“போர்” – துவக்குகிறாரா டாக்டர் சு.சுவாமி…?பாஜக – கட்சியும் சரி, மோடிஜியும் சரி, தொடர்ந்து தன்னை
ஒதுக்குவதன் மூலம் தன்னை அவமானப்படுத்துகிறார்கள்;
தனக்கோ, தான் சொல்லும் கருத்துகளுக்கோ எந்தவித
முக்கியத்துவமும் மோடிஜி தரத்தயாராக இல்லை என்பதை –

-புரிந்துகொண்ட டாக்டர் சு.சுவாமி, மத்திய பட்ஜெட்டை
நேரடியாக தாக்குவதன் மூலம் ஒரு இறுதி முயற்சியில்
இறங்கி இருக்கிறார் என்கிற ஒரு தோற்றம் உருவாகி இருக்கிறது.

மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளின் வருமானத்தை,
4 ஆண்டுகளில் இரட்டிப்பாக்குவோம் என்கிற உறுதி மொழியை
“பகல் கனவு” என்று வெளிப்படையாகவே கிண்டல் செய்கிறார்…

4 ஆண்டுகளில் இரட்டிப்பாக்குவது என்றால்,
சராசரியாக ஆண்டிற்கு 18 + % உயர்வு இருக்க வேண்டும்.
நடைமுறையில், விவசாயிகளின் ஆண்டு வருமானத்தின்
தற்போதைய உயர்வு ஆண்டிற்கு 2 சதவீதம் தான்.

எனவே நிறைவேற்றவே முடியாத வாக்குறுதிகளை
பட்ஜெட்டில் சொல்லி ஏமாற்றும் முயற்சியில் மோடிஜி அரசு
இறங்கி இருக்கிறது என்று சொல்கிறார்….

தனது ட்விட்டர் செய்தியின் மூலம் இதைச்சொல்லும்
டாக்டர் சு.சுவாமியின் ஆதரவாளர்களோ ( followers …) –
இன்னும் மேலும் மேலும் இந்த கிண்டலை/ தாக்குதல்களை
தொடர்ந்து கொண்டே போகிறார்கள்…

முதலில் சு.சுவாமியின் ட்விட்டர் செய்தி –
பின்னர் அதைத்தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள்
சிலரின் பின்னூட்டங்கள்…..

….

அடுத்து, அவரது ஆதரவாளர் ஒருவர் ..
(கடைசி இரண்டு வரிகள் ஹிந்தியில் இருப்பதால் -அதன் பொருளையும்
கீழே தந்திருக்கிறேன்…. )-

அல்வா கிண்டலாம்.. கொண்டு வாருங்கள்…
5 கிலோ ஆட்டா,
அரை கிலோ நெய்,
1 கிலோ சர்க்கரை,
10 கிலோ ட்ரை ஃப்ரூட்ஸ்….
—–

என்ன 10 கிலோ ட்ரை ஃப்ரூட்ஸா….?


– ஆமாம்…எதையாவது சொல்லியாக வேண்டும்..
அவ்வளவு தானே…?

இதில் என்ன ( proportion )அளவுக் கணக்கு வேண்டிக்கிடக்கிறது …?
சொல்றதை பெரிசாவே சொல்வோமே…..!!!

———————————————-

அடுத்து இன்னொரு ஆதரவாளர் –

….

.
– எல்லாமே நல்ல கனவுகள் தான் –
ஆனால் அவற்றை நிறைவேற்றத்தான் –
இந்த ஜென்மம் போதாது…!!!

.
————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to “போர்” – துவக்குகிறாரா டாக்டர் சு.சுவாமி…?

 1. Prabhu Ram சொல்கிறார்:

  டாக்டர் சுவாமி தன்னால் ஆன வரையில் உருட்டி, மிரட்டி
  என்னவெல்லாமோ செய்து பார்க்கிறார் நிதியமைச்சர் பதவியை
  பெறுவதற்கு.
  நிச்சயமாக கிடைக்காது என்பது உறுதியாகி விட்டால்
  போர்க்கொடியை தூக்குவது நிச்சயம். அப்போது இருக்கிறது
  நிறைய திருப்பங்களும், அதிர்வெடிகளும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.