சீன தோசை எப்படி இருக்கும் ..? அதுவும் அழகிய தமிழில் தந்தால்…???தோசை மாதிரி தான்…
ஆனால் நம்ப ஊர் தோசை இல்லை…
சீன தோசை…
உலகம் பூராவும் நம்முடைய தோசை மாதிரி
வடிவத்தில் எதாவது கிடைக்கிறது.
ஆனால், ஒவ்வொன்றும் ஒவ்வொரு காம்பினேஷனில்…

இது சீன தோசை…
தோசை எப்படி இருந்தாலும் –
தருவது இனிய தமிழில் – இலக்கியா அல்லவா…?
எனவே தோசையை ரசிப்போம்…
கூடவே, இலக்கியாவின் மழலைத் தமிழையும் ….!!!

.
————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to சீன தோசை எப்படி இருக்கும் ..? அதுவும் அழகிய தமிழில் தந்தால்…???

 1. புதியவன் சொல்கிறார்:

  மிகவும் ரசித்தேன்.

  கா.மை. சார்… சீனர்கள், இந்தியர்களை விட பலப் பல மடங்கு அறிவில் சிறந்தவர்கள், அதிலும் எதை சந்தைப்படுத்தலாம் என்பதில் அவர்கள் கில்லாடிகள். நாளையே அவர்களுக்கு சந்தை நம்பிக்கை வந்தால், தோசை, இட்லி, இந்திய இனிப்பு வகைகள், மதிய உணவு எல்லாவற்றிர்க்கும் மிஷின் கண்டுபிடித்துவிடுவார்கள்.

  ஹார்ட்வேரில் அவர்களது திறமை, அதிலும் மிகக் குறைந்த விலையில் தயாரிக்கும் திறமை – எந்த நாட்டிடமும் இல்லை. நான் நிறைய ஃபேக்டரிகளைப் பார்த்திருக்கிறேன். (தாய்வானில்) இது ஒரு செயின். புரியற உதாரணம், ஒரு கம்பெனி, மதிய உணவு தயாரித்து விற்கும். ஆனால் அவங்க அதை அசெம்பிள்தான் பண்ணுவாங்க, குவாலிட்டி கண்ட்ரோல் மட்டும் பார்த்துப்பாங்க. ஒவ்வொரு ஐட்டம் சப்ளை செய்யவும் பல கம்பெனிகள் உண்டு. ஒரு கம்பெனி, கூட்டு மட்டும் செய்யும். (அதைப்போல் பல கம்பெனிகள் உண்டு). இவங்க ‘கூட்டு’ என்பதற்கு எது நம்பர் 1 கம்பெனியோ அதிலிருந்து வாங்கிக்கொள்வார்கள். மதிய உணவு சீப்பா வேணுமா, அப்போ இரண்டாம் தர வரிசை கம்பெனிலேர்ந்து வாங்கிக்குவாங்க. இது மாதிரி ஒவ்வொரு ஐட்டத்தையும் ஒவ்வொரு சப்ளையரிடமிருந்து வாங்கி அவங்க தனி பிராண்டுல விற்பாங்க.

  மொபைல், பேட்டரி, சார்ஜர், டிஸ்ப்ளே ஸ்க்ரீன் என்று ஒவ்வொன்றுக்கும் ஏகப்பட்ட தொழிற்சாலைகள்.

  உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன். சைனாவில், தமிழ் சொல்லிக் கொடுக்கிறார்கள். அதற்கு யூனியும் இருக்கு.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.