அத்தி வரதர் தரிசனம் – பொய் சொன்னாரே எம்.பி.. பொய் சொன்னாரே …. !!!


எம்.பி. சிபாரிசு கடிதம் கொடுத்தால்,
க்யூவில் நிற்க வேண்டாமாம்.
திமுக எம்.பி.திருவாளர் டி.கே.எஸ் இளங்கோவன்
கொடுத்த சிபாரிசுக் கடிதங்கள், பற்றிய செய்திகள் –
சமூக வலைதளங்களில் உலா வந்துகொண்டிருக்கின்றன.

இப்படி சிபாரிசு கடிதம் கொடுப்பதன் மூலம் –
வரும்படிக்கு எதாவது வாய்ப்பு உண்டோ…?
அது குறித்து நமக்குத் தெரியவில்லை …!!!

இது குறித்து விகடன் செய்தி நிருபர், திருவாளர்
இளங்கோவனை பேட்டி கண்டிருக்கிறார்…
அந்த பேட்டியில் அவர் சொன்னதிலிருந்து கொஞ்சம்….

—————

“நான் திராவிடர் கழகத்தில் இல்லை.
தி.மு.க-வில் இருக்கிறேன். கடவுள் நம்பிக்கை
உள்ள ஏராளமானோர் தி.மு.க-வில் இருக்கிறார்கள்.
எனக்குக் கடவுள் நம்பிக்கை சுத்தமாகக் கிடையாது.

எம்.பி என்பதால் என்னிடம் அத்திவரதரை
தரிசிக்க வேண்டுமெனக் கேட்டு வருபவர்களுக்கு
உதவி செய்தேன். ( இவருக்கென்று தனியே தொகுதி
எதுவும் கிடையாது…. இவர் ராஜ்ய சபா உறுப்பினர்…! )

(உதாரணத்திற்கு ஒரு கடிதத்தின் ஒளிநகல் கீழே -)

சொல்லப்போனால் இதில் குறிப்பிடப்பட்டிருப்பவர்கள்
எனக்கு உறவினர்கள்கூட அல்ல. ( அப்படியானால்
பொய் சர்டிபிகேட் என்று இவரே சொல்கிறார்…! )

உறவினர் எனக் குறிப்பிட்டால் அதிக முக்கியத்துவம்
கிடைக்குமென்பதால் கடிதத்தில் அப்படி ( பொய்…? )
சொன்னேன்…!!!

(விகடன் நிருபர் இன்னொரு கேள்வியும் கேட்டிருக்கலாம் –
இந்த மாதிரி இதுவரை எத்தனை சர்டிபிகேட்கள்
கொடுத்திருப்பார்…என்று !!! )

————————-

இந்த லாஜிக் நமக்கு புரிய மாட்டேனெங்கிறது.

1) ஆதாயம் இருந்தால் எப்படி வேண்டுமானாலும்
பொய் சர்டிபிகேட் கொடுக்கலாமென்று திருவாளர்
இளங்கோவன் கூறுகிறாரா…?

2) அப்படியானால் – ஜாதி சர்டிபிகேட்,
வருமான சர்டிபிகேட்,
தெரிந்தவர், நன்னடத்தை – சர்டிபிகேட்,
கல்லூரிகளில் அட்மிஷன் –
ரெகமண்டேஷனுக்கு சர்டிபிகேட்,
தொழில் நிறுவனங்களுக்கு வேலை தரச்சொல்லி
ரெகமண்டேஷன் சர்டிபிகேட் –
ஆக இவர்கள் கொடுக்கும் எல்லா சர்டிபிகேட்களும்
இப்படித்தானா…? எல்லாமே ஆதாயம் (….எந்த வித..? ) கருதி
கொடுக்கப்படும் சர்டிபிகேட்கள் தானே…?

இப்படி ஒவ்வொரு எம்.பி.யும் சர்டிபிகேட் கொடுத்தால்,
எத்தனை ஆயிரம் பொய் சர்டிபிகேட்கள்
இங்கே உலா வரும்..?
தகுதியற்ற எத்தனை ஆயிரம் பேர்கள் –
தவறான வழியில் சலுகைகளைப் பெறுவார்கள்…?

பாவம் – தினமும், எவ்வளவோ ஆயிரம் பேர்கள்
வெளியூர்கள், வெளி மாநிலங்களிலிருந்தெல்லாம்
அத்திவரதரை தரிசிக்க ஆவலுடன் காஞ்சிபுரம் வந்து
இப்படி மணிக்கணக்கில் குடும்பம் குடும்பமாக
காத்துக் கிடக்கிறார்கள்…

இவர்களை எல்லாம் முட்டாள்களாக்கும் வகையில்
எம்.பி.க்கள் இப்படி ஆயிரக்கணக்கில் பொய் சர்டிபிகேட்கள்
கொடுப்பது நியாயமா…?

.
————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to அத்தி வரதர் தரிசனம் – பொய் சொன்னாரே எம்.பி.. பொய் சொன்னாரே …. !!!

 1. புதியவன் சொல்கிறார்:

  கொள்கை என்பதெல்லாம் இவர்களிடம் எதிர்பார்க்கிறீர்களா கா.மை. சார். இவங்களுக்கு அதில் ஒரு வார்த்தையை மாற்றினால் வருபதுதான் அவர்களது ‘கடமை’.

  நீங்களும் வெட்டுங்க. ‘எனது உறவினரும் முன்னாள் முதல்வருமான’ காவிரி மைந்தனுக்கு என்று ஒரு சர்டிபிகேட் கொடுப்பார் இவர். இந்த எம்.பிக்கள்லாம் எத்தனை சாதாரண மனிதர்களுக்கு உதவி செய்திருக்காங்க? கனவுலயும் செய்ய மாட்டாங்க. பெரும்பாலான பாராளுமன்ற கேள்வி கேட்க, காசு வாங்குகிறார்கள் என்று செய்திகள் வந்ததே படித்ததில்லையா சார். இந்த எம்பிக்களுக்கு அரசு ஒதுக்கிய பங்களாவில், கார் ஷெட்டைக்கூடா வாடகைக்கு (குடும்பம் குடியிருக்க) விட்டு காசு தேத்துபவர்கள் இவர்கள்.

  இவர்களைப் பற்றி பேசுவதே வீண். இவர்களெல்லாம் சமூகத்துக்கு நன்மை செய்ய அரசியலுக்கு வந்தவர்கள் இல்லை.

  //இப்படி மணிக்கணக்கில் குடும்பம் குடும்பமாக// – சார்… நான் இருமுறை தரிசித்துவிட்டேன். இந்த சப்ஜெக்ட் எடுத்ததனால் சில பாயிண்டுகளைச் சொல்ல நினைக்கிறேன்.

  1. இந்த வி.வி.ஐ.பி என்று நினைத்திருக்கும் சமுதாயக் கேடுகளால் மற்றவர்களுக்கு எந்தச் சிரமமும் கிடையாது. என்ன… ஏதோ…பெரிய சாதனை செய்தவர்கள் போல காலை வீசிக்கிட்டு நேர தரிசனத்துக்குப் போவாங்க, வரிசையில் 3-4 மணி நேரம் காத்திருக்கும் மக்களின் வயிற்றெரிச்சலைச் சம்பாதித்துக்கொண்டு.

  2. முதல் 5-6 நாட்களில் போலீஸ் பணி மற்றும் ஏற்பாடுகள் மெச்சத்தக்க வகையில் இருந்தது. தண்ணீர் வசதி எல்லாம் இருக்கு. (இன்னமும் அப்படித்தான் என்று நினைக்கிறேன்). போலீசார் மிக அமைதியாகவும், பொறுமையாகவும், சிரித்த முகத்தோடும்தான் பணி செய்துகொண்டிருந்தார்கள் (இருப்பார்கள்). ஒரே ஒரு பிரச்சனை (அதை இன்னும் தீர்க்கவில்லை). செருப்பை, கோபுரத்துக்கு நுழையும் ரோட்டின் ஒரு புறம் விட்டுவிட்டுப் போகணும். வெளியேறும் நுழைவாயில் தனி. அங்கிருந்து தார் ரோட்டில் கிட்டத்தட்ட 1 கிலோ மீட்டர் (700 மீ ஆக இருக்கலாம்) நடந்து செருப்பை எடுத்துக்கொள்ளணும். இது மிக மிகச் சிரமம். அந்த ரோட்டில், இருபுறமும் சிறு கடைகள், பஸ்கள் செல்லும் வழி. இதற்கு சிறிய ஓலைப் பந்தல் ரோட்டின் ஒரு புறத்தில் போட்டு, திடீர் வியாபாரிகளைத் துரத்தியிருக்கலாம். மதிய தரிசனத்தின்போது எனக்கே மிகவும் கஷ்டமாக இருந்தது. (பொதுவா நான் சூடு பொறுப்பவன்)

  3. காஞ்சி கலெக்டர் அருமையான ஏற்பாடுகள் செய்திருந்தார். இடையில், இந்து அறநிலையத்துறை, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் அலுவலர்கள் மற்றும் தங்கள் உறவினர்கள் பயன் பெற, கலெக்டருக்கு நெருக்கடி கொடுத்து தாங்களே பார்த்துக்கொள்வதாகச் சொல்லி குளறுபடிகளை ஆரம்பித்தது, தங்கள் துறையின் 50 பேரை காஞ்சிக்கு வரவழைத்தது, கலெக்டரிடமிருந்து ஆயிரம் பாஸ்களுக்கு மேல் பெற்றுக்கொண்டது என்பதைப் படித்தேன். அதற்கு அப்புறம்தான் மக்கள் 4-5 மணி நேரமாகிறது தரிசிக்க என்று எழுதுவதைக் கண்டேன். நான் சென்ற 4ம் நாள், 45 நிமிடம், 1 1/2 மணி நேரம்-கூட்டம் அதிகமாக இருந்தபோது, ஆனது.

  4. முடிந்த அளவு, அர்ச்சகர்கள், இறை உருவத்தை மறைக்காமல், குறுக்கே நெடுக்கே அடிக்கடி போகாமல் இருக்கணும். தரிசனம் செய்ய சில நொடிகள்தான் கிடைக்கின்றன.

 2. புதியவன் சொல்கிறார்:

  சார்… இந்த சப்ஜெக்டில் இன்னொன்று சொல்ல நினைக்கிறேன். ‘பக்தி, சின்சியாரிட்டி’ என்பதுதான் நாம் இறை தரிசனத்தின்போது கொண்டு செல்லும் பாத்திரம். அது எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு நேரெதிராக நம் பாத்திரம் ஓட்டை என்று பொருள். இறை அருள் என்பது நீர் போல. டாம்பீகத்துக்காகச் சென்றால், அது முழுக்க ஓட்டைப் பாத்திரம் கொண்டு செல்கிறோம் என்று பொருள். முதல்ல தரிசித்தேன், ஒரு அடி தூரத்தில் தரிசித்தேன், கஷ்டப்படாம தரிசித்தேன், 10 நிமிடம் அங்கேயே நின்றேன், நுழைவாயில் வரை கார்ல போனேன், கருவறையில் பூ கொடுத்தார்கள், பழம் கொடுத்தார்கள் என்று சொல்வதில் அர்த்தம் ஒன்றுமே இல்லை.

 3. Selvarajan சொல்கிறார்:

  அய்யா…! கலைஞர் முதல்வரானதில் இருந்து இது போன்ற கடிதங்கள் உலா வர ஆரம்பித்து விட்டன — அந்நாட்களில் எம்.எல்.ஏ — எம் .பி –. ஏன் மந்திரிமார்களின் ” லெட்டர் பேட் ” நிறைய அவர்களுக்கு வேண்டிய நபர்களிடம் அவர்களின் கையெழுத்துக்களோடு இருக்கும் — யாருக்கு என்ன காரியம் ஆக வேண்டுமோ அதை சார்ந்த துறை அதிகாரிகளுக்கு எழுதி கொடுத்து விடுவதும் வாடிக்கை — ஒரே பதவிக்கு பலருக்கும் கொடுப்பதும் நடப்பதுண்டு — யாரையும் பகைத்துக் கொள்ளாமல் கடிதம் கொடுத்து விடுவார்கள் — ஆனால் வேலையை பெரும் ஒருவருக்கு மட்டும் தொலைபேசியில் கூறிவிடுவார்கள் — அன்று தொட்ட பழக்கம் இன்றும் நடக்கிறது …. பாவம் பகவானை தரிசிக்க கொடுத்து பாவங்கள் போகட்டும் என்று கூட நினைத்த்து இருக்கலாம் — ” இவர்களின் ” பகுத்தறிவே – பக்தியாகி ” போனதாகவும் இருக்கலாம் …! அது இருக்கட்டும் …

  கலைஞர் அவர்கள் 2016 — அக்டோபர் மாதம், ஆனந்த விகடனுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் : —

  // கருணாநிதியின் பகுத்தறிவு, நாத்திக கொள்கைகள், தற்போதுள்ள தி.மு.க தொண்டர்களிடம் குறைந்துவிட்டது. இதைப் பற்றி கருணாநிதியிடமே நேரடியாகக் கேள்வியெழுப்பியுள்ளது விகடன். ஆம், கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம், ஆனந்த விகடனுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், “ஒருகாலத்தில் நீங்கள் பேசிய பகுத்தறிவு, நாத்திகம் போன்ற கொள்கைகள், தி.மு.க தொண்டர்களிடம் இன்று குறைந்துவிட்டதா?” என்னும் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்,

  “பகுத்தறிவு, நாத்திகம் போன்ற கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட தொடக்ககாலத் தொண்டர்களும், அவர்களின் நேரடித் தலைமுறையினரும் எந்தவித சமரசமும் இன்றி அவற்றைப் பின்பற்றிவருகின்றனர். தி.மு.கழகம், இன்றைக்கு சமுத்திரம்போல் பெருகிவிட்டது. கடலில் பல்வேறு நதிகளும் ஓடிவந்து கலந்துவிடுவதைப்போல, பல்வேறு திசைகளில் இருந்தும் தோழர்கள் கழகத்தில் ஐக்கியமாகிக்கொண்டிருக்கிறார்கள். அந்தப் புதியவர்களில் ஒருசிலர் இந்த இயக்கத்தின் மூலக்கொள்கைகளைப் புரிந்துகொள்ள சில காலம் ஆகலாம். அதை வைத்து, கொள்கை குறைந்துவிட்டதாகக் கூறுவதை ஏற்றுக்கொள்ள இயலாது.” // ….
  திரு .. ஜெகத்ரட்சகன் திருப்பதி தேவஸ்தான அர்ச்சகர்களை கோபாலபுரம் வீட்டுக்கே அழைத்து வந்து சமஸ்கிருதத்தில் மந்திரம் கூறுவதை ” கலைஞர் கருணாநிதி அவர்கள் ” ரசித்து கேட்டதையும் பார்த்தவர்கள் நாம் — இடுகையாகவும் தளத்தில் இருக்கிறது — பகுத்தறிவு பகலவன் அப்படி என்றால் திருவாளர் டி.கே.எஸ் இளங்கோவன் எம்மாத்திரம் …?

  // எம்.பி.க்கள் இப்படி ஆயிரக்கணக்கில் பொய் சர்டிபிகேட்கள்
  கொடுப்பது நியாயமா…? // என்பதற்கு தான் யாரையும் பகைத்துக்கொள்ளவோ — கொடுக்காமல் இருக்க மாட்டார்கள் என்பது பின்னூட்ட தொடக்கத்தின் படி நடைபெறும் வாடிக்கை … !!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.