பானி-பூரியில் … ஒரு புதுமை… !!!என் சின்ன வயதில் பானி பூரி என்பதெல்லாம்
வடக்கில் மட்டுமே கிடைக்ககூடிய ஒரு சமாச்சாரம்…
சென்னையில் எல்லாம் யாரும் இதைப்பற்றி
அப்போதெல்லாம் கேள்விப்பட்டதே இல்லை.

நான் 8-10 வயதில் (1950-களில்… ) –
முதல் முதலில் பானி பூரிக்கு பழக்கமானது
மஹாராஷ்டிராவில் கர்க்கி என்கிற இடத்தில்
வளர்ந்தபோது தான்….

அங்கே மார்க்கெட் நுழைவாயில், ரெயில்வே ஸ்டேஷன் நுழைவாயில்,
சினிமா தியேட்டர் எதிரில் – போன்ற சில இடங்களில் மட்டும்
கிடைக்கும்…
அங்கெல்லாம் ஒரு தள்ளு வண்டியில்
“சாட்” சமாச்சாரங்கள் எல்லாம் வைத்திருப்பார்கள்.

பானி பூரி, தஹி பூரி, மீட்டா பூரி, உஸல்மிஸல், பேல் – போன்ற,
இன்று சாட் என்று சொல்லப்படுகிற அயிட்டங்கள் எல்லாம்
அங்கு கிடைக்கும்….

அப்போதெல்லாம் – ஒரணாவிற்கு
(தற்போதைய 6 பைசாவிற்கு சமம்…)
– 4 பாணிபூரி.

ஒரணாவிற்கு குறைந்து கொடுக்க மாட்டார்கள்.
அப்போதைய என் பாக்கெட் லிமிட் அதிகபட்சம் அரையணா தான்.
எனவே, இன்னொரு பானி பூரி பிரியனான நண்பனிடமும்
அரையணா சேரும் வரை காத்திருப்பேன். கிடைத்தவுடன்,
இருவரும் கடையை நோக்கி ஓடுவோம்… ஒரணாவுக்கு 4 வாங்கி
ஆளுக்குஇரண்டு என்று பகிர்ந்து கொள்வோம். ஒரணாவுக்கு
4 பானி பூரியுடன், இரண்டு சாசர் நிறைய அந்த கட்டா-மீட்டா
ரசமும் கிடைக்கும்.

அதெல்லாம் ஒரு கனாக் காலம்…
போன ஜென்மத்தில் நடந்ததுபோல் இருக்கிறது.

இப்போது சென்னையில் “சாட்” கடைகள் சர்வசாதாரணம்.
சர்வசகஜமாக நம் மக்கள் இதற்கெல்லாம் பழகி விட்டார்கள்.
இப்போது, இங்கே சென்னையில் – சாதாரணமாக 6 பூரிகள்
இருக்கும் – ஒரு ப்ளேட் பாணிபூரி விலை 30 ரூபாய்….!!!

ஆமாம் – இந்த பானி-பூரி கதை
திடீரென்று இங்கே ஏன் வந்தது என்று கேட்கிறீர்களா…?

நேற்று ஒரு வீடியோ பார்த்தேன்.
பானி பூரி விற்பனையில் ஒரு சுவாரஸ்யமான புதுமை….

நீங்களே பாருங்களேன்….

….

….

.
————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to பானி-பூரியில் … ஒரு புதுமை… !!!

 1. புதியவன் சொல்கிறார்:

  வட இந்திய சாட் வகைகளில் எனக்கு பேல் பூரி தவிர வேறு பிடிக்காது.

  என் ஃபேமிலல எல்லோருக்கும் இந்த பானி பூரி, தஹி பூரி போன்ற ஐட்டங்கள் மிகவும் பிடிக்கும். வெளிநாட்டுல அவங்க சாப்பிடும்போது, கடைக்காரர்தான் ஒவ்வொரு பூரி சாப்பிடும்போதும் அதுக்கு இந்த புளித்தண்ணீர் விடுவார்.

  பெங்களூரில் செய்துள்ளது புதுமை, மிகவும் சுத்தம். வாய்ப்பிருந்தால் பசங்களை கூட்டிச் செல்லணும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புதியவன்,

   தெற்கே சாட் வகைகள் பாப்புலராகி விட்டன.
   பதிலுக்கு வடக்கே “தோசா” மிகவும் பாப்புலர்
   ஆகி விட்டது. வடக்கே, நான் சிறு பிள்ளையாக
   இருந்த சமயங்களில், எங்கேயாவது உடுப்பி ஓட்டலில்
   மட்டும் தான், அதுவும் “கடலை மாவு” தோசை தான்
   கிடைக்கும். அவர்களுக்கு இட்லி/தோசை மாவு
   அரைக்கத் தெரியாது. அந்த அளவு டிமாண்டும்
   இருந்ததில்லை….

   ஆனால், இப்போதெல்லாம் டெல்லி உட்பட
   முக்கிய வட இந்திய நகரங்களில், தோசா, மசால் தோசா
   கிடைக்கிறது.

   ஆனால், போகப்போக இது என்ன ஆகுமோ என்று
   பயம்மாகவும் இருக்கிறது…

   “ஒரே தேசம் … ஒரே உணவு ”
   என்று “ரோட்டி”யை கட்டாயமாக
   கொண்டு வந்து விட்டார்கள் என்றால்
   நம் கதி…??? 🙂 🙂 🙂

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. Selvarajan சொல்கிறார்:

  அய்யா …! ஹைஜீனிக்கான ஒரு உணவகத்தின் காணாெலி நன்றாக இருக்கிறது …சாலை ஓரங்களில் கண்ட இடங்களில் வைத்து விற்பனை செய்கின்றதையும் காட்டினால் ஒரு விழிப்புணர்வு ஏற்படும் ….

  அடுத்து …அய்யா … இடுகைக்கு தொடர்பில்லை என்றாலும் தமிழுக்கு தொடர்பு இருப்பதால் // தமிழ் உள்பட மாநில மொழிகளுக்கு தடை.. இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே இனி தபால்துறை தேர்வு //
  Read more at: https://tamil.oneindia.com/news/delhi/post-office-recruitment-exam-will-conduct-english-and-hindi-only-356757.html
  இதைப்பற்றி என்ன கூறுவது — ஏன் இப்படி — ? ” எனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும் “

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  செல்வராஜன்,

  என்ன நீங்கள் கூட – ” ஏன் இப்படி..? ” என்று கேட்கிறீர்கள்…!!!

  அடுத்து – “ஒரே நாடு -ஒரே மொழி” தான் என்பதை
  மக்களுக்கு படிப்படியாக புரிய வைத்து,
  அவர்களை அதற்கு மனதளவில் தயார் செய்ய வேண்டாமா …?

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  • புதியவன் சொல்கிறார்:

   இந்த சப்ஜெக்டை நீங்க எழுதாத்து ஏமாற்றம்தான். சிங்கப்பூர், இலங்கை போன்ற தேசங்கள் நினைத்திருந்தால் ஒரே நாடு ஒரே மொழி என்பதை எப்போதோ கொண்டுவந்திருக்கலாம்.

   ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொண்டு ஹிந்தி தவிர பிற மொழிகளை ஒழிப்பது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

   கற்காலத்துக்குப் போகணும் என்று தீர்மானித்துவிட்டால் இந்தியாவில் சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மட்டும்தான் இந்திய மொழியாக இருக்கும் தகுதி படைத்தவை. இங்கு பல்வேறு மொழிகள் இருப்பதால் எல்லோருக்கும் ஆங்கிலத்தில் மட்டும்தான் தேர்வு என்பதையும் ஏற்றுக்கொள்ளலாம்.

   பாஜக முனைவது நாட்டைத் துண்டாட நினைக்கும் செயல். இதனைக் கடுமையாக்க் கண்டித்து நீங்க இடுகை போடணும். சமீபத்தில் நீதிமன்றத்தில் ஆதி மொழியான தமிழ் விலக்கப்பட்டது.

   ஊழல் திமுக எம்பிக்கள் இதனைக் கண்டித்து வெளிநடப்பு தொடர்ந்து செய்யாத்து வருத்தமளிக்கிறது. அதிமுக பாஜகவை வெறுத்து ஒதுக்கணுத் தமிழகத்தில்

 4. Selvarajan சொல்கிறார்:

  அய்யா…!படிப்படியா புரிய வைக்க பாேகிறார்களா …? ” மன நாேயாளிகளிடம் ” மாட்டிக் காெண்டாேமாே என்கிற பயம்தான் ஏற்படுகிறது ….! நூறு நாட்களுக்குள் ஏகப்பட்ட திணிப்புகள் வரும் என்பது திண்ணம் …ஏர்லி பாசிசம் என்று ஒரு பெண் எம்.பி . கூறியது … முற்றிவிடும் …?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.