எத்தனையோ ஏமாந்தோம் – இங்கேயும் கொஞ்சம்…!!!


கீழே ஒரு குறு வீடியோ…
இந்த வீடியோவில், நதியின் மீதிருக்கும் பாலத்தில்
வரும் வாகனங்கள், ஒரு இடத்தில் திரும்பியவுடன் –
திடீரென்று காணாமல் போகின்றன.
வீடியோவை திரும்ப திரும்ப எத்தனை முறை
பார்த்தாலும் அதற்கான விடை கிடைப்பதில்லை.

இத்தனை traffic -உம் பாலத்தின் வளைவில் வந்தவுடன்
காணாமல் போய் விடுகின்றன… இது எப்படி..?
அவற்றிற்கு என்ன ஆயிற்று…

இது just கண்களை ஏமாற்றும் ஒரு வேடிக்கை தான்.

பின் குறிப்பில் விளக்கத்தை தந்திருக்கிறேன்.
ஆனால் உடனே அங்கே பார்க்காமல் –
வேறு எந்த இடத்திலும் க்ளிக்’கும் செய்யாமல்,
மீண்டும் வீடியோவை பார்த்து, கொஞ்சம் யோசித்துப்
பார்த்து முயற்சி செய்துவிட்டு, பிறகு
பின் குறிப்பிற்கு போய்ப் பாருங்களேன்.

பின் குறிப்பு –

வீடியோவை கொஞ்சம்
உற்று நோக்கினால், இது ஒரு மாயை
என்பது புரிந்து போகும். பாலம் போல
இருக்கும் அந்த இடமானது பாலமே
இல்லை. அது ஒரு சாதாரண சாலை.

நதி போல தெரிவது, உண்மையில்
நதியே இல்லை….ஒரு மொட்டைமாடியின்
மீதிருந்து ஒரு குறிப்பிட்ட கோணத்தில் –
மொட்டை மாடியையும் உள்ளடக்கி,
எடுக்கப்பட்ட இந்த வீடியோ தான்
இந்த மாயையை உருவாக்குகிறது.

இப்போது மீண்டும் ஒருமுறை
வீடியோவை பாருங்கள்.
மாயை விலகி விட்டிருக்கும்…!!!

நிஜ வாழ்க்கையில் பல சமயம்
நாம் இப்படித்தான் மாயையைக்கண்டு
நிஜமென்று நம்பி விடுகிறோம்… இல்லையா… 🙂 🙂 🙂

.
————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to எத்தனையோ ஏமாந்தோம் – இங்கேயும் கொஞ்சம்…!!!

 1. புவியரசு சொல்கிறார்:

  அந்த இடத்தில் பாதை U டர்ன் எடுத்து கீழ்ப்பக்கம்
  போகிறது என்று நான் முதலில் நினைத்தேன்.
  இந்த மொட்டை மாடி சமாச்சாரம் எல்லாம்
  தோன்றவே இல்லை.
  // நிஜ வாழ்க்கையில் பல சமயம்
  நாம் இப்படித்தான் மாயையைக்கண்டு
  நிஜமென்று நம்பி விடுகிறோம்… இல்லையா…//
  நிஜமான உண்மை. இந்த வீடியோ
  அதற்கு நல்ல உதாரணம் தான்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.