக்காரரிடையே உள்ள
  இடைவெளி குறைக்கப்பட வேண்டும்…
  இந்த கருத்துகளில் நமக்கு எந்த வேறுபாடும் கிடையாது.

  எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்.
  நாம் அனைவரும் அதற்காக சேர்ந்து உழைப்போம் –

  தொடர்ந்து கருத்தூட்டங்களில் கலந்து கொள்ளுங்கள்.
  நன்றி.

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.