பரபரப்பில் இந்தியாவின் சந்திரயான்-2 …!!!மிகுந்த பரபரப்பு, உற்சாகம், ஆவலுடன் –
இந்தியர்கள் மட்டும் அல்லாமல்,
உலகின் பல பகுதிகளிலிருந்தும்
விஞ்ஞானிகளும், பொதுமக்களும்
ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்
இந்தியாவின் “சந்திரயான்-2” பயணம் இன்னும்
சில நாட்களில் – ஜூலை 15-ந்தேதியன்று
துவங்குகிறது.

அதைப்பற்றிய முழு விவரங்கள் …

– இது இஸ்ரோ நிர்வாகம் வெளியிட்ட
ஆதாரபூர்வமான அனிமேஷன் வீடியோ –

– கீழே இன்னொரு வீடியோ அதைப்பற்றிய
முழு விவரங்களும் – தமிழில் …..

….

….

இந்த திட்டம் முழு வெற்றி அடைந்து
உலக அரங்கில் இந்தியாவுக்கு
பெருமை தேடித்தருவதோடு,
ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் –
எதிர்காலத்தைப் பற்றிய
பல புதிய சிந்தனைகளையும், நம்பிக்கைகளையும்
கொண்டு வரும் என்று நம்புவோம்…

இந்த திட்டம் வெற்றி பெற வேண்டுவோம்..
வாழ்த்துவோம்.

.
————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to பரபரப்பில் இந்தியாவின் சந்திரயான்-2 …!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  “முதல்ல மழை பெய்யும், தள்ளிப் போடலாம்னு சொன்னாங்க. நான் கூடாதுன்னு சொல்லிட்டேன். எவ்வளவோ அறிவியல் முன்னேற்றம் வந்தாச்சு. அதனால முனைல ஒரு பெரிய குடையை வேணும்னா கட்டுங்கன்னு சொன்னேன். அப்புறம் இன்னொருத்தர் வந்து, இப்போ விட்டோம்னா சந்திரனுக்கு பின்பக்கம் போய் இறங்கும்னு சொன்னார். நான் கூடாது, இருட்டுல இறங்கினா அப்புறம் எப்படி நமக்கு படம் எடுத்து அனுப்பும்னு சொல்லி சரியான நேரத்துல ஏவுகணையை ஏவச் சொன்னேன். என்னாலதான் இப்போ சந்திரன்ல நாம் சந்திரயான் ஏவியிருக்கோம், இதைத் தடுக்க பாகிஸ்தான் நினைத்த சதியையும் முறியடித்திருக்கோம்”

  இந்த மாதிரி ஹிந்தி பேச்சைக் கேட்க உங்களுக்குக் கொடுத்துவைக்கலையே கா.மை. சார்… தேர்தல் காலமா இருந்தால் இதையும் கேட்டு, அதனையும் ஒரு இடுகையாக்கியிருக்கலாம்.

  NB: சந்திரனின் ஒரே பகுதியைத்தான் நாம் பார்க்கிறோம்னு எனக்குத் தெரியும்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   என்ன … திடீரென்று கட்சி மாறி விட்டது போல்
   தெரிகிறதே… 🙂 🙂

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. Ravi சொல்கிறார்:

  இது போல அறிவியலில் அக்கறை இல்லாமல் தமிழ்நாட்டில் நியூரினோ எதிர்ப்பு, ராக்கெட் ஏவு மையம் அமைக்க எதிர்ப்பு என எல்லா அறிவியல் முன்னேற்றத்திற்கும் எதிர்ப்பு கிளம்புகிறது. ஆந்திராவோ நியூரினோ லேபிற்கு இடம் ஒதுக்கி ரெடியா இருக்கின்றது, எப்படா அண்ணன் சாவான் திண்ணை காலியாகும் என்று.

  இங்கோ கீழடியில் பல வருடத்திற்கு முன்னாடி செத்த முப்பாட்டன் எலும்பை தோண்டி எடுத்து பிராண்டி அதிலேயே புளகாங்கிதப் பட்டுக்கொள்ளுகிறார்கள். சும்மாவா சொன்னார் பெரியார் தமிழன் காட்டுமிராண்டி கும்பல் என்று.

  • Karthik சொல்கிறார்:

   This is too much.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   ரவி,

   இதைச் சொல்ல வருந்துகிறேன்.
   உங்கள் வாதம் முட்டள்தனமானது;
   எதையும் எதையும் முடிச்சுப் போடுகிறீர்கள்.
   இதற்கும் கீழடி ஆராய்ச்சிக்கும் என்ன சம்பந்தம்.. ?

   நமக்கு அறிவியல் / விஞ்ஞான வளர்ச்சி எவ்வளவு
   முக்கியமோ, அதை விட முக்கியமானது,
   நமது சரித்திரத்தையும், பண்பாட்டையும்
   தெரிந்து கொள்வதும், போற்றிப்பாதுகாப்பதும்.

   உங்களது பின்னூட்டத்தை இங்கேயிருந்து நான் விலக்காமல்
   வைத்திருப்பது, உங்களைப்போன்று வேறு யாராவது
   நினைத்திருந்தால் – அது தவறு என்று சொல்வதற்காக
   மட்டுமே.

   மற்றபடி உங்கள் பின்னூட்டம் இங்கே பிரசுரத்திற்கு
   தகுதியானதே இல்லை.

   .
   -காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.