இன்றைய, அச்சம் தரும் சூழ்நிலை ஏன், எப்படி – உருவானது ……???


சில நாட்களுக்கு முன், ஆங்கில செய்தித்தளமான காரவானி’ல்
ஆஷிஷ் நந்தி அவர்களின் பேட்டியை அடிப்படையாகக் கொண்டு
வெளிவந்த –

” One generation will have to bear
the cost of what Modi has done:
Ashis Nandy analyses the election verdict..”

(பிஜேபியின் வெற்றியை ஒரு தலைமுறை
தாங்கிக் கொள்ள வேண்டும்….)

என்கிற தலைப்பிலான ஒரு கட்டுரையை படித்தேன்.
(https://caravanmagazine.in/politics/ashis-nandy-
interview-2019-election-verdict ) இன்றைய அரசியல் சூழ்நிலையை
மிக விவரமாக அலசி ஆராயும் ஒரு கட்டுரை அது.

அதில் சொல்லப்படும் கருத்துகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட,
அவற்றை just படித்து, சற்று சிந்தித்தாவது பார்க்க வேண்டும்
என்று எனக்குத் தோன்றியது….

The Bharatiya Janata Party’s massive victory in the 2019 general
election was its second consecutive win in the Lok Sabha, with
an absolute majority. This is a remarkable achievement for a party
that was pushed to the margins of Indian politics in 1984,
when it won just two seats in that year’s general election.
In the following years, the Ram Janmabhoomi movement enabled the
BJP to gradually acquire political dominance over a span of
three decades. It won 282 seats in the 2014 Lok Sabha and 303
seats in 2019.

The BJP’s exponential growth testifies to the growing appeal of
Hindutva, or Hindu nationalism, propagated by its parent
organisation, the Rashtriya Swayamsevak Sangh, ever since it was
formed in September 1925. Yet, for much of India’s
post-Independence history, Hindutva did not yield as rich a
harvest of votes for the BJP or its earlier incarnate,
the Bharatiya Jana Sangh.

The BJP’s current dominance suggests that the Indian collective
consciousness has dramatically altered to embrace Hindutva—an
exclusivist and homogenising ideology…….

– எனவே, அதனை முடிந்த வரையில் தமிழ்ப்படுத்தி, அதன்
அடிப்படையிலான ஒரு இடுகையை விமரிசனத்தில் வெளியிட
வேண்டும் என்று நினைத்து முயன்று வந்தேன். ஆனால்,
சிக்கலான பல கருத்துகளை சரியான முறையில்
மொழிபெயர்ப்பதற்கு நிறைய நேரம் தேவைப்பட்டது. என்னால்,
அதற்கு தொடர்ந்து நேரம் ஒதுக்க முடியவில்லை.

அதிருஷ்டவசமாக, நேற்று சவுக்கு வலைத்தளத்தில்,
அந்த கட்டுரை தமிழில் மிக அழகாக எழுத்தாளர்
தீபா ஜானகிராமன் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு, வெளியிடப்பட்டிருந்ததை பார்த்தேன்.
சவுக்கு தளத்திற்கும், தீபா ஜானகிராமன் அவர்களுக்கும் நன்றி
தெரிவித்துக் கொண்டு, நமது விமரிசனம் வாசக நண்பர்களுக்காக
இங்கே அதை மறுபதிவு செய்கிறேன்…

இந்த கருத்துகளை ஏற்றுக்கொள்ளாத, BJP ஆதரவாளர்கள் கூட,
இந்த கட்டுரையை 2-வது முறை ஆழமாகப் படித்தால்,
அவர்களுக்கு, புதிதாக பல உண்மைகள் புலப்படும் என்பது
என் எதிர்பார்ப்பு.
( நன்றி – https://www.savukkuonline.com/17516/ )

( இது கொஞ்சம் ஆழமான கட்டுரை. நிறுத்தி, கருத்துகளை
உள்வாங்கிக்கொண்டு, நிதானமாக மேலே தொடர வேண்டும்…)

————————————————————————————————————

பிஜேபியின் வெற்றியை ஒரு தலைமுறை தாங்கிக் கொள்ள வேண்டும்.
BY SAVUKKU · 02/07/2019

——————————-

ஆஷிஷ் நந்தி, இந்தியாவின் தலைச்சிறந்த
சிந்தனையாளர்களில் ஒருவர்.

உளவியல் படித்த அவர், அரசியலின் உளவியலை ஆராய்ந்து பல
நூல்களை எழுதியுள்ளார். 2019 தேர்தல் முடிவுகளின் மீதான அவர்
பார்வை முக்கியமானது. இந்தத் தேர்தல் முடிவுகள் அரசியல்
ரீதியாகவும், சமூக ரீதியாகவும், பல்வேறு ஆய்வுகளுக்கு
உட்படுத்தப்பட்டிருந்தாலும், உளவியல் ரீதியாக இதுவரை ஆய்வு
செய்யப்படவில்லை. சமூக / அரசியல் உளவியலாளரான
ஆஷிஷ் நந்தி, தி கேரவன் இதழுக்கு அளித்த பேட்டியின்
தமிழ் வடிவம்.

2019 மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை இடங்களைத்
தக்க வைத்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இது அவர்களுக்குக்
கிடைத்த தொடர் வெற்றி. 1984ஆம் ஆண்டு தேர்தலை
ஒப்பிடும்போது இது அந்தக் கட்சிக்குக் கிடைத்திருக்கிற மிகப்பெரிய
சாதனை வெற்றி. அந்தத் தேர்தலில் அவர்களுக்கு இரண்டு இடங்களே கிடைத்திருந்தன. அதற்கு அடுத்து வந்த வருடங்களில் ராமஜென்ம
பூமி விவகாரத்தைக் கையில் எடுத்த பாஜக மெதுவாக வளர்ந்து
தொடர்ந்து முப்பது ஆண்டுகள் தங்களுடைய இடத்தைத் தக்க வைத்துக் கொண்டன. 2014 தேர்தலில் 282 இடங்களைப் பெற்றிருந்தது.
2019 தேர்தலில் 303 இடங்கள் கிடைத்தன.

1925 செப்டம்பரில் தொடங்கப்பட்டது பாஜகவின் தாய் நிறுவனமான
ராஸ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம். இதனுடைய கொள்கை என்பது
இந்துத்துவம் அல்லது இந்து தேசியவாதமாக இருந்தது.
இந்தக் கொள்கை அதிவேகமாக வளருவதையே பாஜகவின்
முன்னேற்றம் காட்டுகிறது.

இந்திய விடுதலைக்குப் பிறகு பாரதிய ஜன சங்கமாக உருவெடுத்து
பிறகு பாரதிய ஜனதா கட்சியாக மாறிய பிறகு இதுவரை
‘இந்துத்துவா’ இந்தளவுக்கு வாக்குகளை பாஜகவிற்கு
பெற்றுத் தந்ததில்லை.

இந்தியர்களின் கூட்டு மனசாட்சி என்பது திட்டமிட்டு இந்துத்துவா
நோக்கி திருப்பப்பட்டு இருக்கிறது என்பதையே பாஜகவின் பரந்த
இந்த ஆதிக்கம் காட்டுகிறது. கூடவே அதன் கொள்கையும்,
ஒற்றை அதிகார அமைப்பும் வளர்ந்து நிற்கிறது.

சார்பற்ற பத்திரிகையாளரான அஜாஸ் அஸ்ரப் அரசியல்
உளவியலாளர் மற்றும் முன்னேறும் சமூக ஆய்வு அமைப்பின்
கௌரவ ஆலோசகருமான ஆஷிஸ் நந்தியுடன் தேர்தல்
முடிவுகளைத் தொடர்ந்து உரையாடினார்.

இந்துத்துவாவை நோக்கி இந்திய மனம் குவிக்கபப்ட்டதைக்
குறித்து ஆஷிஸ் நந்தி அலசுகிறார். “மக்கள் வன்முறை குறித்து
அச்சத்துடன் இருக்கிறார்கள், ஒற்றை அதிகாரம் என்பது
ஒழுங்கினைக் கொண்டு வரும் என்று மக்கள் நினைக்கின்றனர்”
என்கிறார் ஆஷிஸ் நந்தி.

ஒரு அரசியல் உளவியலாளரான நீங்கள் பாஜகவின்
2019 மக்களவைத் தேர்தலின் மாபெரும் வெற்றியை
எப்படி பார்க்கிறீர்கள்?

கடந்த ஐந்து வருடங்களில் அவர்களின் செயல்பாடுகளை வைத்துப்
பார்க்கும்போது இவ்வளவு பெரிய வெற்றியை நான்
எதிர்பார்க்கவில்லை.

அவர்களின் தேர்ந்த, புத்திசாலித்தனமான தேர்தல் பிரசார
வடிவமைப்பு மிகப்பெரிய பங்காற்றியிருக்கிறது. கடந்த ஐந்து
ஆண்டுகளிலுமே தேர்தல் வெற்றியை நோக்கியே
செயல்பட்டிருக்கிறார்கள். அதனால் தான் வேறு எதையும்
செய்வதற்கு அவர்களுக்கு நேரமில்லாமல் போனது. நரேந்திர
மோடி ஒரு பாதுகாவலர் என்றே பாஜகவின் பிரசாரத்தில்
முன்னிறுத்தப்பட்டது.

இந்தியா மாறிக்கொண்டிருக்கிறது என்பதன் ஒரு வெளிப்பாடாக
இந்த வெற்றியை நாம் பார்க்க வேண்டுமா?

இப்படிச் சொல்வதற்கு எனக்கு கூச்சமாகத் தான் இருக்கிறது.
பாஜகவின் பிரச்சார வியூகம் இந்துத்துவா கொள்கையைக் கொண்ட
விநாயக் தாமோதர் சவார்காரின் தேசிய அரசியல் கோட்பாட்டின்
அடிப்படையில் எடுத்தாளப்பட்டது.

வெகு காலமாகவே இந்தக் கோட்பாடு ஆர்எஸ்எஸ்ஸின்
சிந்தனையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.

சவார்கரின் தேசிய அரசியல் கோட்பாடு என்னவாக இருந்தது?

ஆண்மையுள்ள நாடு (Masculine State) என்பதே அவரது
சிந்தனையாக இருந்தது. தேசியவாதம் உட்பட அனைத்துமே
இந்த பராக்கிரமிக்க நாட்டுக்காக திசை திருப்பப்பட வேண்டும்.
அதிகாரக் குவிப்பு என்று இதனை நாம் சொல்கிறோம்.
அதாவது ஒரு நாடு உங்கள் மற்றும் என்னுடைய வாழ்க்கையில்
முக்கிய முடிவுகளை தீர்மானிக்கும் காரணியாக அமையும்.

பராக்கிரமமான நாட்டின் அறிகுறிகள் அல்லது நடவடிக்கைகள்
எப்படியானதாக இருக்கும்?

எதையும் எதிர்கொள்ளும் தன்மை, உறுதியான தீர்மானம்,
தேசிய அடையாளத்தின் மீது உறுதி கொண்டதாக இருக்கும்.
பாஜகவைப் பொறுத்தவரை இது போன்ற நடத்தைகளை
அவர்கள் கைவிட்டு விட்டார்கள். உதாரணத்துக்கு மோடி
குஜராத்தின் முதல் அமைச்சராக இருந்தபோது யாரையும்
தள்ளி வைக்க முடியாது என்று சொல்லியிருக்கலாம்.

2019 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஒன்று
வெளிப்படையாகத் தெரிகிறது. இந்தியர்கள் பராக்கிரமம்
வாய்ந்த நாடு (Masculine State) என்பதை நோக்கி
பெரும்பான்மையாக சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள்.

அவர்களுக்கு தேசப் பற்றுக்கும், தேசியவாதத்துக்கும்
வேறுபாடு தெரியவில்லை.

அவர்களுக்கு இந்து தேசியவாதத்துக்கும்,
தேசியவாதத்துக்குமான வேறுபாடும்
தெரியவில்லை.

தேசப்பற்று மற்றும் தேசியவாதம் இரண்டுக்குமான வேறுபாடு
குறித்து நீங்கள் அதிக அளவில் எழுதியள்ளீர்கள். இந்த
வேறுபாட்டினை விளக்க முடியுமா?

மனித இனம் தோன்றிய காலம் தொட்டே வாழ்விடம்
குறித்த உணர்வு அவனுக்கு இருந்து வந்திருக்கிறது. இதனை
தேசப்பற்று என்று சொல்லலாம். இது எல்லா உயிரினங்களுக்கும்
இயல்பாய் இருப்பது. நாய்களும், பூனைகளும் கூட
தனக்கென பிரதேச வரைமுறையைக் கொண்டிருக்கும்.
வேறுவகையில் சொல்லப்போனால் தேசப்பற்று என்பது
மனிதனுக்குள் இயல்பாய் இருப்பது.

ஆனால் இந்த தேசப்பற்று என்பது
அதிகார மையத்தை ஏற்படுத்துவதற்கு
போதுமானதாக இருக்காது.

இறையாண்மை தேசம் (Nation-State) உருவாவதற்கு இது
பயன்படுத்தப்படுமா?

ஐரோப்பாவில் முடியாட்சி சிதைந்ததும் தான் இறையாண்மை
தேசம் தோன்றியது. மன்னன் தனக்கென புனித அனுமதியைப்
பெற்றுக் கொண்ட போதும் கூட உயர்குடிமக்கள் இதனை
நம்பவில்லை. ஏனெனில் முடியாட்சி என்பதை வெவ்வேறு
வகைப்பட்ட சமூகத்தின் ஒற்றை அதிகாரமாகவே
உயர்குடிமக்கள் நம்பினார்கள். அரசன் என்று ஒருவர்
இல்லாமல் போனால் குடிமக்கள் நாட்டின் மீது விசுவாசமற்று
போவார்கள் என்றே உயர்குடி மக்கள் நம்பினார்கள்.

அதனால் தான் ஐரோப்பிய சமூகத்தினரின் மத்தியில்
வெவ்வேறு தரப்பட்ட சமூகங்களை மையமாக இணைக்கும்
தேசியவாதம் குறித்த பிரச்சாரம் தொடங்கப்பட்டது.

ஐரோப்பாவின் உயர்குடிமக்கள் ஒருபோதும் தேசியவாதிகளாக
இருந்ததில்லை. அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்
வெளியில் திருமண உறவை ஏற்படுத்திக் கொள்ள மாட்டார்கள்.

மற்ற தேசத்தின் அரசக் குடும்பத்தில் மட்டுமே திருமண
சம்பந்தம் ஏற்படுத்திக் கொள்வார்கள்.

அதனாலேயே அவர்கள் தேசியவாதம் குறித்து பேச
இயலாமல் இருந்தது. ஆனால் சாதாரண மக்களுக்கு தேசம்
என்பது புதியதொரு கடவுள் போல் ஆனது. அதனால் தேசம்,
தேசியம், இறையாண்மை தேசம் என இந்த மூன்றுமே
ஒன்றுக்கொன்று எப்போதும் இணைந்து கொண்டது. இந்தப்
பிரச்சாரம் தான் தற்போது இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது.

தேசியவாதம் என்கிற பிரச்சாரம் இந்தியாவில் இப்போது
பிரபலமடைந்ததற்கான காரணம் என்ன?

ஏனென்றால் அவர்கள் தேசியவாதம் (Nationalism) மற்றும்
தேசப்பற்று (Patriotism) என்பதற்கு இடையில் இருக்கும்
வேறுபாட்டினை மழுங்கடித்து விட்டார்கள்.

ஒவ்வொரு இந்தியனுமே பிறப்பால் தேசப்பற்று
கொண்டவனாகவே இருக்கிறான்.
தேசியவாதம் என்பது நாட்டின் மீதான விசுவாசம்
என்பதாக விதைக்கப்படுகிறது.
பெரும்பாலான மக்களுக்கு தேசப்பற்றுக்கும்,
தேசியவாதத்துக்கும் இடையிலான வித்தியாசம்
தெரிவதில்லை. இந்த இரண்டு வார்த்தைகளும்
இந்தியாவில் ஒன்று கலந்துவிட்டது.

இவை இரண்டுக்குமான வேறுபாட்டினை மறைப்பதற்காகவே
பாஜக தொடர்ந்து வெறுப்புணர்வு பேச்சுகளை பேசி வருகிறது.

பாஜகவின் நோக்கம் என்னவாக இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

அதாவது அவர்களுக்கு எதிரான எதுவொன்றையும்
‘தேச விரோதம்’ என்று முத்திரைக் குத்துவது தான்
நோக்கமாக இருக்க முடியும்.

தேசப்பற்றுக்கும், தேசியவாதத்துக்குமான வேறுபாட்டினை பாஜக
அழிக்கிறது என்பதற்கு மக்களும் ஏன் ஒத்துப் போகிறார்கள்…?

இந்தியர்கள் எப்போதுமே நாட்டின் சுதந்திரம், இந்தியா
என்கிற சிந்தனை, இறையாண்மை போன்றவற்றுக்கு
மதிப்பளிப்பார்கள். ஆனாலும் அவர்களின் சிந்தனை என்பது
வெவ்வேறு தன்மை கொண்டது. ஆனால் அவர்கள்
எல்லோருமே ஒரு சார்பு செய்திகளால் அடித்து
செல்லப்பட்டார்கள்.

அதாவது தேசியவாதமும், தேசப்பற்றும்
ஒன்று என்பதற்குள். அதனால் தான் அவர்களால்
இந்திய அரசியலுக்குள் என்ன மாதிரியான மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை உணர முடியவில்லை.
ஐம்பது வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா முழுவதுமாக
தொலைகாட்சிகளை நம்பியிருந்தது. இப்போது இந்தியாவில்
அந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்தியர்கள் தங்களின் நம்பிக்கையை தொலைக்காட்சி ஊடகத்தில் வைத்திருக்கிறார்கள். ஒரு ஆரோக்கியமான

விமர்சனப் பார்வையை இந்தியர்கள் வளர்த்துக் கொள்ளவில்லை,
அல்லது வளர்க்க விடாமல் செய்துவிட்டனர்.

பஞ்சாப், காஷ்மீர் போன்ற பகுதிகளில் பயங்கரவாத
இயக்கங்களுக்கு பாஜக பதிலடி தரும் என்று மக்கள் நம்புவதாக நினைக்கிறீர்களா?

பயங்கரவாதத்தை விட எல்லா விதமான வன்முறைகள் குறித்தும்
மக்கள் பதற்றமாக இருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.

ஆனால் வன்முறை பதற்றத்தை ஏற்படுத்துகிறதே..
ஆமாம். சரிதான். மத்தியில் அதிகார மையத்தைக் குவிப்பதால்
ஒழுங்கினை மீட்டுவிடலாம் என்று மக்கள் நினைக்கின்றனர்.
பிரிட்டிஷ் அரசின் கீழ் வாழ்ந்த முதல் தலைமுறை இந்தியர்கள்
இப்படித் தான் நினைத்தார்கள். எழுத்தாளர் பங்கிம் சந்திர
சட்டோபாத்யாய் வங்காளத்தில் டெபுடி மாஜிஸ்ட்ரேட்டாக
இருந்தபோது முகலாய சாம்ராஜயத்தின் கடைசிக் காலகட்டத்து
குழப்பத்தில் இருந்து பிரிட்டிஷ் அரசு மட்டுமே நாட்டை
விடுவிக்கும் என்று நம்பினார். அப்போது மராத்தியர்கள்
பலம் கொண்டிருந்தனர். அவர்களிடம் வன்முறைக்
கலாசாரம் இருந்தது.

1857ஆம் ஆண்டு சிப்பாய்க் கலகத்தில் பிரிட்டிஷ் அரசு
சிப்பாய்களை வெற்றிபெற வேண்டும் என்று வங்காளிகள்
கல்கத்தாக் கோயில்களில் சிறப்பு பூஜைகளை செய்தனர்.

உருவாக்கப்பட்ட வன்முறைகள் மற்றும் பாதுகாப்பின்மை
காரணமாக 2019 தேர்தல் முடிவுகள் அமைந்தது என்று
எடுத்துக் கொள்ளலாமா?

சவார்கர் தனது உலகப்பார்வையை ஆர்எஸ்எஸின்
மூலமாக பரப்பியதன் விளைவே 2019 தேர்தல் முடிவு.
அவர் எப்போதுமே ஐரோப்பிய பாணியான
இறையாண்மையை விரும்பினார் (அது ஒற்றை மொழி
சமூகமாக இருந்திருக்கிறது). அதனை மதச் சார்புள்ள
இந்திய சமூகத்தில் புகுத்த எண்ணினார்.

இந்துத்துவா என்பது இந்து மதத்தைக் குறிப்பது அல்ல
என்பதை அவர் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்.

ஆனால் இந்த வேறுபாடு தேர்தல் வெற்றிக்காக
மறைக்கப்பட்டுவிட்டது.

சவார்கார் ஒரு நாத்திகவாதி……………!
தன்னுடைய மனைவிக்கு இந்து
முறையிலான இறுதிச்சடங்கினை
செய்வதற்கு மறுத்தவர்….!!!!!!!!!!
அவருடைய தகனத்திலும் எந்தவித இந்து மத சடங்கும்
பின்பற்றப்படவில்லை……!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

முன்னேறும் சமூகத்தின் ஆய்வு மையம் சில ஆண்டுகளுக்கு
முன்பு கணக்கெடுப்பு ஒன்றினை நடத்தியது. அதன் முடிவுகள்
தான் எனக்கு ஆபத்தினை முதன்முதலாக உணர்த்தியது.
அது என்ன சொன்னது என்றால், எல்லா மாநிலங்களிலும்
இந்து மதம் என்பது இந்துத்துவாவுடன் தொடர்பு
கொண்டிருக்கவில்லை என்றது. ஆனால் இதில் குஜராத்
மட்டுமே விதிவிலக்காக இருந்தது.

பொருளாதரா நிபுணர் பிரணாப் பர்தன் ஒருமுறை மிக
அழகாகக் குறிப்பிட்டார் –மோடியின் முதல் ஐந்தாண்டு கால
ஆட்சியின் போது குஜராத் முன்னேற்ற மாதிரி என்பது
குஜராத்துக்கு வெளியே பரவவில்லை. விரைவில்
பரவக்கூடும் என்கிற அறிகுறியும் இல்லை.

ஆனால் குஜராத்தில்
ஏற்படுத்தப்பட்ட
வெறுப்புணர்வு
கடந்த ஐந்தாண்டுகளில்
இந்தியா முழுக்கவுமே
பரவிவிட்டது.

குஜராத் அனுபவத்தைக் கொண்டு இந்தியாவை நாம் புரிந்து
கொள்ள இயலுமா?

நான் முதன்முறையாக குஜராத்துக்கு 1961ஆம் வருடம்
உளவியல் பகுப்பாய்வு பயிற்சிக்காக சென்றிருந்தேன்.
அப்போது நான் பார்த்தது, அங்குள்ள பெரும்பாலான
குஜராத்திகள் இஸ்லாமியர்களை தனியான ஒரு சமூகமாக
நினைக்கவில்லை…………..!!!

உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில்
இருந்து ஜவுளி மில்களில் வேலைப்
பார்க்க வந்தவர்கள் என்று மட்டுமே
இஸ்லாமியர்கள் குறித்து குஜராத்திகள்
நினைத்தனர்.

முஸ்லிம் என்று நான் குறிப்பிடும்போது கூட அவர்கள் “இல்லை..இல்லை..அவர் ஒரு மேமோன்’ என்றோ
‘அவர் போரா’’ என்றோ தான் குறிப்பிட்டார்கள்.

குஜராத்தில் இஸ்லாமியர்கள் அவர்களின் பிரிவை வைத்தே
அடையாளப்படுத்தப்பட்டார்களே தவிர மதத்தை வைத்து அல்ல.
ஆனால் இப்போது அங்குள்ள முஸ்லிம்கள் ஒரே சமூகமாகப்
பார்க்கப்படுகிறார்கள்.

நான் பல ஆண்டு காலமாக இந்துத்துவாவை
சாதி பார்த்துக் கொள்ளும் என்று நினைத்திருந்தேன்.
ஆனால் அப்படி நிகழவில்லை.

ஆக, இந்தியர்களின் உளவியளிலேயே அடிப்படை
மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என்கிறீர்களா?

ஆமாம். மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன ஆனால் அவற்றை
நான் அடிப்படையிலேயே என்று சொல்ல மாட்டேன்.

ஒன்று..அவர்களுக்கு தேசியவாதத்துகும்,
தேசப்பற்றுக்குமான வித்தியாசம் மறைக்கப்பட்டிருக்கிறது.

இரண்டாவது தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள
பலமான நம்பிக்கை. அதாவது அதிகார மையப்படுத்தப்பட்ட
அரசு மட்டுமே சமூகச் சூழலில் வன்முறை போன்ற
நிகழ்வுகள் ஏற்படும்போது சமன் செய்ய முடியும்
என்பது.

இதற்கு உதாரணமாக வளர்ச்சித் திட்டம்
என்ற பெயரில் மக்களை வாழ்விடத்திலிருந்து வெளியேறச்
செய்வதை சொல்ல முடியும். நமக்கு இப்போது இத்தனை பெரிய அணைக்கட்டுக்கள் தேவை தானா?

கீழ்மட்டத்தில் இருந்து வருகிற அழுத்தத்திலிருந்து
தற்காத்துக் கொள்ளத் தான் உயர்மட்ட வகுப்பினர்
பலம் வாய்ந்த நாடு என்பதை விரும்புகிறார்களா?

வர்த்தகத்தில் முன்னேறிய உயர்மட்டக் குழுவினர் தங்களின்
வர்த்தகத்துக்காக பலம் வாய்ந்த ஒரு நாட்டைத் தான்
விரும்புவார்கள்.

இதே சிந்தனையைத் தான் மத்தியதர மக்களும்
பின்பற்றுவார்கள். இது போன்ற சிந்தனையிலிருந்து தான்
ஆபத்து உருவாகிறது. The Illegitimacy of
Nationalism: Rabindranath Tagore and the Politics of Self
என்கிற எனது புத்தகம் மூன்றாவது முறை சீனாவில்
மொழிபெயர்க்கப்பட்டு விற்பனையில் உள்ளது.

இந்த முறை மொழிபெயர்ப்பினை நேரடியாக சீன அரசே
உதவித்தொகை கொடுத்து மேற்கொண்டது. இதற்கு என்ன
காரணம் என்று நான் நினைக்கிறேன் என்றால், சீனாவில்
தேசியவாதத்தை வளர்த்தெடுத்த உயர்மட்ட பிரிவினரே
இப்போது அதைக் கண்டு அஞ்சுகின்றனர். தேசியவாதம்
என்பது வெகு நாளைக்கு அவர்களின் உடைமையாக இருக்காது
என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள்.

ஏனெனில் அவர்கள் எதை வளர்த்தார்களோ அதுவே
அவர்களை முடக்கும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டது.

சீனப் பொதுமக்களே கூட தென் சீனக் கடல் பகுதியை
இராணுவம் தன் வசம் கொண்டு வர வேண்டும் என்று
விரும்புகின்றனர்.

1930களில் ஐரோப்பாவில் தேசியவாதம் பரவலாக்கப்பட்டது.
கொத்து கொத்தாக கொலைகள் நடப்பதற்கு முன்பாக
அங்கே கல்வி மற்றும் நீதித்துறை திட்டமிட்டு செயலிழக்கப்பட்டன. புத்தகங்களை எரிக்கும் அவலம் கூட நடந்தது.

தற்போதைய இந்திய நிலைமை உங்களுக்கு அச்சமூட்டுகிறதா?

ஆமாம். நிச்சயமாக.
தாக்கிக் கொலை செய்வது என்பதற்கு
இந்தியா உலகத் தலைநகரமாக விளங்குகிறது.
1950கள் வரை அமெரிக்கா இருந்த
நிலை இது.

இதற்கு அரசாங்கமும் உடந்தையாக இருப்பதாக நினைக்கிறீர்களா?
அது உங்களை அச்ச்சமூட்டுகிறதா?

ஆமாம். பாகிஸ்தானில் இருப்பது போல.

நாம் பாகிஸ்தான் வழியில் செல்கிறோமா?

நான் நினைத்ததை விடவும் நாம் பாகிஸ்தானை வெகு விரைவாக
பின்பற்றத் தொடங்கிவிட்டோம். நமது இராணுவம் அவர்களின்
இராணுவம் போல அரசின் மொழியைப் பேசுகிறது.

அதே போல் கீழ் நீதிமன்றங்களிலும் கூட இதையே
பின்பற்றுகிறார்களோ என்கிற சந்தேகம் எனக்கு ஏற்படுகிறது.

ஏனென்றால், இந்தியாவில் அவர்கள் (பாஜக – ஆர்எஸ்எஸ்)
தங்களின் சொந்த மக்களையே நிறுவனமயப்படுத்துகிறார்கள்.
நீங்கள் ஒருவருக்கு அரசு வேலைக் கொடுக்கிறீர்கள் என்றால்
அவர் அதோடு சிக்கிக் கொள்கிறார்.

அடுத்தத் தேர்தலிலோ 2029 தேர்தலில் பாஜக தோற்றால்
கூட இவர்கள் அரசு ஊழியராகத் தான் இருப்பார்கள்.

மோடி அரசு செய்ததற்கெல்லாம் ஒரு தலைமுறை இந்தியா
அதற்கான விளைவை சுமந்தேயாக வேண்டும்.

அனைத்து இன்னல்களும் கூடிய ஐரோப்பிய இறையாண்மை
தேசமாக நாம் மேலும் மேலும் உருவாகிக் கொண்டிருக்கிறோம்.
நம்முடைய சமூகம் வேற்றுமை பல கொண்டது.

இது தான் அவர்களை (ஆர்எஸ்எஸ் – பாஜக) பயமுறுத்துகிறது.

சங்கங்களின் இந்த வேற்றுமை குறித்த பயம் நமக்கு
சொல்ல வருவது என்ன?

அவர்கள் இந்துவாகவும் இல்லை,
இந்தியர்களாகவும் இல்லை
என்பதையே இந்த பயம் நமக்கு உணர்த்துகிறது.

இறையாண்மை, வடிவம் என அனைத்தையும் அவர்கள்
ஐரோப்பாவில் இருந்தே எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதைத் தான்
துல்லியமாக
சவார்கார் விரும்பினார்.

பாஜகவின் 2019 வெற்றிக்குக் காரணம் மோடி என்று
சொல்லப்படுகிறது. அவருடைய ஆளுமை மற்றும் குணநலன்கள்
மக்களை ஈர்த்திருக்கின்றன என்று நினைக்கிறீர்களா?
அவரின் ஆவேசம் இந்திய மக்களின் உளவியளில்
மாற்றம் ஏற்படுத்தியிருக்கிறதா?

ஆமாம். அவர் ஏழ்மையான குடும்பத்தில்
இருந்து வந்து இன்று நல்ல
நிலையில் உள்ளார். அதனால் அவர்
செய்கிற தவறுகளை நாம்
பொறுத்துக் கொண்டோம் என்றால்
தொடர்ந்து அதனால் பயனலடையலாம் என்று
மக்கள் நினைக்கின்றனர்.

இந்தக் கருத்தை ஊடகங்களும் சிறப்பாகத் தொடர்ந்து
கட்டமைக்கின்றன. ஜனாதிபதிக்கான போட்டி என்பது
போலவே இந்தத் தேர்தல் அமைந்தது.

அன்பிற்கான மொழி என்பது எடுபடவில்லை இல்லையா?

நம்மிடம் அன்பைப் பற்றிப் பேசுவதற்கான சரியான
ஆளுமை இல்லை என்பதை மறந்து விடாதீர்கள். ஜெயப்ரகாஷ்
நாராயண் முயற்சி செய்தார்.

அவரால் வெற்றி பெற முடிந்தது. அன்பைப் பற்றிப் பேசி
மக்களை ஆறுதல்படுத்துபவர்கள் தங்களுடைய
வாழ்க்கையில் தியாகம் செய்திருக்க வேண்டும்.

மோடியைப் பற்றிய ஊடகங்களின் கோணம்
என்னவாக இருந்தது?

இந்தியா மட்டுமல்ல, உலகின் மற்ற நாடுகளிலும்
தலைவர்களை முன்னெடுத்துக் காட்டுவதில் ஊடகங்களின்
பங்கு உண்டு. அதனால் தான் ஒரே சமயத்தில் ஒரே
வகைப்பட்ட தலைவர்களை நம்மால் பார்க்க முடிகிறது.
இந்தியாவில் மோடி, துருக்கியில் ரிசெப் தய்யிப் எர்டோகன் ,
பிலிப்பைன்சில் ரோட்ரிகோ ட்யூட்டர்டே, அமெரிக்காவில்
டொனால்ட் ட்ரம்ப் போன்றவர்களைச் சொல்லலாம்.

மக்களின் மனத்தைக் கவர அவர்கள் ஊடகங்களைப்
பயன்படுத்தினார்கள் என்கிறீர்களா?

ஆமாம். இந்திய சிந்தனை குறித்த ஒரு புத்தகத்தை
தற்போது மெய்ப்புத் திருத்தம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் மொழிமற்றம்
செய்தால் கூட அவை குறைவான பிரதிகளே விற்பனையாகும்.

மக்களின் மனதில் இந்தியாவின் சிந்தனை
சென்று அடைவதற்கு மிக நீண்ட நாட்களாகும்.
ஏனெனில் மாறுபட்ட பாடப்புத்தகத்தில் இருந்து
மக்கள் தங்களுக்கான சிந்தனையைப்
பெற்றிருக்கிறார்கள்.

இந்தியாவின் சிந்தனை மாறிக் கொண்டிருக்கிறதா?

மத்தியத் தர வர்க்கத்தினர் இறையாண்மை குறித்து புரிந்து
வைத்திருக்கிற சிந்தனையை மாற்றிக் கொள்ள
வேண்டியிருக்கிறது.
அப்போது தான் இந்தியாவின் சிந்தனை மாறும்.

அரசியல், மக்களாட்சி, நிலையான வளர்ச்சி என்பது
பலம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று
நினைப்பதெல்லாம் மத்திய தர வர்க்கம் தான். வளர்ச்சி
என்பது நிரந்தரமானதாக மட்டுமல்ல நேரடியாக இருக்க
வேண்டும் என்பதும் மக்களின் சிந்தனையாக இருக்கிறது.
இன்றைய உலகில் இதனை சாத்தியப்படுத்துவது என்பது
நடக்காதது. இந்த பிரபஞ்சத்தினை அழிக்கும்
இடத்திற்கு நாம் இறுதியில் வந்து நிற்கிறோம்.

தேசிய அடையாளம் பற்றிய உங்களது கருத்து என்ன?

ஒரு இந்தியன் இங்கே அவன்/அவளது சாதி மதம்,
மாநிலம், மொழி குறித்த அடைல்யாளங்களோடே
பார்க்கப்படுகிறார்.

இன்று ஒருவர் இந்துவாக இருப்பது தான்
இந்திய அடையாளத்தின் மையமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து?

நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் இந்த விழிப்புணர்வு
எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. ஆனால் அது
அடியோட்டமாய் இருந்தது. அது ஒரு ஆழ்நிலை
எண்ணமாக இருந்தது. பெரும்பான்மையினர் தங்களை
பெரும்பான்மையினர் என்றே நினைத்திருந்தார்கள்.

தற்போது பெரும்பான்மையினர்
சுற்றி வளைக்கப்பட்ட சிறுபான்மையினராக
தங்களை நினைத்துக் கொள்கின்றனர்.

என்னுடைய நண்பரும் அரசியல் விஞ்ஞானியுமாகிய
டி.எல் சேத் ஒருமுறை ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களால்
பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்தார். இந்திய அரசியல்
சிந்தனாவாதிகளில், சேத் அருமையானவர்களில் ஒருவர்.

அவர் அவர்களிடம், “ நீங்கள் முதலில் பெரும்பான்மையினர்
போல பேசக் கற்றுக் கொள்ளுங்கள்..பிறகு உங்களிடம் வந்து
பேசுகிறேன்” என்றார்.

பெரும்பான்மையினர் முற்றுகையிடப் பட்டிருப்பதாக –
அவர்கள் மனதில் விதைக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை
சமூகத்தினர் இதற்கு முன்பு தன்னம்பிக்கையுடன் இருந்தனர்.

இது நடுத்தர வர்க்கத்தினரிடையே நன்றாக வேலை செய்கிறது.

அவர்களின் எண்ணிக்கையும் பலமும் அதிகரித்திருக்கிறது.
ஆனால் அவர்களின் தன்னம்பிக்கை அழிக்கப்பட்டுவிட்டது.
எந்த சமூகமென்றாலும் நடுத்தர வர்க்கத்தினர் தான் சிந்திக்கவும்,
அதனை எடை போடவும் செய்வார்கள். அவர்கள் தான்
எந்தச் சிந்தனை தவறு என்று முடிவெடுப்பார்கள்.
இதில் பல்கலைக்கழகங்களும், பள்ளிகளும் முக்கிய
பங்காற்றுகின்றன.

ஆனால் தற்போது நடுத்தர வர்க்கத்தினர்
கலவையான சிந்தனைகளைப் பெற்றிருக்கிறார்கள்.
அவை யாவும் ஊடகங்களிடமிருந்து பெறப்பட்டவையே.

ஒருவேளை மத்திய வர்க்கத்தினர் தங்களின் வாழ்க்கை
சிக்கலாகிக் கொண்டிருக்கிறது என்கிற எண்ணத்தைக்
கொண்டிருக்கிறார்களா?

ஆமாம். நீங்கள் சரியாகச் சொல்கிறீர்கள். என்ன நடந்து
கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி மத்திய வர்க்கத்தினருக்கு
ஒன்றும் தெரியவில்லை. உதாரணத்துக்கு பஞ்சாப்பினை
எடுத்துக் கொள்ளுங்கள்.

பஞ்சாப் இந்தியாவின் போதைப் பொருள் தலைநகரமாக
மாறியது தற்செயல் அல்ல. பஞ்சாப்பைப் பற்றி வெளிமாநிலங்களில் உள்ளவர்கள் அங்கு இன்றும் பசுமைப் புரட்சி நடைமுறையில்
உள்ளது என்றே நினைப்பார்கள். ஆனால் அங்கே உள்ள
விவசாயிகள் தங்களின் நிலத்தை அதிக விலைக்கு விற்று
வருகிறார்கள். தங்களின் பிள்ளைகளை ஆஸ்திரேலியாவுக்கு
அனுப்புகிறார்கள். அங்கு செல்லும் அவர்களின் பிள்ளைகள் விருந்தோம்பலுக்கான பட்டப்படிப்பையும், சர்வதேச உணவு
பதார்த்தங்கள் குறித்தும் படிக்கின்றனர்.

எதனால் அவர்களுக்குள் இந்த மாற்றம் ஏற்பட்டது?

விவசாயிகள் இந்த நவீனமயமாக்கபப்ட்ட வாழ்க்கையில்
தாங்கள் தொலைந்து போவதாக உணர்கிறார்கள்.
விவசாயத்தை நம்பியிருப்பவர்கள் தோல்வியடைவார்கள்
என்கிற எழுதப்படாத விதியை நம்புகிறார்கள். இந்தியா
நவீனமயமாக்கபட்டாலும் அதன் ஒழுங்கில்
எந்தத் தடையும் ஏற்படாது என்றே முன்பு நம்பப்பட்டது.

1995ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் மூன்று இலட்சம்
விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஜப்பானைத்
தவிர (வளம் பெற்ற நாடுகளில் அதிக அளவு தற்கொலை
எண்ணிக்கைக் கொண்ட நாடு) வேறெந்த நாகரிக நாடும்
இதனை சகித்துக் கொள்ளாது. எல்லா இடத்திலும்
ஒவ்வாமை ஏற்பட்டு வருகிறது.

போபாலில் சத்வி பிரக்யா சிங்கினை பாஜக வேட்பாளராக
நிறுத்தியதைப் பற்றி எப்படி பார்க்கிறீர்கள்?

தான் எது பற்றி வேண்டுமானாலும் அச்சமின்றி பேசலாம் ,
தனது கொள்கைகளைக் கொண்டு மக்களை சரிபடுத்தலாம்
என்கிற பாஜகவின் நம்பிக்கையின் அடையாளம் தான் இது.
அவர் சரியானவர் தான் என்று வாக்களர்களை நம்பச் செய்திருக்கிறது.

பாஜகவின் ஒரே பயம், நீதித்துறை அவரைக் குற்றவாளி
என்று தீர்ப்பளித்து விடக்கூடாது என்பதாக மட்டும் தான் இருக்கிறது.

காங்கிரஸ் தலைவர் திக் விஜய்சிங் அவரை எதிர்த்து
தோல்வியடைந்த பிறகு , ‘மோகன்தாஸ் காந்தியைக் கொன்ற
கொள்கை இந்தியாவை வெற்றி கொண்டுள்ளது’ என்றார்.

காந்தியும், ஜவஹர்லால் நேருவும்
அடுத்தடுத்து தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள் என்று நினைக்கிறீர்களா?

காந்தியை தோற்கடிக்க முடியாது என்றே நான் நம்ப விரும்புகிறேன்.
எனக்கு நேருவைப் பற்றி நிச்சயமாக சொல்ல இயலவில்லை.
நேரு காந்தியின் சிந்தனையை தவிர்த்தார் (உதாரணத்துக்கு,
கிராமப் பொருளாதார தன்னிறைவு). அவர் காந்தியின் சிந்தனையை
‘தோல்வியுற்ற நாகரீகத்தின் கற்பனைவாதம்’ என்றார்.
நேருவின் வளர்ச்சிக்கான சிந்தனை என்பது இன்றைய
தலைமுறையினரால் பகிரப்படுகிறது. அவருடைய பொருளாதாரத்
திட்டம், சமன்பாடுக்கான அம்சம் தவிர்த்த அனைத்துமே பாஜகவின் சிந்தனையிலிருந்து வேறுபட்டது அல்ல.

ஆனால் நேரு ஆர்எஸ்எஸ் போல் அல்லாமல்
இந்தியக் கலாசாரத்தின் வேறுபாட்டினை ஏற்றுக்கொண்டாரே?

எந்த அளவு வரை அவர் இந்த வேறுபாட்டினை ஏற்றுக்கொண்டார்
என்று நினைக்கிறீர்கள். அவர் இந்த வேறுபாட்டினை ஒரு
அணிகலனாக மட்டுமே பார்த்தார். காந்தி வேறுமாதிரியானவர்.
காந்தியைக் கொல்ல இயலாது. அவர் கொல்லப்பட்டதாலேயே இன்றும் வாழ்கிறார். இது அவருக்கேத் தெரியும்.

1948 ஜனவரி 20 அன்று மதன்லால் பஹ்வா (காந்தி
கொலையில் ஈடுபட்ட சதிகாரர்களில் ஒருவர்) அவரை நோக்கி
வெடிகுண்டினை வீசியபோது கூட காந்தி கூடுதல் பாதுகாப்பினை
மறுத்துவிட்டார்.

காந்தி ஒதுக்கப்பட்டாலும் கூட மறைந்திருக்கும்
உந்துசக்தியாகவே நமக்கு எப்போதும் இருப்பார்.
அதே சமயம் காந்தியவாதத்தை பின்பற்றுபவர்கள்
முன்னிலும் தீவிரமாய் அதைப் பின்பற்றுகிறார்கள்.

ஆர்எஸ்எஸ் தான் அறியாமலேயே காந்திய விழுமியங்களை
முன்னிறுத்துகிறது. பஹ்வாவும் கூட தனது கடைசி
காலகட்டத்தில் காந்தியை பிரதிபலிக்கும் மனித விழுமியங்களுக்கு
ஆதரவாய் இருந்தார்.

(சுருக்கப்பட்ட நேர்காணல் வடிவம் இது)

.
———————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

22 Responses to இன்றைய, அச்சம் தரும் சூழ்நிலை ஏன், எப்படி – உருவானது ……???

 1. Prabhu Ram சொல்கிறார்:

  மிக ஆழமாக ஆராய்ந்திருக்கிறார்.
  அவர் சொல்வது தத்துவார்த்தமான உண்மைகள்.
  எந்தவித முன் கூட்டிய தீர்மானமும் இல்லாமல் இதை
  வாசிப்பவர்கள் இந்த சிந்தனைகளை நிச்சயம் ஏற்பார்கள்.

 2. புதியவன் சொல்கிறார்:

  //பெரும்பான்மையினர் முற்றுகையிடப் பட்டிருப்பதாக – அவர்கள் மனதில் விதைக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை சமூகத்தினர் இதற்கு முன்பு தன்னம்பிக்கையுடன் இருந்தனர்.//

  இரண்டு முறை படித்தும் எனக்கு கன்வின்சிங் ஆக இல்லை. ஆஷிஷ் நந்தி, முழுப் பார்வையுடன் இதனை அணுகவில்லை என்று தோன்றுகிறது.

  இன்றைக்கு செய்தித்தளங்கள், பத்திரிகைகள் எல்லாவற்றிலும் அனேகமாக ஒரு சார்புச் செய்திகள்தாம் வருகின்றன. சிறுபான்மையினரை ஆதரிப்பது, பெரும்பான்மையினரை எள்ளி நகையாடுவது-அதற்காகவே பாஜகவை தரக்குறைவாக சித்தரிப்பது என்று தொடர்வதால், ‘பெரும்பான்மையினர் சிறுபான்மையினரால் முற்றுகையிடப்பட்டிருப்பதாக நினைக்கின்றனர். இந்த மாதிரி எண்ணத்துக்குக் காரணம் காங்கிரஸ், திமுக போன்ற அரசியல் கட்சிகள் மற்றும் சிறுபான்மையினரால் வெளிநாட்டுப் பணத்தாலோ இல்லை ஊழல் செய்த பணத்தாலோ வாங்கப்பட்டுள்ள பத்திரிகைகள், தொலைக்காட்சி சேனல்கள். நான் சொல்வது எக்ஸ்டிரீம் என்பதுபோலத் தெரியும்…ஆனால் நான் சொல்வது உண்மை என்று நான் நம்புகிறேன்.

  நம் தமிழ் தொலைக்காட்சிகளின் விவாதங்கள், அப்புறம் பாப்புலராகப் படிக்கப்படும் செய்தித்தளங்களிலிருந்து, செய்திகளின் தலைப்பு எப்படி வைக்கிறார்கள் என்பதைப் பொறுத்தும், என்ன சப்ஜெக்டை விவாதம் செய்கிறார்கள் என்பதைப் பொறுத்தும் இதை உணரலாம்.

  அதனால் நடக்கும் நிகழ்வுகளுக்கு முழுமையான காரணம் பாஜகவைத் தவிர்த்த பெரிய அரசியல் கட்சிகள், ஊடகங்கள்தாம். அந்த எண்ணத்தை பாஜக அறுவடை செய்கிறது என்று சொல்வது பொருந்தும்.

  • Tamilian சொல்கிறார்:

   In politics winning matters. Opposition and BJP adopt tactics to win. Ashish Nandi is not a clairvoyant. He belongs to the group of leftist intellectuals. His views can only be like that to create a panic in readers minds . We should discount it appropriately in view of his being from a minority. He draws his arguments from history . Common man voted on his perception as to who would be a better bet. Look at TN voting pattern too.

   • Tamilian சொல்கிறார்:

    Ashish Nandi draws his arguments from history To suit his convenience. I am not a BJP supporter to be specific. My surprise is about voters of TN who elected people tainted in known corruption scandals in the present election.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     Tamilian

     // Common man voted on his perception
     as to who would be a better bet. //

     இது உங்கள் முதல் ஸ்டேட்மெண்ட்…

     //My surprise is about voters of TN
     who elected people tainted in known
     corruption scandals in the present election.//

     இது உங்கள் 2-வது ஸ்டேட்மெண்ட்…


     இரண்டும் contradictory யாக இல்லை…?

     .
     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


    Tamilian

    // We should discount it appropriately
    in view of his being from a minority.//

    எந்த அர்த்தத்தில் இதைச் சொல்கிறீர்கள்.
    மைனாரிடி-யாக இருந்தால்,
    அவர்களின் கருத்து –
    ஒதுக்கப்பட வேண்டும் என்பது
    உங்கள் வாதமா…?

    மெஜாரிடி வாதம் தான் எப்போதும்
    சரியானதா…? நியாயமானதா …?

    கொஞ்சம் யோசித்து விட்டு,
    பிறகு சொல்லுங்கள்.

    .
    -காவிரிமைந்தன்

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    Tamilian,

    // Common man voted on his perception
    as to who would be a better bet. //

    அந்த perception ஒரு மாயை.
    அதை இவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்
    என்பது தானே ஆஷிஷ் நந்தியின் வாதம்.

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

 3. Prabhu Ram சொல்கிறார்:

  புதியவன் – நீங்கள் இதை குறுகிய நோக்குடன் தமிழகத்தை மட்டும்
  கருத்தில் வைத்துக் கொண்டு எழுதுகிறீர்கள்.
  இந்த பேட்டி கட்டுரை அகில இந்திய அளவிலானது. அகில இந்திய
  அளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அடிப்படையாக வைத்து தான்
  அத்தனை கருத்துகளும் சொல்லப்பட்டிருக்கின்றன.

  தமிழகத்தில் பாஜக தோற்று, திமுக கூட்டணி வென்று விட்டதே
  எங்கிற விரக்தியில், அடிப்படை உண்மையை நோக்கத்தவறி
  விட்டீர்கள் . அகில இந்திய அடிப்படையில், ஊடகங்கள் யாரை சப்போர்ட்
  செய்கின்றன ? அத்தனை ஊடகங்களும், வாலண்டியராகவோ,
  மிரட்டப்பட்டோ, விலைக்கு வாங்கப்பட்டோ பாஜகவுக்கு சாதகமாக த்தான்
  பேசுகின்றன; எழுதுகின்றன என்கிற உண்மையை மறந்துவிட வேண்டாம்.

  • புதியவன் சொல்கிறார்:

   பிரபு ராம் – தமிழகமும் இந்தியாவில் ஒரு பகுதிதானே. கேரளத்தில், வங்கத்தில் எப்படி கட்சிகள் வெற்றி பெற்றன என்று கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். எதற்காக ராகுல் காந்தி வயநாட்டை தேர்ந்தெடுத்தார் என்றும் யோசியுங்கள்…

   ஏன் தமிழகத்தில் ஊழல், கொள்ளைகளில் ஈடுபட்டிருந்தபோதும், திமுக+காங்கிரஸ் வெற்றி பெற்றது என்று யோசியுங்கள் தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் யாவும் விலைக்கு வாங்கப்பட்டோ, மிரட்டப்பட்டோ அல்லது மத அடிப்படையிலோதான் திமுக+காங்கிரசுக்கு சாதகமாக பேசுகின்றன, எழுதுகின்றன என்ற உண்மை உங்களுக்குத் தெரியவில்லையா?

   அதே காரணங்களால் பாஜக மற்ற சில மாநிலங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.

   இதில் பாஜகவை குறைகூறி என்ன பயன்? இதில் குறுகிய நோக்கு எங்கிருந்து வந்தது? நான் ஏற்கனவே பல முறை எழுதியதுபோல, காங்கிரஸ் அல்லது பாஜக மற்றும் திமுக, தமிழகத்துக்கு எப்போதுமே நன்மைகள் செய்யாது. திமுக + காங்கிரஸ், பணம் சுருட்ட மட்டும்தான் பார்க்கும். சந்தேகம் இருந்தால் அவர்கள் ‘அமைச்சர், எம்.பி அல்லது எம்.எல்.ஏ’ ஆவதற்குமுன்பு அவர்களது நிலை என்னவாக இருந்தது, பிறகு என்னவாக மாறிற்று என்று பாருங்கள்.

   • Prabhu Ram சொல்கிறார்:

    // அதே காரணங்களால் பாஜக மற்ற சில மாநிலங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.

    இதில் பாஜகவை குறைகூறி என்ன பயன்? //

    அதே தவறை பாஜகவும் செய்யும்போது நீங்கள் ஏன் பாஜகவை
    மட்டும் கொண்டாடுகிறீர்கள் ? மற்ற கட்சிகளுக்கு எள்ளளவும்
    குறையாத மோசடி மஸ்தான் வேலைகளைத்தானே பாஜகவும்
    செய்கிறது ? அப்புறம் மற்ற கட்சிகளை குறை கூறி விட்டு,
    பாஜகவை ஏன் தூக்கி பிடிக்கிறீர்கள் ?
    பெரும்பான்மை மக்களை அச்சத்தில் ஆழ்த்தி, அவர்களை காக்க
    வந்த தேவன் இவரே என்று பாஜக பிரச்சாரம் செய்யவில்லையா?

  • புதியவன் சொல்கிறார்:

   //மற்ற கட்சிகளுக்கு எள்ளளவும் குறையாத மோசடி மஸ்தான் வேலைகளைத்தானே பாஜகவும் செய்கிறது ? // – நான் தூக்கிப்பிடிக்கவில்லை. ஏனென்றால் நான் அவர்களுக்கு வாக்களிக்கவில்லை. ஆனால் பெரும்பான்மை மக்கள்-இந்துக்கள் இந்த உணர்வைப் பெற்றுள்ளதால், அவர்கள் பாஜகதான் தங்களைக் காக்கவந்த தேவன் என்று நம்புகின்றனர். When I say majority, what I mean is, 8-10 percent of votes got by BJP may be due to this factor. That is why they got thumping majority. இது இன்னும் அதிகம்தான் ஆகும், மற்ற கட்சிகள் `சிறுபான்மையினரை appease செய்கிறோம்` என்ற நிலை எடுத்தால்.

   தேவர் மகன் படத்தில் சொல்வதுபோல, `ஆனால் அதற்கான விதை காங்கிரஸ், திருனாமுல், திமுக போன்ற கட்சிகள் கொண்ட மனநிலை, எடுத்த நிலைப்பாடு`.

   இதற்கிணையாக இன்னொரு உதாரணம் கொடுக்கமுடியும். அது பிறிதொரு சந்தர்ப்பத்தில்

   • Prabhu Ram சொல்கிறார்:

    // ஆனால் பெரும்பான்மை மக்கள்-இந்துக்கள் இந்த உணர்வைப் பெற்றுள்ளதால், அவர்கள் பாஜகதான் தங்களைக் காக்கவந்த தேவன் என்று நம்புகின்றனர்.//

    அதையே தான் ஆஷிஷ் நந்தியும் சொல்கிறார்.
    ஆனால், இந்த உணர்வு இயல்பானதில்லை.
    அவர்கள் மீது பாஜக/ ஆர்.எஸ்.எஸ்.சால் அண்மைக்காலங்களில்
    ஊட்டப்பட்டது… உங்கள் மீது ஊட்டப்பட்டிருப்பது போல –

 4. Prabhu Ram சொல்கிறார்:

  // பெரும்பான்மையினர் தங்களை
  பெரும்பான்மையினர் என்றே நினைத்திருந்தார்கள்.

  தற்போது பெரும்பான்மையினர்
  சுற்றி வளைக்கப்பட்ட சிறுபான்மையினராக
  தங்களை நினைத்துக் கொள்கின்றனர்.//

  இவ்வாறு, பெரும்பான்மையரை தாங்கள் ஆபத்தில் இருப்பதாகவும்,
  மோடியால் மட்டுமே தங்களை காப்பாற்ற முடியுமென்றும் நினைக்க
  வைத்தது தான் மோடிஜி, ஆர் எஸ் எஸ் -ஸின் சாதனை.
  இதில்தான் உங்களைப்போன்றவர்கள் கூட பலியாகி விட்டீர்கள்.

  • புதியவன் சொல்கிறார்:

   பிரபுராம்… நீங்க ரியாலிட்டி என்னன்னு யோசிக்க விரும்பலை. நான் என்ன செய்வது?

   நீங்க ஒன்றை மட்டும் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். கனிமொழி, ஸ்டாலின், ஆ.ராசா, பொன்முடி, துரைமுருகன், டி.ஆர்.பாலு, சபரீசன், மோடி பிரதர்ஸ், கார்த்தி சிதம்பரம்…ராபர்ட் வாத்ரா, ராகுல் காந்தி, சோனியா, பிரியங்கா..அன்புமணி..இந்த லிஸ்ட் முடிவில்லாதது – இவர்களின் சொத்து பதவிக்கு வருவதற்கு முன்பு எவ்வளவு, அது எப்படி வானளவு உயர்ந்தது, பதவிக்கு வரும்வரை திறமை ஏதும் இல்லாமல் இருந்தவர்கள், பதவி வந்த உடனேயே ரியல் எஸ்டேட் தொழில் அதிபர், சாராய ஆலை அதிபர், கல்வித் தந்தை என்று திறமைசாலிகளாக ஆகிவிடுகிறார்களே அது எப்படி என்று யோசித்தீர்களா? ஜெ. வுக்கு 10 வருடங்களாக கொடுக்கப்படாத சேனல் உரிமைகள், இவர்களுக்கு ஓவர் நைட்டில் 10 சேனல்களுக்குக் கொடுக்கப்பட்டதே அது எப்படி என்று யோசித்தீர்களா? ஜெகத் ரட்சகன், இலங்கையில் 21,000 கோடி அளவு முதலீடு செய்ய எப்படி முடிந்தது? ‘பப்பு’ என்று எல்லோரும் சொல்கிற ராகுல் காந்தி லண்டனில் பல தொழில்களைத் தொடங்கி நடத்தியிருக்கிறார்.. அது எப்படி? நாம முக்கி முக்கி வேலை செய்து சம்பாதித்தாலும், அவர்களைவிட படித்திருந்தாலும், ஆயுள் முழுவதும் 1 கோடி கூட சம்பாதிக்க முடியவில்லையே அது ஏன் என்று யோசித்தீர்களா?

   மத்தியில் மோடி பிரதமர். 5 வருடங்களுக்கு முன்பு என்ன சொத்து வைத்திருந்தார்…தற்போது எவ்வளவு..அவர்களின் உறவினர்கள் எவ்வளவு சொத்துக்கள் சேர்த்திருக்கின்றனர், என்ன வேலை பார்க்கின்றனர் – இவைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள முயற்சித்தீர்களா? – நான் பாஜக ஆதரவாளன் இல்லை, ஆனால் கொள்ளையடிக்காத அந்த அரசியல்வாதியின் குணம் என்னை நிஜமாகவே ஆச்சர்யப்படுத்துகிறது.

   ஆ.ராசாவின் உறவினர்கள் (மனைவி உட்பட) பலப்பல கோடிகளுக்கு எப்படி திடீரென அதிபதியானார்கள்? மனநிலை சரியில்லாத தயாளு அம்மையார் 60% முதலீடு போட்டு தொலைக்காட்சி சேனலுக்கு உரிமையாளரானாராம். இது ஒரு துளிதான்.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    பாவம் பிரபுராம் – உங்கள் டெக்னிக்கெல்லாம்
    அவருக்கு தெரிந்திருக்காது…!!!

    கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன்…

    – நீங்கள் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும்
    வழக்கம்போல் சப்தமின்றி முடிச்சு போடுவதை … !!!

    சப்ஜெக்டுக்கு வாங்க சார்.
    ஆஷிஷ் நந்தி சொன்னதைப் பற்றி விவாதிப்பீர்கள்
    என்று நினைதேன்… எங்கேயோ போய் விட்டீர்களே…!!!

    உம்ம்…. பாசம்…. உங்களை விடமாட்டேனெங்கிறது..
    எங்கெங்கோ சுற்றுகிறீர்கள்…. 🙂 🙂 🙂

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

   • புவியரசு சொல்கிறார்:

    புதியவன் –

    “– நான் பாஜக ஆதரவாளன் இல்லை –
    நான் பாஜகவுக்கு ஓட்டு போடவில்லை ” என்று
    அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள்.
    ஆனால் நூற்றுக்கு நூறு பாஜகவைத்தான்
    ஆதரித்து எழுதுகிறீர்கள்.

    பாஜக ஆதரவாளன் என்று சொல்லிக்கொள்ள
    வெட்கமாக இருக்கிறதா ?
    பிற்போக்காளன் என்று சொல்லுவார்களே
    என்று கூச்சமாக இருக்கிறதா ?
    ஜால்ரா கூட்டத்துடன் identify
    பண்ணிக்கொள்ள அவமானமாக இருக்கிறதா ?

    • புதியவன் சொல்கிறார்:

     புவியரசு – இந்த பிற்போக்காளன், முற்போக்காளன் என்று வாய்ஜாலம் காண்பிக்கும் திராவிட கம்யூனிச மெண்டாலிட்டி என்னிடம் கிடையாது. எது பிற்போக்குத்தனம், எது முற்போக்குத்தனம் என்பதை காலம்தான் சொல்லும்.

     “ஜால்ரா கூட்டத்துடன் identify” – இதை சுப.வீரபாண்டியன், வீரமணி, திமுக அல்லக்கைகளை, அடிமை நிர்வாகிகளை, காங்கிரஸ் அடிமைகளை மனதில் வைத்துச் சொன்னீர்களோ என்று தெரியவில்லை.

     In a bigger picture, பாஜக செய்வதில் இதுவரை பல விஷயங்கள் தவறாகத் தெரியவில்லை. தவறானவை எனத் தோன்றுவதை இங்கே சொல்வதிலும் தயங்கியதில்லை. உங்களுக்கு மறந்துபோயிருக்கலாம். ‘கட்சி மாறவைத்து’ ஆட்சி பிடிப்பது, ‘கார்ப்பரேட்டுகளின் நலன் ஒன்றை மட்டும் மனதில் வைப்பது’, ‘பாஜக ஆட்சிக்கு வந்துவிட்டதாலேயே, கண்ட கண்ட ரவுடிகள், ‘இந்து மதம் காப்பாளனாக’ உருவெடுத்து எளிய இஸ்லாமிய மக்களை அச்சுறுத்தி கொலைபோன்ற கொடிய செயல்களில் ஈடுபடுபவர்களை உடனே தண்டித்து அந்தப் போக்கைத் தடுத்து நிறுத்தாதது, ஊழல் பெருச்சாளிகளைத் தண்டிக்காதது போன்றவை சட் என்று மனதில் உதிக்கின்றன. இவைகளைப் பற்றி இங்கும் எழுதியிருக்கிறேன். நாளை கர்னாடகாவில் பாஜக ஆட்சியைப் பிடித்தாலும் அது மிக மோசமான செயல் என்பதை எழுதவும் தயங்க மாட்டேன். (உடனே..காங்கிரஸ் மிக யோக்கியம் என்று ஜால்ரா தட்ட மாட்டேன். இந்த அனர்த்தங்களுக்கெல்லாம் காங்கிரஸ்தான் விதை போட்டது)

     இந்தியா விவசாய நாடு. உண்மையான விவசாயிகளுக்கு, அதுவும் 2-5 ஏக்கர்களுக்கு குறைவாக வைத்திருக்கும் விவசாயிகளுக்கு அரசாங்கம் முழுமையான ஆதரவு தந்து, லோக்கல் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். கார்த் தொழிற்சாலை வைத்து 1000 பேருக்கு 50,000 ரூபாய்க்கு வேலை கொடுத்து, அதன் பின் விளைவுகளை (எதிர்மறை) நாடு அனுபவிப்பதைவிட, விவசாயிகளுக்கு உதவி, அதனால் தினமும் 800 ரூபாய் சம்பாதிக்கும் எளிய மக்களை உருவாக்கணும்.

     இந்த மாதிரியான செயல்களில் பாஜக அரசு ஈடுபடவில்லை. ஐடி கம்பெனி மூடிவிட்டது என்று 10 மேல் மட்டத்தினர் தற்கொலை செய்துகொள்வதைவிட 10 விவசாயி தற்கொலை செய்துகொள்வது சமூகத்தில் மோசமான விளைவுகளுக்கு இட்டுச்செல்லும்.

     மற்றபடி நான் சொல்லியிருப்பதுபோல ஆஷிஷ் நந்தியின் பல கணிப்புகளை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அதிலும் ‘ஜனாதிபதி தேர்தலைப் போல’ என்பதெல்லாம் ஆஷிஷ் நந்தி, இதுவரை இந்தியாவிலேயே வசித்ததில்லை என்ற தோற்றத்தைத்தான் தருகிறது.

 5. Selvarajan சொல்கிறார்:

  இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது முதல் பத்தியில் இருக்கின்ற // இந்தத் தேர்தல் முடிவுகள் அரசியல்
  ரீதியாகவும், சமூக ரீதியாகவும், பல்வேறு ஆய்வுகளுக்கு
  உட்படுத்தப்பட்டிருந்தாலும், உளவியல் ரீதியாக இதுவரை ஆய்வு
  செய்யப்படவில்லை.// இந்த கருத்தில் தான் இவர்களது வெற்றியின் சூட்சுமம் அடங்கி இருக்கிறது … அதாவது ஒரு வாக்காளனை எப்படி மூளை சலவை செய்து தன் பக்கம் இழுப்பது என்பதை துல்லியமாக கணித்து அதன் படி காய் நகர்த்தி இன்று வெற்றிக்களிப்பில் இருக்க்கிறார்கள் .. இதற்கு அதிகம் கை கொடுத்தது மோடியின் ” பாமரத்தனம் ” என்கிற பாவ்லா ..

  பல ஆயிரங்களை விழுங்கியுள்ள உடைகளை அணிந்து — அந்தந்த மாநிலங்களுக்கு — சந்திக்கின்ற மக்களுக்கு ஏற்றவாறு தன் உருவத்தை ஒப்புமை படுத்தி அவர்களில் ஒருவராக காட்டிக்கொண்டு பேசும்போது ” நான் டீ விற்றவன் — ஏழைத்தாயின் புதல்வன் — எளிமையானவன் என்று கூறியது மக்களை கவர்ந்தது — அந்த பாமரத்தனமான வார்த்தைகள் அவர்களை உளவியல் ரீதியாக உள்ளிழுத்துக் கொண்டது …

  கடந்த ஐந்தாண்டுகளில் மோடியின் ஆட்சியில் 20,000 கிராமங்கள்தான் மின்மயமாக்கப்பட்டன. அதற்கு முந்தைய ஆட்சிகளில் 6.3 இலட்சம் கிராமங்கள் வரை மின்மயமாக்கப்பட்டிருந்தன. ஆனால், பா.ஜ.க.வோ, மோடியின் ஆட்சியில்தான் இந்தியக் கிராமங்கள் மின்மயமாக்கப்பட்டதாக பிரச்சாரம் செய்தது.–இலவச எரிவாயுத் திட்டம் என்பது உண்மையில் இலவசமே கிடையாது… ஆனால் இலவசமாக கொடுக்கப் படுவதாக மக்களை நம்ப வைத்து — தேர்தல் நெருக்கத்தில் பாலகோட் மீது இந்திய விமானப் படை நடத்திய தாக்குதல் என்பதை பூதாகாரமாக காட்டி மோடி உறுதியானவர், …பாலகோட்டில் “எதிரியின் வீடு புகுந்து” அடித்தவர்,..அவர் பிரதமரான பின்னால்தான் சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு ஒரு அங்கீகரிக்கப்பட்ட கவுரவம் வந்திருக்கிறது —

  அவர் ஊழலற்றவர், அவருக்கு குடும்பம் இல்லை, மோடியோடு ஒப்பிடத்தக்க தலைவர் எதிர்க்கட்சிகளில் யாருமே இல்லை என்று திரும்ப — திரும்ப ஊடகங்கள் வாயிலாகவும் இந்த கருத்து மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டது — இதற்காக மட்டும் 5600 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக கூறப்பட்டது — நிறைவேற்றப்படாத பல திட்டங்கள் இருந்தாலும் — நிறைவேற்றக் கூடியவர் இவரே என்பதையும் விவாதங்கள் மீடியாக்கள் மூலம் தொடர்ந்து மக்களை மன ரீதியாக மாற்றியது தான் நிதர்சனம் ….

  இதெற்கெல்லாம் எதிர்மறையான கருத்தை கூறினால் தேசத்துரோக வழக்கு — தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் உண்மையை வெளிப்படுத்திய அடுத்த நொடியில் அவைகள் நீக்கப்பட்டு விட நடவடிக்கைகள் — என்று தங்களை மீறி யாரும் எதையும் செய்யக்கூடாது என்கிற நிலை எடுத்து — அதற்கு ஏற்றவாறு கட்டமைத்து — இளைஞர்கள் மத்தியில் மோடி என்கிற பிரேமையை உண்டாக்கி விட்டார்கள் ..

  மோடியின் பாமர்த்தன பாவ்லா — மதம் — உளவியல் தாக்கம் — ஒன் நேஷன் கோஷம் இருக்கும் வரை மோடியின் செங்கோல் நிற்கும் .. ! ஒன் நேஷன் — ஒன் எலெக் ஷன் — ஒன் ரேஷன் என்பது இறுதியில் — ” நோ எலெக் ஷன் ” என்பதில் வந்து நின்றாலும் ஆச்சர்யமில்லை …!!!

 6. புவியரசு சொல்கிறார்:

  செல்வராஜன் –
  நிறைய செய்திகளை உள்ளடக்கிய, ஆழமான பின்னூட்டம்.
  பாராட்டுகள்.

 7. tamilmani சொல்கிறார்:

  //நான் நினைத்ததை விடவும் நாம் பாகிஸ்தானை வெகு விரைவாக
  பின்பற்றத் தொடங்கிவிட்டோம். நமது இராணுவம் அவர்களின்
  இராணுவம் போல அரசின் மொழியைப் பேசுகிறது.

  அதே போல் கீழ் நீதிமன்றங்களிலும் கூட இதையே
  பின்பற்றுகிறார்களோ என்கிற சந்தேகம் எனக்கு ஏற்படுகிறது.//

  சொன்னது உண்மையானால் பி சிதம்பரம், கார்த்தி ,கனிமொழி .ஆ ராசா
  தயாநிதி போன்றோர் இந்நேரம் சிறைவாசம் செய்து கொண்டிருக்க வேண்டுமே . நீதிமன்றங்களால் ஜாமீன் வழங்கப்பட்டு/ விடுவிக்கப்பட்டு தேர்தலில் நின்று ஜெயித்து குற்றமற்றவர்கள்
  போல காட்சியளிக்கறார்கள்.? ,

 8. Prabakar சொல்கிறார்:

  BJP (amit & modi) divert all attention from EVM malpractice

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   பிரபாகர்,

   என்ன ஆயிற்று உங்களுக்கு …
   இன்னும் எத்தனை நாள்
   இதையே சொல்லிக்கொண்டிருப்பீர்கள்…?

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.