40,000 கோடி சொத்து – கண்டவர்களிடம் விட்டு விட இதென்ன சங்கர மடமா …!!!திமுகவின் புதிய இளைஞரணி செயலாளர்
நியமிக்கப்பட்டு விட்டார்.

எப்படி…? யாரால்…? கையைக்கூட தூக்க முடியாத
நிலையில் படுத்த படுக்கையாக, சுயநினைவிழந்த
நிலையில் இருக்கும் திமுகவின் – பெயரளவிற்கான –
செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் பெயரில்
வெளிவந்திருக்கும் ஒரு அறிக்கையின் மூலம்…

– தேர்ந்தெடுக்கப்படவில்லை………………..
நியமிக்கப்பட்டிருக்கிறார்…!!!

– கழகத்தில், கலைஞருக்கு அடுத்த
சீனியர் நான் தான் என்று சொல்லிக்கொள்ளும்
திருவாளர் துரைமுருகன் முதல் –
டி.ஆர்.பாலு, பொன்முடி, நேரு…..வகையறா
தலைவர்கள் அனைவரும் – நாளை முதல் …
அண்ணா அறிவாலயத்தில் நுழைந்தால் – புதிதாக
இவருக்கும் சேர்த்து சலாம் போட வேண்டியிருக்கும்….!!!

அதனாலென்ன…இவர்களெல்லாம், கலைஞர் இருக்கும்போதே –
அவரது மகனுக்கு சலாம் போடவில்லையா…?
இனி தற்போதைய தலைவர் இருக்கும்போது,
அவரது மகனுக்கு போடுவதில் புதிதாக என்ன அவமானம்
வந்து விடப்போகிறது…?

புதிய இளைஞரணி செயலாளரின் தகுதிகள் என்ன…?

கல்லூரிப்படிப்பை முடித்து வெளிவந்தவுடன் தொழில்
செய்ய விரும்பினார். கவர்ச்சிகரமாகத் தெரிந்தது –
திரையுலகம்…. அவ்வளவு தான் – ஒரு திரைப்பட
தயாரிப்பு, விநியோக கம்பெனியைத் துவக்கினார்.

சின்னப்பையன்( …ர்..? )அவ்வளவு பெரிய முதலீட்டுக்கு
( capital investment…) எங்கே போவார் என்று
யோசனையா…? தலைப்பில் சொன்ன 40,000 கோடி
நினைவில்லையா…? அதில் சில துளிகள்…!!!
அவ்வளவு தான் திரையுலகின் இளைய தயாரிப்பாளர்
ஒருவர் உதயமானார்.

அன்றைய மிகப்பெரிய நடிகர் ஒருவரை ஹீரோவாக
போட்டு படமெடுத்தார்…. நடைமுறையில் –
தயாரிப்பாளரை விட, ஹீரோவுக்கே, நாயகிகளிடம்
நெருக்கம் அதிகம் சாத்தியமாகிறது என்பதை
உணர்ந்து கொண்டார்…

அந்த அனுபவ உணர்வின் வெளிப்பாடு –
தானே முதலாளி, தானே ஹீரோ ..!!
ஒரே கல்லில் எக்கச்சக்கமான மாங்காய்கள்…!!!

ஏகப்பட்ட ஹீரோயின்களுடன் டூயட் பாட வாய்ப்பு…!!!
தனக்கு மிகவும் பிடித்த ஹீரோயினுடன்
வெளிநாட்டு பயணங்கள்….!!!

ஆதவன், ஒரு கல் ஒரு கண்ணாடி, வணக்கம் சென்னை,
இது கதிரவன் காதல், நண்பேண்டா, கெத்து, மனிதன்,
சரவணன் இருக்க பயமேன், பொதுவாக என் மனசு தங்கம்,
இப்படை வெல்லும், நிமிர், கண்ணே கலைமானே….

– ஆக 2009 முதல் 2019 வரையிலான 11 வருடங்களில்
13 தமிழ்த் திரைப்படங்களில் –

நயன்தாரா, ஹன்சிகா மோட்வானி, ப்ரியா ஆனந்த்,
ஆமி ஜேக்சன், ரெஜினா கசேண்ட்ரா,நிவேதா பெத்துராஜ்,
மஞ்சிமா மோகன், பார்வதி நாயர், தமன்னா,

ஆகிய நட்சத்திர நடிகைகளுடன் நடிக்கும் அற்புதமான
அனுபவம் கிடைத்தது – போதாதா…?

( இவை அனைத்துமே அநேகமாக சொந்த முதலீட்டுப் படங்கள்
என்பதும், வெளியார் யாருக்கும் இவரை வைத்து படமெடுக்க
இன்னமும் நம்பிக்கை வரவில்லை என்பதும் தனி விஷயம் …)

திரைப்பட அனுபவம் நிறைவேறியது….

அடுத்தது – இளிச்சவாய் தமிழ்மக்கள்…!!!
அவர்களின் நீண்டநாள் கவலையை தீர்த்து வைக்க –
அடுத்த துணை முதலமைச்சர் ரெடி…!!!

———————————————————————————

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று
– ஈஸியாக எடுத்துக் கொள்ளாமல்,
அநாவசியமாக ஒரு நாளிதழ் மிகவும் கவலைப்படுகிறது….

———————————————-

சாதாரண தமிழ்நாட்டுப் பிரஜைகளாக நாம் எல்லோருமே
இங்கே ஒரு கேள்வி கேட்டாக வேண்டுமே!

திமுக என்பது தமிழகத்தின் பிரதானக் கட்சிகளில் ஒன்று.
சுமார் 2 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் எண்ணிக்கை
கொண்ட அந்தக் கட்சியில்… கட்சியின் ஆரம்பகாலம் தொட்டு
அதன் வளர்ச்சிக்கும்,

மக்களிடையே அதன் நம்பகத் தன்மையை நிலைநிறுத்தும்
பொருட்டும் கருத்தியல் ரீதியாகவும், உடலுழைப்பாகவும்
உழைத்து உழைத்து ஓடாகத் தேய்ந்த தொண்டர்கள்
பலர் உண்டு. அவர்களை எல்லாம்
தலைமைப் பதவிக்கு அல்ல சுமாரான அதிகாரம் கொண்ட
பதவியில் அமர வைத்துக் கூட அழகு பார்க்க விரும்பாத
இந்தக் கட்சித் தலைமைகள் தங்கள் வாரிசுகள் என்று
வந்து விட்டால் மாத்திரம் அவர்களை அசகாய சூரர்களாக
நினைத்து போட்டியேதுமின்றி கட்சியின் அதிகாரமிக்க
பதவிகளில் உடனடியாக அமர வைத்து அழகு பார்க்க நினைப்பது ஏன்?

உதயநிதி ஸ்டாலின் என்பவர் ஸ்டாலினுக்கு மகனாகப்
பிறந்தார், தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவரும்
முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதிக்கு
பேரனாகப் பிறந்தார் என்ற தகுதி மட்டுமே போதுமா
கட்சியின் இளைஞரணிச் செயலாளராக ஆக்கப்படுவதற்கு…?

திமுக, சங்கர மடம் அல்ல என்று சொன்ன தலைமை
இது குறித்து சிந்திக்க வேண்டுமில்லையா?

உதயநிதி ஸ்டாலின் திமுக அடிப்படைத் தொண்டராக
இதுவரை கட்சிக்காக என்ன செய்திருக்கிறார்…?

கட்சியின் பிரதான உரிமையாளராகத் தன்னை நினைத்துக்
கொள்வதால் மட்டுமே ஒருவர் அக்கட்சியை வழிநடத்தத் தகுதி
உடையவராக ஆகி விடுவாரா?


ஸ்டாலின் சிரமப்பட்டு அடைந்த ஒரு பதவியை
உதயநிதி ஸ்டாலின் எனும் ஒரு தயாரிப்பாளர் கம் நடிகருக்கு

உடனடியாகத் தாரை வார்க்கும் நிர்பந்தம்
என்ன வந்தது திமுகவுக்கு…?

அவருக்கு கட்சி ரீதியாகச் சாதிக்க கொஞ்சம்
அவகாசம் வழங்குவதில் தவறேதும் இல்லையே!

உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய கட்சிப் பணிகள் என்றால்
நீங்கள் எதைச் சொல்வீர்கள்?

ஊடகங்கள் உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
உதயநிதி ஸ்டாலின் கட்சியின் அதிகாரப் பூர்வ ஏடான
முரசொலியின் நிர்வாக இயக்குனராகப் பணியாற்றிய
அனுபவம் உண்டு உதயநிதி ஸ்டாலினுக்கு என்று.

முரசொலியில் தனது அந்திமக் காலம் வரை தொடர்ந்து
உடன்பிறப்புக்கு கடிதம் எழுதிக் கொண்டிருந்த
தாத்தா கலைஞர் வழியில் உடன்பிறப்புகளுக்கு
உற்சாகமூட்ட உதயநிதி அவ்வப்போது நாட்டு
நடப்புகளைப் பற்றி எதையாவது எழுதித் தீர்த்திருந்தாலும்
கொஞ்சமே கொஞ்சம் நம்பிக்கை கொண்டிருக்கலாம்.
அப்படி ஏதும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை.

ஆகவே மீண்டும் கேட்கத் தோன்றுகிறது.
உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய கட்சிப் பணிகள்,
சமூகப் பணிகள் என்றால் நீங்கள் எதைச் சொல்வீர்கள்?

கடந்த மக்களவைத் தேர்தலில்
திமுக வேட்பாளர்களுக்காக ஓட்டுக் கேட்டு பிரச்சாரம்
மேற்கொண்டதையா?

அதை திமுகவின் அடிமட்டத் தொண்டர்களில் இருந்து
கட்சியின் மீது அபிமானம் கொண்ட ஒவ்வொருவரும் தானே
செய்திருப்பார்கள். இதில் உதயநிதி மட்டும் என்ன ஸ்பெஷல்?

உடனடியாக உதயநிதி ஸ்டாலினை இளைஞரணிச்
செயலாளராக ஆக்கிப் பார்க்கும் ஆசை ஸ்டாலினுக்கு
வந்தால் அது அரசர் மனோபாவம் இல்லாமல் வேறென்ன?

அரசர்கள் தான், தான் மன்னராகப் பட்டமேற்ற உடன்
தனக்குப் பிறகு பட்டமேற்கக் கூடிய தகுதி
தன் பிள்ளைகளில் எவருக்கு உண்டு என உறுதி செய்ய
பட்டத்து இளைவர்களை அறிவிப்பார்கள்.

திமுகவின் இளைஞரணிச் செயலாளர் பதவி என்பது
பட்டத்து இளவரசர் பதவிக்குச் சற்றும் சளைத்தது அல்ல
என்பது சொல்லித் தெரிய வேண்டிய ரகசியமில்லை.
ஏனெனில் அந்தப் பதவி உருவாக்கப்பட்டதே அதற்காகத்
தான் என்பதை திமுக நன்கறியும்.

இப்போது பிரச்னை உதயநிதி ஸ்டாலின் பட்டத்து
இளவரசராக அறிவிக்கப்பட்டதில் இல்லை. இத்தனை
அவசரக்கோலத்தில் ஏன் என்பதில் தான்.

யாருடைய வளர்ச்சியை கட்டுப்படுத்த????????????????????
– என்பதை கலைஞரின் ஆன்மா மட்டுமே அறியக்கூடும்.

( ஏன் – அவரது ப்ரியமான மகளின் உள்ளமும்,
அவரது தாயாரின் உள்ளமும் கூட அறியுமே…!!!)

– தினமணி நாளிதழின் சிறப்புக் கட்டுரை…

(https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/jul/04/dmk-is-not-sankara-matam-but-the-crown-price-is-ready-3185336.html )

இதற்கு அடுத்த வாரிசு…?

– இப்போது தான் எலிமென்டரி ஸ்கூல் போய்க்கொண்டிருக்கிறது.
தமிழ் மக்கள் – இன்னும் சில வருடங்கள் காத்திருக்க வேண்டும்…!!!

பல வாசக நண்பர்கள் இந்த தளத்திலிருந்து விரும்பி பிரதி எடுத்துக்கொண்ட
ஒரு கார்ட்டூனுக்கு இப்போது மீண்டும் ஒரு வாய்ப்பு …!!!

.
———————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

19 Responses to 40,000 கோடி சொத்து – கண்டவர்களிடம் விட்டு விட இதென்ன சங்கர மடமா …!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  கட்டுரையில் பல செய்திகள் விட்டுப்போயிருக்கின்றன.

  1. உதயநிதி முதலில் ஆரம்பித்தது ஸ்டார் ஹோட்டல் (னு ஞாபகம்) பவுலிங் எனப்படடும் விளையாட்டுக்கூடம். இந்த விளையாட்டை விளையாடுபவர்கள் ‘தள்ளிக்கொண்டுவரும் பெரிய இடத்தவர்கள்’ மற்றும் காசை என்ன செய்து கரைப்பது என்று தெரியாதவர்கள். திடுமென நாளிதழ்களில்தான் அவர் ‘முரசொலி நிர்வாக இயக்குனர்’ என்று படித்தறிந்தேன். இது அவர்களது சொத்தாக ஆக்கப்பட்டுவிட்டது (எப்படி ஒரு நாளிதழ் 40,000 கோடி சம்பாதிக்கமுடியும், அனில் அம்பானிக்கே தெரியாத விஷயமாச்சே என்று யோசிக்கக்கூடாது. திமுகவின் மடத் தொண்டர்களுக்கே இதனை யோசிக்கும் புத்தி கிடையாது. அவர்களது இணைய ஆதரவு விற்பனையாளர்களுக்கும்-ஒவ்வொரு இடுகைக்கும் காசு தேற்றுகிறார்கள் அல்லவா? இதனை யோசிக்கும் அளவு மூளை கிடையாது).

  2. சன் தொலைக்காட்சி, டப்பா படத்தைக்கூடா ஏகப்பட்ட விளம்பரங்கள், நேர்காணல் என்று நிகழ்ச்சிகள் நடத்தி வெற்றிபெற்றதுபோல ஒரு மாயையை ஏற்படுத்துவது போல, கருணாநிதி தொலைக்காட்சிக்கும் தன் படங்களை விளம்ப்பரப்படுத்தி வெற்றி பெற்றுவிடலாம், மக்களை அணுகுவதும் சுலபம் என்பதற்காகத்தான் நடிக்க, தயாரிக்க, அதன் மூலம் கணக்குக் காண்பித்து சட்டப்படி கோடீஸ்வரனாக ஆரம்பித்தார். ரொம்ப பணம் புரள ஆரம்பித்துவிட்டதே, எப்படி கணக்கு காண்பிப்பது என்பதற்காகத்தான் மனைவியை இயக்குநராகப் போட்டு படங்கள் தயாரித்தது.

  3. அறக்கட்டளை, கட்சிகள் சட்டத்தை மீறும்படியாக அந்தப் பணத்திலிருந்துதான் உதயநிதி படங்களுக்கு நிதி தாரைவார்க்கப்பட்டது. இதனைக் கேள்விகேட்கும் அளவு திமுகவில் மூளையுள்ள சட்டம் தெரிந்தவர்கள் இல்லை என்பதுதான் சோகம்.

  4. //ஸ்டாலின் சிரமப்பட்டு அடைந்த ஒரு பதவியை// – இதுக்கு வேறு எந்தக் காரணமும் இல்லை. ஸ்டாலினுக்கு எல்லா மறைமுக உதவிகளைச் செய்து, ஏன்..பாப்புலர் வை.கோவை கட்சியைவிட்டு வெளியேற்றி, போன மாவட்டச் செயலாளர்களைப் பற்றிக் கவலைப்படாமல், தன் சாதுரியத்தால் செயல்பட்ட கருணாநிதி, பதவி என்று வரும்போது, அன்பழகன் போல, தான் சாகும்வரை எதையும் கொடுக்க விரும்பவில்லை. பேச, அசைய முடியாத நிலை வந்தபிறகுதான் அன்பழகன் மூலம் ‘செயல் தலைவர்’ பதவி கொடுத்தார். இப்போ ஸ்டாலினுக்கே 70 வயது. அதனால் இப்போதே உதயநிதியை ஸ்டிராங்காக உட்கார்த்தி வைக்கிறார். தங்கள் பெரும் பண பலத்தால் மாறன், கனிமொழி கும்பல் கட்சியையும், நிர்வாகிகளையும் கைப்பற்றிவிடக்கூடாது என்பதற்காக இப்போதே ஸ்டாலின் அவசரப்பட்டிருக்கிறார். பாருங்கள், மத்திய அரசுக்கு (பார்லிமெண்டுக்கு) சபரீசன், மாநிலத்தில் உதயநிதி என்று விரைவில் வரும்.

  5. அதிமுக நிர்வாகிகளை அடிமைகள் என்று திமுக சொல்லும். ஆனால் அதிமுக தொண்டர்களை அல்ல. திமுகவில், நிர்வாகிகள், தலைவர்கள், தொண்டர்கள் எல்லோரும் கருணாநிதி குடும்ப அடிமைகள் என்பதுதான் உண்மை. இப்போதே போஸ்டரில் எட்டிப்பார்க்கும் பையன் அடுத்த தலைவர் என்று சொன்னாலும், அவனுக்கு டயபர் மாற்ற நான், நீ என்று ஓடும் அடிமைக்கூட்டம் இருக்கும் வரையில் கருணாநிதி குடும்பத்துக்கு என்ன கவலை?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   உங்களுக்கு என் மீது கொஞ்சம் கூட
   கருணை இல்லையா…?

   // கட்டுரையில் பல செய்திகள்
   விட்டுப்போயிருக்கின்றன. //

   நான் ஒருத்தனாக எவ்வளவு தான்
   எழுத முடியும்…?

   நான் “தெரிந்து,” ஆனால் எழுதாமல்
   விட்டதையும்,
   “மறந்து” போய் விட்டதையும்,
   “தெரியாமலே” விட்டதையும் –
   உங்களைப்போன்ற நண்பர்கள்
   கவனித்துக் கொள்வீர்கள் என்கிற
   நம்பிக்கையில் தானே பல இடுகைகளில்
   முழு தகவல்களையும் தராமல்
   இருக்கிறேன்…. 🙂 🙂

   .
   நீங்கள் கொடுத்திருக்கும் “மேலதிக”
   தகவல்களுக்கும், நண்பர் செல்வராஜன்,
   நண்பர் தமிழ்மணி போன்றோர் கொடுக்கப்போகிற (…? )
   தகவல்களுக்கும் மிக்க நன்றி.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • Selvarajan சொல்கிறார்:

    அய்யா ..! என்னுடைய பெயரை குறிப்பிட்டுள்ளதால் ஒரு சில செய்திகள் …!

    // மூன்றாம் கலைஞர் உதயநிதிக்கு, உடன்பிறப்பின் திறந்த மடல் // என்று சவுக்கு தளத்தில் வந்த கட்டுரையில் இருந்து சிறிது : —
    // ஓட்டலில் காரை நிறுத்தக் கூடாது என்று சொன்ன வாட்ச்மேனை நோக்கி துப்பாக்கியை எடுத்து சுடுவதில் தொடங்கி, திரைத் துறையை முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டு, தியேட்டர் அதிபர்கள், தயாரிப்பாளர்களை மிரட்டுவது வரை, தமிழக மக்கள், முகம் சுளித்தார்கள். நெளிந்தார்கள். வெறுத்தார்கள். வேதனைப்பட்டார்கள். அந்த வேதனையை மக்கள் மறக்கவோ, மன்னிக்கவோ தயாராகவே இல்லை.
    தளபதியோட மகன், வரி ஏய்ப்பு செய்து வெளிநாட்டு கார் வாங்கினது
    கட்சிக்கு சொந்தமான முரசொலி நாளேட்டில் உதயநிதியை எதற்காக மேலாண் இயக்குநராக நியமித்தார் என்று கேட்கிறார்கள் என்னிடம் பதிலில்லை. …
    சொத்துப் பாதுகாப்புக் குழுவில், எத்தனையோ தலைவர்கள் இருக்கையில் உதயநிதியை எதற்காக உறுப்பினராக்கினார் என்று கேட்கிறார்கள் என்னிடம் பதிலில்லை.

    முரசொலி அறக்கட்டளையில் உதயநிதி மூத்த திமுக தலைவர் என்பதற்காகவா உறுப்பினர் ஆக்கினார் என்று கேட்கிறார்கள், என்னிடம் பதிலில்லை.
    மூன்றாவது கலைஞராக முளைக்க ஆசைப்படும் நீங்கள், அதே முரசொலியில் என்றைக்காவது உங்கள் எழுத்தாற்றலை காண்பித்திருக்கிறீர்களா? ஒரே ஒரு பத்தி எழுதியிருக்கிறீர்களா ? அதையும் விடுங்கள். நீங்கள் முரசொலியை ஒரு நாளாவது படித்திருக்கிறீர்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது. காலை உணவை ரெயின் ட்ரீயிலும், மதிய உணவை தாஜ் ஹோட்டலிலும், இரவு விருந்தை தி பார்க் ஹோட்டலிலும் அருந்தும் உங்களுக்கு, காலையில் டீக்கடையில் முரசொலி படித்து விட்டு, வாய் கிழிய அரசியல் பேசும் என் போன்ற தொண்டனைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் நாங்கள் இன்னும் முரசொலியை காசு கொடுத்து வாங்கும் சாதாரண தொண்டன். நீங்கள் முரசொலியின் மேலாண் இயக்குநர்.// ….https://www.savukkuonline.com/13600/ ….இதற்கெல்லாம் பதில் கிடைக்காத நிலையில் — இன்று திமுகவின் புதிய இளைஞரணி செயலாளர் …வாழ்க குடும்ப கட்சி …!

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஒரு உரை — நம்மை வேறுவிதமாக சிந்திக்க தூண்டும் — எவ்வளவு ஆப்டாக இந்த குடும்பக்கட்சி அரசியலை அவர் கணித்து இருந்தார் என்பதை விளக்கும் … அதுதான் இன்று வைரலாக வலம் வந்துகொண்டு இருக்கிறது : அதில்

    இப்படி ஒரு குடும்பமா? // “ஜனநாயக நாடுகள் அனைத்திற்கும் சென்று ஆராய்ச்சி செய்து பாருங்கள், எந்த நாட்டிலாவது தகப்பன் முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர், மற்றொரு மகன் மத்திய அமைச்சர், பேரன் மத்திய அமைச்சர், மகள் நாடாளுமன்ற உறுப்பினர், மகளின் மனம் கவர்ந்தவர் மத்திய அமைச்சர் என்று ஒரே குடும்பம் ஜனநாயகத்தின் பெயரால் இத்தனை பதவிகளை ஆக்கிரமித்து கொண்டு அழுக்கை தின்ற மீன்களை போல, அதிகாரத்தை குதறி தின்கின்ற இதுபோன்ற குடும்பம் ஒன்று உலகத்தின் எந்த மூலையிலாவது இருக்கிறதா?” என்று காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.// மேலும் வாசிக்க …. https://tamil.oneindia.com/news/chennai/viral-video-about-jayalalithas-speech-about-karunadhis-family-members-356051.html ….. தளத்திற்கு ஏதோ என்னால் முடிந்தது …!!!

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


     நன்றி செல்வராஜன்.

     – இப்படி தொட்டாற்சிணுங்கியாக இருக்கலாமா…?
     கருத்தூட்டங்கள், மறுப்புகள், விவாதங்கள் –
     இவற்றிற்காகத்தானே இந்த தளமே புகழ் பெற்றிருக்கிறது.

     நாகரிகமான முறையில் எழுதப்படும் எந்தவித
     பின்னூட்டங்களையும் எதிர்கொள்வோம்.

     .
     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

     • Selvarajan சொல்கிறார்:

      அய்யா ..! ஒரு இடுகை எழுத தாங்கள் எத்தனை இடங்களில் தகவல் சேகரித்து — அதைப்பற்றி முழுமையாக ஆராய்ந்து — பின் விளைவுகள் என்னவெல்லாம் ஏற்படும் என்பது போன்ற பல கோணங்களில் சிந்தித்து தெளிவான முடிவகுக்கு வந்த பின்தான் பதிவாக வெளியிடுகிறீர்கள் என்பது — எமது கருத்து … !

      அடுத்து அதற்கு தேவையான ஒரு படம் { படங்கள் இல்லாமலும் பதிவுகள் இருக்கின்றன } தேர்வு செய்து போடுவது என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பதை பற்றி எண்ணிப்பார்க்கையில் வியப்பு மேலிடத்தான் செய்கிறது ..! உதாரணத்திற்கு :
      // ஆசை …கவிஞர் கண்ணதாசன்…. !!! // என்கிற இடுகைக்கு தாங்கள் இட்ட புகைப்படம் : எரிகிற மெழுகு வத்தி – அதன் சுடர் அருகே ஒரு விட்டில் பூச்சி .. ஆகா அற்புதமான படம் — அந்த படம் ஏன் அங்கே போடவேண்டும் என்பதைப்பற்றியோ — அது என்ன கூற வருகிறது என்பதைப்பற்றியோ பின்னூட்டம் இடுகின்றவர்கள் யாராவது சிந்தித்து இருப்பார்களா என்றால் யாரும் இல்லை — ! அதில் ஏகப்பட்ட விவரங்கள் அடங்கியிருக்கின்றன — கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் பற்றிய பதிவு அது — அதற்கும் – படத்திற்குமான தொடர்பு என்ன என்பதை சிந்தித்து பார்த்ததால் எமக்கு தோன்றிய கருத்தே … எமது பின்னூட்டமாக இடம் பெற செய்தோம் என்பதில் எமக்கு முழு திருப்தி … !!

      நீங்கள் பதிவாக்குகிற செய்திக்கு ஏற்ப ” மேற்கோள்களை ” ஆதாரமாக கொண்டுவந்து விவாதிக்க யாருக்கும் நேரம் இல்லையோ என்று நினைக்கும் நிலைமை தான் நிலவுகிறது …. விவாதம் என்பது குறைந்துகொண்டே சென்று விட்டது —

      தனக்கு தேவையான ஒரு சில வரிகளை மட்டும் கருத்தில் இருத்திக் கொண்டு அதற்கு ஏற்ப ” பின்னூட்டங்களை ” இடுவது ஒரு சிலரின் வாடிக்கையாகி போனது மட்டுமின்றி தாங்கள் சார்ந்துள்ளஇயக்கத்திற்கு கண்ணைமூடிக்கொண்டு ” ஒரு சார்புநிலை ” எடுத்து நடுநிலையை புறந்தள்ளி பின்னூட்டம் இடுவதும் … எந்த ஒரு நடைமுறை செய்திக்கும் அதைப்பற்றி விவாதிக்காமல் பழைய கதைகளை மீண்டும் – மீண்டும் பதிவிடுவது தளத்தில் வாடிக்கையாகி போனது துரதிர்ஷ்டம் என்றுதான் எமக்கு தோன்றுகிறது … இதைப்பற்றியெல்லாம் சிந்தித்து ஏன் இந்த நிலை என்கின்ற கேள்வியின் ஊடே சென்றதால் ஒருவித சலிப்பு எமக்கு ஏற்பட்டு இருப்பதால் எமது பின்னூட்டங்கள் பதிவிடுவதை குறைத்துக்கொள்ள மனது நினைக்கிறது … அவ்வப்போது இடுகையின் சாராம்சத்திற்கு ஏற்ப மற்ற ஊடக செய்திகளில் இருந்து மேற்கோள்களை மட்டும் பதிவிட தோன்றுகிறது — இது தவறாக கூட இருக்கலாம் …!!

      யாரையும் குறைகூற வேண்டிய வெறுப்பு எமக்கு கிடையாது — தளத்தின் மேன்மை நீடிக்க வேண்டும் என்பதே எமது கருத்து ..
      சொரணையற்று இருப்பதைவிட ” தொட்டாற்சிணுங்கியாக ” இருப்பதே எமக்கு ஏற்றது …!!
      இன்னும்இரண்டு நாட்களில் { 08 — 09 — 2019 } பத்தாண்டுகளை நிறைவு செய்கின்ற ” விமரிசனம் ” தளம் — மேலும் – மேலும் முன்னைப்போலவே அதன் சாரம் குன்றாமல் இருக்க எமது வாழ்த்துகள் …!!!

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      செல்வராஜன்,

      முதலில் – மனம் திறந்து உங்கள் குறைகளை வெளியிட்டதை
      வரவேற்கிறேன். அதற்காக எனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

      நானும் சில விஷயங்களை இங்கே வெளிப்படையாகச்
      சொல்ல விரும்புகிறேன்.. ஏனெனில், அவை – உங்களுக்கானது
      மட்டுமானதல்ல…..!!!

      நான் ஒவ்வொரு இடுகையையும் எழுதுவதற்கு எடுத்துக்கொள்ளும்
      முயற்சிகளை நீங்கள் மிக நன்றாக உணர்ந்து விவரித்திருக்கிறீர்கள்.
      இந்த அளவிற்கு எனக்கு சிரமம் இருக்கும் என்பதை வேறு யாரும்
      உணர்ந்திருப்பார்களா என்பது சந்தேகமே…

      ஓரிருவர் உணர்ந்திருக்கக்கூடும் என்றாலும் கூட, அதற்கான
      recognition- ஐ இதுவரை யாரும் கொடுத்ததில்லை. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      என் இடுகையில் போடும் படங்களின் அவசியத்தையும், பொருத்தத்தையும் கூட இவ்வளவு நுண்ணியமாக நீங்கள் கவனித்து ரசித்திருப்பது, உருவாக்கியவன் என்கிற முறையில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. இதை இந்த அளவிற்கு இன்று வரை
      யாரும் ஊன்றி கவனித்ததாக எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை கவனித்திருந்தாலும் கூட வெளிப்படையாகச் சொன்னதில்லை.
      நான் புகழ்ச்சியை விரும்புபவனில்லை… அதற்காக நான் எந்த
      முயற்சியும் மேற்கொள்வதில்லை.. ஆனால் recognition என்பது
      ஒவ்வொரு படைப்பாளிக்கும் கொடுக்கப்படும் ஒரு உற்சாக டானிக்.

      நீங்கள் இங்கே பதிவிடும் ஒவ்வொரு பின்னூட்டமும் பொருள்
      பொதிந்ததாகவும், தொடர்புடையதாகவும், இடுகையில் சொல்லப்படும் கருத்தை வலுப்படுத்தும் வகையில் கூடுதல்
      செய்திகளை தருவதாகவும் இருந்திருக்கின்றன… அவை இந்த
      தளத்திற்கு கூடுதல் வலு சேர்க்கின்றன என்பதால் – நான்
      எப்போதும் உங்கள் பின்னூட்டங்களை வரவேற்றிருக்கிறேன்.
      என் பாராட்டுதலகளைக்கூட பலமுறை வெளிப்படையாகவே இங்கே
      பதிந்திருக்கிறேன்.

      இப்போது இன்னொரு முக்கியமான விஷயத்திற்கு வருகிறேன்.
      நீங்கள் இங்கே பதிவிடும் பின்னூட்டங்கள், இந்த வலைத்தளத்தின்
      செயல்பாடுகளில் நீங்கள் ஏற்கும் பங்கு ஆகும். இது நேரடியாக
      இந்த வலைத்தளத்தின் மீதும், இங்கு எழுதப்படும் இடுகைகளின்
      மீதும் நீங்கள் செலுத்தும் ஈடுபாட்டின் வெளிப்பாடு… இதில் யாருடைய
      குறுக்கீடும் இல்லை…

      நான் இங்கு வரும் பின்னூட்டங்களை எப்படி கையாள்கிறேன்
      என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். நானும் மிகவும் உணர்வுபூர்வ
      மனிதன் தான். எனக்கும் கோப, தாபங்கள் இருக்கின்றன தான்.
      இருந்தாலும், இடுகை/பின்னூட்டங்களை பொருத்தவரையில் எனக்கென்று
      சில விதிமுறைகளை நானே வகுத்துக் கொண்டிருக்கிறேன்.

      1) சில சமயங்களில், நான் பொறுமையாக விளக்கங்கள் கூறுகிறேன்.
      2) சில சமயங்களில் கடுமையாக வாதிக்கிறேன்….
      3) சில சமயங்களில், மற்ற வாசக நண்பர்கள் பதில் கூறட்டும்
      என்று அவர்கள் பொறுப்பிற்கு விடுகிறேன்..
      4) சில சமயங்களில் அவற்றை Ignore செய்து விடுகிறேன்.
      5) நாகரிகமற்ற வார்த்தைகளை பயன்படுத்தியோ, அவதூறாகவோ,
      இந்த தளத்தை தங்கள் வசதிக்கு பயன்படுத்திக்கொள்ளவோ முயன்றால்
      அவற்றை delete செய்து விடுகிறேன். தொடர்ந்து இதே செயலில்
      ஈடுபடுபவர்களை தடை செய்து விடுகிறேன்.

      இப்போது உங்கள் குறைகள் குறித்து –

      உங்கள் பின்னூட்டங்களின் தொடர்ச்சியாக மற்றவர்கள் வெளியிடும் கருத்துப் பின்னூட்டங்களை பொருத்தவரை உங்களுக்கு
      3 வித Options இருக்கின்றன….

      1) நீங்கள் அதற்கும் விளக்கங்கள் கூறலாம்…
      2) மறுப்பு தெரிவித்து வாதிக்கலாம்…
      3) நீங்கள் விரும்பினால் அத்தகைய பின்னூட்டத்தை
      கடுமையாக விமரிசிக்கவும் செய்யலாம்.
      4) சுத்தமாக Ignore செய்துவிட்டு உங்கள் அடுத்த பணியை பார்க்கலாம்.

      – இவை எல்லாவற்றையும் விட்டு விட்டு, நான் இனிமேல் பின்னூட்டம்
      எழுத மாட்டேன் என்று நீங்கள் சொல்வது எனக்கு ஏற்புடையதாக இல்லை…

      -நீங்கள் சொரணையற்று கிடக்கவும் வேண்டாம்..
      தொட்டாற்சிணுங்கியாக இருக்கவும் வேண்டாம் –
      தீவிரமாக மறுவினை/எதிர்வினை
      ஆற்றுங்கள் என்று தான் சொல்கிறேன்.
      உங்கள் சேவையும் இந்த தளத்திற்கு அவசியம் தேவை.

      இந்த வலைத்தளம் யாருடைய தனியுடைமையும் இல்லை.
      நாம் அனைவரும் சேர்ந்து இயக்குவது தான் இந்த விமரிசனம் தளம்.
      இதன் தரத்தை பாதுகாத்து, இதனை மேலும் மேலும் உயரே கொண்டு
      செல்வதில் நம் அனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது.
      இதிலிருந்து யாராவது பிறழும்போது, நான் கண்டிப்பது போல –
      அவற்றை சுட்டிக்காட்டும் பொறுப்பு உங்களுக்கும் இருக்கிறது.
      யாராவது தவறாக பின்னூட்டம் எழுதினால் – மறுப்பு தெரிவியுங்கள்…
      கண்டித்து எழுதுங்கள்… ஒதுங்கிச் செல்லாதீர்கள்.

      இந்த பின்னூட்டம், முக்கியமாக உங்களுக்காக எழுதப்பட்டாலும்,
      இதில் சொல்லப்படும் கருத்துகள் – இந்த தளத்தின் வாசக நண்பர்கள்
      அனைவருக்குமே பொதுவானவை என்பதை நண்பர்கள் உணர வேண்டுகிறேன்.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    /தளபதியோட மகன், வரி ஏய்ப்பு செய்து வெளிநாட்டு கார் வாங்கினது// – தான் விரும்பிய வீட்டை, அதன் உரிமையாளரை விரட்டி உரிமையாக்கிக்கொண்டது, பிறகு ஜெ. முதல்வரானதும், எங்கே தன்மீது வழக்குப் போடுவாரோ என்று பயந்து, கூட 1 1/2 கோடி கொடுத்து வலுக்கட்டாயமாக வீட்டை எழுதிவாங்கியது.

    //மூன்றாவது கலைஞராக முளைக்க ஆசைப்படும் நீங்கள்// – 30-40 வருடமா அரசியலில் இருந்து இன்னமும் பேப்பரைப் பார்த்து தப்பும் தவறுமாகப் பேசும் ஒருவரின் மகன் மட்டும், எழுத்தாற்றலில் தொல்காப்பியராக இருக்கணும் என்று எதிர்பார்ப்பது நியாயமா? திமுக கட்சியின் மிக மிக சீனியரான டி.ஆர்.பாலுவுக்கே தமிழகத்தில் எந்த எந்த நதிகள் இருக்கு என்று இன்னமும் தெரியாமல், பிட்டைத் தொலைத்த பரீட்சை எழுதும் பெயில் மாணவனைப்போல மேலையும் கீழயும் பார்த்துக்கொண்டிருந்தார். பச்சைக் குழந்தை, நடிகர் திலகம் உதயநிதி மட்டும் எழுத்தாற்றல் பெற்றிருக்கவேண்டும் என்று சொல்லலாமா?

    //நீங்கள் முரசொலியை ஒரு நாளாவது படித்திருக்கிறீர்களா// – We dont read Tamil News papers. Only Hindi and English மொமெண்ட்.

    //வாழ்க குடும்ப கட்சி // – இதுவும் தவறுதான். அவங்க கட்சி நிர்வாகிகளே (அதாவது அல்லக்கைகள் அல்லது அடிமைகள்), உதயநிதியால்தான் திமுக காங்கிரஸ் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது, அதனால அவரை இளைஞர் அணிச் செயலாளராக ஆக்கணும் என்று கோரிக்கை வைத்தார்களே. நிர்வாகிகளின் கோரிக்கையைத்தான் ஸ்டாலின் ஏற்றுக்கொண்டுள்ளார். அதே நிர்வாகிகள், தயாநிதி மாறனை அல்லது ஆ.ராசாவை இளைஞர் அணிச் செயலாளராக ஆக்கணும் என்று சொல்லியிருந்தால் அதனை ஏற்றுக்கொண்டிருப்பார் ஸ்டாலின். அப்படித்தானே.

    • Selvarajan சொல்கிறார்:

     இதுபோன்ற — தனமான மறுமொழியை விரும்பாததால் தான் ” தளத்தின் பக்கமே ” வராமல் ஒதுங்கி இருக்கிறேன் .. திரு கா.மை எனது பெயரை குறிப்பிட்டதால் தான் பல நாட்களுக்கு பிறகு இன்றைய மறுமொழி அவருக்கு பதிவிட்டேன் — …!

 2. Subramanian சொல்கிறார்:

  இன்னுமொரு தகவல்:

  ”நயன்தாராதான் ஹீரோயினா வேணும்னு அடம்பிடிச்சீங்களாமே… ஏன்?”

  ”அவங்க எனக்கு நல்ல ஃப்ரெண்டுங்க. ‘ஆதவன்’ தயாரிக்கும்போது இருந்தே பழக்கம். ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ பண்ணும்போதும் அந்த நட்பு தொடர்ந்தது. ‘ஓ.கே. ஓ.கே’-வுக்கு அவங்களைத்தான் முதலில் கேட்டேன். ஆனா, ‘நான் இனிமே நடிக்கிறதா இல்லை’னு அப்ப சொன்னாங்க. இப்போ திரும்பிக் கேட்டப்ப, உடனே ஓ.கே. சொன்னாங்க.
  https://cinema.vikatan.com/humoursatire/28480–2

 3. raajshree_lk சொல்கிறார்:

  தமிழகத்திற்கு வெளியே வாழும் எங்களுக்கு கூட உதயநிதி பற்றி இங்கே சொல்லியிருக்கும் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றே தெரிகிறது. அப்படியிருக்க, ஒரு கட்சியை கூட நடத்தி அனுபவம் இல்லாத ரஜனிகாந்த், எப்படி தமிழ்நாட்டுக்கு முதல்வராக தகுதி உள்ளவர் என்று தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள் என்று மட்டும் புரியவே இல்லை!

  • புவியரசு சொல்கிறார்:


   raajshree_lk,

   உங்களுக்கு புரியவில்லை என்று தெரிகிறது அல்லவா ?
   அப்படியென்றால் உளறுவதை நிறுத்துங்கள்.

   ரஜினி அவர்களின் பெயரை இங்கே இழுப்பது அறிவீனம்.

 4. Raghavendra சொல்கிறார்:

  raajshree_lk
  புரியாது. இன்னிக்கி மட்டுமில்லை. என்னிக்குமே புரியாது.
  மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும்
  உங்களை மாதிரி மகா புத்திசாலிகளுக்கு இதெல்லாம் புரியவே புரியாது.

 5. Prabhu Ram சொல்கிறார்:

  இது தானே அந்த வீடியோ…?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி பிரபுராம்.

   நண்பர்களுக்கு,

   ஜெ.வீடியோவிற்கு கீழே இருக்கும் DMK @arivalayam –
   தொடரை click செய்து விரிவாக்கிப் பாருங்கள் –
   நினைத்து நினைத்து சிரிக்கச் செய்யும் அருமையான பின்னூட்டங்கள்.
   சில மீம்ஸ் மட்டும் கொஞ்சம் தரக்குறைவாக இருந்தாலும் –
   ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் திறமையை
   காட்டுகிறார்கள். அதிலும் அந்த வைகோ மீம்ஸ் இருக்கிறதே….
   அடக்கவே முடியவில்லை சிரிப்பை.
   பிரபுராம் இதை தனியே அனுப்பி இருந்தால் -முக்கியத்துவம்
   கொடுத்து தனி இடுகையாக்கி யாம் பெற்ற இன்பத்தை அனைவரும்
   பெறச்செய்திருக்கலாம். இருந்தாலும் பரவாயில்லை. அவசியம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 6. udayram சொல்கிறார்:

  உதயநிதிக்கு பதவி கிடைத்த இக்காலம்தான் எங்களுக்கு பொற்காலம். உங்களை மாதிரி அதிமுக ஸ்லீப்பர் செல்களை தலைவர் கதற விட்டிருக்கிறார்.

  வாரிசு இல்லாதால் நல்ல தலைமை இன்றி நாறுகிறது உங்கள் கட்சி, டயர் நக்கியே வாழ்ந்த கும்பல், நக்க டயரின்றி வாடுகிறது.

  ஆனால் தலைமுறை தலைமுறைக்கும் திமுகவின் இருப்பு உறுதி செய்யப்பட்டுவிட்டது. அதிமுக கும்பலுக்கு பொறமையில் நவ துவாரங்களும் எரிகிறது! மகிழ்ச்சி!

  எல்ல ஜெயா அடிமையும் கையறுநிலையில் நொந்து சாவுங்கள்

  • தமிழன் சொல்கிறார்:

   //நல்ல தலைமை இன்றி நாறுகிறது // – அப்படி இருக்கும்போதே எடப்பாடி அரசால் ஆட்சியைத் தக்க வைக்க முடிகிறதென்றால், கட்சி ஸ்பிலிட்டாக இருக்கும்போதே ஸ்டாலினால் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை என்றால், தனித்த ஒரு தலைவர் வந்தால் என்ன ஆகும்? எப்போதும்போல் திமுக எதிர்க்கட்சியாகத்தான் இருக்கணும். அப்படி என்றால் என்ன அர்த்தம்? தமிழக மக்கள் திமுகவை என்றும் நம்புவதில்லை என்றுதான் அர்த்தம்.

 7. Veera சொல்கிறார்:

  ella katchi sanyangalum kudumba arasiyallam.

 8. tamilmani சொல்கிறார்:

  திமுக ஒரு சங்கரமடம் அல்ல என்று ஒருவர் சொல்லிவிட்டு போனார்.
  இப்போது அவர் ,அவர் மகன் ,மகனுக்கு மகன் ,அடுத்தது கொள்ளுப்பேரன்
  என வாரிசு அரசியல் தொடங்கியாகி விட்டது. ஆனால் அதிமுகவிலாவது
  சாதாரண தொண்டர்களாக இருந்த பன்னீர் செல்வம்,பழனிச்சாமி முதல்வர்களாகி
  விட்டனர்.திமுகவில் தொண்டன் கடைசி வரையில் தொண்டன்தான் . குவாட்டரும்
  கோழி பிரியாணியும் தான் சாஸ்வதம் . ஒரிசாவில் அடி பம்பில் குளித்து சைக்கிளில் சென்ற ஒருவர் பிஜேபி எம் பி ஆகிவிட்டார். மத்தியில் ஒரு வழியாக காங்கிரஸ்
  வாரிசு அரசியலை அடித்து துரத்தியாகிவிட்டது (இத்தாலியா ? லண்டனா ?)
  தமிழ்நாட்டில் எப்போது வாரிசு அரசியல் முடிவுக்கு வரும் என்பதே மில்லியன்
  டாலர் கேள்வி . 2021 அதற்கு விடை சொல்லுமா?

 9. SELVADURAI MUTHUKANI சொல்கிறார்:

  ஏற்கனவே உதயநிதி கொடுத்த ஸ்டேட்மெண்டைப் பாருங்க!!!
  https://cinema.vikatan.com/humoursatire/28480–2
  ” ‘ஸ்டாலினை தி.மு.க. தலைவராக முன்மொழிகிறேன்’னு கருணாநிதி அறிவிச்சுருக்கார். அப்பாவுக்கு வாழ்த்துச் சொல்லிட்டீங்களா?”
  ”இன்னும் சொல்லலை… விகடன் மூலமா சொல்றேன்… கங்கிராட்ஸ் அப்பா! தலைவருடைய பையன் அப்படிங்கிற காரணத்துக்காக, கட்சியில் அப்பாவுக்கு எதுவும் சுலபமாக் கிடைக்கலை. ஒவ்வொரு கட்டத்துலயும் ஒரு சாதாரணக் கட்சி உறுப்பினர் சந்திக்கக்கூடிய எல்லா சிரமங்களையும் தாண்டித்தான் வந்திருக்கார். இப்போ தலைவரே அப்பாவைப் பத்திச் சொல்லியிருக்கார்னா, அது தான் பெரிய விஷயம். என்னைக்கூட ‘அடுத்த இளைஞர் அணித் தலைவர்’னு சொன்னாங்க. அதைக் கேட்டப்ப எனக்கே சிரிப்புதான் வந்துச்சு. கட்சிக் காக உழைச்ச எத்தனையோ பேர் இருக்காங்க. நியாயமா அவங்களுக்குத்தான் பதவி எல்லாம் போகணும்… போகும்!”

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.