நம்ம ஊருக்குப் புதுசு….30-35 வருடங்களுக்கு முன்னரே ஜேம்ஸ் பாண்ட்
படங்களில் சகஜமாகப் பார்த்திருந்தாலும் கூட,

நம்ம ஊரில் அதே வாகனத்தை பார்ப்பது பரவசம் உண்டாக்கும்
ஒரு நிகழ்வு தானே…?

வங்கக்கடலிலிருந்து மிதந்து வந்து மெதுவே,
கடலூர் சில்வர் பீச்சில் நுழைந்து, நடைபழகும் நமது
சிறிய போர்க்கப்பல் ஒன்றின் காட்சி கீழே –

.
—————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to நம்ம ஊருக்குப் புதுசு….

 1. புவியரசு சொல்கிறார்:

  .

  வீடியோ எடுத்தவர்கள் –
  இன்னும் கொஞ்சம் கிட்டப்போய்,
  உள்ளே இருப்பதையும் கூட
  வீடியோவில் காட்டி இருக்கலாம்.

  .

 2. Prabhu Ram சொல்கிறார்:

  எந்த தொலைக்காட்சியும் இந்தசெய்தியை
  காட்டியதாகத் தெரியவில்லை.

  ஊரில் எத்தனையோ தொலைக்காட்சி சானல்கள்
  இருக்கின்றன. அவையெல்லாம் வெட்டிக்கு
  அரசியல்வியாதிகளை அழைத்து வீண் அரட்டை
  அடிப்பதில் கொஞ்சம் குறைத்துக்கொண்டு
  இந்த மாதிரி செய்திகளை விவரமாக காட்டலாம்.

 3. Ravi சொல்கிறார்:

  புதுசா? இல்லை சார், பழசுதான்.

  இதன் பெயர் ஹோவர்கிராஃபட், போர்கப்பல் அல்ல. இது இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1955.

  1963-ல் கலாம் தலையமையிலான குழு சின்ன சைசில் இந்தியாவிலேயே உருவாக்கிவிட்டார்கள். ஆனால் அரசு உதவி இல்லாமல் திட்டம் கைவிடப்பட்டது. https://www.youtube.com/watch?v=MnBvuahUyCc

  2000 ஆண்டிற்கு பிறகு இவற்றை இங்கிலாந்திலிருந்து (Griffon Hovercraft Ltd) வாங்கி இங்கு அரசு நிறுவனம் – Garden Reach Ship builders & Engineers, Kolkata மூலம் ராணுவத்திற்கு அசம்பிள் செய்கிறார்கள். இந்த மாடலின் பெயர் Griffon-GRSE 8000 TD-Class Hovercraft.

  தனியார் நிறுவனங்களும் இதை விற்கின்றன. வாங்கும் யோசனை இருப்பின் Tulasi Aero Marine எனும் ஹைதராபாத் நிறுவனத்தை அணுகலாம். http://www.tulasiaeromarine.com/

  எனக்கு அதெல்லாம் வேணாம் ஒரு டிரிப் அடித்தால் போதும் என்றால் விசாகப்பட்டினம் போனால் போதும் http://www.vizaghoverclub.com/hover.html

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   உங்கள் தகவல்களுக்கு நன்றி ரவி.
   (நினைவுபடுத்த விரும்புகிறேன் –
   தலைப்பு : இது – ” நம்ம ஊருக்கு” – புதுசு… )

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.