அம்மா’ டியோவ்….!!!


தென் அமெரிக்கா, கொலம்பியா மாகாணத்தில்
மெடலின் என்ற பகுதி.

ஒரு கட்டிடத்தின், நான்காவது மாடி –
அம்மாவும் அவரது மகனான, அந்த சிறுவனும்
லிப்டிலிருந்து வெளியே வருகின்றனர்…

வந்த சில நொடிகளிலேயே துடிப்பான அந்தப் பையன்
வேடிக்கை பார்க்க பால்கனி பக்கம் போகிறான்.

கம்பியை பிடித்தபடி வெளியே பார்த்த சிறுவன்
அப்படியே கால் தவறி –
மாடியிலிருந்து வெளியே விழ –

தாய் பாய்ந்து வந்து விழுந்துகொண்டிருந்த சிறுவனின்
கால்களை பிடித்து கொள்கிறாள்.
பையன் அப்படியே தொங்கிக்கொண்டிருக்க …..

காட்சியை பாருங்களேன்…

அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ள
காட்சி – இது….

ஒரு வேளை அந்தப்பக்கத்தில் இருந்தது
மாடிப்படிகளாக இருக்கலாம்…
ஆனாலும் அந்த உயரத்திலிருந்து
நேரடியாக தலைகுப்புற விழுந்தால்,
அந்த பிஞ்சுத் தலை என்னவாகி இருக்கும்…?

அந்த தாயின் வேகமும்,
சமயோசித புத்தியும் பாராட்டத்தக்கது.

இந்த காட்சி, ஒருவகையில் – பார்ப்பவர்களுக்கும்
ஒரு எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தும் என்று தான்
இங்கே பதிந்திருக்கிறேன்.

.
————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to அம்மா’ டியோவ்….!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  சமீபத்தில் பெங்களூரில் எங்கள் வளாகக் குழுமத்தில் இந்த காணொளி வந்திருந்தது. நானும் அந்த பில்டிங்ல ஒன்றில்தான் இது நடந்துவிட்டதோ என முதலில் நினைத்து பயந்துவிட்டேன். இந்த வாட்சப் தகவல் அனுப்பறவங்கள்ல, 90%க்கு ‘மூளை மிகவும் குறைவு. கண்ணை மூடிக்கிட்டு ஃபார்வர்ட் பண்ணுவாங்களே தவிர, மெசேஜ்ல என்ன இருக்கு, என்ன சொல்ல வராங்க என்ற ஒன்றும் தெரியாது’.

  எனக்கு பாரஃபட் போபியா உண்டு (அதாவது பயம் ஜாஸ்தி). நான் மேட்டூரில் வேலை பார்த்தபோது, அங்கு ஒரு சார்டர்ட் அக்கவுண்டண்ட் (இள வயது) வேலை பார்த்துக்கொண்டிருந்தான். அவனுக்கு பெங்களூர் ஐஐஎம் இல், எம்.பி.ஏ படிக்கும் வாய்ப்பு வந்தது. முதல் வருடத்தில், மாடியில் இருக்கும் சுற்றுச்சுவரில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தவன், பேலன்ஸ் தவறி கீழே விழுந்துவிட்டான். இடுப்புக்குக் கீழ், சுவாதீனமே இல்லாமல் போய்விட்டது. அவன் வாழ்க்கையைக் கெடுத்துக்கொண்டதும் இல்லாமல், அவனைச் சார்ந்தவர்களின் வாழ்க்கையையும் அழித்துவிட்டான். யார் சுற்றுச்சுவரில் உட்கார்ந்திருந்தாலும் எனக்கு இந்த நிகழ்ச்சி ஞாபகத்துக்கு வரும்.

  சிறிய தவறு, கவனக்குறைவு, பெரிய விளைவுகளை அளித்துவிட்டுச் சென்றுவிடும்.

 2. புவியரசு சொல்கிறார்:

  // இந்த காட்சி, ஒருவகையில் – பார்ப்பவர்களுக்கும்
  ஒரு எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தும் என்று தான்
  இங்கே பதிந்திருக்கிறேன். //

  உண்மை. இது அவசியம் வரவேற்கத்தகுந்ததே.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.