இப்படி அபூர்வமான ஒரு நீதியரசர்… நம் தமிழ்நாட்டில் …..!!!


ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி,

தன்னைத் தானே சுயபரிசோதனை செய்துகொண்டு,
தான் செய்து முடித்த பணியைப்பற்றியும்,
செய்யத்தவறிய பணிகளைப்பற்றியும் –

வெளிப்படையாக – சுய-விமரிசனம் செய்துகொள்வது
இந்திய சரித்திரத்தில் கேள்விப்படாத விஷயம்…

தமிழகம் முதன்முறையாக அத்தகைய நீதிபதி ஒருவரை
இப்போது காண்கிறது…

கடந்த வெள்ளியன்று ( 28/06/2019) சென்னை உயர்நீதிமன்ற
நீதிபதியாக பணியாற்றும் ஜஸ்டிஸ் ஜி.ஆர்.சுவாமிநாதன்
அவர்கள் பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கு ஒரு அறிக்கை
அனுப்பி இருக்கிறார்.

அதில், 28/06/2017 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக
பதவியேற்றது முதல் 27/06/2019 முடிய, கடந்த 2 வருட காலத்தில்,
தன் முன் விசாரணைக்கு வந்த வழக்குகளின் எண்ணிக்கை,
தன்னால் விசாரணை முடித்து தீர்ப்பு கூறப்பட்ட வழக்குகளின்
எண்ணிக்கை, இன்னமும் தீர்ப்பு கூறப்படாமல் காத்திருக்கும்
வழக்குகளின் எண்ணிக்கை, அவற்றில் தீர்ப்பு கூறுவதில்
ஏற்பட்டிருக்கும் காலதாமதத்திற்கான காரணங்கள் ஆகியவற்றை
மிக வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்.

தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில்
பணியாற்றும் அவர், தனியே அமர்ந்து, விசாரித்து தீர்ப்பளித்து
முடித்து வைத்த வழக்குகளின் எண்ணிக்கை -18,944.
மற்றொரு நீதிபதியுடன் இணைந்து (டிவிஷன் பென்ச்) தீர்ப்பளித்து
முடித்து வைத்த வழக்குகளின் எண்ணிக்கை – 2,534.
ஆக மொத்தம் – 2 வருடங்களில் 21,478 வழக்குகள்…

நமது நீதிமன்றங்களின் தற்போதைய வேகம் மற்றும் நடைமுறை
வழக்கங்களை கருத்தில் கொண்டு பார்க்கும்போது –
இந்த எண்ணிக்கை நிச்சயம் பாராட்டத்தக்க,
பிரமிப்பூட்டும் எண்ணிக்கை தான்.

மேலும், வழக்குகளில் தாமதத்தை தவிர்க்க,
பார் கவுன்சில் உறுப்பினர்களான வழக்கறிஞர்களுக்கு
அவர் சில வேண்டுகோள்களையும் முன்வைத்திருக்கிறார்.

“அநாவசியமாக hearing ஐ மீண்டும் மீண்டும் – தாவா கேட்டு
ஒத்தி வைக்க முயற்சி செய்யாதீர்கள். வழக்கு நடைபெறும்
என்று முன் கூட்டியே அறிவிக்கப்பட்ட தேதிகளை அடிப்படையாக
வைத்து, உங்கள் வழக்குகளை விவாதிபதற்கு தயாராக
வாருங்கள்.

ஒத்தி வைப்புகள் மிக அபூர்வமாகவே இருக்க வேண்டும்…
வழக்கறிஞர்கள் ஒத்துழைத்தால், இன்னமும் விரைவாக பல
வழக்குகளை முடித்து வைக்கலாம்…”

– ” அற்புதம்-
நீங்கள் எங்களுக்கு கிடைத்தது –
எங்கள் அதிர்ஷ்டம் “…

இந்த நீதியரசரை பாராட்டுவதற்கு எனக்கு இதற்கு மேல்
வார்த்தைகள் கிடைக்கவில்லை…

இறைவன் அவருக்கும், அவரது இல்லத்தினருக்கும்
நீண்ட நல் வாழ்வையும், இனிய இல்லறத்தையும் –
அளிக்க வேண்டுமென்று வேண்டுவோம்…

———————————————————————————

கீழே – ஜஸ்டிஸ் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள்
பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கு எழுதியுள்ள
திறந்த மடலில் இருந்து –

Addressing members of the Bar, he wrote, “I took oath
as a Judge on 28.06.2017 and I complete two years today.
I believe in judicial accountability and I therefore
present the performance card below. It reflects the
final disposal of the main cases alone.”

As per the note, the judge, who currently sits at the
Madurai Bench of the Madras High Court, has disposed of
21,478 cases of which he held a single bench in 18,944
cases and 2,534 cases were dealt with sitting in division
bench.

All judgements in open court

Justice GR Swaminathan said that he was releasing almost
75 cases from his board, where he had reserved judgement.
“I had reserved a number of matters and I find it difficult
to prepare the orders without the benefit of rehearing.
But then, I am not supposed to retain the bundles once the
cycle is over. Therefore,

with heavy heart I am releasing almost 75 cases from
my board. I, with folded hands convey my apologies to the
counsel and to the concerned litigants for not giving
disposal to those cases.”

He vowed to dictate all judgements in open court henceforth
to avoid such a situation in the future.

‘My orders too cryptic’

In a surprisingly candid confession, Justice GR Swaminathan
said, “I have introspected and I wonder if things could have
been a little different and far better. My conscience says
‘yes’. I have been impatient, sometimes even rude. I

hope to put on better behaviour henceforth. Many of my
orders have been too cryptic.”

Further, he requested members of the Bar to appreciate that
he was ‘bent on disposals’ since pendency was heavy. He stated
that he could not write long orders. “But then, the essential
facts ought to have been stated. There is no excuse for
skipping them over,” he pointed out. He also cited his
difficulty in correcting draft orders as the reason for the
undue delay in dispatching order copies. He wrote,
“I hope to evolve a mechanism to overcome the shortcomings.

When I enter the third year from tomorrow, I do hope to turn
a new leaf.”

Landmark cases

Justice GR Swaminathan drew attention to a few cases, stating,
“You may be aware that atleast 4 of my decisions rendered during
these two years (Cartoon case, Transgender Judgment, decision on
the privacy rights of prisoners and the Sri Lankan Refugees’ case)
have attracted wide spread attention and notice.”

The landmark cases included rulings where the court upheld
the right of a cartoonist to be able to work without any inhibition,
the right of transgender persons to marry, the right of
prisoners and their spouses to have unmonitored conversations.

In June this year, Justice GR Swaminathan issued directives to
the Centre on granting citizenship to 65 Sri Lankan Tamils
who had fled to India after the Black July riots of 1983.
“The camp conditions are hellish. One must read Pathinathan
who is associated with the literary magazine ‘Kalachuvadu’ in
this regard. Even if one’s heart is made of stone,
it would still melt under the searing heat of reality.”
the court had observed.

‘Bad advocacy breeds bad judgements’

Seeking the cooperation of members of the Bar, the judge
asked advocates to reflect on how best they could assist him.
Offering up some practical tips, he wrote, “Once my roster is
announced, you can immediately be ready by contacting your
clients. You need not wait for the case to be listed and then
tell me in the court that you want adjournment. You have to
get ready with instructions from your clients. You can prepare
proper synopsis with dates and events and relevant citations
and pass on to the court officer a day in advance.

You should not take more than one adjournment.
I believe I can write a good judgment only if your advocacy
is good. Bad advocacy will breed only bad judgment.”

Seeking suggestions on how he could serve the institution
and the cause of justice better, Justice GR Swaminathan asked
members of the Bar to make written submissions to the
court officer. “I am critically dependent on you. I can
touch my conscience and tell you that I have been very happy
with the way each and every one of you have conducted
yourselves before me. My Pranams to one and all.” he added.

.
———————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to இப்படி அபூர்வமான ஒரு நீதியரசர்… நம் தமிழ்நாட்டில் …..!!!

 1. Subramanian சொல்கிறார்:

  உண்மையிலேயே மிக அபூர்வமாகவே இத்தகையோரை பார்க்க முடியும்.
  பாராட்டிற்குரியவர். இரண்டு வருடங்களிலேயே இத்தனை என்றால், எதிர்காலத்தில் இவர் இன்னும் பெரிய அளவில் செயல்படுவார் என்று நம்பலாம்.

 2. கரந்தை ஜெயக்குமார் சொல்கிறார்:

  போற்றுதலுக்கு உரியவர்

 3. புதியவன் சொல்கிறார்:

  இந்தச் செய்திக்கு சம்பந்தமில்லாமல் ஒரு பின்னூட்டம் இட எண்ணுகிறேன்.

  சில வருடங்களுக்கு முன்னால், என் உறவினரோடு வெகு அனுபவம் வாய்ந்த வழக்கறிஞரை சந்திக்கச் சென்றிருந்தேன். அவர் என் உறவினரின் வெகு நெருக்கமானவர். சும்மா பேச்சுவாக்கில், என்னுடைய இடத்தில், பக்கத்து வீட்டுக்காரர்கள், தங்கள் வீடு கட்டும்போது, கல்லை நகர்த்தி நிறைய இடத்தை எடுத்துக்கொண்டார்கள். இதற்கெல்லாம் வழக்கு போடலாமா என்று கேட்டேன். அதற்கு அவர், எல்லோரும் இந்தியக் குடிமகன்கள், சகோதரர் என்றுதானே நாம் பேசுகிறோம். அதுனால அவங்கள்டயே நேரடியா பேசித் தீர்த்துக்கொள்வதுதான் சரியான அணுகுமுறை. அதுவும் தவிர, பெரிய குற்றம் என்று இல்லாவிட்டால் சமரசமாகத்தான் போகணும் என்று சொல்லி சில நிகழ்வுகளைச் சொன்னார். அவர் இன்னொன்றும் என் உறவினரிடம் சொன்னது, என் ஒரே பெண், அவள் தானே படித்துக்கொண்டிருக்கிறாள், அவளுக்காக எதையும் சேமிக்க வேண்டாம், அவள் வாழ்க்கைத் தேவையை அவளே பார்த்துக்கொள்வார் என்று சொல்லிவிட்டார். அதனால் எனக்கு எப்போவும் நேர்மையாகவும், அதிக ஆசைப்படாமல் இருப்பதும் எளிதாக இருக்கிறது என்றார். அவரிடம் பேசும்போதே இத்தகைய நல்லவராகவும், பிரின்சிபிள்டாகவும் இருக்கிறாரே என்று நினைத்தேன். அடுத்த சில வருடங்களில் அவர் உயர்நீதிமன்ற நீதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற செய்தியைப் படித்தேன்.

  நல்லவர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். துரதிருஷ்டவசமாக, மக்கள் விகிதாச்சாரத்தைப் போலவே, நல்லவர்களும் குறைவான சதவிகிதம்தான் இருக்கிறார்கள்.

 4. Giri Alathur சொல்கிறார்:

  பார் கவுன்சில் உறுப்பினர்களான வழக்கறிஞர்களுக்கு ஓய்வு பெறும் நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் வைத்த
  வேண்டுகோள் உண்மையிலேயே பாராட்ட பட வேண்டியதே.

  ஒத்தி வைப்புகள் (வாய்தா) மிக அபூர்வமாகவே இருக்க வேண்டும்…
  வழக்கறிஞர்கள் ஒத்துழைத்தால், இன்னமும் விரைவாக பல
  வழக்குகளை முடித்து வைக்கலாம்…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.