இமயத்தின் பின்னணியில் சில ஹிந்தி பாடல்கள்… ( என் விருப்பம் – 29 )1960-களில் பெரும்பாலான ஹிந்தி படங்களில்
இமயத்தின் பின்னணியில் – முக்கியமாக காஷ்மீரில் –
எடுக்கப்படும் ஒன்றிரண்டு பாடல்களாவது அவசியம்
இடம் பெறும். 70-களின் துவக்கத்தில் கூட
இது தொடர்ந்தது….

காலம் மாறி விட்டது… ரசனையும் மாறி விட்டது.
தற்போதெல்லாம் காதல் பாடல்கள் என்றால்,
வெளிநாடுகளுக்கு பறந்து விடுகிறார்கள்…

மறக்க முடியாத சில பழைய ஹிந்தி பாடல்களை
இங்கே பதிவிட்டிருக்கிறேன் – என் விருப்பமாக.
நண்பர்களுக்கும் பிடிக்குமென்று நம்புகிறேன்.

(முதல் 3 பாடல்களும் சேர்ந்து உங்களுக்கு
ஒரு படத்தின் (-கபீ..கபீ-) கதையையே
சொல்லி விடும் – )

.
————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to இமயத்தின் பின்னணியில் சில ஹிந்தி பாடல்கள்… ( என் விருப்பம் – 29 )

 1. Selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! உங்கள் விருப்பம் ஹிந்தி பாடல்கள் நன்றாக இருக்கிறது — யாமும் பலமுறை அர்த்தம் புரியாமல் இசைக்காக கேட்டு ரசித்ததுதான் … ! அந்தக்கால காஷ்மீரை இன்னும் அருமையாக 1961 ல் வெளிவந்த தேன் நிலவு படத்தில் காணலாம் — பாடல்களும் காட்சிகளும் அருமையாக இருக்கும் — இன்னும் ஒரு சில தமிழ் படங்களிலும் காஷ்மீரை பார்க்கலாம் — அது பற்றியும் கொஞ்சம் கருணை வைக்க கூடாதா … ?

  • D. Chandramouli சொல்கிறார்:

   I too like these songs more for the tune than for the meaning of the lyrics which obviously I cannot understand. However, I rate highly songs from the old movie ‘Madhumathi’ and the song like ‘Chaudhvin Ka Chand Ho’ – lovely melodies.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   செல்வராஜன்,

   தமிழ்த் திரைப்படப்பாடல்கள் அனைவரும் ஏற்கெனவே அறிந்ததாக இருக்கும்.

   நமது நண்பர்களுக்கு, வித்தியாசமாக இவற்றை அறிமுகப்படுத்துவோமே
   என்று தான் இந்த ஹிந்தி பாடல்களை தேர்ந்தெடுத்தேன்..

   தமிழ் … எங்கே போகிறது…
   அடுத்தடுத்த வாய்ப்புகளில் பார்த்துக்கொண்டால் போயிற்று.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  கா . மை சார்
  இந்தி புரியாதவர்களுக்காக வேதா என்ற வேதாச்சலம் நெறைய இந்தி
  பாடல்களை தமிழ்ப்படுத்தியுள்ளார் .
  எல்லா பாடல்களும் கண்ணதாசன் எழுதியிருப்பார் .

  பி கு கவிஞருக்கு இந்தி தெரியாது !

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.