கருத்து தெரிவிக்கச் சொல்வதே வன்முறையா ….? விளைவுகள் தெரிந்தும் தைரியமாகப் பேசிய சூர்யாவிற்கு நமது வாழ்த்துகள்…


சூர்யா, புதிய கல்விக்கொள்கை குறித்து பேசிய
முழு வீடியோ கீழே – 13 நிமிடங்கள் தான் –
முழுவதுமாகப் பார்க்கலாம்.

————

மக்கள், குறிப்பிட்ட அரசு வலைத்தளத்திற்குச் சென்று,
தங்கள் கருத்தை பதிவு செய்ய வேண்டும் என்று
சொல்கிறார்…
( வீடியோவில் – 12 நிமிடம் 40 நொடிகளில் கவனிக்கவும்…)

இது வன்முறையா…?

அரசாங்கத்தோடு இணைந்து செயல்பட்டு,
சரியான மாற்றுத் திட்டத்தை கொண்டு வரவேண்டும்
என்று சொல்கிறார்…
(வீடியோவில்- 13 நிமிடம், 10 விநாடி….)

இது வன்முறையா…?

இந்த அளவிற்கு கருத்து சொல்லக்கூட
இங்கே உரிமை இல்லையா…?

நாம் இன்னமும் ஜனநாயக நாட்டில் தானே இருக்கிறோம்…?
சர்வாதிகாரத்திற்கு ஓட்டு போட்டு விடவில்லையே…?

பேசினால்… ஏற்றுக் கொள்ளுங்கள் – கொள்ளாமல் போங்கள்.
ஆனால் பேசுவதையே –

– கருத்து கூறுவதையே வன்முறை என்று
வேண்டுமென்றே திரித்து சொல்பவர்கள் –

முட்டாள்களா…? மூர்க்கர்களா…?

– அல்லது ஒட்டுமொத்தமாக கோச்சிங் செண்டர்களை
குத்தகைக்கு எடுக்க திட்டம் போடுபவர்களா …?

.
———————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to கருத்து தெரிவிக்கச் சொல்வதே வன்முறையா ….? விளைவுகள் தெரிந்தும் தைரியமாகப் பேசிய சூர்யாவிற்கு நமது வாழ்த்துகள்…

 1. புவியரசு சொல்கிறார்:

  எப்போதும் வன்முறையிலேயே மிதப்பவர்
  அப்பாவி சூர்யாவை வன்முறையாளர் என்கிறார்.
  சில சமயங்களில் இந்த வில்லன்/கோமாளியைப் பார்த்தால்
  கோபத்திற்கு பதிலாக சிரிப்பு தான் வருகிறது.

 2. M.Thevesh சொல்கிறார்:

  பண பரிவர்த்தனை கணக்கு காரணமாக அகரம் பவுண்டேஷன்
  அமைப்பை மத்திய அரசு தடை செய்து விட்டது. அதனால் தான்
  சூர்யா அந்தக் ———————————-(edited)

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   M.Thevesh,

   முட்டாள் தனமான, ஆதாரமில்லாத உளறல் குற்றச்சாட்டுகளை
   இங்கே கூறாதீர்கள். ஆதாரம் இருந்தால், அதையும் தெரிவியுங்கள்.

   இன்னொன்று – அநாகரிகமான வார்த்தைகளில் பின்னூட்டம்
   எழுதினால், இனி உங்கள் பின்னூட்டங்கள் இங்கே வெளியாகாது.

   -காவிரிமைந்தன்

  • புதியவன் சொல்கிறார்:

   தவேஷ் – இப்போதான் படிக்க வாய்ப்பு கிடைத்தது.

   சூர்யா சொல்வதில் என்ன தவறு இருக்கு? எனக்கு, அரசுப் பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் மேல (பெரும்பாலானவர்கள்) மரியாதை கிடையாது. நிறைய பேர் ஓபி அடிக்கறவங்க, தகுதிக்கு மீறி பலமடங்கு சம்பளம் வாங்கறவங்க. அந்த சப்ஜெக்டை விடுவோம்.

   ‘பண பரிவர்த்தனை காரணமா’ என்று எழுத எப்படி உங்களுக்கு மனசு வந்தது? சூர்யா உழைச்சு சம்பாதிக்கிறார். ஆரம்ப காலம் தொட்டே பண உதவி செய்யறார். இதைப் பற்றி தயவுசெய்து கொச்சையா எழுதாதீங்க. இருக்கற சில நல்லவர்கள் மேலும் சேறு பூசாதீங்க.

 3. கருப்பட்டி சிவா சொல்கிறார்:

  முட்டாள்களின் மரமண்டையில் இதற்கு மேல் ஒன்றும்
  முளைக்கவில்லை போலும்.
  ஜால்ராக்களை, பஜனை பாடச் சொன்னால் பாடுவார்கள்;
  ஜால்ரா போடச்சொன்னால் போடுவார்கள்;
  கேள்வி கேட்டு விளக்கம் சொல்லச் சொன்னால், இப்படித்தான்
  சாக்கடையில் நெளிவார்கள்.

 4. tamilmani சொல்கிறார்:

  sivakumar’s education trust and surya’s Agaram foundation are helping lot of poor students for
  their under graduate and postgrduate courses . What a government cannot do, surya is doing with the help of like minded friends and relatives. So Surya has got every right to talk about the education policy and nobody have the right to question him. It is very rare to see a socially conscious actor
  in the filmworld where the socalled superstars on the eve of their films release, utter some political comments for their movies to run and then disappear. Surya is definitely not like that .

 5. புதியவன் சொல்கிறார்:

  புதிய கல்விக் கொள்கை – இதுல எனக்கு நிறைய சந்தேகம் (நோக்கத்தில்) இருக்கு கா.மை. சார்.

  ஏன் அவசர அவசரமா இதனை அமுல்படுத்த நினைக்கணும்? அதற்கு இது என்ன தலைபோகிற பிரச்சனையா? மனித வளம்/கல்வித்துறைக்கு அமைச்சராத்தானே மழைக்குக்கூட பள்ளியில் ஒதுங்கியிராத அந்தம்மா அமைச்சர் ஆனாங்க. அவ்வளவு முக்கியத்துவம்தானே மோடி அரசு அந்தத் துறைக்குக் கொடுத்தது. இப்போ ஏன் இவ்வளவு அவசரம்? தமிழிசை பேசியது அநியாயம், அக்கிரமம். பாஜகவை வளர்ப்பதற்குப் பதில் அது கரைவதற்கான வழிமுறைகளை தமிழிசை செய்கிறார்.

  சூர்யா பேசியதில் என்ன தவறு? நமக்கே அத்தகைய சந்தேகங்கள் உண்டு. இதனைப் பற்றி விவாதித்து, ஓரிரு ஆண்டுகளுக்குப் பின் முடிவை அறிவிக்கலாம்.

  எனக்குத் தோன்றும் சந்தேகம் எல்லாம்,
  1. என்னவோ செய்து வட நாட்டவர்களை (வேலகளுக்கு) தமிழகத்தில் தள்ளி, தமிழ் மாணவர்கள் மேலே வராமல் ஒரு தலைமுறையை ஒடுக்க நினைக்கறாங்க.
  2. ஹிந்தி சப்ஜெக்டை போகப் போக தமிழர்களை ஏற்றுக்கொள்ள வைத்து, தமிழ் மொழியை அழிக்க நினைக்கறாங்க. அதுக்கு ஏத்த மாதிரி தமிழர்கள் திமுக, அதிமுகன்னு பிரிந்திருப்பது அவங்களுக்கு வசதியா இருக்கு.
  3. பாடத் திட்டத்துல ‘ஹிந்துத்துவா’ (ஒரே நாடு, மதம்) கொள்கைகளைக் கொண்டுவர நினைக்கறாங்க. இதைப் பற்றி பிறகு பேசுகிறேன். இது மாபெரும் தவறு. கத்தி முனையில் என்னிடம் ஹிந்துத்துவா பேசினால், ‘போடா நீயும் உன் ஹிந்துத்துவாவும்..நீ என்ன கடவுளின் ரெப்ரெசெண்டேடிவா?” என்றுதான் நானே கேள்வி கேட்பேன்.

  There is something wrong in this subject. இதைவிட நான் பெட்டர் ஐடியாக்கள் சொல்லுவேன்.
  1. அரசுப் பள்ளியில் +2 வரை படித்தால் மட்டுமே மாநில அரசு வேலை. மற்றவர்களுக்குக் கிடையாது.
  2. அரசு வேலை அந்த அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான். மத்திய அரசு வேலை, எம்பிக்கள் சீட்டைப் பொறுத்து, ஒவ்வொரு மாநிலத்துக்கும் பிரித்து வழங்கப்படும். உதாரணம், 540 அரசு வேலைகள்ல, 39 மட்டுமே தமிழகத்துக்கு என்பது போல.
  3. ஆசிரியப் பணி, அரசுப் பணி போன்றவை, சதவிகித அடிப்படையில், அந்த அந்த இடங்களைச் சேர்ந்தவர்களுக்குத்தான். நெல்லை மாவட்டத்தில் படித்தவர்களை மட்டும்தான் அங்குள்ள அரசுப் பணிகளில் முடிந்தவரை நிரப்பணும். ஒரு உதாரணத்துக்குச் சொன்னேன். ஒருத்தன் முன்னேறிய சென்னையில் படித்துவிட்டு, கிராமப்புற மாணவனிடம் போட்டியிட்டு வெற்றி பெற்று அரசுப் பணியில் அமர்ந்தால் அதைவிட அநியாயம் உண்டா?

  இப்படிச் செய்தால் ஒட்டுமொத்த நிலமும் வளர்ச்சியடையும், அனைவருக்கும் ஏற்றமாதிரியான தீர்வாக இருக்கும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.