மீண்டும் வாழைப்பழ ஜோக் …!!! -செந்தில் கவுண்டமணி இல்லாமலே …


ராஹுல் போஸ் ஒரு வட இந்திய நடிகர்…
ஹிந்தி படங்கள் பார்ப்பவர்களுக்கு தெரிந்திருக்கும்.
அவர், அண்மையில் சண்டிகரில் JW Mariott என்கிற
5 நட்சத்திர ஓட்டலில் தங்கினார்.

அப்போது இரண்டு வாழைப்பழங்கள் வரவழைத்து
சாப்பிட்டிருக்கிறார். அதற்கு வந்த பில்’லை பார்த்து
அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

2 பனானா’க்களுக்கு ஜி.எஸ்.டி. சேர்த்து விலை
ரூபாய் 422/-. வெளியே வந்த பிறகு இந்த விவரத்தை
தனது வலைத்தளத்தில், புகைப்பட ஆதாரத்துடன்
பகிர்ந்து கொண்டார்.

விஷயத்திற்கு பயங்கர விளம்பரம் கிடைத்திருக்கிறது.

எக்கச்சக்க விலை ஒரு காரணம்…
வாழைப்பழத்திற்கு ஜி.எஸ்.டி. கிடையாது என்பது
மற்றொரு காரணம்…

செய்தியைப் பார்த்த எக்சைஸ் இலாகாவினர் உடனடியாக
JW Mariott ஓட்டலுக்கு படையெடுத்திருக்கிறார்கள்.

ஆவணங்களைப் பார்த்து, உண்மையை உறுதி செய்து
கொண்டவர்கள் – வாழைப்பழத்திற்கு – இல்லாத
ஜி.எஸ்.டி.யை வசூலித்ததற்காக 25,000 ரூபாய்
அபராதம் போட்டு கையோடு வசூலித்து விட்டார்கள்….

இது இன்னும் பயங்கர விளம்பரம் பெற்றது…. 🙂 🙂

விளைவு – இப்போது JW Mariott ஓட்டலின்
போட்டியாளர்கள் இதை வைத்து கிண்டல் விளம்பரம்
செய்தே கலாய்க்கிறார்கள்.

சில சாம்பிள் காமெடி விளம்பரங்கள் கீழே –


.
————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to மீண்டும் வாழைப்பழ ஜோக் …!!! -செந்தில் கவுண்டமணி இல்லாமலே …

 1. புதியவன் சொல்கிறார்:

  5 Star ஹோட்டலில் ஜி.எஸ்.டி போட்டது தவறுதலாக இருக்கலாம், ஆனால் வாழைப்பழ விலை பெரிய விவாதிக்கக்கூடிய விஷயம் இல்லை. சாதாரண ஸ்டார்பக்சில், ஒரு வாழைப்பழம், நான் வெளியில் 1/2 கிலோ வாழைப்பழம் வாங்குவதைவிட விலை அதிகம். வெளியில் கிடைக்கும் கோககோலாவைவிட, ஹோட்டல்களில் விலை அதிகம். 5* ஹோட்டலில் 3 இட்லி கொண்ட ப்ளேட் 750 ரூபாய். உடனே, ஆயா கடைல 3 ரூபாய்தான் என்று கம்பேர் பண்ண முடியாது.

  Complimentary fruits basket சில ஸ்டார் ஹோட்டல்களில் ரெகுலராக கொடுப்பார்கள் (ரூமின் தரத்தைப் பொறுத்து)

  தொழில் போட்டியாளர்கள் இந்தச் சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள்.

  பிட்சா ஹட் 99 ரூபாய்க்கு என்ன தருகிறது என்று செக் பண்ணிப் பாருங்கள். டூப் விடறாங்க.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   .

   புதியவன்,

   // 5 Star ஹோட்டலில் ஜி.எஸ்.டி போட்டது
   தவறுதலாக இருக்கலாம், ஆனால்
   வாழைப்பழ விலை பெரிய விவாதிக்கக்கூடிய
   விஷயம் இல்லை. //

   என்ன இப்படிச் சொல்லி விட்டீர்கள்…?
   வாழைப்பழம் தானே என்று விட்டு விடலாமா…?

   ( ஒரு மாம்பழத்திற்காக, கடவுளின் குடும்பமே
   பிளவுபட்டதை மறந்து விட்டீர்களா…? என்று
   நான் திசை மாறப்போவதில்லை… விஷயத்தை
   விட்டு நகர மாட்டேன்… 🙂 🙂 )

   சாதாரணமாகவே அனைத்து
   விற்பனை நிலையங்களிலும் software வைத்திருப்பார்கள்.
   அதில் எந்த பொருளுக்கு எத்தனை
   பெர்செண்டேஜ் ஜி.எஸ்.டி…,
   வரியே இல்லாத பொருட்கள் எவை எவை
   என்பதெல்லாம் அதில் ஏற்கெனவே feed
   செய்யப்பட்டிருக்கும்…

   இங்கே வரியே இல்லாத ஒரு பொருள் –
   வரி லிஸ்டில் சேர்க்கப்பட்டது ஏன்…?

   இது தவறுதலா அல்லது மோசடியா…?

   இந்த மாதிரி எவ்வளவு பொருட்களுக்கு ஏற்கெனவே
   மோசடி விற்பனை செய்திருப்பார்கள்…?
   அப்படி வரி என்று சொல்லி வசூலிக்கப்படும் பணம் –
   அரசுக்கு செல்லும் என்று நீங்கள் நம்புகிறீர்களா….?

   கதை அப்படி இருந்தால், எக்சைஸ் ரெய்டில்,
   ஓட்டலுக்கு 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது ஏன்…?

   ———————–

   //உடனே, ஆயா கடைல 3 ரூபாய்தான்
   என்று கம்பேர் பண்ண முடியாது. //

   This is NOT a question of comparison at all.

   IT amounts to CHEATING the Customer…
   – CHEATING the Government…

   ——————

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    நான் அப்படி நினைக்கலை கா.மை. சார். நானும் ரீடெயில்லதான் வேலை பார்த்திருக்கேன், கணிணியில்தான் வாழ்வு.

    இந்த இந்தப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி அல்லது VAT என்று பொருட்கள்படி போட மாட்டாங்க (ஏகப்பட்ட ஐட்டங்கள் இருப்பதால்). அதுனால முதல்ல கேடகரிக்கு % போட்டுவிட்டு, individual items check பண்ணுவாங்க. அதில் தவறுதலாக இதனை விட்டுவிட்டிருக்கலாம். 5* ஹோட்டலுக்குப் போவது நானோ நீங்களோ அல்ல. பணம் எங்கேயிருந்து வருது, எந்த வழியாப் போகுதுன்னு தெரியாத பெரும்பாலானோர்தான் போவாங்க. ஆனா, தவறைக் கண்டுபிடித்தால் உடனே சரி செய்வது மட்டுமன்றி, Refund பண்ணிடுவாங்க. அந்த ஹோட்டலின் போதாத நேரம்தான். இப்போ மத்தவங்களும் கூடுதலா check பண்ணிக்குவாங்க. இப்படித்தான் நான் நினைக்கிறேன்.

    நான் வேலை பார்த்த கம்பெனிலயும் சில பல தவறுகள் (வேண்டுமென்றே செய்தது அல்ல) நடந்து அதற்கு fine போட்டிருக்காங்க.

    இப்படி வாங்கும் பணம், நேரடியாக ஜி.எஸ்.டிக்குச் செலுத்தப்படும் என்றுதான் தோன்றுகிறது. இந்த கேஸில், இல்லாத பொருளுக்கு வரி போட்டதனால் வந்த fine என்று தோன்றுகிறது. உண்மை வெளிவரட்டும்.

    இந்த 10 ரூபாய் பாப்கார்னை 120 ரூபாய்க்கு விற்கும் திரையரங்குகளும் இதைச் சாக்கிட்டு இன்னொருதடவை சரி பார்த்துக்கொள்வது நல்லது.

 2. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  இது என்ன ஜுஜுபீ…
  நாம கோடி ரூபாய் இட்லியவே பார்த்து(கேட்டு)ட்டோம்!
  400 ரூவா வாழைப்பழம் நம்மள ஒண்ணும் பண்ணாது!

  ஆனாலும் வியாபாரிகள் பலவிதத்திலும் வரிவசூலிப்பதில் இன்று வரையும் தில்லுமுல்லு செய்வதை நிறுத்தவில்லை எனபது மட்டும் வெட்டவெளிச்சம் ஆகிவுள்ளது

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  அஜீஸ்,

  // நாம கோடி ரூபாய் இட்லியவே பார்த்து(கேட்டு)ட்டோம்! //

  அப்போல்லோ இட்லியை சொல்கிறீர்களா…?

  இன்று ஆறுமுகசாமி கமிஷன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில்
  தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அப்போல்லோ பற்றி
  சொல்லி இருப்பதை படித்துப் பாருங்கள்…

  எல்லாருமாக சேர்ந்து மக்களை பைத்தியமாக்குகிறார்கள்.

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.