சத்யம், சிவம், சுந்தரம்… (இன்றைய சுவாரஸ்யம்…)


ராஜ்கபூர் எடுத்த ஹிந்தி படம் “சத்யம், சிவம், சுந்தரம்…”
பாடல்களுக்காகவே ஹிட்’டான படம் அது…

அந்தப் பாடலை வைத்து, ஒரு டிவி நிகழ்ச்சிக்காக –
ஜெயஸ்ரீ கோகோய் என்கிற ஒரு சிறுமி ஆடுகிற –
அற்புதமான நடனக் காட்சி கீழே –

அந்தப் படத்தில், அந்தக் காட்சியில் நடித்த –
ஹிந்தி நடிகை ஜீனத் அமன் நீதிபதிகளில்
ஒருவராக அமர்ந்திருப்பதை காணலாம்…


இதில் வேடிக்கை என்னவென்றால்,
ஒரிஜினல் படத்தில், இந்த காட்சிக்கு நடனம்
எதுவும் கிடையாது… இந்த நடனம் முற்றிலும்
இந்த சிறுமி – மற்றும் அவரை
இயக்கியவர்களின் திறமை, கற்பனை….!!!

பாடலைத்தவிர மற்ற அனைத்தும் இவர்களது
சொந்த திறமை … பாராட்டிற்குரியவர்கள்…!!!

சத்யம், சிவம், சுந்தரம் படத்தில் இந்தப் பாடல்
வரும் ஒரிஜினல் காட்சி கீழே –

( வீடியோ பார்க்க முடியவில்லையென்றால், அந்த திரையில் –
…Watch this video on YouTube…. என்றிருக்கும் இடத்தில்
க்ளிக் செய்யவும். வீடியோ பார்க்கக் கிடைக்கும் … )

.
————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to சத்யம், சிவம், சுந்தரம்… (இன்றைய சுவாரஸ்யம்…)

 1. புவியரசு சொல்கிறார்:

  லதா மங்கேஷ்வரின் அருமையான பாடல்.
  ஜெய்ஸ்ரீயின் அற்புதமான நடனம், அசைவுகள்.
  பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி சார்.

 2. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  அந்த கடைசி ஸ்டெப்….
  நோ சான்ஸ்!
  தலை கீழாக காலை மடக்கி அப்படியே அமர்ந்தது… க்ளாசிக்
  ஹாட்ஸ் ஆஃப் டு தட் குழந்தை

 3. புதியவன் சொல்கிறார்:

  பாடலுக்கான கொரியோகிராபி மிகவும் வியக்க வைக்கிறது. அதற்கான சரியான திறமை உள்ள குழந்தையைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள் (அல்லது குழந்தையின் திறமைக்கேற்ப சரியான பாடலை எடுத்து கொரியோகிராபி பண்ணியுள்ளார்கள்). ஒரு சைடில் சக்தியாகவும் இன்னொரு சைடில் சிவமாகவும் தெரியும்படி அட்டஹாசமாகச் செய்துள்ளார்கள். மிகவும் ரசித்தேன்.

 4. paiya சொல்கிறார்:

  super. Excellent dance by gogai.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.