பட்டாக்கத்தி ரூட் தல’யும் …மாவுக்கட்டும் ….

இந்த மாவுக்கட்டு பொறுக்கிகளுக்கு ஆதரவாகவும்
சில “மனித உரிமை” ஆர்வலர்கள் நேற்று தொலைக்காட்சி
விவாதத்தில் பேசியதை பலர் பார்த்திருப்பீர்கள்.

இந்த ரூட் தலைகளை இப்படியே விட்டால், நாளைய
ரேப்பிஸ்டுகளாகவும், கிரிமினல்களாகவும் இவர்கள்
மாறக்கூடும் என்பதை இந்த ஆர்வலர்கள் உணர மாட்டார்களா…?

நாளை இவர்கள் வீட்டு பெண்களின் மீது இந்த “ரூட் தலைகள்”
கை வைத்தாலும், இவர்கள் இதே நிலையை எடுப்பார்களா…?

– இந்த பொறுக்கிகள் பெற்றோர்களுக்கு அடங்காதவர்கள்.
– இவர்கள் படிக்கும் கல்லூரிகளின் நிர்வாகிகள், இவர்கள்
மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்.

-காரணம் – இவர்களின் பின்புலமாக இருக்கும் சமூக விரோதிகள்,
பொறுக்கி அரசியல்வாதிகள்…

எனவே, இவர்களை வழிக்கு கொண்டு வர காவல்துறையை
தவிர வேறு யாராலும் முடியாது.

பொது இடங்களில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த
இந்த பொறுக்கிகளின் மீது காவல்துறை எந்த அளவிற்கு
கடுமையான நடவடிக்கை எடுத்தாலும், அதற்கு ஆதரவு அளிக்க
வேண்டிய பொறுப்பு இந்த சமூகத்திற்கு இருக்கிறது.

அரசுக்கு ஒரு வேண்டுகோள்… சிங்கப்பூரை போல,
பொது இடங்களில் கலவரங்களில் ஈடுபடுவோரை உடனடியாக
தண்டிக்க சிங்கப்பூரைப் போல்,

– கசையடி தண்டனையை
தமிழக அரசு இங்கும் சட்டபூர்வமாக்க வேண்டும்.

.
———————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

29 Responses to பட்டாக்கத்தி ரூட் தல’யும் …மாவுக்கட்டும் ….

 1. புவியரசு சொல்கிறார்:

  மிக மிக அவசியமான ஒரு கட்டுரை.
  உங்கள் கருத்தை முற்றிலுமாக ஆதரிக்கிறேன்.

  .

 2. Subramanian சொல்கிறார்:

  .

  காவல் துறை இவர்கள் மீது எவ்வளவு கடுமையான
  நடவடிக்கை எடுத்தாலும் தகும்.

  அதை நாம் நிச்சயம் வரவேற்போம்.

 3. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  ஐயா
  திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது…
  இது முதலமைச்சர் சட்ட சபையில் பாடிய பாட்டு

  கொலை கொள்ளை போன்றவை நாட்டில் நடந்தால் அதற்கு அரசு எப்படி பொருப்பாகும்?…
  இது பொ(ப)ருப்பான அமைச்சர் கொடுத்த வியாக்கியானம்

  ரூட் தலைக்கு மட்டும் படிக்கும் கல்லூரி எப்படி பொருப்பாகும் (அதாவது கல்லூரி வளாகத்துக்கு வெளியில் நடப்பவற்றிற்கு கல்லூரி நிர்வாகம் பொறுப்பேற்காது)…
  பச்சையப்பன் கல்லூரி நிர்வாகம்

  நல்ல நாடு
  நல்ல முதல்வர்
  நல்ல அமைச்சர்கள்
  ஆக மிகச்சிறந்த மக்கள்

  • புதியவன் சொல்கிறார்:

   சைதை அஜீஸ்….

   திமுக இதை ஏற்கனவே அரசியலாக்க முயற்சிக்கிறாங்க.(மாணவர்கள் கை உடைந்ததை). அதிமுக இதில் தலையிட்டால் மாணவர்கள் எல்லோரையும் திமுக தூண்டிவிட்டு ஒரு கலவரத்தை உண்டாக்கும். திமுகவின் தற்போதைய அல்லக்கைகளான திருமா, அழகிரி, பச்சமுத்து போன்ற நாட்டுப்பற்று கொண்டோர் இதனை பெரிய கலவரமாக மாற்றிவிடுவார்கள். அதிமுக எப்போதும் சாஃப்ட் ஸ்டாண்ட்தான் எடுக்கிறது, எதற்கு ரவுடிகளுடன் வம்பு என்று. அதனால்தான் அவர்கள் ரியாக்‌ஷன் காண்பிக்கவில்லை, ஆனால் செயலில் காவல்துறையை ஆதரித்திருக்கிறார்கள்.

 4. புதியவன் சொல்கிறார்:

  இவங்கமேல நடவடிக்கை எடுத்ததற்கு முதல் ஆளா எதிர்ப்பு தெரிவிச்சது திமுக பிரமுகர். அவருக்குத்தானே திமுகவின் வருங்கால வட்டச் செயலாளர், மாவட்டச் செயலாளர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு உண்டு.

  எனக்கு போலீஸ்ட என்ன குறைன்னா, அவங்க பாத்ரூமை கொஞ்சம் கிளீன் செய்து வைத்திருப்பதால் வழுக்கி கை மட்டும் உடையுது. சுத்தம் செய்யாம இருந்திருந்தாங்கன்னா, காலும் சேர்ந்து உடைந்திருக்கலாமே.

  என்னமாதிரி ரவுடித்தனம். காணொளி அன்றைய இரவே பார்த்தேன். சில கல்லூரிகள் சென்னையில் இருக்கின்றன. ரவுடிகளை உற்பத்தி செய்யும் கல்லூரிகள். இதற்குக் காரணம் திமுக என்பது எல்லோரும் அறிந்ததே.

 5. புதியவன் சொல்கிறார்:

  //கசையடி தண்டனையை தமிழக அரசு இங்கும் சட்டபூர்வமாக்க வேண்டும்//. நம்மிடம் நாட்டுப்பற்று மிகவும் உடைய தலைவர்கள் மிக மிகக் குறைவு. திமுக, ரவுடிக்கட்சிதான். மற்றவர்களும் அதனை ஒட்டியே இருப்பார்கள். என்னைக் கேட்டால் ஒரு ஐந்து வருடங்களுக்கு சிங்கப்பூர் தலைவர்களை நாம் அவுட்சோர்ஸ் (இன் சோர்ஸ்) செய்து இங்கே வேலை பார்க்கச் சொல்லலாம். தமிழ்நாடு உருப்படும்.

 6. Prabhu Ram சொல்கிறார்:

  இந்த கல்லூரி ட்ரஸ்டை உருவாக்கிய
  பச்சையப்ப முதலியார் அவர்களின் ஆன்மா
  கதறி கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும் –
  தன் கல்லூரி இப்போது உருவாக்கிக் கொண்டிருக்கும்
  தறு”தலை”களைப் பார்த்து.

 7. saravanan சொல்கிறார்:

  Dear Sir ,
  I happened to visit your blog through tamilmanam and i found it interesting
  i have a request , can you please arrange your posts chronologically as the current links you have provided seems to be at random

 8. R.Gopalakrishnan சொல்கிறார்:

  Breaking the hand alone is not sufficient.They should depend on some body throughout therir
  life.Even at tines they have to depend on their own mothers for which act they should be ashamed of theirselves. Under no circumstances they should die till their time. 24 by 7 they should feel
  pain, pain,& pain only. Even if that person is a very bright student academically, they should not ne perm

  itted to write their exams, Their life should be completely ruined.and their names sould be in po+-lice records as rowdies, anti socials etc permanently,
  /\

  t.

  their names should be in police recor.

 9. செங்கொடி சொல்கிறார்:

  போலீசு ராச்சியத்தின் கீழ் தமிழகம்

  https://senkodi.wordpress.com/2019/08/12/police-state/

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   பொது இடங்களில் மாணவர்கள் என்கிற பெயரில்,
   காட்டுமிராண்டித்தனமாக கலவரம் செய்யும் பொறுக்கிகளுக்காக
   மட்டும் தான் மேற்படி இடுகை.

   இந்த பொறுக்கிகளின் செய்கையை நீங்கள் ஆதரிக்கிறீர்களா…?

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 10. செங்கொடி சொல்கிறார்:

  இல்லை. நான் ஆதரிக்கவில்லை. ஆனால், அந்த மாணவர்கள் ஏன் அப்படி இருக்கிறார்கள் என்பதையும் சேர்த்து ஆய்வு செய்ய வேண்டும். அப்போது தான் அதை தடுத்து நிறுத்த முடியும். மாறாக கழிப்பறைகளில் வழுக்கி விழ வைப்பதால் ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது என்கிறேன். நீங்கள் நீதி மன்றங்களை மதிக்கிறீர்களா? ஆம் என்றால், நீதி மன்றங்களின் வேலையை காவல் துறை எப்படி செய்ய முடியும்? மாவுக்கட்டு போடவைக்கப்பட்டவர்களில் எந்தத் தவறும் செய்யாத அன்றைய தினம் விடுப்பு எடுத்திருந்த ஒரு மாணவனும் அடக்கம் என்பது உங்களுக்கு தெரியுமா? ஒரு நாளில் எத்தனையோ குற்றங்கள் நடக்கின்றன. அவை அத்தனைகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான் குற்றவாளிகளாக இருந்திருக்கிறார்களா? கழிப்பறைகளில் வழுக்கி விழுந்த பிறகு நிரபராதி என தெரிந்தால் என்ன செய்வீர்கள்? நாட்டில் இவ்வளவு குற்றங்கள் நடப்பதின் காரணம் காவல்துறை சீர்கெட்டிருக்கிறது என்பதிலும் இருக்கிறது என உங்களுக்கு தெரியுமா? காவல்துறை எந்தக் குற்றங்களுக்கெல்லாம் இப்படி உடனடி தண்டனை கொடுக்க முற்படுகிறது என ஆராய்ந்து பாருங்கள். அதன் பின்னால் இருக்கும் அரசியல் அப்போது தான் உங்களுக்குப் புரியும். மாறாக உணர்ச்சி வயப்பட்டு காவல்துறையின் அத்துமீறலுக்கு ஆதரவு கொடுத்தால் .. .. .. மக்களை மேலும் மேலும் சீரழிப்பதற்கு நீங்கள் ஆதரவளிக்கிறீர்கள் என்பதே பொருள்.

  • புதியவன் சொல்கிறார்:

   //அந்த மாணவர்கள் ஏன் அப்படி இருக்கிறார்கள் என்பதையும் சேர்த்து ஆய்வு செய்ய வேண்டும்.// – அது சமூக நலத்துறை, கல்வித்துறை மற்றும் எதிர்க்கட்சியின் (நாளைய ஆளும் கட்சி) வேலை. ‘நோய் நாடி, நோய் முதல் நாடி’ என்பதெல்லாம் பிறகு. முதலில் அவசர ஆபரேஷன். இந்த மாவுக் கட்டால்தான், உடனடியாக மற்ற ரவுடித் தலைகள், மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்தனர். இவர்களெல்லாம் கற்கவில்லை என்று யார் வருத்தப்பட்டார்கள்? இவர்களெல்லாம் மாணவர்கள் என்ற கேடகரியிலா வருவார்கள்? வருங்கால கொள்ளையர்களாகத்தான் வளர்ந்துவருகிறார்கள்.

   //எந்தக் குற்றங்களுக்கெல்லாம் இப்படி உடனடி தண்டனை கொடுக்க முற்படுகிறது என ஆராய்ந்து பாருங்கள்// – எது பொதுவெளியில் வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறதோ, எது உடனடி தண்டனை கொடுக்காவிட்டால் சமூகச் சீர்கேட்டுக்கு இன்னும் வித்திடுமோ அத்தகைய குற்றங்களுக்கு காவல்துறை, தங்கள் மேல் பொதுமக்கள் கோபம் உடனடியாகத் திரும்பாத வண்ணம், தண்டனை அளித்துவிடுகிறது. (கோயமுத்தூரில் சிறுமிகளைச் சீரழித்தவர்களில் ஒருவனுக்கும், இன்னும் பலருக்கும் இத்தகைய தண்டனை உடனடியாக அளிக்கப்படுகிறது). நீதி மன்றத்துக்குச் சென்றால், அதற்கு எத்தனை எத்தனை வருடங்கள் ஆகும், என்ன ரிசல்ட் என்றும் யோசித்துப்பாருங்கள். நாவுக்கரசன் என்ற சக மாணவனை வெட்டித் துண்டம் துண்டமாகக் கூறுபோட்டுவிட்டு, பிறகு நீதிமன்றம் அது இது என்று காலம் கடத்தி, ஆஸ்திரேலியாவுக்கு கிறிஸ்துவத்தைப் பரப்பச் சென்றவனை உங்களுக்கு மறந்திருக்கலாம். ஆனால் நாவுக்கரசனின் பெற்றோர் மறக்க மாட்டார்கள். இதுபோன்று எத்தனை எத்தனை எடுத்துக்காட்டுகள். இதுதான் நம் ‘நீதி’.

   //எந்தத் தவறும் செய்யாத அன்றைய தினம் விடுப்பு எடுத்திருந்த ஒரு மாணவனும் அடக்கம்// – இவனுக்கு அந்த ரவுடிகளின் சகவாசம் எதற்கு? காரணமில்லாமலா காவல்துறை பாத்ரூமில் வழுக்கிவிழச் செய்யும்?

  • புவியரசு சொல்கிறார்:

   // அந்த மாணவர்கள் ஏன் அப்படி இருக்கிறார்கள் என்பதையும்
   சேர்த்து ஆய்வு செய்ய வேண்டும். அப்போது தான் அதை தடுத்து
   நிறுத்த முடியும். //

   அந்த பொறுக்கிகளில் ஒருவன் உங்கள் தங்கச்சியின் கையை
   பிடித்து இழுத்திருந்தால், அப்போதும் நீங்கள் அவன் அப்படிச் செய்ய
   என்ன காரணமென்று ஆராய்ச்சி தான் செய்து கொண்டிருப்பீர்களா ?

 11. புவியரசு சொல்கிறார்:

  இதுவும் இதற்கு முன்னரும் எழுதியிருப்பது “செங்கொடி” -க்கானது.

  நான் அந்த இடத்தில் இருந்திருந்தால், குறைந்த பட்சம் ஒரு
  பொறுக்கியையாவது பிடித்து பொது மக்களில் ஒருவனாக, அவனுக்கு
  நான்கு அறை விட்டிருப்பேன். இந்த சமூகத்தை திருத்த வேண்டிய
  கடமை ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிறது.

  கண் முன்னர் நடக்கும் தவறை கண்டிக்க உங்களைப்போன்றவர்களின்
  கட்சி அடிமைத்தனம் தடுப்பதால் தான் பொறுக்கிகள் அதிகரித்துக் கொண்டே
  போகிறார்கள்.

 12. புவியரசு சொல்கிறார்:

  சிங்கப்பூர் அரசு கொடுக்கும் கசையடி தண்டனை முறை
  கண்டிப்பாக இங்கேயும் அமலுக்கு கொண்டு வரப்பட
  வேண்டும். அப்போது தான் இவர்கள் கொட்டம் அடங்கும்.

  இத்தகையோருக்கு எவரேனும் பரிந்துகொண்டு வந்தால்,
  காவலரின் கடமையில் குறுக்கிடுவதற்காக, அவருக்கும்
  அதில் பாதி கசையடி கொடுக்க வேண்டும்.

 13. செங்கொடி சொல்கிறார்:

  புதியவன் என்று பெயர் வைத்துக் கொண்டு மிகமிகப் பழைய கருத்துகளை முன் வைத்துள்ளார். மட்டுமல்லாமல் சமூகம் குறித்த ஆழமான பார்வை இல்லாமல் மேலோட்டமாக இருக்கிறது அவரின் கருத்துகள்.

  முதலில் தண்டனை கொடுப்பதற்கு காவல்துறைக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? கழிப்பறையில் வழுக்கி விழச் செய்வது சட்டத்தை மீறிய, சட்டத்தை துச்சமாக எண்ணும், நடைமுறைகளை அவமதிக்கும் செயலா? இல்லையா?
  நீதிமன்றங்கள் அனைத்தையும் கலைத்து விடலாமா? உடனுக்குடன் தண்டனை கிடைத்து விடுமே.
  குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை எனும் போது காவல்துறையின் அத்துமீறிய செயல்களுக்கு பொறுப்பேற்பது யார்?
  காவல்துறையின் கொடூரக் குற்றங்களுக்கு, வக்கிரத்தனங்களுக்கு, கொலை கொள்ளை திருட்டுக்கு, ஊழலுக்கு, பாலியல் வன் கொடுமைகளுக்கு,, சட்டத்தை மீறும் அடாவடிகளுக்கு இதுபோல் மக்கள் தண்டனை கொடுக்கலாமா?

  அந்த மாணவர்கள் ஏன் இது போல் நடந்து கொள்கிறார்கள் என்றால் சமூகத்தின் மீது அவர்களுக்கு எந்த அக்கரையும் இல்லை. மாணவர்களுக்கு சமூகத்தின் மீது எந்தவித அக்கரையும் இருந்துவிடக் கூடாது என்று தான் அரசும், போலீசும், அதிகாரத்தில் இருப்பவர்களும் விரும்புகிறார்கள். அதனால் தான் அவர்கள் இப்படி இருக்கிறார்கள். சமூகத்தின் மீது அக்கரை கொள்ளாத எவரும் வன்முறையாளர்களாகவே இருப்பார்கள். அதற்காக பட்டாக் கத்தியை தூக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. சின்னச் சின்ன விசயங்களில் கூட அந்த வன்முறை வெளிப்படும். ஏன் புதியவன் கொண்டிருக்கும் கருத்தும் கூட அத்தகைய ஒரு வன்முறை தான். அளவுகளில் தான் வித்தியாசம். அந்த அளவுக்கு கையை காலை முறிக்கலாம் என்றால் பிற அளவுகளுக்கு என்ன செய்யலாம்?

  • புதியவன் சொல்கிறார்:

   @செங்கொடி – சமூகம் குறித்த ஆழமான, அகலமான பார்வைக்கெல்லாம் அந்த அந்தத் துறைகள் இருக்கின்றன. பேருந்தில் பயணம் செய்த சாமானியர்கள். மாணவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ரவுடிகள் கையில் பட்டாக் கத்தியுடன் கலவரம் செய்தனர் (காணொளியில் இது தெளிவாகத் தெரியும். இதுபோலவே பேருந்தின் மீது ஏறி பேருந்து தினம் கொண்டாடுகிறேன் என்ற ரவுடித்தனம் செய்பவர்களும் இந்த கேடகரியில் வருவர்). இவர்கள் மீது காவல்துறை எடுத்த நடவடிக்கையை முழுவதுமாக ஆதரிக்கவேண்டும்.

   //மாணவர்களுக்கு சமூகத்தின் மீது எந்தவித அக்கரையும் இருந்துவிடக் கூடாது என்று தான் அரசும், போலீசும், அதிகாரத்தில் இருப்பவர்களும் விரும்புகிறார்கள்// – முதலில் இவர்களைப் பெற்றவர்கள், பையனைப் பெற்றுக்கொள்ளவே லாயக்கில்லாதவர்கள். அவர்களும் சமூக விரோதிகள்தாம். இந்த மாதிரி ரவுடிகளை ‘மாணவர்கள்’ என்று சொல்லி, ஒழுங்காகப் படிக்கின்ற மாணவர்களையும் இந்தத் தறுதலைகளையும் ஒன்றாக்காதீர்கள். இவர்கள் சமூக விரோதிகள்தாம்.

   சமூகத்தின் மீது அக்கறை கொள்ளாத வன்முறையாளர்களைப் பற்றி சமூகம் எதற்கு கவலைப்படவேண்டும்?

   நீங்கள் எழுதியிருப்பதெல்லாம் ஏட்டுச் சுரைக்காய். அது கூட்டுக்கு உதவாது. தன் நிலத்தை அபகரிக்கும்போது, தன் பணத்தை இன்னொருவன் கொள்ளையடிக்கும்போது, தன் குடும்பத்துக்கு, தன் உறவினர்களுக்கு ஒருவன் கெடுதல் செய்யும்போது, நாம் ‘அது அவன் தவறல்ல. சமூகத் தவறு. அதனால் சட்டம் சொல்லியபடிதான் நாம் செய்யவேண்டும்’ என்று யாரும் இருப்பதில்லை. அப்படி ஒருவன் இருந்தால் அதற்குக் காரணம், அவனுக்கு எதிர்வினை புரிய தைரியம் இல்லை என்பது ஒன்றே காரணமாக இருக்க முடியும்.

   //கொலை கொள்ளை திருட்டுக்கு, ஊழலுக்கு, பாலியல் வன் கொடுமைகளுக்கு, சட்டத்தை மீறும் அடாவடிகளுக்கு // – அதற்கான கெப்பாசிட்டி இருக்குமானால், ஒவ்வொருவரும் உடனுக்குடன் தண்டனை கொடுக்கத்தான் செய்வார்கள். ஏன் போராட்டம் செய்பவர்கள் ‘கல்’ எறிகிறார்கள், சட்டத்தை மீறி கூடுகிறார்கள், எதிர்வினை புரிகிறார்கள்? ஏன் அவர்கள் ‘புத்தர்’ வழி அமைதியாக இருப்பதில்லை? அல்லது ‘சட்டத்தின்’ துணைகொண்டு பிரச்சனைக்குத் தீர்வு காணுவதில்லை? ‘தனக்கு வரும்போது ரத்தம், மற்றவர்களுக்கு தக்காளிச் சட்டினியா?’

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செங்கொடி,

   நீங்கள் முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.
   உங்கள் வலைத்தளத்தில் எழுதுவது போல் எதாவது
   வறட்டுத் தத்துவங்களை இங்கே உதிர்த்துவிட்டு போக முடியாது.

   இது நடைமுறை வாழ்க்கையை பிரதிபலிக்கும் தளம்.
   இங்கே வாசகர்கள் உங்கள் தளத்தைப்போல்
   நீங்கள் எழுதுவதை எல்லாம் – புரிந்ததோ புரியவில்லையோ –
   படித்து விட்டுப் போய்க்கொண்டே இருப்பவர்கள் அல்ல.

   எதையும் கேள்வி கேட்பவர்கள்.
   நான் உட்பட, யார் எழுதினாலும் லாஜிகலாக இல்லையென்றால்
   கேள்விகள் வரும். எனவே, எதையும் இங்கே எழுதும் முன்னர்
   உரிய விளக்கம் தரவும் தயாராக இருக்க வேண்டும்.

   உங்கள் வறட்டுத் தத்துவங்கள் நடைமுறை வாழ்க்கைக்கு உதவாது.

   என்னைப் பொருத்த வரையில் நான் இந்த இடுகையின் மூலம்
   சொல்ல வந்தது –
   உடனடி தண்டனை,
   கடுமையான தண்டனை,
   தண்டனை பற்றிய பயம் –
   இருந்தால் தான் இத்தகைய கட்டுக்கடங்காத செயல்களை
   கட்டுப்படுத்த முடியும் என்பது தான்.

   நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் – கொள்ளா விட்டாலும்
   இது தான் நிஜம்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • BSV சொல்கிறார்:

    //என்னைப் பொருத்த வரையில் நான் இந்த இடுகையின் மூலம்
    சொல்ல வந்தது – உடனடி தண்டனை, கடுமையான தண்டனை,
    தண்டனை பற்றிய பயம் – இருந்தால் தான் இத்தகைய கட்டுக்கடங்காத செயல்களை கட்டுப்படுத்த முடியும் என்பது தான்.//
    நீங்கள் விரும்பியபடி செய்ய முதலில் சட்டத்தை மாற்ற வேண்டும். சிங்கப்பூரில் சட்டத்தை எழுதி வைத்து விட்டே சவுக்கடி கொடுக்கிறார்கள். அதை போல இங்கும் சட்டத்தை எழுதி வைத்து விட்டே ”உடனடி தண்டனை, ”கடுமையான தண்டனை” கொடுப்பது சரி. மாறாக போலீசு, தான் விரும்பியபடி பிடிபட்டவர்களுக்கு தண்டனை கொடுக்க நமது சட்டம் இடம் கொடுக்க வில்லை. பிடித்து நீதிபதியின் முன் குற்றவாளிகளை நிறுத்துவது மட்டும்தான் போலீசின் அதிகாரப்பூர்வமான கடமை. சட்டத்தை கையிலெடுத்துக்கொண்டு தீர்ப்பும் தண்டனையும் வழங்க முடியாது. தண்டனை கொடுப்பது நீதிபதி. கையை காலை உடைத்தது சட்டத்தை மதிக்காமல் தானே கையிலெடுத்துக்கொண்டு seyaல் படுவது. நம் நாடு சட்டம் போட்டு அதை மதித்து நடக்கும் நாடு. காட்டுமிராண்டு நாடன்று. அளவுக்கு மீறி பேசிய உயர்நீதிமன்ற நீதிபதி வைத்யநாதன், தான் சொல்லியவைகளைத் தவேறென்று உணர்ந்து நீக்கியிருக்கிறார். இதுதான் நம் நாடு. வழக்காக போனால், போலீசு பாடு திண்டாட்டம்தான். இந்த மாணவர்கள் விஷயத்தில் மட்டுமல்ல. அதில் தொடங்கி எல்லா கேசுகளேயும் கை, கால் உடைக்க ஆரம்பித்து விட்டார்கள். முதலிலேயே தட்டிக் கேட்காததால் வந்த வினை.

    • Prabhu Ram சொல்கிறார்:

     BSV

     மெத்தச்சரி; நீங்கள் உங்கள்
     குடும்பத்தினருடன் ரோட்டில் போகும்போது,
     உங்கள் தங்கச்சி அல்லது மனைவியின்
     மீது இவன் “அன்பாக” உரசிவிட்டுப் போனால்
     நீங்கள் என்ன செய்வீர்கள் ?

     நீங்களும் அவனை பொறுமையாக நிறுத்தி,
     அவன் பெயர், விலாசம் ஆகியவற்றை அவனிடமே
     கேட்டு தெரிந்து கொண்டு,
     பக்கத்தில் இருக்கும் காவல் நிலையத்திற்கு
     போய் அவன் மீது, எழுத்து மூலம்
     புகார் கொடுப்பீர்களா…?

     உங்கள் தங்கச்சி/மனைவி உங்கள் முகத்தில்
     காரித்துப்பினாலும், துடைத்துக் கொண்டு
     நான் சட்டத்தின் வழியில் தான் செல்வேன்
     என்று அவர்களிடம் சொல்வீர்களா ?

     • புதியவன் சொல்கிறார்:

      பிரபுராம் – சரியான கேள்விதான். சட்டப்படி இந்தியாவில் நடந்துகொண்டால், எதையும் செய்ய முடியாது… குழந்தகளை எல்.கே.ஜியில் சேர்ப்பது முதல்கொண்டு. நம் நாட்டில் சட்டங்கள் வேறு, நடைமுறைகள் வேறு. குறிப்பா பொதுப்பணித்துறை, வி.ஏ.ஓ (பட்டா, நில அளவை..இதெல்லாம் பொதுப்பணிலதான் வருதா?) போன்றவர்களுக்கு சம்பளம் என்பது போனஸ். ஆனா அவங்க ஒரு வேலையை ஆரம்பிக்கணும்னா முதல்ல காசை வெட்டணும். அப்போதான் அலுவலகத்தில் வேலையையே ஆரம்பிப்பாங்க. (உடனே லட்சத்தில் ஒருத்தர் அப்படி இல்லாததைச் சுட்டிக் காட்டக்கூடாது)

      அட்வைஸ் சொல்லும்போது ‘சட்டப்படி’ என்று சொல்பவர்கள் அனைவரும் ‘சட்டத்தைமீறி’த்தான் இந்தியாவில் எதையும் செய்யமுடியும், செய்கிறார்கள்.

     • புவியரசு சொல்கிறார்:

      சபாஷ். சரியான கேள்வி
      சூப்பர் பிரபுராம்.
      BSV யின் பதிலை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

     • BSV சொல்கிறார்:

      எந்த ரவுடியிடமும் அவன் பெயர், விலாசம், போலீசில் புகார் அளிக்கவேண்டும் என்று கேட்க மாட்டார்கள். அவனை அடிக்கலாம். அதற்கு சட்டமே இடம் கொடுக்கிறது எனபது சட்டமே இருக்கக்கூடாது என்பவர்களுக்குத் தெரியாது. அது மட்டுமன்று சட்டம் எப்படி அமலாக்கப்படுகிறது எனபதும் தெரியவில்லை. என் தங்கையையின் கையை பிடித்து இழுத்தவன் கையிலும் ஆயுதம் இருந்தால் எங்கள் தற்காப்புக்காக அவனை கொல்லலாம். ஆனால் அவன் கையில் ஆயுதம் இல்லாதபோது அவனை அடிக்கலாம்; 100 number போன் செய்தால் போலீசு van வரும். யாரும் எவருக்கும் தண்டனை வழங்கலாம் என்றால் உங்கள் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது. உங்களுக்கும் எனக்கும் முற்பகை என்றால் அதை பழி தீர்த்துக்கொள்ள நாள் ஒரு கேஸை ஜோடித்து உங்களை கொல்லலாம். அப்படித்தான் பாகிஸ்தானில் நடக்கிறது: பக்கத்து வீட்டுக்காரனுடன் எனக்குத் தகராறு என்றால், அவன் வீட்டில் இரவில் குரானை கிழித்துப் போட்டுவிட்டு, ஊர்மக்கலை கூப்பிட்டு அவன் குரானை கிழிக்கிறான் என்று ஜோடித்து அவன் உயிரையே வாங்கி விடலாம். அப்படிப்பட்ட கேஸுதான் ஆசா பீபி என்ற பாகிஸ்தானிய கிருத்தவரின் கதை. அவருக்கு தூக்குத்தண்டனை விதித்தது ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கில். பின்னர் விடுவிக்க, ஆனால் மக்கள் அவரைக் கொல்ல விரும்ப, அவருக்கு கனடா தஞ்சம் கொடுத்திருக்கிறது. அது போகட்டும். என் தங்கையை இழுத்தவனைக் கொல்லவாவது சட்டம் இடம் கொடுக்கிறது. You can kill a man who comes with weapons to kill you, and it is called homicide in self-defence. No case against you. But, கையை காலை உடைக்க போலீசுக்கு எந்த சட்டம் இடம் கொடுத்தது? எனவேதான் கக்கூஸில் தடுக்கு விழுந்தார்கள் என்ற பொய்.

     • BSV சொல்கிறார்:

      என் தங்கையை இழுத்தா அவன் கையில் ஆயத்தம் இருந்தால், அவனைத் தட்டிக்கேட்டால், அவன் என்னைக் கொல்ல வந்தால், நான் அவனைக் கொல்லலாம் என்று சட்டமே சொல்கிறது. நான் சட்டத்தை கையிலெடுக்கவில்லை. Because murder in self-defence is allowed under law. ஆனால், அவன் நிரபராதி என்றால் நான் அவனை மிரட்டலாம்; அடிக்கலாம். ஆனால் கொல்லக்கூடாது. அவ்னிடம் முகவரி பெயர் என்றெல்லாம் கேட்டுக்கொண்டு போலீசிடம் போக மாட்டார்கள். எண்ணம் 100 க்கு போன் செய்தால் போலீசு வரும். வரவில்லை என்றால், அவன் அடையாளம் உங்களுக்கு நினைவுக்கு வரும். அவன் அடையாளம் கொஞ்சமாவது சொல்லவேண்டும். போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கலாம். அந்த ஸ்பாட்டிலேயே அவனை அடிப்பதற்கும் எப்போது முடியும்? அவன் தனியாள். உங்களால் எதிர்க்க முடியும் என்றால் மட்டுமே. கூட்டமாக வந்தால்? பலசாலியாக இருந்தால் ? என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்? எனவேதான் சட்டம்; நிலிந்தோரைக் காப்பாற்ற. சட்டமே வேண்டாமென்றால், தடியெடுத்தவன்தான் தண்டல்காரன். உங்கள் உயிருக்கு உத்தரவாதமில்லை. உங்கள் வீட்டில் நுழைந்து உங்கள் பெண்ணைத் தூக்கிசெல்வான். ஒன்னும் செய்ய முடியாது. சட்டம்தான் இல்லையே. In a law of jungle, simple and weak people cannot survive. The jungle law is SURVIVAL OF THE FITTEST and MIGHT IS RIGHT. You cannot live there if you are not a rowdi.

 14. Prabhu Ram சொல்கிறார்:

  செங்கொடி

  // அந்த பொறுக்கிகளில் ஒருவன் உங்கள் தங்கச்சியின் கையை
  பிடித்து இழுத்திருந்தால், அப்போதும் நீங்கள் அவன் அப்படிச் செய்ய
  என்ன காரணமென்று ஆராய்ச்சி தான் செய்து கொண்டிருப்பீர்களா ?//
  நண்பரின் இந்த கேள்விக்கு எங்கே பதில் ?

  அரிவாளைத் தூக்கிக் கொண்டு அவனை துரத்துவதில்
  நீங்கள் தான் முதல் நபராக இருபீர்கள்.
  வரட்டுத் தத்துவம் எல்லாம் கட்சிக் கூட்டங்களில் தான்.

  உங்கள் கட்சியில், அத்தனை பேரும் உத்தமர்களா ?
  அத்தனை பேரும் இப்படித்தான் தத்துவத்தை வாழ்க்கையிலும்
  கடைபிடிக்கிறார்களா ?
  பாலியல் புகாரிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக
  சில மாதங்கள் காணாமல் போனானே ஒரு தறுதலை –
  அவனும் உங்கள் கட்சி தானே ?
  அவன் பல பெண்களின் பின்னால் போனதற்கு காரணம் என்ன
  என்று ஆராய்ச்சி செய்தீர்களா ?

 15. Subramanian சொல்கிறார்:

  செங்கொடி
  உங்களைப் போன்ற அரசியல்வாதிகள்
  மனித உரிமை என்று குரல் கொடுத்துக்கொண்டு
  அவர்களுக்கு துணையாக இருப்பீர்கள் என்று
  தெரிந்திருப்பதால் தான் அந்த பொறுக்கிகள்
  துணிந்து ரௌடித்தனம் செய்கிறார்கள்.
  அரிவாளும் கையுமாக பட்டப்பகலில் நடு ரோடில்
  ஓடும் அந்த நாய்களுக்கு வக்காலத்து வாங்கும்
  உங்களைப் போன்றவர்களை எல்லாம் என்ன சொல்லி
  அழைப்பது என்றே தெரியவில்லை.
  பொதுமக்களே திரண்டு, அந்த இடத்திலேயே
  தண்டிக்கத் துவங்குவது தான்
  இதற்கான விடிவாக இருக்கும்.
  உங்களைப் போன்றவர்களுக்கு துணிச்சல் இருந்தால்,
  அங்கே சென்று பேசிப்பாருங்கள்.

 16. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  செங்கொடி,

  உங்கள் பின்னூட்டத்தை நான் இங்கே பிரசுரிக்கவில்லை.
  இந்த வலைத்தளத்தை உங்களுக்கான பிரச்சார மேடையாக
  பயன்படுத்திக்கொள்ள நான் அனுமதிக்கப்போவதில்லை.

  உங்கள் பிரச்சாரத்தை உங்கள் தளத்தோடு வைத்துக் கொள்ளுங்கள்.

  இங்கே எந்த ஒரு “இஸத்”திற்கும் இடமில்லை.
  இது ஒரு சுதந்திரமான தளம். நாங்கள் யாருக்கும்,
  எந்த கட்சிக்கும், எந்த இஸத்’திற்கும் அடிமையாக மாட்டோம்.


  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 17. Prabhu Ramchandar சொல்கிறார்:

  BSV

  //அவனை அடிக்கலாம்.
  அதற்கு சட்டமே இடம் கொடுக்கிறது .//

  அய்யா சட்டமேதையே.
  ஐபிசியின் எந்த பிரிவு இதை அனுமதிக்கிறது
  என்று சொல்கிறீர்களா ?

  அர்ஜெண்டாக ஒருவனை அடிக்க வேண்டியிருக்கிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.