குரங்குகள் கையில் பூமாலை … முட்டாள்களா அல்லது மூர்க்கர்களா…?


அரசு சார்ந்த தொழில் வாய்ப்புகளில்
நாட்டில் அனைவருக்கும் சம உரிமை வேண்டும்
என்றால் அது எப்படி நடக்கும் …?

ஒருவன் தன் தாய்மொழியான இந்தியிலேயே
தேர்வெழுதலாம். மற்றொருவன் – தனக்கு அந்நியமான
இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே கற்றுத்தேர்ந்து
எழுத வேண்டும்.

இத்தகைய தேர்வில் யார் வெற்றி பெறுவார்கள்…?
தாய்மொழியில் எழுதுகிறவனா அல்லது மற்றவரா…?

அறியாமல் செய்கிறார்களா அல்லது
வேண்டுமென்றே செய்கிறார்களா…?
முட்டாள்களா அல்லது மூர்க்கர்களா…?

70 ஆண்டுகளாக இருந்து வந்த தேர்வு முறையில் மாற்றம்
ஏன் வந்தது…? நாடு முழுவதும் இந்தி தெரிந்தவர்களுக்கு
மட்டும் தான் இனி வாய்ப்பு கொடுக்கப்படும்
என்பதை அனைவருக்கும் உணர்த்தவா…?
இவ்வளவு நாட்கள் மறைமுகமாக இருந்தது –
இப்போது வெளிப்படையாக, நேரடியாக உணர்த்தப்படுகிறதா…?

———————

பிள்ளைகள் எதைக் கற்க வேண்டும், எப்படி கற்க
வேண்டும் என்பதை யார் முடிவு செய்வது…?

தன் வாழ்நாள் முழுவதும், சந்திரனையும், சூரியனையும்,
நட்சத்திரக்கூட்டங்களையும் பார்த்துக்கொண்டிருந்த –
விண்வெளி ஆராய்ச்சியிலேயே ஈடுபட்டிருந்த ஒருவர்
தன் கட்சிக்கு சார்புடையவராக ஆகி விட்டால்,

– அவருக்கும் எந்த மாநிலத்திலாவது கவர்னர்
பதவி கொடுத்து அழகு பார்க்க வேண்டியது தானே…?
ஓய்வு பெற்ற, தங்களுக்கு வேண்டப்பட்ட –
நீதிபதிகளை – அனுப்புவது மாதிரி…?

அதிமுக்கியமான “கல்விக் கொள்கை”யை தீர்மானிக்கும்
பொறுப்பை அவர்களிடம் ஏன் கொடுக்க வேண்டும்…?
குரங்குகள் கையில் பூமாலையை கொடுப்பது போல்…?

பெற்றோர்களுக்கும் நிம்மதி இல்லாமல்,
கற்றுக் கொள்ளும் சிறார்களுக்கும்
மனச்சிதைவை ஏற்படுத்தி,
ஆசிரியர்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில்

தான்தோன்றித்தனமாக – மொழி விஷயத்திலும்,
கல்வி விஷயத்திலும், அரசு சார்ந்த வேலை வாய்ப்புகள்
விஷயத்திலும் – நடப்பது அனைத்தும் முட்டாள்தனமா
அல்லது … மூர்க்கத்தனமா…?

அண்மையில் – பிரிட்டனில்,
தொழிற்கட்சித்தலைவர் –
( இந்த கட்சி – தேர்தலில் வெற்றி பெற்றால்
பிரிட்டனின் பிரதமராக பொறுப்பேற்கக்கூடியவர் )
ஆற்றும் உரையின் ஒரு சிறிய பகுதி கீழே….

அவர் சொல்லும் செய்தியையும், அதற்கு
Standing Ovation -ல் பார்வையாளர்கள் கொடுக்கும்
வரவேற்பையும் கவனித்தால் புரியும் –
கல்விக்கொள்கை (இங்கு மட்டுமல்ல –
உலகம் முழுவதுமே ) எவ்வளவு சீரியசான
விஷயம் என்பது –

.
—————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to குரங்குகள் கையில் பூமாலை … முட்டாள்களா அல்லது மூர்க்கர்களா…?

 1. புதியவன் சொல்கிறார்:

  //ஒருவன் தன் தாய்மொழியான இந்தியிலேயே தேர்வெழுதலாம். மற்றொருவன் – தனக்கு அந்நியமான இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே கற்றுத்தேர்ந்து
  எழுத வேண்டும்// – இதுதான் சார், சரியான பாயிண்ட். ஏன் இந்தி மொழியில் தேர்வு வைக்கவேண்டும்? என்ன காரணம்?

  இதற்குப் போராடாமல் நம்ம எம்.பிக்கள் என்ன செய்கிறார்கள்? அந்த அந்த மாநிலத்தில் மத்திய அரசு வேலைகள், அந்த அந்த மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கு 85% கொடுக்கணும். எல்லாத் தேர்வுகளும் ஒண்ணு ஆங்கிலத்தில் வைக்கப்படணும், இல்லை இந்தியாவின் ஆதி மொழியான தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் வைக்கப்படணும். அதுதான் லெவல் ப்ளேயிங் ஃபீல்ட்.

  காங்கிரஸ் அடித்த கூத்துகளை விட்டுவிடுவோம். இப்போ 6 ஆண்டா பாஜக அரசு என்ன செய்கிறது இந்த விஷயத்தில்? தமிழ்நாட்டு மத்திய அரசுப் பணிக்கு தமிழர்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு மட்டும் வாய்ப்பு கொடுக்கிறது. தமிழ்நாட்டிற்கு எதற்கு ஹிந்தி? நான் ஹிந்தியை வெறுக்கவில்லை. அது தமிழகம் தாண்டி நல்ல தொடர்புக்கு உரிய மொழி (சில மாநிலங்கள் தவிர. கர்நாடகாவில் சில ஆட்டோ டிரைவர்கள், ஹிந்தில பேசவேண்டாம், கன்னடாவில் பேசுங்கள் என்கிறார்கள். நிறைய தவறு வரும் என்றாலும் அதனை என்கரேஜ் பண்ணுகிறார்கள்). மற்றபடி வேலைக்கான தேர்வு ஆங்கிலத்தில் அல்லது அந்த அந்த மாநில கேண்டிடேட்டின் மொழியில் இருக்கணும்.

  இந்த ஒரு காரணத்துக்காகவே தமிழகத்தில் பாஜகவுக்கு நாம் வாக்களிக்கக்கூடாது. நம் எம்.பிக்கள் தங்கள் மீதுள்ள ஊழல் மற்றும் நாட்டை ஏமாற்றிய வழக்குகள் மற்றும் தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்கு பயப்படாமல் இந்தித் திணிப்பை, மத்திய அரசுத் தேர்வில் ஹிந்தி மொழி பயன்படுத்தப்படுவதை முழுமையாக எதிர்க்கணும்.

  காணொளியைப் பிறகு பார்க்கிறேன்.

  • Sanmath AK சொல்கிறார்:

   ////இந்தியாவின் ஆதி மொழியான தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் வைக்கப்படணும்.////….. when did Sanskrit become oldest language of India??…. Thanks buddy, for clearing a doubt….

 2. sakthy சொல்கிறார்:

  தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்தவர்கள் மிகவும் வேதனையுடன் சொல்லி சென்றதை பார்க்க முடிந்தது. இனிமேல் சொந்த தொழில் தான் செய்ய வேண்டும் என்கிறார்கள்.
  காணொளியை தமிழிலும் பார்க்க முடியும்.
  நன்றி.

 3. Selvarajan சொல்கிறார்:

  அய்யா .. நல்ல தலைப்பு // குரங்குகள் கையில் பூமாலை … முட்டாள்களா அல்லது மூர்க்கர்களா…? // — குரங்கு கையில் பூமாலை என்பது சரி — முட்டாள்களா அல்லது மூர்க்கர்களா என்பதை விட — அதிகாரம் கையில் இருப்பதால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற காரியவாதிகள் என்பது தான் சரியாக இருக்குமோ …? —

  ” ஒரு மனிதனுக்கு தான் நம்புகிற வாழ்க்கையை வாழ்வதற்கான உரிமைகள் மறுக்கப்படுகையில் — அவருக்கு சட்ட விரோதியாவதை தவிர வேறு தெரிவு இல்லை ” என்று நெல்சன் மண்டேலா கூறினார் — ஆனால் தற்போதைய இந்திய அரசியல் சூழ்நிலையில் அதுவும் தேவையில்லாமல் — அரசுக்கு எதிராக ” உம் ” என்றாலே சட்டவிரோதியாக அரசே அவர்களை ஆக்கி விடும் என்கிற ஒருவித பயத்தில் ஆழ்ந்து போய் கிடக்கிறார்கள் மக்கள் — இரண்டாம் முறை ஆட்சி அமைத்த 10 தினங்களில் நடந்தவைகளை உற்று நோக்கினால் — ஆளுபவர்கள் எதை நோக்கி செல்ல துடிக்கிறார்கள் என்பதும் –நம்மை எங்கே இவர்கள் இட்டு செல்லப் போகிறார்கள் என்பது அப்பட்டமாக புரிகிறது .. !

  .குறை சாெல்லிவிட்டு நழுவுவது மிகவும் எளிது ..அதை சரி செய்வது ராெம்பக் கஷ்டம் …நூறு இளைஞர்களை காெடுங்கள் இந்தியாவையே மாற்றிக் காட்டுகிறேன் என்று விவேகானந்தர் கூறனார்— என்று கூறிக் காெண்டே தான் இருக்கிறார்கள் …! ..அதிகமான இளைஞர்களை காெண்ட என் இந்தியாவில் ஒரு சில மதவாத வெறிப்பிடித்த அரசியல்வாதிகள் — .தலைவர்களிடம் நாடு சிக்கிக் காெண்டு சின்னாபின்னமாவதை அதே இளைஞர்கள் வேடிக்கை பார்த்துக் காெண்டு இருப்பதுதான் வேதனையான விஷயம் … !

  நண்பர் சக்தி அவர்கள் பின்னூட்டத்தில் // தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்தவர்கள் மிகவும் வேதனையுடன் சொல்லி சென்றதை பார்க்க முடிந்தது. இனிமேல் சொந்த தொழில் தான் செய்ய வேண்டும் என்கிறார்கள்.// ….. ரொம்ப லேட்டா இவர்களுக்கு புரிந்திருக்கிறது — எப்போது ” பகோடா — பஜ்ஜி — மீன் வியாபாரம் செய்து பிழைத்துக் கொள்ளுங்கள் என்று பிரமதமரில் இருந்து — அமைச்சர்கள் வரை கூற ஆரம்பித்தார்களோ அப்போதே புரிந்து இருக்க வேண்டும் — புரிந்துகொண்டால் அரசுவேலை என்பது அரசு குறிப்பிடுகிற மொழி தெரிந்தவர்களுக்கே என்பது உறுதி செய்யப்பட ஒன்றாகி விட்டது — ” SAT — suite of assessments ” என்பதாவது நிலைக்குமா இந்நாட்டில் ….?? உரிமைகளை பறிக் காெடுத்தபின் மீட்பது என்பது மிகவும் சிரமம் … இன்னும் நிறைய எதிர்பாக்கலாம் பாஜக அரசிடம் இருந்து — !!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.