சிங்கப்பூரில் – ஒரு” சூ மந்திரக்காளி ” திட்டம் …!!!இணையத்தில் தேடினால் கிடைக்காத விஷயமில்லை….
ஆனால், மெனக்கெட்டு முயற்சி எடுத்துக் கொண்டு
தேட வேண்டும்….. தானாகவே பார்வையில் படும்
பயனுள்ள விஷயங்கள் மிகக்குறைவே…

24 மணி நேரத்திற்குள்ளாக, நகரில்/நாட்டில் சேரும் குப்பைகள்
அனைத்தையும் “சூ மந்திரக்காளி” என்று காணாமல் போக
வைக்கும் ஒரு அற்புத திட்டம்…!

திட்டம் போட்டு செயல்படுத்துவதில், உலகிலேயே மிகச்சிறந்த
நாடாக சிங்கப்பூரைத் தான் சொல்ல வேண்டும். 20 வருடங்களுக்கு
பிறகு ஏற்படக்கூடிய தேவையை இன்றே யோசித்து,
அதற்கான தீர்வை, வழியை திட்டமிடுகிறார்கள்…!!!

உலகம் பூராவும், பெரிய நகரங்களில் சேரும் குப்பைகளை
அகற்ற என்னென்னவோ வழிகளை பின்பற்றுகிறார்கள்.
ஆனால், வித்தியாசமான இந்த சிங்கப்பூர் வழி இருப்பதற்குள்
சிறந்ததாகத் தோன்றுகிறது…

2017-ல் தினமும் 8,443 டன் குப்பை என்றால்…
இன்று எவ்வளவு இருக்கும்…?

கீழே இரண்டு காணொளிகள் ..

இரண்டும் ஒரே விஷயத்தை தான் சொல்கின்றன.
முதல் வீடியோ மூன்றரை நிமிடங்களில்
சுருக்கமாக, ஆனால் வெகு சுவாரஸ்யமாக விளக்குகிறது.

அடுத்த வீடியோ, எட்டு நிமிடங்களில்,
மிக விவரமாக – முழுமையாக, விளக்குகிறது.
என்னைக் கேட்டால், இரண்டையும் பாருங்கள்
என்றே சொல்வேன்.

.
———————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to சிங்கப்பூரில் – ஒரு” சூ மந்திரக்காளி ” திட்டம் …!!!

 1. Selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! இங்கே நம் தமிழகத்தில் கோயம்பேடு மார்க்கெட் காய்கறி கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்க திட்டம் 2003 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டி தொடங்கப்பட்ட திட்டம் 2006 ம் ஆண்டு நிறைவு பெற்று தினமும் அதிக பட்சமாக 1200 யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டது — இதில் என்னவொரு ஆச்சர்யம் என்றால் இந்த கழிவுகளின் மூலம் கிடக்கின்ற ” பயோ மீத்தேன் ” வாயுவில் இருந்து தான் மின்சாரம் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது … இப்போதும் மனம் இருந்தால் சிங்கப்பூர் போல மார்க்கம் உண்டு — நிலத்தை மலடியாக்காமல் கழிவுகளில் இருந்தே மின்சாரம் எடுக்கலாம் …செய்வார்களா ஆளுவோர் …?

 2. Jksmraja சொல்கிறார்:

  KM sir,

  இந்த மாதிரியான காணொளிகளை நான் பார்த்திருக்கின்றேன். தமிழ் நாட்டில், நாம் தமிழர் கட்சி கூட இந்தமாதிரியான திட்டத்தை அவர்கள் வரவரிக்கைகளில் கொடுத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நாட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று சொல்லி பல கோடிகளை , இந்த மாதிரி வீணாக்கும் திட்டத்தில் செலவு செய்வதை பார்க்கும் போது சிரிப்புதான் வருகிறது. ஓன்று மட்டும் புரிகிறது. சிங்கப்பூரில் மக்களின் மனம் கவர்ந்த சிறந்த நடிகர்களும், நரேந்திரமோடி மாதிரியான மந்திரம் தெரிந்த சிறந்த முதன்மை அமைச்சரும் இல்லை என்று தெளிவாக தெரிகிறது.

  நீங்கள் கிளீன் இந்தியா என்று மட்டும் கூகுள் செய்து பாருங்கள். தலை சிறந்த நடிகர்கள் நடிகைகள் ஆளுநர்கள் போன்றவர்கள் துடைப்பத்தை எடுத்து பெருக்குவது போன்று காட்சி ஊடகங்களில் போஸ் கொடுத்த மறு வினாடியே, நமது பிரதமர் நரேந்திர மோடியின் தலை சிறந்த மந்திரத்தால் இந்தியா மிகவும் சுத்தமாவதை நீங்கள் காணலாம். செலவே இல்லாத இந்தமாதிரியான திட்டத்தை பாராட்டாமல் சிங்கப்பூரில் பணத்தை வீணாக்கும் திட்டத்தை பாராட்டுவதை பார்க்கும்போது நீங்கள் ஒரு தேச துரோகி என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

  • புதியவன் சொல்கிறார்:

   உங்கள் பாயிண்ட் சரியானதுதான். நம்ம நாட்டு அரசியல்வாதிகள் படம் காட்டி போஸ் கொடுப்பதிலேயே காரியம் முடிவடைந்துவிட்டதாக நினைக்கிறார்கள். இதுல எந்த அரசியல்வாதியும் விதிவிலக்கில்லை. சென்னையை சிங்கப்பூர் ஆக்கிவிடுவேன் என்று மேயரான ஸ்டாலின் உள்பட.

   சிங்கப்பூர்ல உள்ள குடிமக்கள் மாதிரி, இந்தியாவுல இருக்காங்களா? அந்தத் தரம் நம்ம மக்கள்ட இருக்கா என்றும் பார்க்கணும். அங்க குடித்துவிட்டு, ‘தமிழன்’ என்று கலவரம் ஆரம்பித்தவர்களுக்கு எப்படிப்பட்ட பனிஷ்மெண்ட் கிடைத்தது, எந்த ஒரு அரசியல்வாதியும், தன் இனம், தன் சாதி, தன் மதம் என்று அங்கு ஆதரிக்க வரலை என்பதையும் பார்க்கணும். சட்டம் மட்டுமே ஆட்சி செய்கிற, லிமிடெட் குடியரசான சிங்கப்பூர், அதன் சட்டம் ஒழுங்கு, அதன் தலைவர்கள் – இவர்களைப் பற்றி நாம் கனவு மட்டும்தான் காண முடியும்.

   நம்ம மக்கள் எவ்வளவுக்கெவ்வளவு தரம் கெட்டவர்களோ அவ்வளவுக்கவ்வளவே அவர்களிடமிருந்து அரசியல்வாதிகள் உருவாகிறார்கள். நம் மக்களுக்கு, தாங்கள் மிக மோசமாக இருக்கணும், நம்ம அரசியல்வாதிகள் மட்டும் வானத்திலிருந்து குதிக்கணும்னு நினைச்சுக்கிட்டு, இப்போ இருக்கற, தங்கள் குணத்தை ஒட்டிய அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுக்கறாங்க. அப்புறம் எப்படி இந்தியா மாறும்?

   என்னைப் பொறுத்தவரையில் தவறு மக்களிடம்தான். அவங்க முதல்ல மாறணும்.

 3. Jksmraja சொல்கிறார்:

  இந்திய மக்களை நான், நான்கு வகையாக பிரித்து பார்க்கிறேன்.

  முதல்வகை :
  சுயநலம் மிகுந்த, புத்திசாலியான, பணத்திற்க்காக எதுவும் செய்ய துணிகின்ற வியாபார பெருமக்கள். இவர்கள் மக்கள் ஜனத்தொகையில் ஒரு சதவிகிதம் பேர் இருப்பார்கள். இவர்கள் நீதி, நேர்மை, நாட்டின் நலன் என்று எப்போதும் பார்க்கமாட்டார்கள். இவர்களின் ஒரே நோக்கம் பணம் சம்பாதிப்பது. அதற்காக எந்த அரசியல் கட்சி அனுசரணையாக இருக்கிறதோ அந்த கட்சிக்கு ஆதரவாக எல்லாவிதமான வேலைகளையும் செய்வார்கள்.

  இரண்டாவது வகை:
  படித்த, எல்லா விவரங்களும் தெரிந்த, சுயநலமிக்க, புத்திசாலியான, அடிமை மனம் கொண்ட மக்கள். இவர்கள் மக்கள் தொகையில் ஒரு இருபத்தைந்து சதவீதம் பேர் இருப்பார்கள். இவர்களுக்கும் நேர்மைக்கும் சம்பந்தமே இருக்காது. இந்தியாவின் சாபம் இவர்கள்தான். ஏன் புதியவன் சார் கிளீன் இந்தியா பற்றி மாதக்கணக்கில் டிவி சேனல்களில் விவாதம் நடத்தப்பட்டதே அப்போது இந்த கூட்டத்திற்கு ஒருபைசா செலவு இல்லாமல் துப்பரவு பணியாளர்களின் எண்ணிக்கையை கூட்டாமல் அது சாத்தியமா என்று யோசிக்காமல் மோடி எதோ பெரிய ஆராட்சி செய்து சொல்லிவிட்டார் என்று நினைத்து இன்றுவரை அதனை ஆதரித்து பேசும் மக்கள் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியாதா. நீங்கள் கூட மோடியின் இந்தத்திட்டம் பெரிய காமடி என்று சொல்லாமல் சிங்கார சென்னை திட்டத்தை இழுக்கின்றிர்களே. ஏன் சார். அரசியல் வாதிகளும் சுயநலமிக்க அதிகாரிகளும் இந்த வகையை சேந்தவர்கள் என்பது எனது எண்ணம்.

  மூன்றாவது வகை:
  படித்த, பண்புள்ள, உண்மையிலே நாட்டின் மீது பற்று கொண்ட மக்கள். இவர்கள் நாட்டின் ஜனத்தொகையில் ஒரு நான்கு சதவிகிதம் பேர் இருப்பார்கள். இவர்கள்தான் எப்போதும் கட்சி பாகுபாடு இல்லாமல் நேர்மையாக விமர்சிப்பவர்கள். நான் பீகாரில் கூட நேர்மையான அதிகாரிகளை சந்தித்துஉள்ளேன்.

  நான்காவது வகை:
  படிப்பறிவு இல்லாத, வெள்ளந்தியான, ஏழை மக்கள். இந்த வெள்ளந்தியான மக்களை குறி வைத்துதான் அரசியல்வாதிகள், முதல் இரண்டு பிரிவினரின் துணையுடன் செயல்பட்டு ஆட்சியை பிடிக்கிறார்கள். ஏன் புதியவன் சார் இதில் யாரை நீங்கள் மக்கள் மோசம் என்று குறிப்பிடிர்கள். நீங்கள் எப்போதும் பிஜேபி யை ஆதரித்தே வந்துள்ளீர்கள். கடந்த ஐந்தாண்டுகளில் நாட்டிற்க்காக மோடி செய்த ஒரே ஒரு நல்லதிட்டத்தை குறிப்பிடுங்கள் பார்ப்போம். மோடி நேர்மையாளர் என்பீர்கள். ஏன் சார் எலெக்ஷன் பாண்டு நேர்மையாளர்கள் செய்யக்கூடிய செயலா கொஞ்சம் விளக்குங்களேன்.

  மேலே உள்ளது எனது பார்வை.

  • Selvarajan சொல்கிறார்:

   நண்பரே …! // எலெக்ஷன் பாண்டு நேர்மையாளர்கள் செய்யக்கூடிய செயலா கொஞ்சம் விளக்குங்களேன். // … இது என்ன கேள்வி … கார்பொரேட்கள் — பெரு முதலாளிகள் விரும்பிக் கொடுக்கிற நன்கொடை — அனைத்து கட்சிகளுக்கும் தான் பெறுகின்றன என்றாலும் அதிலும் முதலிடத்தில் இருப்பது பாஜக என்பது பெருமைதானே …? இதே தளத்தில் ஒரு இடுகையில் :–

   ” லஞ்சம் எனப்படுவது யாதெனின் ” – யாருக்கும் தெரியாமல் ஆளும் கட்சிக்கு தரப்படும் “எலெக்டோரல் பாண்ட்” என்றறிக…!!!
   Posted on ஏப்ரல் 16, 2019 by vimarisanam – kavirimainthan .. என்பதில் // அனைத்துக் கட்சிகளும் நன்கொடை பெறலாம் என்று
   கூறப்பட்டாலும் இந்தத் திட்டத்தில் அதிகம்
   பயனடைந்தது யார் என்று தெரிந்து கொள்ள ஆவலாகவே இருக்கும்.

   பா.ஜ.க.வின் 2017-18 வரவு செலவு தணிக்கையின்படி –
   இத்திட்டத்தின் மூலமான சுமார் 94.6 % – நிதி
   பா.ஜ.க.வுக்கு கிடைத்திருக்கிறது என்கிற தகவல்
   தெரிய வந்திருக்கிறது….!!!

   இது எதிர்பார்த்ததே….
   காரியம் ஆக வேண்டுமென்று லஞ்சம் கொடுப்பவர்கள் –
   ஆளும் கட்சிக்கு கொடுக்காமல், வேறு யாருக்கு கொடுப்பார்கள்…? // என்று பதிவாகியுள்ளது கவனிக்க தக்கது …!

   இதே போன்று இதே ஏப்ரல் 16 , 2018 [ ஒரு வருடம் முன்னால் ] வந்த இடுகை : — பிரமிப்பைத்தரும் பண வசூல்…. பாஜகவுக்கு – குவிகிறது கோடிகளில்……..!!!
   Posted on ஏப்ரல் 16, 2018 by vimarisanam – kavirimainthan …. இந்த இடுகையில் 34 பின்னூட்டங்கள் பதிவாகி உள்ளது … படியுங்கள் நீங்கள் கேட்ட விளக்கம் ” முதல் பின்னோட்டத்திலேயே ” கிடைக்கும் …!!!

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  Jksmraja,

  புதியவன் சார் என்ன சொல்வார் என்று
  அவர் சொல்வதற்கு முன்னர் நான் என் கணிப்பை
  சொல்லிவிட அனுமதியுங்களேன்…ராஜா.

  முதல் பாராவில் –
  பாஜகவையும், மோடிஜியையும், உங்களை விட
  கடுமையாகச் சாடி – இவர்கள் செய்வது அத்தனையும் மோசம்,
  வெறும் வேஷம்… சொல்லில் காட்டிய வேகத்தை செயலிலும்
  காட்டி இருந்திருக்க வேண்டும் என்று சொல்வார்.

  அடுத்த பாராவில், என்ன இருந்தாலும் சோனியாவும்,
  மன்மோகன் சிங்கும் சேர்ந்து 10 வருடங்களில்
  இந்த நாட்டை சீரழித்த அளவிற்கு பாஜக சீரழிக்காதது
  ஒரு ஆறுதல் என்று சொல்வார்.

  அதற்கடுத்த பாராவில்,
  கலைஞர், கடைசி காலத்தில் –
  பெரியார் பெயரை ஒரு பக்கம் சொல்லிகொண்டே,
  திருப்பதி தேவஸ்தானத்தையே கோபாலபுரத்துக்கு
  கொண்டுவந்த வைபவத்தையும்,

  நெற்றி விபூதியையும், குங்குமத்தையும் அழித்த
  ஸ்டாலின் அவர்களின் திருமதி – அத்தி வரதரை தரிசிக்க
  சென்ற வைபவத்தையும் நினைவுபடுத்துவார்.

  கடைசி வரியில் –
  இவர்கள் அளவிற்கு மோடிஜி நாட்டை கெடுக்காததால்,
  இன்னும் அடுத்த 2 பொதுத் தேர்தல்களிலும்
  மோடிஜி தான் வருவார்….என்று கூறி முடிப்பார்.

  என்ன புதியவன் –
  என்னை ஏமாற்றிவிட மாட்டீர்களே…? 🙂 🙂 🙂

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  • Selvarajan சொல்கிறார்:

   அய்யா ..! இது பாேல ஒவ்வாெரு இடுகைக்கு தாங்கள் ஸமைலியாேடு பதிவு செய்வது உங்களுக்கும் வாடிக்கையாகிவிட்ட ஒன்றுதான் … நாங்களும் அதை உணர்ந்தே இருக்கிறாேம் …!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.