இன்றைய அதிபயங்கர காமெடி ….


முகத்தில் என்ன ஒரு தேஜஸ் வழிகிறது…!!! என்னவொரு பாவம்.. ஆனந்தம்.. பரமானந்தம்.. நித்தியானந்தம்….!!! இவர் கொஞ்ச காலம் முன்னரே வந்திருந்தால் – சிவாஜிக்கு சான்சே கிடைத்திருக்காது ….!!!

நேற்றைய தினம், தனது பிடதி ஆசிரமத்தில்
ஸ்ரீலஸ்ரீ நித்யானந்த சுவாமிகள்
பேசிய வீடியோ ஒன்று கீழே –

அதில், “சூரிய உதயத்துடன்தான் நமது நாள் தொடங்குகிறது.
இன்று எத்தனை பேர் கூர்ந்து கவனித்தீர்கள் எனத் தெரியவில்லை..

சூரியன், இன்று மிகத் தாமதமாகவே உதித்தது.
இன்று காலை நான் தியானத்தை முடிக்க சிறிது காலதாமதம்
ஆகிவிட்டது…

நான் தியானத்தை முடிக்கும் வரையில் சூரியனை உதிக்கக் கூடாது
என கட்டளையிட்டேன். அதன்படி இன்று சூரியன் 40 நிமிடங்கள்
தாமதமாகவே உதித்தது. இன்று, பிடதியில் சூரியன் உதிக்கும்
நேரத்தை நீங்கள் கூகுளில் தேடிப் பாருங்கள்…!!!!
அதில் குறிப்பிட்ட நேரத்தைவிட 40 நிமிடங்கள் தாமதமாகத்தான்
சூரியன் உதித்திருக்கும். இதற்கு நான் உத்தரவிட்டதுதான் காரணம்”
என்று பேசி இருக்கிறார்.

வீடியோவில் – நித்தியானந்தா கூறியதைக் கேட்டதும் புல்லரித்துப்போன
அவரது பக்தர்களும், பக்தைகளும் கைதட்டி ஆரவாரம்
செய்கிறார்கள்…

——————————————————–

ஒரு சந்தேகம்….

நாம் தான் இந்த ‘மஹா அவதார’த்தை
சரியாகப் புரிந்துகொள்ளத் தவறி அவருக்கு
“அநீதி” இழைத்து விட்டோமோ…?

அவருக்கு கொடுக்க வேண்டிய “மரியாதையை”
ஆரம்பத்திலேயே ” கொடுக்கத் தவறி விட்டோமோ “… ?

இதற்கு “பிராயச்சித்தம்” எதுவும் இப்போது செய்ய முடியாதா…?

——————————-
பின் குறிப்பு – இந்த மஹானுடைய ஆசிரமத்தில் 4-5 நாட்கள்
தங்கி இருந்தால், நிறைய சுவாரஸ்யமான விஷயங்களை
அனுபவித்து, தெளிவு பெறலாமென்று தோன்றுகிறது.

அவர் கூட, அந்த ஆசிரமத்தில் சில நாட்கள் தங்கியிருக்க
விதிமுறைகள், கட்டணங்கள் பற்றி நண்பர்கள் யாருக்காவது
தெரியுமா…? தெரிந்தால்,

அல்லது ஏற்கெனவே யாரேனும் இப்படித்தங்கிய அனுபவம்
பெற்றிருந்தால் – அது பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்…!!!

.
———————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to இன்றைய அதிபயங்கர காமெடி ….

  1. புதியவன் சொல்கிறார்:

    //இந்த மஹானுடைய ஆசிரமத்தில் 4-5 நாட்கள் தங்கி இருந்தால், நிறைய சுவாரஸ்யமான விஷயங்களை அனுபவித்து, தெளிவு பெறலாமென்று தோன்றுகிறது// – ரொம்ப தாமதமான ஆசை கா.மை சார். நித்தியானந்த ஸ்வாமி, நடிகை ரஞ்சிதா, சன் தொலைக்காட்சி காணொளிக்கு அப்புறம், கணிணி பற்றிய அறிவு உள்ள யாரையும் ஆசிரமத்தில் அனுமதிப்பதில்லை. அதிலும் கா.மை சாரா? வாய்ப்பே இல்லை.

    இந்தக் காணொளி நான் பார்த்தேன். என்னைக் கவர்ந்தது, அவரைச் சுற்றி இருக்கும் 150+ மனிதர்கள். நல்லா கவனிச்சுப் பார்த்தீங்கன்னா, இவர்களில் பெரும்பான்மையினர் மிகவும் படித்தவர்களாக இருப்பார்கள்.

    இவர்களே இப்படி என்றால், ‘நம் தலைவர் யோக்கியசிகாமணி’ என்று நம்பிக்கொண்டிருக்கும் திமுக, மதிமுக மூடர்களை என்னவென்று சொல்வது?

  2. சேகரன் சொல்கிறார்:

    அப்படியே மழையையும் பொழிய சொல்லுங்க

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.