புரட்சி எம்.எல்.ஏ… உருட்டுக்கட்டைக்கு பதிலாக கிரிக்கெட் பேட் –


நம்ம ஊரில் எல்லாம் ரவுடி அரசியல்வாதிகள்,
வீச்சரிவாள், உருட்டுக்கட்டைகளைத் தானே
பயன்படுத்துவார்கள்…. ?

இந்த விஷயத்தில் அகில இந்தியாவுக்கும் ஒரு புதிய
அணுகுமுறையை கற்றுக் கொடுத்திருக்கிறார் மத்திய பிரதேச
பாஜக எம்.எல்.ஏ. ஒருவர்…

இது பற்றிய ஒரு இடுகை நேறறு இந்த தளத்தில்
வெளிவந்தது… நண்பர்கள் வசதிக்காக இந்த இடுகையின் கீழே
அது மீண்டும் பதிப்பிக்கப்படுகிறது.

நேற்றிரவு டெல்லியில் நடந்த பாஜக உள்கட்சிக் கூட்டத்தில்
மோடிஜி இதை கண்டித்து பேசியதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

———————————-

ஆனால், அமீத் ஷா அவர்களை மீறி மோடிஜியால்
செயல்பட்டு விட முடியுமா என்ன…?

———————————–

அந்த கூட்டத்திற்கு பின்னர் வெளிவந்திருக்கும் செய்தி இது –

……………………………………….

The MLA was given a rousing welcome and garlanded
by supporters when he stepped out of prison on Sunday
after being granted bail. His Father and one of the
BJP National Secretaries, Kailash Vijayavargiya was
present too in Indore that day.

Modi reportedly said the party should not care about
losing one MLA. “What will happen if we lose
one MLA?” he asked.

.
None in the party,
however, spoke in public
about action against Akash
– despite Modi’s strong words.

.
Kailash is known to be close
to party chief Amit Shah,
now also the country’s home minister.

.
This was not the first time Modi had used strong words
of disapproval against wayward party colleagues.
Before the Lok Sabha election result, Modi had said
he would never be able to pardon Pragya Singh Thakur
for calling Mahatma Gandhi’s assassin Nathuram Godse
a “patriot”.

Party chief Shah had promised
firm action against Thakur,
then the BJP candidate in Bhopal
and now an MP.

NO ACTION HAS BEEN TAKEN YET.
(by Party Chief…? )

————————————————————

முந்தைய இடுகை –

……………

அரசு அதிகாரிகளை கிரிக்கெட் மட்டையால் அடிக்கும் –
பாஜக செல்லப்பிள்ளை…!!!


இது பிள்ளை –


இது அப்பா –

….

கைலாஷ் விஜய்வர்கியா என்பவர் பாஜகவின்
தேசிய செயலாளர்களில் ஒருவர்.
அவரது மகன் ஆகாஷ் விஜய்வர்கியா, மத்திய பிரதேசத்தில்,
இந்தோர் நகரின் பாஜக எம்.எல்.ஏ.

தங்கள் கடமையைச் செய்யும் அரசு அதிகாரிகளை –
ஆகாஷ் விஜய்வர்கியா என்கிற பாஜக
அகில இந்திய செயலாளரின் செல்லப்பிள்ளை –
கடந்த ஜூன் 26 – அன்று,
கிரிக்கெட் மட்டையால் அடிக்கும் காட்சி, வட இந்திய
மீடியாக்களில் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது.

……….

………

இந்த செல்லப்பிள்ளை, போலீசால் கைது செய்யப்பட்டு,
பின் ஜாமீனும் பெற்று வெளியிலும் வந்து விட்டது.
அந்த செல்லப்பிள்ளைக்கு உள்ளூர் பாஜகவினர்
மாலை போட்டு வரவேற்பு கொடுத்து, பட்டாசுகள் வெடித்து –
கொண்டாடினர்.

இது நடந்தது முந்தாநாள் ஞாயிற்றுக்கிழமை அன்று…

இந்த வீடியோவையும் காணாத கண்ணென்ன கண்ணா…?

கொஞ்சம் வித்தியாசமாக –
இந்த செய்தியை சுந்தரத் தெலுங்கில் கேட்போமே –
எவ்வளவு இனிமையாக இருக்கிறது….!!!

BJP MLA Akash Vijayvargiya Gets Hero’s Welcome
After Releasing On Bail | Teenmaar News | V6 News

இந்தப்பிள்ளை ஏன் இப்படியெல்லாம் செய்கிறது என்று
தோன்றுகிறதா…?
அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறார் என்று
ஊர் சொல்ல வேண்டாமா…?
25 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த பிள்ளையின் அப்பர்ர்ர்ர்ர் –
செய்தது புகைப்படமாக தொங்குகிறது கீழே –
(அந்த காலத்தில் வீடியோக்கள் அவ்வளவு சகஜமில்லையே …!!!)

.
———————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.