இது முந்திய பிறப்பின் தொடர்ச்சியா ….?


கீழே ஒரு தொலைக்காட்சி காணொளி..
முதலில் இதைப் பாருங்கள்…

பல வருடங்களாகவே என் மனதில் ஒரு
வலுவான எண்ணம் / நம்பிக்கை உண்டு…
நான் படித்த பல ஆன்மிக நூல்கள், புத்தகங்கள்,
கட்டுரைகளுடன், அனுபவங்களுடன்
சேர்ந்த சிந்தனையின் விளைவு அது…

ஒரு பிறப்பில் ஒருவர் சேர்த்துக் கொள்ளும் ஞானம்…
ஒருவரின் இறப்புடன் முடிவுக்கு வந்து விடுவதில்லை.
அந்த ஆன்மா அடுத்த பிறவி எடுக்கும்போது –
இயல்பிலேயே/பிறப்பிலேயே இந்த ஞானத்தை பெற்றிருக்கிறது.

அதனை வெளிப்படுத்தும் தருணத்திற்காக காத்திருக்கிறது.
உற்ற தருணம் வாய்க்கும்போது வெளிப்படுகிறது.

சின்னஞ்சிறிய வயதிலேயே அசாதாரணத் திறமைகளை
வெளிப்படுத்தும் ஒவ்வொருவரையும் பார்க்கும்போதும்,
கேள்விப்படும்போதும், இந்த நம்பிக்கை எனக்குள்
வலுப்பெற்றுக் கொண்டே போகிறது.
என்ன – விஞ்ஞான பூர்வமாக இதை நிரூபிக்கும்
வழியைத் தான் இதுவரை காண முடியவில்லை.

இத்தனை சிறிய வயதில்,
எந்தவித விசேஷ பயிற்சியும் இல்லாமல்,
இந்த சிறுவனால் –
இதெல்லாம் செய்ய முடிகிறது என்றால் – எப்படி…?
இலக்கணமும், இலக்கியமும் பிறர் கற்றுத்தராமல்
இவனுக்கு கைவந்தது எப்படி…?
தானாகப் படித்து புரிந்து கொள்ளக்கூடிய வயதா இது…?

தென்னந்தோப்பில் காவல்காரராக பணிபுரியும்,
ஒரு குடிசைவாசியின் 8 வயது மகனுக்கு
இருக்கக்கூடிய தெளிவா இது…?

இதையும் முந்திய பிறப்பின் தொடர்ச்சி என்று
எடுத்துக் கொள்ளலாமா….?

.
——————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to இது முந்திய பிறப்பின் தொடர்ச்சியா ….?

 1. Selvarajan சொல்கிறார்:

  // இதையும் முந்திய பிறப்பின் தொடர்ச்சி என்று
  எடுத்துக் கொள்ளலாமா….? // …முற்பிறவின் பயனாய் 3 வயதிலேயே ஞானப்பால் உண்டு பாடும் திறன் பெற்ற திரு ஞானசம்பந்தர் போன்று இறை நன்கொடையோ …!! … மதுரம் ராஜ்குமார் என்பவர் இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே கவிதையில் ” மதிப்புறு முனைவர் ” என்ற பட்டதை பெற்றவர் … எவ்வாறு எனில் கடந்த டிசம்பர் மாதம் காலை 7 மணி முதல், மாலை 5 மணி வரை தொடர்ந்து 10 மணி நேரம், 173 தலைப்புகளில் கவிதைகள் எழுதி உலக சாதனை படைத்துள்ளார். இதையடுத்து சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் என்ற பட்டத்தை மதுரம் ராஜ்குமாருக்கு வழங்கி கவுரவித்துள்ளது.
  ” குழந்தை ” எனும் கவிதைத் தொகுப்பு நூலில் இவரது முதல் கவிதை வெளியானது. அதில் அவர் எழுதிய கவிதை
  ‘//அம்மாவில் பாதி அப்பா
  அப்பாவில் பாதி அம்மா
  இரண்டும் சேர்ந்த கலவைதான்
  குழந்தை //’ என்ற
  –வரிகள் பாராட்டப்பட்டன….

  கடந்த 26.11. 2017 அன்று கோவையில் நடந்த விழா ஒன்றில் தனது முதல் கவிதை நூலினை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தினார்… அந்த நூலின் பெயர் ” நல் விதையின் முதல் தளிர் ” என்பதாகும் …! பொருத்தமான தலைப்பு …! இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தே இவரைப்பற்றி ஊடகங்களில் செய்தில் பல வந்திருக்கின்றன .. வாழ்க .. வளர்க்க .. !!!

 2. புதியவன் சொல்கிறார்:

  ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற ஆன்மீக ஆசான்கள் (இவர்களைப் பற்றி நான் கொஞ்சம் படித்துள்ளேன்), பாரதியார் போன்ற சிறு வயதிலேயே அசாதாரணத் திறமை கொண்டவர்கள் (அவர் மரபுக் கவிதைகள் எழுதினார்) – முற்பிறப்பின் தொடர்ச்சிதான் என்பது என் அனுமானம்.

  ஆனால் அது எப்படி சமூகத்திற்குப் பயன்படுகிறது என்பதில்தான் அவர்களின் மேதமைத் தன்மையும், பிறப்பின் அர்த்தமும் இருக்கிறது.

  மதுரம் ராஜ்குமாரும் அவ்வாறு புகழ் பெறவேண்டும். வாழ்த்துகள்.

 3. புவியரசு சொல்கிறார்:

  இந்தச் சிறுவனிடம் இன்னும் பல திறமைகள் இருக்கலாமென்று
  தோன்றுகிறது. தகுந்த வாய்ப்புகள் உருவாகாததால் அவை
  வெளிப்படாமல் இருக்கலாம். இதில் ஆர்வலம் கொண்டவர்கள்,
  ஒரு சிறு குழுவாக இணைந்து, அந்த சிறுவனிடம் பழகிப் பார்க்கலாம்.
  அவனிடம் வேறு எதாவது திறமைகள் வெளிப்பட வாய்ப்பு உண்டா
  என்று பார்த்து, அப்படி ஏதேனும் இருந்தால், முறைப்படி பயிற்சிகள்
  கொடுத்து அவற்றையும் வெளிக்கொண்டு வரலாம்.

  இந்த சிறுவன் நிச்சயம் தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் புகழ் சேர்ப்பான்.

 4. ravikumar r சொல்கிறார்:

  You need not do research in this.You can observe this in ur family itself between ur brothers and sisters. It has been well explained in Mahabharathamby case by case like rich, poor,intelligent, weak health and so on

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.