இந்த வீடியோவை பார்த்தால் யார் அதிகம் சங்கடப்படுவார்கள்…?


ஒரு நண்பரிடமிருந்து கிடைத்த ஒரு நிமிடத்திற்கேயான
குறுங்காணொளி ஒன்று கீழே…

எப்போதோ நிகழ்ந்த நேர்காணல்.
ஆனால் “அது நானில்லை”; “நான் சொல்லவில்லை” –
என்றெல்லாம் மறுக்க முடியாதபடிக்கு உறுதியான ஆதாரம்…

இதை இப்போது கண்டால் யார் அதிகம்
சங்கடப்படுவார்கள்…
திருவாளர் வைகோவா அல்லது திருவாளர் ஸ்டாலினா…?

(இதைப்போல் இன்னும் பல காணொளிகள் இணையத்தில்
கிடைக்கின்றன – என்றாலும், மிகச் சுருக்கமாக, சிறியதாக
இருப்பதால் இதைப் பதிகிறேன்…)

.
————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to இந்த வீடியோவை பார்த்தால் யார் அதிகம் சங்கடப்படுவார்கள்…?

 1. புவியரசு சொல்கிறார்:

  என்ன சார் இது; சொரணை உள்ளவர்கள் தான்
  சங்கடப்படுவார்கள். இவர்களாவது சங்கடப்படுவதாவது !
  வைகோவை இது குறித்து கேட்டால், உணர்ச்சி வசப்பட்டு
  கோவமாக, நீ எந்த டிவி என்று கேள்வி கேட்டவரையே கேட்பார்.
  இல்லையென்றால் அசட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டு
  போயே போய் விடுவார்.
  ஸ்டாலினைக் கேட்டால், இன்னும் 30 நாட்களில்
  எடப்பாடி அரசை கவிழ்த்துக் காட்டுவோம் என்று
  தனது நிரந்தரமான சப்ஜெக்டுக்கு போய் விடுவார்.

  இதையெல்லாம் சீரியசாக எடுத்துக்கொண்டு
  யோசிப்பது அப்பாவி பொதுமக்கள் தான.

 2. புதியவன் சொல்கிறார்:

  நம்ம ஊர்ல, சிலபேரை ‘ஓசிச்சோறு’ என்ற அடைமொழியுடன் எல்லோரும் அழைப்பார்கள் (கி.வீரமணி, சுப.வீ , வைரமுத்து போன்று). அந்த குரூப்பில் சேர்ந்தவர் வை.கோ.

  “அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா” என்று துடைத்துக்கொண்டு சென்றுவிடுவார்கள் வை.கோ மற்றும் ஸ்டாலின். ஒரு விதத்தில், எதிர்த்து நின்ற வை.கோவை தனக்கும் தன் பையனுக்கும் மண்டியிடச் செய்ததில் ஸ்டாலின் வெற்றிபெற்றுவிட்டார் என்றே சொல்லணும். வை.கோவின் விலை ஒரு ராஜ்ஜியசபா சீட் என்பதைத் துல்லியமாக கணித்திருக்கிறார் ஸ்டாலின்.

  ஆனால் இந்தப் பத்திரிகைகள், இன்னமும் ‘ராஜ்ஜியசபாவில் சிங்கம்போல் கர்ஜிக்கப்போகிறார் வைகோ’ என்று எழுதி காசு கல்லா கட்டுகின்றன. வை.கோ வோ, எத்தனையோ சகதிகளைத் தாங்கியவன் நான், இன்னும் எவ்வளவு சகதியியையும் தாங்குவேன் என்று சொல்லிக்கொண்டு, மோடி அவர்களைச் சந்தித்து, சிலவற்றைப் பேசினேன், அதை வெளியிடமுடியாது என்று சொல்லிக்கொண்டு போய்க்கொண்டே இருப்பார்.

  காலம் வை.கோவையும், நாஞ்சில் சம்பத்தையும் ஒரே தகுதியுடன் இருக்க வைத்திருக்கிறது. பாவம் வை.கோவை நம்பி வாழ்விழந்தவர்கள்.

 3. tamilmani சொல்கிறார்:

  அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்று கடந்து போக முடியுமா?
  மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி அளித்ததே ஸ்டாலின் என்று எத்தனை
  பேருக்கு தெரியும். மக்களின் மறதியே இவர்களுக்கு பலம் . 37 MP
  வைத்துக்கொண்டு இவர்களால் ஒன்றும் செய்யமுடியாது. அசாதாரண
  மெஜாரிட்டியில் இருக்கும் பிஜேபி இவர்களை சட்டை செய்யாது. ஏதோ
  மோடி தமிழ்நாட்டுக்கு அவராக நல்லது செய்தால்தான் உண்டு.

 4. அழகு ரவி சொல்கிறார்:

  இதையெல்லாம் serious ஆ எடுத்துக்கிட்டு பச்ச பிள்ள கணக்கா பொலம்புறீங்களே இது ஞாயமா?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.