தனிப்பட்ட மக்களால் – நிச்சயமாக முடியாது….


புதிய கல்விக் கொள்கையைப் பற்றிய தங்கள் கருத்துகளை,
சம்பந்தப்பட்ட வெப்சைட்டில் யார் வேண்டுமானாலும்
தெரிவிக்கலாம் என்று அரசு தெரிவித்திருக்கிறது.

https://innovate.mygov.in/new-education-policy-2019/

Click to access NEP-2019-TAMIL-V01.pdf

ஆனால், ஆசிரியர்களோ, கல்வி நிறுவனங்களோ, தனிப்பட்ட
மனிதர்களோ இது குறித்து அதிகம் பேச முன்வரவில்லை….

இதற்கான காரணங்கள் –

– வரக்கூடிய எதிர்வினையைக் கண்டு அச்சம் –
இங்கே மத்திய அரசின் கொள்கை, செயல்பாடுகள் குறித்து
யார் எதிர்க் கருத்து தெரிவித்தாலும், உடனே அவர்கள்
ஜால்ராக்களால் கடுமையாக தாக்கப்படுகிறார்கள்…
தனிப்பட்ட முறையில் ஏசப்படுகிறார்கள்…
பயமுறுத்தப்படுகிறார்கள்…

– இதையும் தாண்டி கருத்து சொல்லலாமென்று யாரேனும்
நினைத்து முற்பட்டால் –

தான் சொல்வதால் மட்டும் என்ன விளைவு நிகழ்ந்து
விடப்போகிறது…? இத்தகைய தனிப்பட்ட கருத்துகளை
எல்லாம் யார் பரிசீலனை செய்யப்போகிறார்கள்…?
வலைத்தளத்தில் கருத்து கேட்பதெல்லாம் just a formality
தானே….?

– வரைவு கொள்கை என்பதே ஏற்கெனவே மத்திய அரசு
கிட்டத்தட்ட எடுத்து விட்ட ஒருமுடிவு தான்.

இந்த அரசை, தான் ஏற்கெனவே எடுத்து விட்ட
ஒரு தீர்மானத்திலிருந்து பின் வாங்கக்கூடிய அளவிற்கு
செயல்பட வைக்க யாருக்கு சக்தி இருக்கிறது….?
அப்படி மற்ற கருத்துகளை ஏற்று செயல்படக்கூடிய
அளவிற்கு ஜனநாயக முறையிலா இங்கு ஆட்சி
நடைபெறுகிறது…?
தான் எடுத்த கொள்கை முடிவிலிருந்து இந்த கட்சி/அரசு
எப்போதாவது பின் வாங்கி இருக்கிறதா…?

வெறுமனே வாயைத்திறந்து கருத்து சொன்னாலே
தாக்குதல்கள் நடக்கின்ற நிலையில், அரசின் வெப்சைட்டில்,
வலுவில் சென்று, தன்னைப்பற்றிய முழு விவரங்களையும்
கொடுத்து மாட்டிக் கொள்ள எத்தனை பேருக்கு
தைரியம் இருக்கிறது…?

ஆக – இவற்றிற்கெல்லாம் மாற்றே இல்லையா…?

இருக்கிறது….
தனிப்பட்ட மனிதர்களோ, பெற்றோர்களோ, ஆசிரியர்களோ
கருத்து பதிவதை விட,

சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள், கல்வியை தொண்டாக
நினைத்து செயல்படும் – லாபம் கருதாத உண்மையான கல்வி
நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசின் விளம்பரங்களுக்கு
மசியாத செய்தி நிறுவனங்கள், மீடியாக்கள் –

இந்த வெப்சைட்டில் விவரமாக, தெளிவாக தங்கள்
கருத்துகளை பதிவிடலாம்… அவற்றைப்பற்றிய விவரமான
செய்திகளை பொது மக்களுக்கும் தெரிவிக்கலாம்…
இது பொதுமக்களிடையே, பெற்றோர்களிடையே,
ஆசிரியர்களிடையே – ஒருவித தெளிவையும், தைரியத்தையும்
உண்டு பண்ணும்.

மக்கள் – எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டு
தான் இருக்கிறார்கள். செயல்பட வேண்டிய நேரத்தில்,
அவர்கள் நிச்சயம் செயலாற்றுவார்கள் –

இன்றில்லா விட்டாலும் – நாளையாவது,
நிலைமை நிச்சயம் மாறும்…

-என்கிற நம்பிக்கை நமக்கு இருக்கிறது.

.
———————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to தனிப்பட்ட மக்களால் – நிச்சயமாக முடியாது….

 1. புவியரசு சொல்கிறார்:

  நீங்கள் சொல்வது உண்மை தான்.
  தனிப்பட்ட மனிதர்கள் கருத்து சொல்ல
  பயப்படும் சூழ்நிலையில் தான் நாடு இன்று
  இருக்கிறது. அமைப்புகள் தான் தீவிரமாக
  களத்தில் இறங்கிச் செயல்பட வேண்டும்.
  கருத்தொற்றுமையை உருவாக்க வேண்டும்

 2. Selvarajan சொல்கிறார்:

  அய்யா … !
  மும்மொழி கொள்கை என்பதை யாரும் எதிர்க்கவில்லை — அந்த மூன்றாவது மொழி ஹிந்திதான் என்றும் – அதைக் கட்டாயம் படித்தே ஆகவேண்டும் என்பதில் தான் சிக்கலே ஆரம்பிக்கிறது …! அந்தகாலங்களில் சிலர் கூறுவார்கள் ஹிந்தி படித்தால் வேலைவாய்ப்பு என்று — ஆனால் இப்போது இந்த அரசு அடாவடியாக ” ஹிந்தி படித்தவனுக்கே வேலை ” என்று கொண்டுவந்து — ஒவ்வொரு துறையாக புகுத்திக் கொண்டு இருப்பதையும் பார்த்துக்கொண்டே இருக்கும் போதே — புதிய கல்விக் கொள்கை என்பதை வெளியிட்டு — அதற்கு கருத்துக்களை கூறுங்கள் என்றால் — நீங்கள் கூறியவாறு உள்ள ” காரணங்கள் ” பயம் காட்டுவது ஒருபுறம் என்றால் — வருங்கால வாழ்க்கையின் அடிமடியில் கை வைக்கின்ற வேலைவாய்ப்பு மறு புறம் என்பதால் அவர்கள் கொடுத்துள்ள வெப்சைட்டில் கருத்து கூறி என்ன நடக்கும் — ஒன்றும் நடக்காது — கருத்து கூறியவன் ” மஹா தேச விரோதி ” என்று பாராட்டப்படுவான் என்பது மட்டும் நிச்சயம் …

  இந்த தேசிய கல்விக் கொள்கையே ” ஹிந்தியிலும் — ஆங்கிலத்திலும் மட்டுமே ” வெளியிட்டார்கள் — ஆனால் பெயர் மட்டும் தேசிய கல்விக் கொள்கை என்பது — இந்த இரண்டு மொழிகள் மட்டுமே தேசியம் பேசுகின்றன — சூப்பர் …!! அதற்கான ஏற்பாடுகளில் ஒன்று : —

  சமீபத்திய தபால் துறை தேர்வில் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு எழுதலாம் — பிராந்திய மொழிகளில் வினாத்தாளே கிடையாது என்ற அரசின் நிலைப்பாட்டுக்கு எதிரான வழக்கில் —நீதி கூறுகிற இடங்களும் // தபால்துறை தேர்வை நடத்தலாம்.. ஆனால் முடிவை வெளியிடக் கூடாது.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு // https://tamil.oneindia.com/news/chennai/postal-jobs-test-on-today-only-in-english-hindi-356920.html என்று செய்திகள் வருவதை கண்டு — சிரிப்பதா – அல்லது அழுவதா என்பதே புரியாமல் திண்டாடுகிற நிலைதான் இருக்கிறது — இரண்டு மொழியில் தேர்வு எழுதி முடிவை நிறுத்தி வைத்து என்ன செய்ய போகிறார்கள் — ? ஒன்று தேர்வை ரத்து என்று கூறவேண்டும் அல்லது பிராந்திய மொழியை சேர்த்து தேர்வு என்று கூற வேண்டும் — ரெண்டுங்கெட்டான் நிலை ஏன் …? பிராந்திய மொழியில் தனியாக தேர்வு நடத்துவார்களா — குழப்பமான உத்தரவுகள் ஏன் என்பது அவர்களுக்கே வெளிச்சம் …

  இவ்வாறாக நம் சுதந்திர நாட்டின் நிலை இருக்கும் போது ஊழலில் திளைத்து நிற்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளும் புதிய கல்விக் கொள்கை என்பதை எதிர்க்க மாட்டார்கள் — ஏனென்றால் சேர்த்து வைத்துள்ள சொத்தும் — பதவியும் அவர்களுக்கு முக்கியம் — ரெய்டு பயம் அதைவிட முக்கியம் –!!

  // சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள், கல்வியை தொண்டாக
  நினைத்து செயல்படும் – லாபம் கருதாத உண்மையான கல்வி
  நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசின் விளம்பரங்களுக்கு
  மசியாத செய்தி நிறுவனங்கள், மீடியாக்கள் – // போன்றவர்கள் முன்னெடுக்க வேண்டும் என்கிற உங்களின் ஆசை புரிகிறது … நடக்குமா ….? நடக்க விடுவார்களா . உச்சபட்ச அதிகாரங்கள் கையில் வைத்து இருப்பவர்கள் …?

  // மக்கள் – எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டு
  தான் இருக்கிறார்கள். செயல்பட வேண்டிய நேரத்தில்,
  அவர்கள் நிச்சயம் செயலாற்றுவார்கள் – // எல்லாவித உரிமைகளும் பறிப்போன பின்னாலா …? அய்யய்யோ … இந்த கடைசி வரியை படித்துவிட்டு ” வன்முறை வார்த்தைகள் ” என்று கூறினால் — எப்பா .. நம்மளால தாங்க முடியாதுடா .. இறைவா …!!!

  • Ramnath சொல்கிறார்:

   // மக்கள் – எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டு
   தான் இருக்கிறார்கள். செயல்பட வேண்டிய நேரத்தில்,
   அவர்கள் நிச்சயம் செயலாற்றுவார்கள் – //

   திருவாளர் ஹெச்.ராசாவிடம் கேட்டுப்பாருங்கள்.
   அய்யைய்யோ கா.மை. வன்முறையை தூண்டுகிறார் என்று
   அலற ஆரம்பித்து விடுவார்.

   அவர் பி.எஸ்.வீரப்பா போல் உருமி பயமுறுத்த நினைக்கிறார்.
   ஆனால் அவரைப்பார்த்தால் நமக்கு நினைவிற்கு வருவது
   மதுரை வீரன் மாமா டி.எஸ்.பாலையா தான்.

 3. Sanmath AK சொல்கிறார்:

  KM Sir,

  What I feel is, this new education policy is a kind of modified version of Rajagopalachari’s policy in older times…..If you ask me why & how, you can connect the dots and come to a conclusion – who will be worst hit ?….. This policy is not about improvising. This policy is like “weakening the enemy” kind of….. In a country where more than 15% of population is going to be in school education for another decade, there must have been a lot of foresight, incorporating many practices which would shape the future generations, with the intention of country in right hands….. For a country like India, wherein the economic imbalance is so high, the facility should be in such a way that even the poorest and most remote people should also get access to school education….. When it comes to education, water, medical services, public transportation and public distribution, our country should not dance to the tunes of WTO, at least for another two decades…..

  Thanks,
  Sanmath AK

 4. Selvarajan சொல்கிறார்:

  அய்யா .. ஒரு தேவையான செய்தி : — // நாடாளுமன்றத்தில் அதிமுக, திமுக கடும் அமளி.. தபால் துறை தேர்வுகள் ரத்து.. அமைச்சர் அறிவிப்பு //

  Read more at: https://tamil.oneindia.com/news/delhi/ravi-shankar-prasad-announces-postal-department-exams-will-be-cancelled-357133.html .. நமது எம்.பி.க்கள் இது போல நமது உரிமைக்காக போராட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் … !

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   அதற்குள்ளாக திருவாளர் ஸ்டாலின், திமுக தான்
   இதைச் சாதித்தது என்று சொந்தம் கொண்டாடுகிறார்…

   //இந்தியை திணித்த தபால்துறை தேர்வுகளை
   ரத்து செய்ய வைத்ததன் மூலம் திமுக வெற்றி பெற்று
   என்ன சாதிக்கும் என கேள்வி கேட்டோருக்கு
   வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளதாக அக்கட்சியின்
   தலைவர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.//

   https://tamil.oneindia.com/news/chennai/dmk-welcomes-to-centre-s-decision-to-cancel-of-postal-exams-357162.html

   உண்மையில் ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் அனைத்து
   கட்சிகளும் சேர்ந்து இதை எதிர்த்ததன் காரணமாக
   ஏற்பட்ட சூழ்நிலை தான், மத்திய அரசை இந்த
   விஷயத்தை மறுபரிசீலனை செய்ய வைத்தது.
   இந்த வெற்றி ஒட்டுமொத்த தமிழக மக்களையும்
   சார்ந்தது.

   கடந்த காலங்களில், சொந்த நலனுக்காக, திமுக –
   தமிழகத்தின் உரிமைகளை, நலன்களை எங்கெல்லாம்
   “காவு” கொடுத்தது என்பதை தமிழக மக்கள்
   நன்றாகவே அறிவார்கள்.

   ஸ்டாலின் சுயதம்பட்டம் அடித்துக் கொள்வதை
   அவரது கூட்டணி கட்சித்தலைவர்களே
   ரசிக்க மாட்டார்கள்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இங்கே ஒரு கேள்வி எழுகிறது…

  ஏற்கெனவே, பல ஆண்டுகளாக இருந்து வந்த
  ஆங்கிலம், ஹிந்தி அல்லது அங்கீகரிக்கப்பட்ட
  மாநில மொழி ஆகிய எந்த மொழியிலும்
  தேர்வெழுதலாம் என்றிருந்த ( மே மாதம்
  வெளியிடப்பட்ட சுற்றறிக்கையிலும் உறுதி
  செய்யப்பட்டிருந்த) வழக்கத்தை மாற்றி –

  ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே
  எழுத முடியும் என்று தேர்வு தேதிக்கு 4 நாட்களுக்கு
  முன்னர் ஒரு உத்திரவு வெளியிடப்பட்டதே –

  – இத்தனை களேபரங்களும் உருவாவதற்கு
  காரணமாக இருந்ததே –

  அந்த அறிக்கையை மத்திய அரசு எந்த காரணத்திற்காக
  வெளியிட்டது…? 3 மொழிகளிலிருந்து, மாநில மொழியை
  தவிர்த்து ஒரு உத்திரவு போடப்பட்டது ஏன்..?

  இந்த உத்திரவை போட்டது யார்…?
  அதன் பின்னணி என்ன…?
  இதற்கு காரணமானவர்கள் யார்…?
  இந்த உத்திரவிற்கு அமைச்சரின் அனுமதி பெறப்பட்டதா –
  இல்லையா…?

  ஆம் என்றால், இந்த கொள்கை மாற்றத்திற்கு
  அமைச்சர் ஒப்புதல் / உத்திரவு கொடுத்தாரா…?

  இல்லை என்றால், எந்த மட்டத்தில் இந்த முடிவு
  எடுக்கப்பட்டது…? எந்த காரணத்திற்காக எடுக்கப்பட்டது..?

  எடுக்கப்பட்ட நடவடிக்கை தவறு என்றால்,

  இத்தனை குழப்பங்களை ஏற்படுத்திய,
  இந்தியா முழுவதும் ஏற்கெனவே நடத்தி முடிக்கப்பட்டு விட்ட
  தேர்வுகளை ரத்து செய்ய வேண்டிய இந்த கட்டாயத்தை
  ஏற்படுத்திய –

  அந்த தவறுக்கு பொறுப்பானவர்கள் மீது
  என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள்…?

  இது இரண்டும் இரண்டும் நான்கு என்பதற்கு பதிலாக
  ஐந்து அல்லது ஆறு என்று சொல்லி விட்டது போன்ற
  கவனக்குறைவான தவறு அல்ல –

  ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த ஒரு முடிவை மாற்றி,
  விளைவுகளை அறிந்தே, தெரிந்தே – எடுக்கப்பட்டு,
  அறிவிக்கப்பட்ட ஒரு முடிவு.

  இந்த நிகழ்வுக்கு – யாராவது பொறுப்பேற்றுக்
  கொண்டேயாக வேண்டும். யார் பொறுப்பு என்று
  கேட்டார்களா…?

  எதிர்காலத்தில் மீண்டும் இதே போல்
  நடக்காது என்பதற்கு உத்திரவாதம் கேட்டார்களா…?
  கொடுத்தார்களா…?

  ———————————

  இன்று நாங்கள் தான் சாதித்தோம் என்று
  மார் தட்டிக் கொள்பவர்கள், பாராளுமன்றத்தில் –
  அமைச்சரைப் பார்த்து –

  -இத்தகைய கேள்வியை
  கேட்டிருந்தால், அவர்களை நாமும் பாராட்டலாம்….

  அமைச்சரின் அறிவிப்பை கேட்டவுடன்,
  புளகாங்கிதம் அடைந்து, ஆனந்த பரவசத்துடன் –

  போட்டி போட்டுக்கொண்டு, அரசின் பரந்த மனதிற்கு
  நன்றி தெரிவித்துக் கொண்டார்களே தவிர,
  தமிழகத்தில் தேவையே இன்றி இந்த கொந்தளிப்பை,
  மனக்கிலேசத்தை ஏன் உருவாக்கினீர்கள்…?
  இந்த பிரச்சினை எழுவதற்கான
  அடிப்படை காரணகர்த்தா யாரென்று கேட்டார்களா…?

  – ஒருவேளை கேட்டிருந்தால் –
  அவர்களை பாராட்டலாம்.

  கேட்காத வரைக்கும் வெற்றிக்கு இவர்கள் யாரும்
  சொந்தம் கொண்டாட முடியாது… தமிழக மக்களின்
  ஒட்டுமொத்த எழுச்சியை, உணர்வை மத்திய அரசு சரியாக
  உணர்ந்து கொண்டு, இப்போதைக்கு இந்த சோதனைகள்
  வேண்டாம் என்று தற்காலிகமாக தங்கள் பரிசோதனைகளை
  ஒத்திப் போட்டதாகவே அர்த்தம்.

  – அல்லவா நண்பர்களே. …???

 6. venkat சொல்கிறார்:

  while I don’t have expertise to comment on the subject matter, i see a positive sign of democracy here. Government is backing off from decisions when they see legitimate opposition. shouldn’t this be appreciated? KM sir keeps drumming that this government is autocratic. They don’t listen to people’s voice etc., I see the opposite here.

  The same thing is happening on education policy. They drafted a new policy with some vision. Government is asking for people/school/teachers/etc., to comment on the policy. I am sure they will amend things based on the input received. This is a perfect democratic arrangement. We should be glad and appreciate.

  There are several policies that are dated ( very old and contain clauses that not applicable today ). This includes labor, health, education, procurement etc., Any government should revisit them and make amendments from time to time. Naturally there will be opposition. What one see as good will be seen as bad by many… for example, KM sir will see bad in everything BJP does! Government is seeking input from all and making amendments if they are reasonable. So, everything is good. Democracy is alive!

  Keep writing more ‘indraya swarasyam’. They are the best sir!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   .

   வெங்கட்,

   உங்களுக்கு வசதியானதை மட்டும் எழுதிவிட்டு
   வழக்கம்போல் ஓடி விடாதீர்கள்… மேலே இருக்கும் இந்த
   கேள்விக்கும் விளக்கம் கொடுங்கள் பார்ப்போம்…

   ———————————-

   // இத்தனை களேபரங்களும் உருவாவதற்கு
   காரணமாக இருந்ததே –

   அந்த அறிக்கையை மத்திய அரசு எந்த காரணத்திற்காக
   வெளியிட்டது…? 3 மொழிகளிலிருந்து, மாநில மொழியை
   தவிர்த்து ஒரு உத்திரவு போடப்பட்டது ஏன்..?

   இந்த உத்திரவை போட்டது யார்…?
   அதன் பின்னணி என்ன…?
   இதற்கு காரணமானவர்கள் யார்…?
   இந்த உத்திரவிற்கு அமைச்சரின் அனுமதி பெறப்பட்டதா –
   இல்லையா…?

   ஆம் என்றால், இந்த கொள்கை மாற்றத்திற்கு
   அமைச்சர் ஒப்புதல் / உத்திரவு கொடுத்தாரா…?

   இல்லை என்றால், எந்த மட்டத்தில் இந்த முடிவு
   எடுக்கப்பட்டது…? எந்த காரணத்திற்காக எடுக்கப்பட்டது..?

   எடுக்கப்பட்ட நடவடிக்கை தவறு என்றால்,

   இத்தனை குழப்பங்களை ஏற்படுத்திய,
   இந்தியா முழுவதும் ஏற்கெனவே நடத்தி முடிக்கப்பட்டு விட்ட
   தேர்வுகளை ரத்து செய்ய வேண்டிய இந்த கட்டாயத்தை
   ஏற்படுத்திய –

   அந்த தவறுக்கு பொறுப்பானவர்கள் மீது
   என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள்…//

   ——————————————

   கூடவே –

   நீங்கள் சொல்கிறீர்கள் …

   // They drafted a new policy with some vision. Government is asking for people/school/teachers/etc., to comment on the policy. I am sure they will amend things based on the input received. This is a perfect democratic arrangement. We should be glad and appreciate. //

   ஆனால், உங்கள் தபாஜக தலைவர்
   கருத்து தெரிவித்தால் துள்ளிக் குதிக்கிறாரே ஏன்…?

   இந்த இடுகை எழுதப்பட்டதன் அவசியமே
   அவர் துள்ளிக்குதித்ததால் வந்தது ஏன்…?

   கருத்து கேட்டு விட்டு, கருத்தை சொன்னால் –
   காரைக்குடியார் மிரட்டுவது ஏன்…?

   ஓடி விடாமல், அவசியம் பதில் சொல்வீர்கள்
   என்று நம்புகிறேன்…

   எனக்கு சுவாரஸ்யமான விஷயம் கிடைக்கும்போதெல்லாம்,
   இன்றைய சுவாரஸ்யம் தொடரும் … உங்களுக்கு
   இதுவாவது பிடித்தது குறித்து மகிழ்ச்சி….!!!

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 7. venkat சொல்கிறார்:

  sir,
  I am sure all government agencies have a clearly defined protocol and authorization/approval process for deviation. I am sure, those protocols would have been followed. It is my experience that ‘babus’ are smart enough to know that ‘nethas’ will come and go but their job will in the line if they don’t follow protocol. Ofcourse, they find loop holes to accommodate needs of nethas. It is practically not possible to consult court before every change in process/policy are enacted. They have to do it on good faith basis. If court intervenes then remedies will have to be done. So, wastage/rework/cancellation are unavoidable. There is no point in finding the netha or babu who promulgated this change and punish them. If you do so, none of the systems will change/improve/get better. We will be living in stone age.

  Regarding reaction from BJP state functionaries… It is a human trait, very acute among Indians, not to take criticism in stride. Either they will reject entire criticism as baseless/motivated or get personal and attack the criticizer. Politicians exhibit the extreme case of same. You need not go that far to observe this phenomenon… check out older blogs of yours and perform self evaluation.

  1. you never thanked the person who took time to write a review against your opinion.
  2. you never appreciated other person’s view point and consider the merits.
  3. have a strong prejudice that the critiquing person is from BJP. For one, I don’t belong to BJP. I have never voted for BJP. Amongst my friends who are strong BJP supporters I am considered a LEFT!
  4. Get personal/emotional

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   .

   வெங்கட்,

   // There is no point in finding the netha or babu
   who promulgated this change and punish them. //

   நழுவுகிறீர்கள்…. பாஜக சந்து கிடைக்கும்
   இடத்தில் எல்லாம் ஹிந்தியை திணிக்க
   முயல்கிறது. இது வேண்டுமென்றெ செய்யப்பட்ட
   ஒரு முயற்சி. இல்லையென்றால், மே மாதம்
   தமிழை அனுமதித்து விட்டு, ஜூலை மாதம்
   specific ஆக அதை cancel செய்தது ஏன்…?
   பாஜக ஹிந்தியை திணிக்க நேரிடையாகவும்,
   மறைமுகமாகவும் தன்னால் ஆனதை எல்லாம்
   செய்கிறது என்பதை ஒப்புக்கொள்கீறீர்களா,
   இல்லை வழக்கம் போல் ஜகா வாங்குவீர்களா…?

   // Regarding reaction from BJP state functionaries…
   It is a human trait, very acute among Indians,
   not to take criticism in stride//

   அவர்கள் சராசரிக்கும் கீழே.. என்றால்,
   அப்புறம் ஏன் அவர்களை தலைவர் என்று
   தலைமேல் வைத்து கொண்டாடுகிறீர்கள்.. ?

   // 2. you never appreciated other person’s
   view point and consider the merits.//

   பதில் சொல்ல வேண்டிய ஒவ்வொரு
   விஷயத்திற்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன் –
   அவ்வப்போது இங்கே வந்து எதையாவது
   கொட்டி விட்டு, விளக்கம் கேட்டால் ஓடிப்போகும்
   பழக்கம் உடைய உங்களுக்கும் கூட சேர்த்து …

   இங்கே அழகான கருத்துகளை கூறும்
   பல நண்பர்களை, அந்த கருத்துகள் எனக்கு
   ஏற்புடையதாக இல்லாவிட்டாலும் கூட –
   மனம் திறந்து, வெளிப்படையாக பாராட்டியதை
   எல்லாம் நீங்கள் பார்த்ததே இல்லையா…?
   இனியாவது, மோடிஜி/பாஜக இடுகைகளைத் தவிர,
   மற்ற இடுகைக்கான பின்னூட்டங்களையும்
   படியுங்கள்… நான் சொல்வதை உணர்வீர்கள்.

   // you never thanked the person who took time
   to write a review against your opinion. //

   பாஜக/மோடிஜி பக்தர்களைத் தவிர,
   வேறு யாருமே இதுவரை என்னை குறை
   சொல்லி இங்கே எழுதியதில்லை…

   பாஜக பக்தர்கள் கண்மூடிகள்…
   சுயமாக சிந்திக்கும் திறன் இருந்தும்
   சிந்திக்க மறுப்பவர்கள்…
   ஒருவித மோகத்தில், மயக்கத்தில் –
   ஆழ்ந்து கிடப்பவர்கள்…

   – நான் அவர்களை
   எதற்காக பாராட்ட வேண்டும்…?

   // I have never voted for BJP. //
   உங்கள் மனசாட்சி கூட இதை நம்பாதே…!!!

   // Get personal / emotional //

   உண்மை..
   சொரணையுள்ள, உணர்ச்சி வசப்படும்
   ஒரு மனிதனாக இருப்பதையே
   நான் விரும்புகிறேன். அது என்
   பிறவிக்குணம்… இதில் வருத்தப்பட
   என்ன இருக்கிறது…?

   எப்போதும், யாருக்காவது ஜால்ரா
   போட்டுக்கொண்டே இருக்கும் கூட்டத்திடையே –

   மனசாட்சிப்படி இயங்கும் சில மனிதர்களில்
   நானும் ஒருவனாக இருக்கிறேனே –
   அது தான் என் சொத்து… இதற்காக
   நான் பெருமைப்படவே செய்வேன்.

   “சிறுமை கண்டு பொங்குவாய்” என்றானே –
   அவன் தான் என் வழிகாட்டி…

   ——————————————-

   ஆமாம். இவ்வளவு “கதை” பேசுகிறீர்களே…
   இந்த விமரிசனம் தளத்தில், எவ்வளவோ
   தலைப்புகளில், சமூக அக்கறை உடைய
   விஷயங்களைப்பற்றி நான் எழுதுகிறேன்.

   பாஜக/மோடிஜி பற்றி எழுதும்போது மட்டும்
   இங்கே துள்ளி வந்து குதிக்கிறீர்களே தவிர,
   உண்மையில் நீங்கள் பாஜக ஆதவாளர்
   இல்லையென்றால், சமூக அக்கறை உடையவர்
   என்றால், ஏன் வேறு எந்த
   கட்டுரைகளுக்கும் கருத்து கூறுவதில்லை…?
   விவாதங்களில் பங்கேற்பதில்லை… ?

   நான் நிறைய பேரை பார்க்கிறேன்.
   மனதளவில், செயலளவில் – மிகத்தீவிரமாக
   பாஜகவை/மோடிஜியை ஆதரிக்கிறார்கள்.

   ஆனால் – அதை வெளியே சொல்லிக்கொள்ள
   வெட்கப்படுகிறார்கள்…
   நான் பாஜக இல்லையென்று வேகமாக
   உதறிக் கொள்கிறார்கள்…

   – நீங்கள் என்ன எழுதி இருந்தாலும் சரி,
   நின்று பதில் சொன்னதற்காக நன்றியும்,
   பாராட்டுகளும்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வெங்கட்,

   உங்களுக்கான என் பதிலில் கொஞ்சம் கடுமையான
   வார்த்தைகளை பயன்படுத்தி இருப்பதாகத் தோன்றினால்,

   அதற்கான முழு காரணமும் நீங்கள் தான்…

   1) நடந்தது தவறு என்று தெரிந்தும், திரும்ப திரும்ப
   பூசி மெழுகுகிறீர்கள்..

   ஆம் இது தவறு தான் என்று சொல்லும் நேர்மை
   உங்களிடம் இல்லாமல் போனது ஏன்..?

   எந்தப் பற்று உங்கள் கண்களை மறைக்கிறது…?

   2) என்னை கேள்வி கேட்பவர்கள் யாரும் கூட,
   என் நேர்மையை சந்தேகிப்பதில்லை…
   அவர்களுக்கு வேண்டியவர்களை நான் விமரிசிக்கிறேனே
   என்கிற கோபம் அவர்களுக்கு..
   ஆனால், நீங்கள் திரும்பத் திரும்ப என்னைப்பற்றி,
   தனிப்பட sarcastic comments – எழுதுவதிலேயே
   குறியாக இருக்கிறீர்கள்.

   நான் மென்மையாக பதில் எழுத வேண்டுமா அல்லது
   கடுமை காட்ட வேண்டுமா என்பதை நீங்கள் தான்
   ஒவ்வொரு முறையும் தீர்மானிக்கிறீர்கள்.

   என் கடுமைக்கான காரணத்தை நீங்கள்
   புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக
   இதை மீண்டும் எழுதுகிறேன்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 8. Prabhu Ram சொல்கிறார்:

  இந்த வெங்க்ட் என்கிற நபர் எப்போதும்
  உங்கள் மீது ஒருவித குரோதத்துடனே
  எழுதுவதை பார்க்கிறேன்.
  பொதுவாக பாஜகவினர் எல்லாரிடமும்
  இதேவித அணுகுமுறை இருக்கிறது.
  தங்களுக்கு எதிராக கருத்து சொல்பவர்களை
  இவர்கள் விரோதிகளாகவே கருதுகிறார்கள்.
  அந்த அளவிற்கு இவர்கள் மூளைச்சலவை
  செய்யப்பட்டிருக்கிறார்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.