அரசு அதிகாரிகளை கிரிக்கெட் மட்டையால் அடிக்கும் – பாஜக செல்லப்பிள்ளை…!!!


இது பிள்ளை –


இது அப்பா –

….

கைலாஷ் விஜய்வர்கியா என்பவர் பாஜகவின்
தேசிய செயலாளர்களில் ஒருவர்.
அவரது மகன் ஆகாஷ் விஜய்வர்கியா, மத்திய பிரதேசத்தில்,
இந்தோர் நகரின் பாஜக எம்.எல்.ஏ.

தங்கள் கடமையைச் செய்யும் அரசு அதிகாரிகளை –
ஆகாஷ் விஜய்வர்கியா என்கிற பாஜக
அகில இந்திய செயலாளரின் செல்லப்பிள்ளை –
கடந்த ஜூன் 26 – அன்று,
கிரிக்கெட் மட்டையால் அடிக்கும் காட்சி, வட இந்திய
மீடியாக்களில் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது.

……….

………

இந்த செல்லப்பிள்ளை, போலீசால் கைது செய்யப்பட்டு,
பின் ஜாமீனும் பெற்று வெளியிலும் வந்து விட்டது.
அந்த செல்லப்பிள்ளைக்கு உள்ளூர் பாஜகவினர்
மாலை போட்டு வரவேற்பு கொடுத்து, பட்டாசுகள் வெடித்து –
கொண்டாடினர்.

இது நடந்தது முந்தாநாள் ஞாயிற்றுக்கிழமை அன்று…

இந்த வீடியோவையும் காணாத கண்ணென்ன கண்ணா…?

கொஞ்சம் வித்தியாசமாக –
இந்த செய்தியை சுந்தரத் தெலுங்கில் கேட்போமே –
எவ்வளவு இனிமையாக இருக்கிறது….!!!

BJP MLA Akash Vijayvargiya Gets Hero’s Welcome
After Releasing On Bail | Teenmaar News | V6 News

இந்தப்பிள்ளை ஏன் இப்படியெல்லாம் செய்கிறது என்று
தோன்றுகிறதா…?
அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறார் என்று
ஊர் சொல்ல வேண்டாமா…?
25 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த பிள்ளையின் அப்பர்ர்ர்ர்ர் –
செய்தது புகைப்படமாக தொங்குகிறது கீழே –
(அந்த காலத்தில் வீடியோக்கள் அவ்வளவு சகஜமில்லையே …!!!)

.
———————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to அரசு அதிகாரிகளை கிரிக்கெட் மட்டையால் அடிக்கும் – பாஜக செல்லப்பிள்ளை…!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  இரண்டு நிகழ்வுகள் மனதை டிஸ்டர்ப் செய்தது. ஒன்று, வனத்துறை அதிகாரியை கர்நாடக எம்.எல்.ஏவின் தம்பி டியூட்டியில் இருக்கும்போது படுகாயம் அடையும்படி அடித்ததும், அப்போது அங்கிருந்த போலீஸ்காரர்கள் சும்மா இருந்ததும். இரண்டாவது இந்த பாஜக எம்.எல்.ஏ. என்ன திமிர் பிடித்தவன் இவன்? இத்தகைய ரெளடிகள் அரசியல் வெற்றி பெற என்ன காரணம்? இந்த இடத்தில் எனக்கு அதிகாரம் இருந்தால், அந்த அதிகாரிகளை விட்டே அதே தண்டனை கொடுக்கச் செய்திருப்பேன், சிறைத் தண்டனை கொடுப்பதற்கு முன்னால்.

  இந்த மாதிரி வெளிப்படையாகத் தெரியும்படியான வன்முறைக்கு, ஒரே தீர்வு, ஜெயிலில் அடைப்பது மட்டுமல்ல, இனி ஆட்சி அதிகாரத்துக்கு அவனும், அவனுடைய குடும்பமும் வரவிடாமல் தடுப்பதுதான். ரவுடிகள்லாம் அரசியலில் தஞ்சம் புகுந்து 50 வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் வெளித்தெரியும்படியான கண்டிப்பான நடவடிக்கை இந்தியச் சட்டங்களால், ஆட்சியாளர்களால் எடுக்க முடியவில்லை. அதனால்தான் இத்தகைய ரவுடிகள் கோலோச்சுவது.

  //உள்ளூர் பாஜகவினர் மாலை போட்டு வரவேற்பு கொடுத்து, பட்டாசுகள் வெடித்து// – உடனே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த அனர்த்தம் நடந்திருக்குமா?

  பிரதமர் மோடியின் நேற்றைய ரியாக்‌ஷன் ஆறுதல் அளிக்கிறது. ஆனால் இது எதற்காக பிரதமர் வரையில் செல்லவேண்டும்? மாநிலத் தலைமையே உடனே அந்த எம்.எல்.ஏவை டிஸ்மிஸ் செய்திருக்கவேண்டும், அதற்கு ஆதரவாக அவன் தந்தை வந்தால் அவரையும் டிஸ்மிஸ் செய்திருக்கவேண்டும்.

  Apart from this, நேற்று, தமிழகத்தில் ஒரு தாசில்தார், டெபுடி கலெக்டரிடம் பேசிய ஆடியோ கேட்டேன். சங்கம் வைத்துக்கொண்டு, மக்களுக்கு எதிராகச் செயல்படும் இந்த கழிசடைகளுக்கு தண்டனை ஏதும் கிடையாதா? சமூக விரோதிகளையே அரசு ஊழியர்களாக தேர்ந்தெடுக்கவேண்டும், அத்தகைய ரவுடிகளே சங்கத்தின் செயலாளர்களாக இருக்கவேண்டும் என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.