பிரமிப்பைத் தருகிறார் அமைச்சர் செல்லூர் ராஜு…!!!


இப்போதெல்லாம் தமிழக சட்டமன்ற நிகழ்வுகள் –
மிகவும் சுவாரஸ்யமாக இருக்கின்றன.

சிலரைப்பற்றி நாம் சரியாக புரிந்து கொள்ளத் தவறிவிடுகிறோம்
என்பதை நேற்றைய நிகழ்வு ஒன்று புலப்படுத்துகிறது.

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவர்களைப்பற்றி
ஊடகங்கள் ஏற்படுத்தி வந்த பிம்பம் தான் நமது மனதில்
படிந்திருக்கிறது.

ஆனால், இதற்கு நேரெதிராக, அவர் எந்த அளவிற்கு
சாமர்த்தியமானவர் என்பதை நேற்று தமிழக சட்டமன்றத்தில்
நிகழ்ந்த இந்த உரையாடல்கள் புலப்படுத்துகின்றன.

அமைச்சரைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி அவர்கள்
விவாதத்தை முடித்து வைக்கும்போது கூறியவை
இன்னமும் பிரமாதம்…!!!

சிரிப்பை அடக்க முடியவில்லை.

உண்மையில் இதைப் படித்து விட்டு நான் பிரமிப்பில் ஆழ்ந்து
விட்டேன்… சாதாரணமாக எதிர்க்கட்சிக்காரர்கள் தான் – அதுவும்
இத்தனை ஆண்டுக்காலங்களாக, திமுக தான் –
ஆளும் கட்சியை திணற அடிப்பது வழக்கம்.

இப்போது நடப்பது அதற்கு நேரெதிராக இருக்கிறது.
அனுபவம் மிக்க, எதிர்க்கட்சி துணைத்தலைவர் திருவாளர்
துரைமுருகன் அவர்களே – சமாளிக்க முடியாமல் திணறுகிறார்.

சிரிப்புக்கு தயாராகுங்கள் ….

நேற்றைய நிகழ்ச்சிகள் குறித்து தினமலர் நாளிதழில்
வெளிவந்துள்ள செய்தி –

———————————————————————–
( https://www.dinamalar.com/news_detail.asp?id=2311921 )

சட்டசபையில், கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜு
கூறிய குட்டிக்கதை:

ஒருவர், தன் மகளுக்கு பல இடங்களில், மணமகன் தேடியும்
கிடைக்கவில்லை. இறுதியாக, புரோக்கர் வந்து, ஒரு மணமகனின்
ஜாதகத்தை கொடுத்தார். ‘இதில், 10 பொருத்தத்திற்கு, எட்டு
பொருந்துகிறது’ என்றார். வேறு வழியின்றி, தன் மகளுக்கு
அந்த வரனை முடிக்க, தந்தை சம்மதித்தார்.

மணமேடையில், புரோகிதர், மணமகன் கையில்,
பொரி கொடுத்தார்.

அதை, தன் வாயில் போட்டு, மணமகன் மென்று விட்டார்.
‘பொரியை வாயில் போடக் கூடாது; தீயில் போட வேண்டும்’
என்று, புரோகிதர் கூறினார்.

உடனே, தன் வாயில் இருந்த பொரியை, தீயில் துப்பினார்,
மணமகன். புரோகிதர், அவரை திட்டினார்.

பின், தாலியை கொடுத்து, அதை பெண் கழுத்தில்
கட்டுமாறு கூறினார்.

அதற்கு மணமகன், ‘நான் எதை செய்தாலும், நீங்கள் குற்றம்
சொல்வீர்கள்; நீங்களே கட்டி விடுங்கள்’ என தாலியை,
புரோகிதரிடம் கொடுத்தார். இதை பார்த்து, அதிர்ச்சி அடைந்த
மணமகளின் தந்தை, திருமணத்தை நிறுத்தி விட்டார்.

வரன் பார்த்த புரோக்கரை,
மணமகளின் தந்தை கடிந்துக் கொண்டார்.

அதற்கு புரோக்கர், ‘நான் தான், அப்போதே மணமகனுக்கு,
இரண்டு பொருத்தம் இல்லை என்று சொன்னேனே…

அதில், ஒன்று சொல்புத்தி;
மற்றொன்று சுயபுத்தி’ என்று கூறினார்.

இந்த கதை தத்துவப்படி, சிலருக்கு மணமேடை அமையும்;
மணமகள் அமையும். திருமணம் மட்டும் நடக்காது.
அவர் யார் என்பதை, உங்கள் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்….!!!
இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இந்த கதைக்கு, தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் எழுந்து,
கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

அப்போது நடந்த விவாதம்:

எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்: ஒருவருக்கு,
10 பொருத்தமும் பொருந்தி வரக் கூடாது. அவ்வாறு வந்தால்,
மணமகன் இறந்து விடுவார் என, ஜாதகத்தில் கூறுவர்.
எனவே, எட்டு பொருத்தம் இருந்தால் போதும்.

முதல்வர்: நீங்கள் கடவுள் பக்தி இல்லாதவர்கள்;
ஜாதகத்தையும் நம்ப போவது இல்லை. எங்களுக்கு பக்தி உண்டு; ஜாதகத்தையும் நம்புகிறோம்.
அதைத் தான் அமைச்சர், அழகான கதையாக கூறி இருக்கிறார்.

துரைமுருகன்: ஜாதகம், எங்களுக்கு பார்த்தோமோ, இல்லையோ,
உங்களுக்கு பார்த்து விட்டோம்.

முதல்வர்: எங்களுக்கு, ஜாதகம் நன்றாக இருக்கிறது.
அதனால் தான், நாங்கள் ஆட்சியில், நல்ல நிலையில் உள்ளோம்.
ஜாதகம் சரியில்லாததால் தான்,

– நீங்கள் மேலேயும் இல்லாமல்,
கீழேயும் இல்லாமல்,
இடையில் தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள்… 🙂 🙂 🙂

இவ்வாறு, விவாதம் நடந்தது.

.
—————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to பிரமிப்பைத் தருகிறார் அமைச்சர் செல்லூர் ராஜு…!!!

 1. புவியரசு சொல்கிறார்:

  நீங்கள் சொல்வது போல், அமைச்சரை வெறும் காமெடியாகவே
  தான் நாமெல்லாரும் நினைத்திருந்தோம். ஆனானப்பட்ட
  துரைக்கே தண்ணி காட்டுகிறாரே.

  .

 2. Prabhu Ram சொல்கிறார்:

  ஜெ. மறைந்த பிறகு, அதிமுக அரசு 3,4 மாதங்களுக்கு மேல்
  தாக்குப் பிடிக்காது என்றூ தான் தோன்றிய்து.
  ஆனால், எல்லா பிரச்சினைகளையும் தாண்டி, எடப்பாடி
  தாக்குப் பிடித்து வருகிறார். அரசின் மீது நிறைய ஊழல் புகார்கள்
  எழுப்பப்பட்டாலும் கூட, எடப்பாடியாருக்கு ஒருவித நிர்வாகத் திறமை
  இருக்கிறது என்று தான் தோன்றுகிறது. திமுகவுக்கு தண்ணீ காட்டுகிறாரே ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.