இவர்கள் களவாணிகள், கூட்டுக் களவாணிகள்…


ஆளும் கூட்டணியைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள்
பங்களூரிலிருந்து ஒட்டுமொத்தமாக விமானத்தில்
மும்பை அழைத்துச் செல்லப்படுகிறார்கள்…
பின்னர் அங்கே ஒரு 5 நட்சத்திர சொகுசு
விடுதியில் தங்க வைக்கப்படுகிறார்கள்…

சகலவித சுகபோகங்களும் அவர்களுக்கு அளிக்கப்படுகின்றன.
ஆளும் கூட்டணி அரசை கவிழ்க்க வேண்டும் என்பது
அவர்களுக்கான – இப்போதைய – டார்கெட், லட்சியம்,
கொள்கை…. எல்லாம்.
இதற்காக இந்த கேடிகளுக்கு பல கோடிகள்
கொடுக்கப்பட்டன என்பது வெளியே சொல்லப்படாத,
ஆனால், எல்லாரும் அறிந்த ரகசியம்.

இடையில் ஒரு நாள் ஸ்பீக்கரை நேரில் சந்திக்க வேண்டிய
கட்டாயம் வருகிறது.. ஒட்டு மொத்தமாக வருகிறார்கள்…
சந்திப்பு முடிந்த பிறகு – மீண்டும் தனி விமானத்தில்
(Chartered Plane… ) மும்பை பறக்கிறார்கள்… பறக்க
வைக்கப்படுகிறார்கள்…

அதே நட்சத்திர விடுதியில் சகல சுகபோகங்களும்…
தொடர்கின்றன. ஆட்சி கவிழும் வரை இது தொடரும்…
அடுத்த சீனில், புதிய அரசில்
இவர்களில் சிலர் மந்திரி ஆவார்கள்.

இந்த ஆபரேஷனை யார் முன்னின்று நடத்துவது…?
இந்த செலவுகளை யார் பார்த்துக் கொள்வது…?

விமான பயணச் செலவுகளானாலும் சரி…
5 நட்சத்திர ஓட்டல் செலவுகளானாலும் சரி –
கோடிக்கணக்கில் ஆன செலவுகள் அனைத்தும் –
அரசாங்கத்தின் favourite ஆன digital transaction மூலம் தானே
நடைபெற்றிருக்கும்…? ஆதார் எண்ணோ, பான் கார்டு எண்ணோ
வைத்து தானே நடந்திருக்க முடியும் ….?
( அதான் கருப்புப் பணத்தை முற்றிலுமாக ஒழித்தாகி விட்டதே…!!!)

வருமான வரித்துறையோ, அமலாக்கப்பிரிவோ –
இதை கவனிக்காமலா இருக்கும்…?
இந்த முழு பணப்பரிமாற்றங்களும் அவர்களுக்குத் தெரியாமலா
இருக்கும்…?

ஆனால் ஏன் நடவடிக்கை எதையும் காணோம்…?

அவர்கள் என்ன நம்மைப்போல் முட்டாள்களா…?
ஆளும் கட்சியை பகைத்துக் கொள்ளும் துணிச்சல்
அவர்களுக்கு உண்டா…? இடப்படும் உத்திரவுகளின்படி
தானே அவர்கள் நடந்துகொள்ள முடியும்…?

சரி – மத்திய அமைப்புகளை விடுங்கள்…
மாநிலத்தில், ஆளும் ஆட்சிக்கு எதிராகத்தானே
இந்த நிகழ்வுகள் எல்லாம் நடக்கின்றன…?
மாநில அரசு, தங்கள் புலனாய்வு நிறுவனங்களின் மூலம்
இந்த தகவல்களை அறிந்து கொள்ள முடியாதா…?

தாராளமாக முடியும்… ஏற்கெனவே அறிந்து தான்
வைத்திருப்பார்கள்…

பின் ஏன் இந்த விவரங்களை அவர்கள் வெளியிடவில்லை…?
மாநிலத்தில் ஆளும் கட்சிகள் மட்டுமென்ன
சத்தியசந்தர்களா…? அரிச்சந்திரன் அவதாரங்களா…?

இன்றைய ஆளும் கட்சி நாளைக்கு எதிர்க்கட்சி ஆகும்…
இனி ஆளப்போகிற கட்சியை கவிழ்ப்பதற்கு – அவர்களும்
எதிர்காலத்தில் – இதே நடைமுறையை கடைப்பிடிக்க
வேண்டி வரும்.

சொல்லப்போனால் – கடந்த காலத்தில்
அவர்களும் இதே நடைமுறையை
பயன்படுத்தி தான் ஆட்சியை பிடித்திருப்பார்கள்….

இதில் எத்தனை கோடி பணம் விளையாடுகிறது…
யார் மூலம் பணம் செலவழிக்கப்படுகிறது…
அதற்கான வருமானம் சம்பந்தப்பட்டவர்களுக்கு
எப்படி வந்தது போன்ற ஒட்டு மொத்த விவரங்களும் –
ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் – இரண்டு தரப்புமே
அறிந்த விஷயம் தான் –

அறியாதவர்கள் – ஓட்டு போட்டு இவர்களை எல்லாம்
பதவியில் அமர்த்தும் பொதுமக்களாகிய
வடிகட்டிய முட்டாள்கள் தான்.

இத்தனையும் தெரிந்தும், இவர்களில் யாரும், யாரையும்
காட்டிக் கொடுக்க மாட்டார்கள். தங்களுக்குள் எத்தனை
முட்டிக் கொண்டாலும், மோதிக்கொண்டாலும் –

இந்த விவரங்களை,
தொழில் ரகசியங்களை,
trade secrets-ஐ
எந்த கட்சியும் வெளியிடாது. இது விஷயத்தில் மட்டும்,
எதிரணியினரை காட்டிக் கொடுக்க மாட்டார்கள்…

ஏனெனில் – இவர்கள் கூட்டுக் களவாணிகள்.
தங்களுக்குள் முறை வைத்து கொள்ளை அடிப்பவர்கள்.

தங்களின் தொழிலுக்கு பாதகமில்லாத வகையில்,
ஒரிஜினல் ஃபார்முலாவுக்கு எந்த ஆபத்தும்
வராத வகையில் தான் –
இவர்கள் முட்டுவார்கள்… மோதுவார்கள்…
ஆட்சியை கவிழ்ப்பார்கள்; பிடிப்பார்கள்… !!!

இவர்களில் யாருமே உத்தமரில்லை… யோக்கியரில்லை…
இவர்கள் களவாணிகள் – கூட்டுக்களவாணிகள்…!!!

.
—————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to இவர்கள் களவாணிகள், கூட்டுக் களவாணிகள்…

 1. Subramanian சொல்கிறார்:

  .
  // இவர்களில் யாருமே உத்தமரில்லை… யோக்கியரில்லை…
  இவர்கள் களவாணிகள் – கூட்டுக்களவாணிகள்…!!! //
  .

  Perfect Assessment.
  நான் உங்கள் கருத்தை 200 % ஏற்கிறேன்.
  சாமான்ய மக்கள் இதையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டும்.

  .

 2. Selvarajan சொல்கிறார்:

  அய்யா ..! மக்களின் நலன் சார்ந்த எந்த சிந்தனையும் இல்லாத , கொள்ளையடித்து – கொழுத்து – சொத்துக்களை சேர்க்கவும் — தொடர் பதவிகளை தக்கவைத்து கொள்ளவுமே அரசியலுக்கு வரும் சமூதாய விரோதிகளின் கூடாரமாக அனைத்து கார்ப்ரேட் அரசியல் கட்சிகள் விளங்கி வருகின்றன….. பாஜக, மஜத, காங்கிரசு என கட்சிகளின் பெயர்கள் மட்டுமே மாறியிருக்கின்றதே ஒழிய அதன் வர்க்கத் தன்மை என்பது பெரு முதலாளிகள் … கார்ப்ரேட்டுகளின் அடியொற்றி தான் இருக்கிறது என்பது கண்கூடு ….. அயோக்கியர்களையும், பொறுக்கிகளையும், கொலைகாரர்களையும், ஊழல்வாதிகளையும், மோசடிப் பேர்வழிகளையும் உள்ளடக்காத கட்சி என்று ஏதாவது ஒன்று இருக்கிறதா — நம்நாட்டில் …?

  இந்த தளத்திலேயே பலமுறை எம்.பி.க்கள் — எம்.எல்.ஏக்கள் — ஆளுகின்ற மந்திரிகள் அனைவரின் கோடீஸ்வர தன்மை — கிரிமினல் வழுக்குகளின் எண்ணிக்கை — சொத்துக்களின் விவரம் — கார்பொரேட்களும் — பெரு முதலாளிகளும் இவர்களுக்கு செய்கின்ற தொண்டுகள் போன்றவைகள் விலாவரியாக வெளிவந்துஉள்ளது

  இப்படி பெரும் கோடீஸ்வரர்களையும்,…கிரிமினல் வழக்கு உள்ளவர்களையும் கொஞ்சம் கூட வெட்க மானமே இல்லாமல் தேர்தலில் நிற்க வைத்து வெற்றிபெற வைத்த யோக்கியர்கள்தான் கர்நாடக அனைத்துகட்சியினரும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது ….
  . இப்போது நடந்து கொண்டிருப்பது உண்மையில் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கான போராட்டம் கிடையாது. கர்நாடகாவை யார் கொள்ளையடிப்பது என்பதற்காக நடக்கும் வெட்டுக் குத்து சண்டை — பதவிப் போராட்டம் … ! இந்த சண்டையில் நிச்சயம் அதில் நிபுணத்துவம் வாய்ந்த கட்சியே வெற்றி பெறும் என்பதால் — பல மாநிலங்களில் செய்து ருசிக்கண்டு — வெற்றிகண்ட கட்சியே நிச்சயம் இங்கேயும் அதற்கான முனைப்போடு செயலாற்றுகிறது என்கிற போது — தங்களின் கூற்றான // தங்களின் தொழிலுக்கு பாதகமில்லாத வகையில்,
  ஒரிஜினல் ஃபார்முலாவுக்கு எந்த ஆபத்தும்
  வராத வகையில் தான் –
  இவர்கள் முட்டுவார்கள்… மோதுவார்கள்…
  ஆட்சியை கவிழ்ப்பார்கள்; பிடிப்பார்கள்… !!!

  இவர்களில் யாருமே உத்தமரில்லை… யோக்கியரில்லை…
  இவர்கள் களவாணிகள் – கூட்டுக்களவாணிகள்…!!! // உண்மையான வார்த்தைகள் …!!!

 3. புதியவன் சொல்கிறார்:

  எப்படி வெளிப்படையாக அசிங்கமாக நடந்துகொள்கிறார்கள்? கர்நாடகா கவர்னர், இன்று 12 மணிக்கும் நம்பிக்கைத் தீர்மானம் எடுத்துக்கணும் என்று சொல்கிறார். எதற்காக? ஏன் 2 வாரங்கள் பொறுத்திருந்து எடுத்துக்கொண்டால் என்ன? ஏற்கனவே நடந்தது குதிரைப் பேரம்தானே. ‘விப்’ கொடுத்தால் எல்லா கட்சி எம்.எல்.ஏக்களும் கலந்துகொண்டு வாக்களித்தே ஆகவேண்டும். ஏன் உச்ச நீதி மன்றம் இதில் தலையிடுகிறது? யாருக்குச் சாதகமாக? அப்படி 15 எம்.எல்.ஏக்கள் யூ டர்ன் அடிக்க என்ன பெரிய காரணம்? நாட்டிற்கு எதிராகவோ இல்லை கர்நாடகத்துக்கு எதிராகவோ குமாரசாமி ஏதேனும் செய்தாரா? பாஜக, தனக்குச் சம்பந்தமில்லை என்று கைகழுவ முடியாது. இதில் பாஜகவின் வேலைதான் அதிகம். இடுகையில் இதைவிடப் பொருத்தமான படம் போட்டிருக்கலாம்.

  இந்த இடுகையையே, கிட்டத்தட்ட மாறுதலே செய்யாமல், தமிழகத்தில் நடந்த நடக்கும் கூத்துக்கும் வைத்துக்கொள்ளலாம். அதனால்தான் குரங்கு வைத்துக்கொண்ட ஆப்பு போல, இந்த விஷயத்தைப் பற்றி ஸ்டாலின் கருத்து தெரிவிக்கலை. அவரும் இந்த வேலையைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருப்பவர்தானே (ஒவ்வொரு முறையும் தோல்வியே பரிசாகக் கிடைத்தபோதும்)

  இந்தக் கட்சிகள் (என்று எழுதப்போனா ‘அட்டைகள்’ என்று வருது) என்று ஒழியும், யார் ஒழிப்பார்கள்?

 4. புதியவன் சொல்கிறார்:

  //ஆதார் எண்ணோ, பான் கார்டு எண்ணோ வைத்து தானே நடந்திருக்க முடியும் ….? ( அதான் கருப்புப் பணத்தை முற்றிலுமாக ஒழித்தாகி விட்டதே…!!!) // – நீங்க ஜோக் அடிக்கலையே? அதுவும் தமிழராக இருந்துகொண்டு இப்படி எழுதலாமா? தேர்தலின்போது கைப்பற்றப்பட்ட 200 கோடிகளுக்கு ஆதார் எண், பான் கார்டு எல்லாம் இருந்ததா?

  • புதியவன் சொல்கிறார்:

   நானும் முதல்ல அப்படித்தான் புரிந்துகொண்டேன். பிறகு நடப்பதைப் பார்த்துத்தான் இதுக்கு வேறு அர்த்தம் என்று தெரிஞ்சது.

   வயலெட் கலரில் 100 ரூபாய், பச்சைக் கலரில் அந்த ரூபாய், சிவப்பில், ஆரஞ்சில் என்று விதவிதமான நோட்டுகள் புழக்கத்தில் புதிதாக விடப்பட்டனவே பாஜக அரசு வந்த பிறகு. ஆனா நீங்க கருப்பு கலர்ல நோட்டு வெளியிட்டதைப் பார்த்தீங்களா? கருப்பு பணம் ஒழிஞ்சிடுச்சில்ல. அவ்ளோதான் விஷயம்.

   ரியல் எஸ்டேட்டில் மாத்திரம் ஏகப்பட்ட கருப்புப் பணம் புழங்குகிறது. நிலம், இண்டீரியர், போன்ற பல விதங்களில். இதுபோல் ஒவ்வொரு துறையையும் ஆராய்ந்தால்தான் உண்மை புரியும். இதை ஆராயவோ இல்லை தடுக்கவோ யாரும் முனைவதில்லை.

 5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  என்ன புதியவன் இப்படி கேக்கறீங்க ???

  அதான் மோடீஜி, 2016 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம்
  8-ந்தேதி, இரவு, சுபயோகம், சுப முகூர்த்தம் பார்த்து,
  in an unscheduled live national
  televised address at 20:15 IST
  கருப்புப்பணத்தை எல்லாம் சுத்தமாக ஒழித்து விட்டதாக
  அறிவித்து விட்டாரே.

  இன்னமும் கருப்புப்பணம் இருக்கிறது
  என்று சொல்வது மாபெரும் தேசத்துரோகம்
  ஆகி விடாதா…???

  நமக்கெதற்கு பொல்லாப்பு …
  அரசாங்க விரோதம்…???
  அதான்….!!!

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 6. Selvarajan சொல்கிறார்:

  இடுகை படத்தில் உள்ளது நரிக் கூட்டமா …குள்ள நரிக் கூட்டமா ….இல்லை ..ச்சீ .சீ இந்தப் பழம் புளிக்கும் என்று கூறி தன்னைத்தானே சமாதானப் படுத்திக்கிட்ட கள்ள .. கபட நரிக் கூட்டமா ….? நல்ல தேவையான படங்களை பாேடுகிற உங்களுக்கு நன்றி …!

 7. Raghuraman சொல்கிறார்:

  *Singapore Prime Minister, Lee Kuan Yew* said there were two options for him :
  *Either…..*
  I get corrupted and I put my family in the Forbes list of the richest people in the world and leave my people with nothing.
  *Or….* I Serve my Country, My People and let My Country be in the list of the Best 10 Economies in the World.
  *I chose the Second Option.*

  *Karnataka politicians said,* “There were two options for us too, but the second option was already taken by the Singapore Prime Minister”. ….
  *We had No other Choice*

  This is running in watsup currently.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.