காவேரி – அதிகாரம் கை மாறி விட்டதா…?


அரசியல்வாதிகளோ, மீடியாக்களோ –
கவனித்ததாகத் தெரியவில்லை…

தமிழகத்தின் நல்ல காலம் பிறந்து விட்டதோ என்று
தோன்றுகிறது…

யாரும் கவனிக்காத வகையில்,
காவிரியில் நீர் திறக்கும் அதிகாரம் கர்நாடக அரசிடமிருந்து
காவேரி ஆணையத்தின் கைக்கு போய் விட்டதாக
தெரிகிறது கீழ் வரும் செய்தியின் சொற்களைப் பார்த்தால்…!!!

உண்மையாக இருந்தால் –
கடவுளுக்கு பல கோடி நன்றிகள்….
( இதெல்லாம் மனிதர்களால் –
தீரக்கூடிய பிரச்சினையே இல்லையே…! )

.
—————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to காவேரி – அதிகாரம் கை மாறி விட்டதா…?

 1. புதியவன் சொல்கிறார்:

  Little too early to acknowledge this. எனக்கும் ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது, குமாரசாமி காவிரி நீர் திறந்துவிடச் சொன்ன செய்தி படித்து. இப்போ மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது. எம்.எல்.ஏக்கள் களேபரத்தினால் இந்தச் செய்தி அமுங்கி உள்ளது. இல்லையென்றால் ‘காவிரி நீர் திறக்கக்கூடாது’ என்பதுபோல் கலவரங்கள் ஆரம்பித்திருக்கும். எடியூரப்பா போன்றவர்கள் ஆரம்பித்து முதல்வருக்கு சிக்கலை உண்டாக்கியிருப்பார்கள்.

  சென்ற மாதத் தண்ணீரே அனுப்பவில்லை. அதை காவிரி ஆணையம் தட்டிக்கேட்கவில்லை. நம் முதல்வர், சட்டப்படிதான் இதனை அணுகுகிறார் (காவிரி ஆணையத்திடம்)

 2. புவியரசு சொல்கிறார்:

  // சென்ற மாதத் தண்ணீரே அனுப்பவில்லை.//

  சென்ற மாதம் கர்நாடகா அணைகளிலேயே தண்ணீர் இல்லை
  என்பதை மறந்து விடக்கூடாது.

 3. புவியரசு சொல்கிறார்:

  அதனால் தான் தமிழ் நாடும் வற்புறுத்தாமல் இருந்தது.
  இல்லாத நீரை எங்கேயிருந்து அனுப்புவது ?

  இப்போதாவது உரிய முறையை கடைபிடிக்கிறார்களே
  என்று திருப்திப்படுவது தான் நியாயம்.
  Let us be Practical in our Approach.

 4. Selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! இங்கே இருக்கிற அரசுக்கு இதைப்பற்றி கவலையில்லாமல் — அழுத்தம் கொடுக்காமல் இருந்தாலும் இறைவனா பார்த்து திரு குமாரசாமி மூலம் தமிழக டெல்டாவிற்கு நல்லது நடந்தால் வயிறு குளிரும் …!

  கர்நாடக அரசு ஆட்டம் கண்டுள்ள நிலையில் இவரது இந்த முடிவு : தனக்கு எவ்வித பதற்றமும் இல்லை என்று காட்டுவதற்கும் — மக்களின் கவனத்தை தண்ணீர் பக்கம் திருப்பவும் — காவிரி பாசன கர்நாடக பகுதி கட்சிமாறுகிற எம்.எல்.ஏ க்களை பற்றி மக்கள் புரிந்துக் கொள்ளவும் அவர்கள் மீது வெறுப்படையவும் — தமிழக மக்களிடம் ஒரு நல்ல பெயரை எடுக்கவும் — அதே வேளையில் தமிழக மக்களிடம் பா.ஜ .க மீதுள்ள வெறுப்பை இரட்டிப்பாக்கவும் முயலுகிறாரோ என்ற எண்ணத்தில் ஏன் செல்லக்கூடாதா — நமது சிந்தனை …?

  • புதியவன் சொல்கிறார்:

   செல்வராஜு சார்… தேவேகவுடா மற்றும் அவர் பையன் குமாரசாமி ஆகியோர், இயல்பா விவசாயிகள். அதுனால தண்ணீர் இருக்கும்போது கொடுக்க மாட்டேன் என்று அரசியல் செய்ய மாட்டார்கள். அதுவும் டேக்டிகலாக ‘மாண்டியா விவசாயிகளுக்காக’ என்று சொல்லியிருக்கார்.

   எடியூரப்பா (பாஜக), காங்கிரஸ் போன்ற கட்சிகள்தாம் தண்ணீர் விஷயத்தில் ரொம்ப அரசியல் செய்யும்.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    .

    புதியவன்,
    செல்வராஜன்,

    என் இடுகையின் அடிப்படையை
    நீங்கள் இருவருமே தவற விட்டு விட்டீர்கள்
    என்று தோன்றுகிறது…

    இடுகையில் என் கேள்வி –
    ” காவிரியில் நீர் திறந்து விடும் அதிகாரம்
    கைமாறி, கர்நாடக அரசிடமிருந்து,
    காவிரி ஆணையத்துக்கு சென்று விட்டதா..?”
    என்பது தான்…

    அதற்கான அடிப்படைக் காரணம் –

    அணையைத் திறந்துவிட கர்நாடக
    முதலமைச்சர் (இது வரை செய்து
    வந்தது போல் ) தானே உத்திரவிடாமல்,
    காவிரி ஆணையத்தை அணுக அதிகாரிகளை
    அறிவுறுத்தி இருக்கிறார்…

    ——————————-

    தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை
    வாரியத்திடம் வலியுறுத்துமாறு சம்பந்தப்பட்ட
    துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்..

    அரசின் கோரிக்கைக்கு ஆணையம்
    செவி சாய்க்கும் என்று நம்புகிறேன்.

    ——————————-

    இந்த விஷயம் தான் இந்த இடுகையில்
    நான் கூற முயன்ற கருப்பொருள்.

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • புதியவன் சொல்கிறார்:

     ஆஹ்… I missed this point. ie it didn’t come to my mind. இதன் மூலம், அரசு தண்ணீர் திறந்துவிட்டது என்றிருக்காமல், காவிரி ஆணையமே செய்தது என்று காண்பிக்க நினைக்கிறார் போலிருக்கிறது. இது ஒரு முக்கியமான ஸ்டெப்தான். அப்படி இது ஓரிரு முறை நடந்தால், ‘தண்ணீர் திறப்பது’ என்பது கர்நாடக அரசின் ரெஸ்பான்சிபிலிட்டி என்பது மாறி, காவிரி ஆணையம் சொன்ன உடனேயே, கர்நாடக காவிரி ஆணைய அதிகாரிகள் செயல்படுத்துவார்கள். இது நமக்கு நல்லதுதான். நன்றி இதைக் குறிப்பிட்டதற்கு.

     எதிர்காலத்தில், கர்நாடக அரசு, ஆணையத்துடன் மோதுமே தவிர, தமிழகத்துடன் அரசியல் கசப்புணர்வு, தமிழர்களுக்கு எதிராக கர்நாடக அரசியல்வாதிகள் செயல்படுவது நடக்காது.

    • Selvarajan சொல்கிறார்:

     அய்யா ..! காவிரியில் தண்ணீர் வரப்போகிறது என்கிற மகிழ்ச்சியில் — அது யாரால் என்பதைப்பற்றி யோசிக்க எமக்கு தோணவில்லை — ! முன்பு மத்திய அரசின் பல தடங்கல்களுக்கு பின் உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பு வந்தபோது அமைக்கப்படுகிற அமைப்பானது ” தன்னிச்சையான — சுதந்திரமான அமைப்பு ” என்கிற எண்ணத்தில் இருந்ததால் இந்த கைமாறுகிறதா என்பதை பற்றிய நினைப்பே ஏற்படவில்லை …

     ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையை திறக்கா விட்டால் …???
     Posted on மே 22, 2018 by vimarisanam – kavirimainthan என்ற இடுகையில் : சுப்ரீம் கோர்ட் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க அடிப்படைக் காரணமாக இருந்தவர் திரு. ரங்கநாதன் அவர்கள்….

     அவர் கூறுவது – என்பதில்

     // காவிரி மேலாண்மை ஆணையம் என்பது ஒரு முழு அதிகரம் படைத்த அமைப்பாகும். இதில் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்களும் தலையிட முடியாது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கும் குழுவானது டில்லியில் இருந்துதான் செயல்படும். தமிழகத்தை சேர்ந்தவர்களோ, கர்நாடகத்தை சேர்ந்தவர்களோ நதிக்கு சொந்தம் கொண்டாட முடியது.

     கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து எத்தனை டிஎம்சி நீரை ஜூன் முதல் மே வரை வெளியேற்ற வேண்டும்… அந்த தண்ணீரானது மேட்டூருக்கு வரும்போது எந்த அளவில் விநியோகம் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் ஒழுங்காற்று குழு பார்த்து கொள்ளும். // என்று கூறியிருந்தார் …. கை மாறி தண்ணீர் திறக்கும் அதிகாரம் ஆணையத்திடம் சென்றால் இரட்டிப்பு மகிழ்ச்சி தான் .. நமக்கு …!!!

 5. senthil சொல்கிறார்:

  irunthal kodupparkal enpathu thavarillaya?
  iruppathai pangukolla vendum enpathuthane murai?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.