நூற்றுக்கு 100 சதவீதம் ஏற்கத் தகுந்தது..


சூர்யா, வரைவு புதிய கல்விக் கொள்கை மீது, தான் பேசியது
குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு பதிலாக ஒரு விளக்கமான
அறிக்கையை வெளியிட்டுள்ளார்….

கல்வி என்பது ஒரு சமூக அறம்,
பணம் இருந்தால் விளையாடு என்று சொல்கிற
சூதாட்டமாக அது மாறக்கூடாது.

நம் நாட்டில் கல்வியானது ஏழைகளுக்கு ஒன்றாகவும்
வசதி படைத்தவர்களுக்கு ஒன்றாகவும் இருக்கிறது
என்பதை உணர புள்ளி விவரங்கள் தேவையில்லை.

மனசாட்சியே போதுமானது.
அப்படிப்பட்ட மனசாட்சிதான் அனைவருக்கும் சமமான தேர்வு
என்பதை விட ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல்
அனைத்து குழந்தைகளுக்கும் சமமான தரமான
இலவச கல்வியை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு
என்று வலியுறுத்துகிறது.

அகரம் பவுண்டேஷன் மூலம் 3 ஆயிரம் மாணவர்கள்
உயர்கல்வி பெறும் வாய்ப்பை பெற்றுள்ளனர். நீட் தேர்வுக்கு பிறகு
அரசு பள்ளியில் படித்த ஒருவர் கூட அகரம் பவுண்டேஷன் மூலம்
மருத்துவ கல்வியில் சேர்க்க முடியவில்லை.

புதிய கல்விக்கொள்கையில் அனைத்து பட்டப்படிப்புகளுக்கும்
நுழைவுத்தேர்வுக்கு பரிந்துரை இருப்பது அச்சமூட்டுகிறது.

உயர்கல்வியில் இருந்து கிராமப்புற மானவர்களை
நுழைவுத்தேர்வுகள் –
துடைத்து எறிந்து விடும்.

சமமான தேர்வு வைப்பதைவிட சமமான தரமான
இலவசக்கல்வியை உறுதி செய்வது அரசின் பொறுப்பு.

நம் நாட்டில் கல்வி என்பது ஏழைகளுக்கும் ஒன்றாகவும்
வசதி படைத்தவர்களுக்கும் ஒன்றாகவும் இருக்கிறது.
சமமான வாய்ப்பு மற்றும்
தரமான கல்வி மறுக்கப்பட்ட சக ஆயிரக்கணக்கான
மாணவர்களின் நிலை அறிந்த சக மனிதனாகவே
என்னுடைய கேள்விகளை முன்வைக்கிறேன்.

கல்வியை பற்றி பேச எனக்கு என்ன தகுதி இருக்கிறது
என்ற எதிர்கருத்து வந்தபோது ஏழை மாணவர்களின்
கல்வி நலன் கருதி என் கருத்துகளை ஆதரித்த
அனைவருக்கும் நன்றி .

வரைவு புதிய கல்விக்கொள்கை பற்றி ஆக்கப்பூர்வமான
கருத்துக்களை இணையதளத்தில் கூறுங்கள். மத்திய அரசும்
அனைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்து தேவையான
திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுகோள் வைக்கிறேன்.

ஏழை மாணவர்களுக்கு கல்வியே உயரப்பறப்பதற்கான சிறகு.
அது முறிந்து போகாமல் இருக்க அனைவரும் துணை நிற்போம்”

.
————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to நூற்றுக்கு 100 சதவீதம் ஏற்கத் தகுந்தது..

 1. R'Goalakrishnan சொல்கிறார்:

  I also do agree with Surya’s views fully. I expected lot of comments accepting Surya’s views.
  I do not know why regular readers are – NOT – responding either in favour or against his views.
  What do you think Sir?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கோபாலகிருஷ்ணன்,

   சூர்யாவின் பேச்சு பற்றி 2-3 நாட்களுக்கு முன்னால்
   வேறு சில இடுகைகளும் வெளிவந்திருந்தன…

   1) அக்காவுக்கு ஏன் இத்தனை கோபம்…?
   சூர்யா – அப்படி என்ன தப்பாகப் பேசி விட்டார் ….?

   2) கருத்து தெரிவிக்கச் சொல்வதே வன்முறையா ….?
   விளைவுகள் தெரிந்தும் தைரியமாகப் பேசிய
   சூர்யாவிற்கு நமது வாழ்த்துகள்…

   3) தனிப்பட்ட மக்களால் – நிச்சயமாக முடியாது….

   அவற்றின் மீது சிலர் ஏற்கெனவே கருத்து
   தெரிவித்திருக்கிறார்கள்…
   கொஞ்சம் பின்னால் போய்ப் பாருங்கள்…
   அவற்றை எல்லாம் பார்க்கலாம்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. Selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! முதலில் சூர்யாவுக்கு ஒரு சல்யூட் …! இங்குள்ள அரசியல் கட்சிகளே தொட ரெண்டுங்கெட்டான் நிலையில் இருக்கின்ற ஒரு முக்கிய விவகாரத்தை கையில் எடுத்து — பல ஆதரவு – எதிர்ப்புக்களை தாங்கி கொண்டு வளரும் மாணவர்களின் நலனில் அக்கறை காட்டுவதற்கு ஒரு சபாஷ் … !

  இந்த தேசிய கல்விக் கொள்கை என்பது குழந்தைகளின் மீது திணிக்கப் படுகின்ற செயல் என்று கூறினால் நிறைய நபர்களுக்கு பொத்துக்கொண்டு வருகிறது — மொழி திணிப்பு என்பது ஒரு பக்கம் என்றால் — மூன்றாம் — ஐந்தாம் — எட்டாம் வகுப்புகளில் நடத்தப்படுகிற தகுதி தேர்வுகளும்அதன் பிறகு 9 ம் வகுப்பில் ஆரம்பித்து 12 ம் வகுப்புவரை மேலும் 8 பருவத் தேர்வுகள். இதை இடைநிலைக் கல்வி என்று மாற்றுகிறார்கள்…! இந்த தேர்வுகள் தான் ” சிந்தனைத் திறன் வளர்ச்சிக்கு ” உதவும் என்று சொல்லிவிட்டு, பள்ளிக் கல்வி என்பது கல்லூரியில் சேர்வதற்கான தகுதி இல்லை என்றும் சொல்கிறார்கள். ….
  இதை சிந்தித்து பார்த்தால் 3 வயதில் இருந்து 12 ம் வகுப்புவரை ஒருவன் கற்கின்ற கல்வி — அதன் பிறகு உப்பு — புளி க்கு கூட லாயக்கில்லை என்று கூறி — 12 ம் வகுப்புவரை கற்றது சிந்தனைத் திறனை – உனக்கு அளித்ததது – அதன் மூலம் நீ ” ஏட்டு சுரைக்காய் – கறிக்கு உதவாது ” என்பதை தெரிந்து கொண்டாய் அல்லாவா அதோடு போய்கிட்டே இரு – என்று கூறாமல் கூறுகிறார்களோ ..?

  கல்லூரியில் சேரவேண்டும் என்றால் தேசியத் தேர்வு முகமை(NTA) நடத்தும் திறனறியும் தேர்வு எழுதி அந்த மதிப்பெண்ணின் அடிப்படையிலே கல்லூரியில் இடம் அளிக்கப்படும்.என்று கூறுவது எதற்காக என்பதைப் பற்றியெல்லாம் யாரும் கேள்வி எழுப்பவில்லை — எழுப்பி மட்டும் என்ன ஆக போகிறது ..?

  சிந்தனைத் திறனோடு மாணவர்களை வளர்க்கும் கல்விக் கொள்கை என்று ” தம்பட்டம் ” அடிக்கும் இவர்கள் மாணவர்கள் ஏன் அதன் அடிப்படையில் கல்லூரிகளில் சேர்க்கப்படக்கூடாது? எதற்காக இன்னொரு திறனறியும் தேர்வு? விவரமாக கேட்டு கருத்துக்களை கூறி விடாமல் இருக்க தான் கால அவகாசம் கூட கொடுக்க மறுக்கிறார்களோ …? இவர்களுடைய நோக்கமெல்லாம் மூன்றாம் வகுப்பு தொடங்கி தொடர்ந்து மாணவர்களை வடிகட்டுவது. பள்ளிக் கல்வியின் போதே பெருவாரியானவர்களை ஓரங்கட்டி விட்டால் வயிற்று பிழைப்புக்கு ஏதாவது பகோடா — பஜ்ஜி விற்கும் சுயத் தொழில் பார்க்க சென்று விட்டால் — இவர்கள் நினைக்கின்ற பிரிவினர் மட்டும் உயர் கல்விக் கற்று எல்லா இடங்களிலும் நிரம்பி வழிவார்கள் என்று இவர்கள் சிந்தித்து இந்த கொள்கையை கொண்டு வந்து இருப்பார்களோ என்று நினைப்பது கூட தவறோ … ?

  // இந்த அரசை, தான் ஏற்கெனவே எடுத்து விட்ட
  ஒரு தீர்மானத்திலிருந்து பின் வாங்கக்கூடிய அளவிற்கு
  செயல்பட வைக்க யாருக்கு சக்தி இருக்கிறது….?
  அப்படி மற்ற கருத்துகளை ஏற்று செயல்படக்கூடிய
  அளவிற்கு ஜனநாயக முறையிலா இங்கு ஆட்சி
  நடைபெறுகிறது…?
  தான் எடுத்த கொள்கை முடிவிலிருந்து இந்த கட்சி/அரசு
  எப்போதாவது பின் வாங்கி இருக்கிறதா…? // இது தான் நடக்கும் … ஜனநாயகம் வாழ்க …!!!

 3. ravikumar r சொல்கிறார்:

  Has it been known to him recently? If not why did he keep quiet so long? Some hidden agenda must be there.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.