ஒரு உலக மகா(மெகா…?) கிறுக்கர் …


அகராதிகளில் இனி கிறுக்கர் என்கிற சொல்லுக்கு இணையாக
இவரது பெயரைச் சேர்க்கலாம் என்று தோன்றுகிறது. கூடவே,
இவர் கிறுக்கரா அல்லது கிறுக்குபோல் தோற்றமளிக்கும் வில்லனா
என்கிற சந்தேகமும் தோன்றுகிறது….

இதுவரை – பல சந்தர்ப்பங்களில் – லண்டன் மேயரைப் பற்றி
கேவலமாகப் பேசியதும், இங்கிலாந்தில் பயணம் செய்திருந்த போதே,
பிரிட்டிஷ் பிரதமரை இழிவு படுத்திப் பேசியதையும்,
இரான் விவகாரத்தில் தன்னிச்சையாக முடிவெடுத்து,

இந்தியா கச்சா எண்ணை வாங்குவதைக்கூட நிறுத்த வேண்டும் என்று
மிரட்டியதையும், இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும்
பொருட்களுக்கு 200 சதவீதம் வரி விதித்தும் இன்னும் பல
விஷயங்களிலும் தனது பக்குவமற்ற -அரைகுறை அறிவை
வெளிப்படுத்தினார்.

ஆட்டைக் கடித்து, மாட்டைக்கடித்து, கடைசியில் மனிதரையே
கடிப்பது போல், இப்போது இந்தியாவின் வெளியுறவுக்
கொள்கைகளிலும் தலையிட்டு, தன் கைவரிசையை காட்டத்துவங்கி இருக்கிறார்….

தன்னை உலக மஹா நாட்டாமையாக நினைத்து காஷ்மீர்
விவகாரத்தில், இந்தியா-பாகிஸ்தானிடையே தான் மத்தியஸ்தம்
செய்து வைப்பதற்கு தயாராக இருப்பதாக நேற்று கூறி இருக்கிறார்.

– மோடிஜி, தன்னை இந்த விஷயத்தில் மத்தியஸ்தம் செய்து
வைக்குமாறு வேண்டிக்கொண்டதாகவும் இந்த ஆசாமி நேற்று
பாகிஸ்தான் பிரதமருடன் கூட்டாக நடந்த செய்தியாளர்
கூட்டத்தில் பேசி இருக்கிறார்…

போதையில் உளறினாரா அல்லது வேண்டுமென்றே
பொய் சொல்லி, பந்தா பண்ணி இருக்கிறாரா என்று தெரியவில்லை

——————————–

https://www.livemint.com/news/world/trump-wants-to-mediate-on-kashmir-issue-pm-modi-did-not-ask-us-prez-says-india-1563849289929.html

—————-

“I was with Prime Minister Narendra Modi two weeks ago
and we talked about this subject and
he actually said –

‘Would you like to be a mediator or arbitrator’,

I said ‘Where’, He said ‘Kashmir’.

Because this has been going on for many, many years…
I think they would like to see it resolved and you
(Imran Khan) would like to see it resolved.
If I can help, I would love to be a mediator,”
Trump said, referring to a meeting with Modi
on the sidelines of the G20 meeting in Osaka, Japan.

——————————

இது இந்தியாவின் கௌரவப் பிரச்சினை.
மோடிஜி இந்த கிறுக்கரை மத்தியஸ்தம் செய்து வைக்க கோரினார்
என்பதை கனவில் கூட யாரும் நினைத்துப் பார்க்க முடியாது.
இந்த விஷயத்தில் கடந்த பல பத்தாண்டுகளாக இந்தியாவின்
நிலைப்பாடு என்ன என்பதை உலகமே அறியும்….

காஷ்மீர் பிரச்சினையை இந்தியா – பாகிஸ்தான் இடையே
செய்துகொள்ளப்பட்ட – சிம்லா ஒப்பந்தந்தத்தின் அடிப்படையில்
தனிப்பட்ட பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்ப்போம், வேறு
மூன்றாவது நாடு எதுவும் இதில் சம்பந்தப்படுவதை ஏற்க
மாட்டோம்…என்பதே மத்திய அரசின் கொள்கையாக அன்றிலிருந்து
இன்று வரை இருந்து வந்திருக்கிறது.

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு,
மோடிஜியும் பலமுறை இந்த நிலையை
தெளிவுபடுத்தி இருக்கிறார்.

மோடிஜி சொல்லாத ஒன்றை சொன்னதாக இந்த கிறுக்கர்
சொல்வது அயோக்கியத்தனமானது….

தன்னை உலக மஹா நாட்டாமை’யாக
நினைத்து இவர் கண்டபடி உளறுவதை, அமெரிக்கர்களே
ரசிக்க மாட்டார்கள் (இவரது கட்சிக்காரர்கள் சிலரைத்தவிர…)

மத்திய அரசு ஏற்கெனவே இந்த கூற்றை, மென்மையாக
மறுத்திருக்கிறது. கிறுக்கர்களுக்கு, அவர்களுக்குப் புரியக்கூடிய
மொழியில் புரியவைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது…

.
——————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to ஒரு உலக மகா(மெகா…?) கிறுக்கர் …

 1. புவியரசு சொல்கிறார்:

  .

  ட்ரம்ப் ஒரு பொய்யர் என்பதை
  இந்தியா உலகிற்கு சப்தம் போட்டுச் சொல்ல வேண்டும்.

  .

  • sakthy சொல்கிறார்:

   சொல்லி விட்டதே. ராஜ்யசபாவில் வெளியுறவு அமைச்சர் ஜய்சங்கர் இதை மறுத்திருக்கிறார். வெளியுறவுச் செயலரும் டுவிட்டரில் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
   Trump’s Kashmir mediation claim: ‘No such request made by PM Narendra Modi’, says foreign minister S Jaishankar

 2. ravikumar r சொல்கிறார்:

  Before he stepping down from president post he would make world upside and down in all aspects

 3. Karthik சொல்கிறார்:

  What if, NaMoo demanded Trump?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கார்த்திக்,

   வாய்ப்பே இல்லை.

   மோடிஜி நிச்சயமாக இந்த பைத்தியக்காரரிடம்
   அத்தகைய உதவிகளையெல்லாம் கேட்டிருக்கவே
   மாட்டார்.

   அந்த அளவிற்கு இது தலைபோகிற அவசரமோ,
   அவசியமோ உள்ள விஷயமும் இல்லை.
   மோடிஜியின் சுயகௌரவமும் இதை அனுமதித்திருக்காது.

   ட்ரம்ப் – ஒன்று மோடிஜியுடன் பேசும்போது குடித்திருப்பார்..
   அல்லது இப்போது இம்ரான் கானுடன் நடந்த செய்தியாளர்
   சந்திப்பின்போது குடித்திருப்பார்….

   கிறுக்கர்…. இந்த விஷயத்தில் அவரை வெளிப்படையாகவே
   expose செய்வது தான் சரி.. இந்தியாவின் சுயகௌரவத்தை
   காத்துக் கொள்ள இது அவசியம்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 4. புதியவன் சொல்கிறார்:

  இவரைத் தேர்ந்தெடுத்ததற்கு அமெரிக்கர்கள்தாம் வெட்கப்படணும்.

  ட்ரம்ப், நவீன முகமது பின் துக்ளக் என்றே அறியப்படுவார். நல்ல தேசமான அமெரிக்காவுக்கு அடுத்து நல்ல தலைவர் கிடைக்கட்டும்.

 5. Periathamb Ramasamy சொல்கிறார்:

  He never drinks….

 6. MJT சொல்கிறார்:

  It’s biased article By rss guy

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.