ஒரே ரேஷன் கார்டு – புத்திசாலித்தனமா, முட்டாள்தனமா, மூர்க்கத்தனமா…?


அடுத்த ஒரு வருடத்திற்குள், நாடு முழுவதற்கும் –
“ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு” – என்கிற முறையை
அனைத்து மாநிலங்களும் கட்டாயமாக அமல்படுத்தியாக
வேண்டும் என்று மத்திய உணவுத்துறை அமைச்சர்
உத்திரவு போட்டிருக்கிறார்.

வருகிற ஜூலை 1, 2020 முதல் இந்தியா முழுவதும்,
ரேஷன் கார்டு வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும்,

எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும்,
எந்த ஊரில் வேண்டுமானாலும்,
எந்த கடையில் வேண்டுமானாலும்
ரேஷன் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்…
என்பது மத்திய அமைச்சரின் உத்திரவு.

ஒரு கேள்வி எழுகிறது – இது அவசியமா, புத்திசாலித்தனமா…
முட்டாள்தனமா… அல்லது மூர்க்கத்தனமா…?

அரசியல் சட்ட விதிகளின்படி, உணவு பாதுகாப்பு
பொது பட்டியலில் வருகிறது. அகில இந்திய அளவில்,
ரேஷன் தேவைக்கான பொருட்களை விவசாயிகளிடமிருந்து
Food Corporation of India அமைப்பின் மூலம்
கொள்முதல் செய்து, அதை மாநிலங்களின் தேவைக்கேற்ப
அனுப்பி வைப்பது மத்திய அரசின் பொறுப்பு.

ரேஷன் கடை பொருட்களை மத்திய அரசிடமிருந்து பெற்று,
உரிய முறையில் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைப்பது,
ரேஷன் கடைகளை நிர்வகிப்பது, – மாநில அளவில்
பொதுமக்களுக்கு – அவர்களின் வருமான அடிப்படையில்,
(உரிய verification-களுக்குப் பிறகு )
ரேஷன் கார்டுகளை தயாரித்து விநியோகிப்பது –
தகுதியுள்ள மக்கள் அனைவருக்கும் ரேஷன் பொருட்கள்
ஒழுங்காக கிடைப்பதை, தகுந்த அமைப்புகளின் மூலம்
உறுதி செய்வது ஆகியவை மாநில அரசுகளின் பொறுப்பு.

இதுவரை நடைமுறையில் இருந்துவரும் நிலை இது தான்.

மத்திய அரசு எந்த விலைக்கு கொள்முதல் செய்தாலும், அதை
மாநிலங்களுக்கு – மானிய விலையில் கொடுக்கிறது.

தற்போதைய மானிய விலை –
அரிசி கிலோ மூன்று ரூபாய்,
கோதுமை கிலோ இரண்டு ரூபாய்.

கொள்முதல் விலைக்கும், மாநிலங்களுக்கு கொடுக்கும்
விலைக்கும் உள்ள வித்தியாசம் மத்திய அரசின் வருடாந்திர
பட்ஜெட்டில் போடப்படும் வரிகளின் மூலம் ஈடு செய்யப்படுகிறது…

இந்த மந்திரி மண்டையில் உருவான திட்டமல்ல இது.
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமுமல்ல…

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கும் முன்பிருந்தே, அதாவது,
ஜூன் 1947-லிருந்தே, அமலில் இருந்து வருவது. ( அவ்வப்போது
சில மாற்றங்களுடன்…)

தற்போது இந்த புதிய உத்திரவின் மூலம் – மத்திய அரசு –
இதில் மாநில அரசுகளின் பொறுப்புகளில் ஒன்றான
ரேஷன் கார்டு கொடுப்பதிலும், ரேஷன் பொருட்களை
விநியோகம் செய்வதிலும் குறுக்கிடுகிறது.

ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை கொண்டு
வருவதற்கான காரணமாக மத்திய மந்திரியால் சொல்லப்படுவது –

1) வேலைதேடி மாநிலம் விட்டு மாநிலம் செல்லும்
தொழிலாளர்கள், புதிய இடங்களில் தடங்கல் இல்லாமல்
ரேஷன் பொருட்களை பெற வேண்டும்…

2) ரேஷன் கார்டு கொடுப்பதில் ஏற்படும் லஞ்ச ஊழல்களை
ஒழித்துக் கட்டுவது.
( – இந்த இரண்டாவது காரணத்தை இதில் எப்படி சம்பந்தப்படுத்துகிறார்
என்பது அவருக்கே தெரிந்த ரகசியம்…)

முதல் காரணத்தைப் பொருத்த வரை மத்திய மந்திரி
கவலைப்படுவதில் நியாயம் இருக்கிறதோ இல்லையோ –
அர்த்தம் நிறைய இருக்கிறது.

அவர் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர்…
பாஜக கூட்டணியில் இருக்கும்,
பீஹாரில் மட்டுமே இருக்கும் அவரது கட்சியின் தலைவர்…!

இன்று நாடு முழுவதும் வேலை தேடி பல மாநிலங்களுக்குச்
செல்லும் தொழிலாளிகள் பெரும்பாலானோர் – பீஹார் மாநிலத்தை
சேர்ந்தவர்களே… ( கூடவே ஓரளவு உத்திர பிரதேசம் மற்றும்
வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் உண்டு…)

ஆக, தனது மாநிலத்தில், தங்கள் மக்களுக்காக, மத்திய மந்திரி
எவ்வளவு செய்திருக்கிறார் என்று சொல்லி –
உள்ளூரில் கட்சியை வளர்த்துக் கொள்ளவும்,
ஓட்டு வாங்குவதற்கும் – பீஹாரைச் சேர்ந்த
அந்த மத்திய மந்திரி கொண்டு வந்திருக்கும் திட்டம்
இதுவென்று சொல்லலாம்… இதன் மூலம் அகில இந்திய அளவில்
பயன்படப்போகிறவர்கள் வேறு யாருமில்லை.

தங்கள் மாநிலத்தை விட்டு வெளியே வேலை தேடிச்செல்லும்
பீஹார் மக்களுக்காக – இந்த மந்திரி – அனைத்து மாநிலங்களின்
பொறுப்பிலும், அதிகாரங்களிலும் தலையிடுகிறார்.

சாதாரணமாக வேலை தேடி இடம்பெயரும், இந்த தொழிலாளிகள்
தங்கள் குடும்பத்தை தங்களுடன் அழைத்துச் செல்வதில்லை.
அவர்களது குடும்பத்தினர், சொந்த ஊரிலேயே தான் பிள்ளை,
குட்டிகளுடன் தொடர்ந்து தங்கி இருக்கிறார்கள்….

இவர்கள் இங்கே வேலை செய்யும் இடங்களிலேயே
குழுக்களாக – தங்கிக்கொண்டு குறிப்பிட்ட இடைவெளிகளில்
ஊர் சென்று திரும்புகிறார்கள்.

இப்போது இவர்களுக்கு இங்கே ரேஷன் கார்டு கொடுத்தால்,
ஊரில் இருக்கும் அவர்களது குடும்பம் எப்படி உள்ளூரில்
ரேஷன் பொருட்களை வாங்கும்…?

அல்லது இவர்களுக்கு மட்டும் இரண்டு ரேஷன் கார்டுகள்
கொடுக்கப்போகிறாரா…?

மேலும் இந்தியா முழுவதும் உணவுப் பழக்கங்கள் ஒரே மாதிரி
இல்லை… மாநிலத்திற்கு மாநிலம் வித்தியாசப்படுகிறது.
அவர்கள் ஊரில் கிடைக்கும் ரேஷன் பொருட்கள் இங்கே
ஸ்டாக் அதிகம் இருக்காது… இவர்கள் எங்கே, எந்த கடையில்
வாங்குவார்கள் என்பது தெரியாதாகையால், ரேஷன் கடைகள்
அதற்கான டிமாண்டு எழுப்பி, ஸ்டாக் வைத்திருக்க வாய்ப்பில்லை.

மேலும் எல்லா மாநிலங்களிலும் ரேஷன் கடையில் ஒரே மாதிரி
பொருட்களை கொடுப்பதில்லை. தமிழ் நாட்டில் குடும்பத்திற்கு
30 கிலோ வரை இலவசமாக அரிசி கொடுக்கப்படுகிறது.

பீஹாரில் இது இல்லை…. இவர்களுக்கு பீஹார் ரேஷனா
அல்லது தமிழ்நாடு ரேஷனா..?

தமிழ்நாடு ரேஷன் என்றால், அவர்களுக்கும் இலவச அரிசி
உண்டா…?

அரிசிக்கும், கோதுமைக்கும் மட்டும் தான் மத்திய அரசு மானியம்
கொடுக்கிறது. இங்கே தமிழ்நாட்டில், சர்க்கரை, பாமாயில்,
பருப்பு வகைகள் போன்ற பொருட்களும் – சலுகை விலையில்
கொடுக்கப்படுகின்றன… இலவச அர்சி மற்றும் இந்த
பொருட்களுக்கான மானிய செலவை தமிழக அரசு தான்
ஏற்றுக்கொள்கிறது……

மத்திய மந்திரியின் உத்திரவுப்படி பீஹார் மாநில மக்கள்
தமிழ் நாட்டில் ரேஷன் வாங்கும்போது, தமிழக அரசு
தனது செலவில் அவர்களுக்கும் மானியம் கொடுக்க வேண்டுமா…?
தமிழகம் ஏன் இந்த கூடுதல் செலவை ஏற்க வேண்டும்…?
தமிழக மக்களின் வரிப்பணம் பிற மாநிலத்தவர்க்காக
ஏன் செலவிடப்பட வேண்டும்.

இதையெல்லாம் தாண்டி ஒரு முக்கியமான கேள்வி – இப்போது
திடீரென்று, இத்தகைய ஒரு உத்திரவிற்கான அவசியம் எப்படி,
ஏன் வந்தது…? மெஜாரிடி இருக்கிறது என்றால்,
மந்திரி மண்டையில் ஓட்டு வாங்க எந்த யோசனை உதித்தாலும்,
அது யாரை பாதித்தாலும், எவர் உரிமையை பறித்தாலும்
கவலைப்படாமல் – உடனே அதைச் செயல்படுத்தி விட
வேண்டியது தானா…?

அது – புத்திசாலித்தனமானதா, அவசியமானதா,
மாநிலங்களின் உரிமையில் தலையிடுவது ஆகாதா
என்றெல்லாம் யோசிக்க வேண்டாமா…?

இது ஒரே நாடு தான்…அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
ஆனால், பல மாநிலங்களைக் கொண்டு உருவானது.
பலவேறு இனங்கள், பண்பாடுகள், உணவு, ஆடை,
பழக்க வழக்கங்களை கொண்டது.
பலவேறு மொழிகளை கொண்டது.

இங்கே ஒரே நாடு இருக்கலாம்…
ஆனால் – ஒரே மொழி, ஒரே இனம், ஒரே மதம்,
ஒரே கட்சி, ஒரே ஆட்சி,ஒரே தலமை,
ஒரே தேர்தல் என்று புத்தி கெட்டுப்போய்
யோசித்துக் கொண்டிருப்பவர்களின் மண்டையில்
லேடஸ்டாக உதித்திருக்கும் இந்த எண்ணமான
இந்த ஒரே ரேஷன் கார்டு திட்டம் சரியா… ?

ப்ரூடல் மெஜாரிடி தந்திருக்கும் துணிச்சலா….?
மக்கள் எங்களை அதிகாரத்தில் அமர்த்திருக்கிறார்கள்..
நாங்கள் சொல்வதைச் செய்யுங்கள்
என்று மாநிலங்களை மிரட்டுகிற மூர்க்கத்தனமா…?

முதலில் – இந்தியா முழுவதும், அனைத்து மாநிலங்களிலும்
(இவர்கள் ஆளும் மாநிலங்கள் உட்பட) டிஜிடல் ரேஷன் கார்டு
முறையையாவது அடுத்த ஆண்டிற்குள் கொண்டு வர முடியுமா…?
மந்திரி முதலில் அதில் தன் கவனத்தை தீவிரமாக செலுத்தட்டும் …!!!

அதற்குள்ளாக – பரிசோதனை முறையில் அரங்கேற்றுகிறோம்
என்று சொல்லி, தமிழ்நாடு போன்ற முன்னேறிய மாநிலங்களின்
தலையில் மிளகாய் அரைக்க முயற்சிக்க வேண்டாம்.

மற்ற மாநிலங்களின் தலையில் கையை வைக்காமல்,
மத்திய அரசின் மூலம், நேரடியாக
இத்தகைய இடம்பெயரும் தொழிலாளர்களுக்கு
எதாவது உதவி செய்ய முடியுமா என்று யோசிக்கட்டும்.

.
————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to ஒரே ரேஷன் கார்டு – புத்திசாலித்தனமா, முட்டாள்தனமா, மூர்க்கத்தனமா…?

 1. புதியவன் சொல்கிறார்:

  1. ரேஷன் கடைகளில் உள்ள பொருட்கள், எவ்வளவு சதவிகிதம் பயனாளிகளுக்குப் போகிறது, எவ்வளவு சதவிகிதம் பதுக்கப்படுகிறது? முன்பு திமுக ஆட்சியின்போது எ.வ.வேலு கல்லூரிக்கு ரேஷன் பொருட்கள் கடத்தப்பட்டதாக வும், அவரது கல்லூரி ஹாஸ்டலில் அதை வைத்துத்தான் மாணவர்களுக்கு உணவு தயாரிக்கப்படுகிறது என்ற செய்திகள் வெளியாயின. எனக்குத் தெரிந்து எடை குறைப்பு இல்லாமல் ரேஷனில் எதுவும் வழங்கப்பட்டதில்லை, 40+ வருடங்களுக்கு மேல். அதுவும்தவிர தொடர்ந்து ரேஷன் பொருட்கள் வெளி மாநிலங்களுக்கும் அரசியல்வாதிகளோடு கூட்டுச் சேர்ந்து கடத்தப்படுகிறது.

  2. ஒரே கார்டு (ஆதார் போன்று) இருக்கும்போது, எல்லாவற்றையும் கணிணி மயமாக்க முடியும். யார் பயன் பெறுகிறார்கள், எவ்வளவு வழங்கப்படுகிறது போன்றவற்றை இந்தியா முழுமையிலும் கண்காணிக்க முடியும்.

  3. தொடர்ந்து மாநில அரசு ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யமுடியும். ஆனால் எலெக்டிரானிக் கார்டுகள் மூலமாக கண்காணிப்பு நடைபெறும்.

  4. அரசு, உணவுப்பழக்கங்களில் தலையிடுவதுபோலச் சொல்லவில்லையே. நேரடியாக ‘கடத்தலை’ கண்காணிக்கப்போகிறோம், தேவையில்லாத மானியத்தைக் குறைக்கப்போகிறோம் என்று சொல்லாமல், ‘இடம் புலம் பெயர்கின்ற’ தொழிலாளர்கள் என்ற சாக்கு சொல்கிறது என்றே தோன்றுகிறது. (அதனால்தான் இனிப்பு கோட்டிங் போல, மக்கள் எந்த மாநிலத்திலும் ரேஷன் பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும் என்று அமைச்சர் சொல்கிறார். இது தகுந்த கண்டிஷன்கள் இல்லாமல் ப்ராக்டிகல் அல்ல என்பது அவருக்குத் தெரியாதா என்ன?) அந்த அந்த மாநிலங்கள், அந்த அந்த மாநிலத் தேவைக்கு ஏற்றபடி, இலவச புடவை இலவச கோமணம் போன்றவற்றைத் தொடர்ந்து அளிக்கலாமே. குளங்களைத் தூர் வாராமல், ரேஷன் கார்டுக்கு 1000 ரூபாய், 2000 ரூபாய் என்று காசை அளிப்பதற்கு, மிகுந்த ஏழைமக்களுக்கு தொலைக்காட்சிப் பெட்டி இலவசம் போன்றவைகளுக்குத் தடை இல்லையே. இந்தப் பொருட்களைத்தான் அளிக்கவேண்டும் என்று சொல்லவில்லையே.

  5. //அவர்களுக்கும் இலவச அரிசி உண்டா…?// – இப்போவே வெள்ளைக் கார்டு, மஞ்சள் கார்டு, கருப்பு கார்டுன்னு தரம் பிரித்துத்தான் எதையும் தராங்க. டிஜிடல் கார்டில் இது ஒரு குறியீடாகத்தான் இருக்கும். அதனால் புலம் பெயர்ந்தவர்களுக்கு தனி குறியீடு கொடுத்து, அவர்களுக்கு இப்போது ‘பணக்கார கார்டுகளுக்கு’ எதையும் வழங்காதது போலச் செய்யலாம். இது ஒரு பெரிய விஷயமே இல்லை.

  6. //தமிழ்நாடு போன்ற முன்னேறிய மாநிலங்களின் தலையில் // – தமிழகம் ரொம்பவும் முன்னேறிவிடவில்லை. எனக்கு ரேஷன் கார்டு இன்னமும் வந்தபாடில்லை. கேட்டால் ‘ஆதார்’ வேணும் என்றார்கள். ‘ஆதார்’ கொடுத்தால் இப்போது ரேஷன் கார்டில் சேர்ப்பதில்லை, காத்திருங்கள் என்கிறார்கள். ஒரு வருடத்துக்கு மேலாக இந்தக் கதை. இது எதனால்? காரணம் 60%க்குமேல் ரேஷன் பொருட்கள் கடத்தப்படுகின்றன. அதனால் அரசுக்கு மிக அதிக கூடுதல் செலவு ஏற்படுகிறது. அதனால் இன்னமும் புதிய ரேஷன் கார்டுகள் கொடுக்கப்படுவதில்லை. (அந்த அப்ளிகேஷன்களே போலியோ என்று அரசுக்குச் சந்தேகம், தேவையில்லாமல் நிறைய போலி கார்டுகள் போகுமோ என்ற சந்தேகம்). உடனே, ‘அரசு கண்காணிக்கட்டுமே’ என்று சொல்லக்கூடாது. அரசியல்வாதிகள், ரேஷன் கடை அதிகாரிகள், ஊழியர்கள் சேர்ந்துகொண்டு செய்யும் கூட்டுக் கொள்ளை இது. இதனைத் தடுக்க ‘ஒரே டிஜிடல் ரேஷன் கார்டு’ வந்தால் நல்லதுதானே? எனக்கு வாக்காளர் அடையாள அட்டை, ஏகப்பட்ட ஃபாலோ அப்புகளுக்குப் பிறகு, தேர்தல் முடிந்த பிறகு டெலிவர் செய்யப்பட்டது. இப்படி இருக்கிறது ‘முன்னேறிய தமிழகம்’.

  அதனால் கொஞ்சம் பொறுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. என்ன மாதிரியான பாலிசி, வரைமுறைகள் கொண்டுவருகிறார்கள் என்று பார்த்துவிட்டு ஆதரிப்பதோ எதிர்ப்பதோ செய்யலாம்.

  At this initial stage, வைகோ வீராவேசமாக எதிர்ப்பதைப் பார்த்தால், வேல் முருகன் எதிர்ப்பதைப் பார்த்தால், ‘ரேஷன் பொருட்களைக் கடத்துபவர்கள்’ சார்பாகவே இவர்கள் பேசுவதாகத் தோன்றுகிறது. அதனாலேயே, மத்திய அரசின் திட்டம் நல்லதாக இருக்குமோ என்றும் தோன்றுகிறது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புதியவன்,

   உங்கள் நிலைப்பாடு ஏற்கக்கூடியதாக இல்லையே…

   நீங்கள் அரசியல் சட்டத்தின் அடிப்படையை புரிந்துகொண்டு தான்
   பேசுகிறீர்களா…? மாநில அரசுகள், மத்திய அரசின்
   கட்டுப்பாட்டின்படி தான் இயங்க வேண்டுமென்று நினைத்தீர்கள்
   என்றால் அது முற்றிலும் தவறு.

   அரசியல் சட்டம் மாநில அரசு, மத்திய அரசு இரண்டிற்குமான
   உரிமைகளையும், கடமைகளையும் தனித்தனியே பிரித்துக்
   காட்டுகிறது. மாநில அரசுகள் டெல்லிக்கு அடிமையாக இருந்த
   காலம் எல்லாம் எப்போதோ சரித்திரமாகி விட்டது.

   எலெக்ட் ரானிக் ரேஷன் கார்டுகள் வந்து விட்டால் –
   கண்காணிப்பது சுலபமாகி விடும் என்கிறீர்களே.
   யாரை யார் சூப்பர்வைஸ் செய்வது…?

   ஒரு திருடர் இன்னொரு திருடரை கண்காணிப்பதா…?
   மத்திய அரசில் இருப்பவர்கள் எல்லாரும் உத்தமர்கள் –
   மாநில அரசில் இருப்பவர்கள் எல்லாரும் திருடர்கள்
   என்பது உங்கள் வாதமா …?

   இந்த உணவு மந்திரி பேசுவதை எப்போதாவது நீங்கள்
   நேரில் கேட்டிருந்தால், இங்கே உங்கள் அபிப்பிராயம் தலைகீழாகி
   இருந்திருக்கும்.

   பீஹாரில் லாலு ஒருவர் தான் திருட்டுத்தனம்
   செய்தார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா…?
   பிழைக்கத் தெரிந்த பல திருடர்கள் இன்னமும் தலைவர்களாக,
   மந்திரிகளாக – உலவிக் கொண்டிருக்கிறார்கள்.

   என்னுடைய இடுகையின் அடிப்படை –
   மாநில அரசுகளின் உரிமையில்
   மத்திய அரசு கை வைக்கக்கூடாது… அவ்வளவு தான்.
   எங்கே எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் –

   என்னைப் பொருத்த வரை இது தான் என் கருத்து.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    I understand your point, after your feedback.

    //மாநில அரசுகள், மத்திய அரசின் கட்டுப்பாட்டின்படி தான்// – அப்படி நினைக்கவில்லை. உணவு வழங்கல் மாநில அரசின் செயல் என்றும், அதனை ஒருங்கிணைப்பது (ஒரே டிஜிடல் ரேஷன் கார்டு) என்பது மத்திய அரசு கொண்டுவரலாம் என்றுதான் நான் புரிந்துகொண்டது. அதாவது ஒரு குடும்பத்துக்கு ஒரு ரேஷன் கார்டுதான் இருக்க முடியும் என்ற நிலை வரப்போகுது என்பது என் புரிதல். மத்திய அரசு மாநிலங்களுக்கு மானிய விலையில் ரேஷன் பொருட்களை வழங்கும் என்றும், மாநில அரசு அதற்கு மேலும் மானிய விலை கொடுத்து பயனாளிகளுக்கு வழங்கும் என்பதுதான் என் புரிதல். இதில் எந்த இடத்தில் மாநில உரிமை மீறப்படுகிறது என்பதை நான் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கிறேன். (மத்திய அரசு கார்டு கொடுத்தாலும் எங்கு வேணுமானாலும் போய் ரேஷன் வாங்கிவிட முடியாது, நான் கர்நாடகாவுக்கு நிரந்தரமாக/அல்லது தற்காலிகமாக புலம் பெயர்ந்தால், அங்கு என் கார்டை பதிந்துகொண்டு, அங்குள்ள ரேஷன் பிரகாரம் வாங்கிக்கொள்ளலாம், புதியாக நான் ரேஷன் கார்டு விண்ணப்பம் இன்ன பிற சமாச்சாரங்கள் செய்யவேண்டாம் என்பதுதான் என் புரிதல். அப்போ, ஒருத்தன் பல இடங்களில் ரேஷன் கார்டு வைத்துக்கொள்ள முடியாது, பொது சாஃப்ட்வேர் இந்தியா முழுமைக்கும் என்பதெல்லாம் என் அனுமானம். அதை டிரமடைஸ் பண்ணும் விதமாக பாஸ்வான் சொல்லியிருக்கிறார் என்றுதான் நினைக்கிறேன்).

    கலங்கல் தெளியட்டும். பிறகு இதைப்பற்றிச் சொல்கிறேன். உடனே நாம் அனுமானத்தில் எதிர்க்கவேண்டாம் என்பது என் எண்ணம். நீங்கள் நினைப்பதுபோல, ரேஷன், யாருக்கு என்ன தரணும், எப்போ தரணும் என்பதெல்லாம் மத்திய அரசாங்கத்தின் கையில் போகும் என்று நான் நினைக்கவில்லை.

 2. புவியரசு சொல்கிறார்:

  புதியவன் நீர் ஒரு குழப்பவாதி. இப்படியும் சொல்லாமல் அப்படியும் சொல்லாமல் குழப்புவதே உம் தொழிலாகி விட்டது. உங்கள் உண்மையான கருத்து என்ன என்பதை கடைசி வரி அல்லது பாரா மட்டுமே காட்டும்.

  //2. ஒரே கார்டு (ஆதார் போன்று) இருக்கும்போது, எல்லாவற்றையும் கணிணி மயமாக்க முடியும். யார் பயன் பெறுகிறார்கள், எவ்வளவு வழங்கப்படுகிறது போன்றவற்றை இந்தியா முழுமையிலும் கண்காணிக்க முடியும்.

  3. தொடர்ந்து மாநில அரசு ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யமுடியும். ஆனால் எலெக்டிரானிக் கார்டுகள் மூலமாக கண்காணிப்பு நடைபெறும்.//

  ஏதோ இனிமேல் தான் எலெக்ற்றானிக் கார்டு மத்திய சோத்து மந்திரி வந்து
  கொடுக்கப்போவதை போல் சொல்கிறீர்கள். தமிழ்நாட்டில் ஏற்கெனவே இருப்பதே
  டிஜிடல் ரேஷன் கார்டு தான். எதை கண்காணிக்க வேண்டுமென்று நினைக்கிறார்களோ அதை இப்போதே தாராளமாக கண்காணிக்கலாம்.

  // அதனால் கொஞ்சம் பொறுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. என்ன மாதிரியான பாலிசி, வரைமுறைகள் கொண்டுவருகிறார்கள் என்று பார்த்துவிட்டு ஆதரிப்பதோ எதிர்ப்பதோ செய்யலாம்.//

  மாநில அரசுகளின் நிர்வாகத்தில், அதிகாரத்தில் கையை வைக்கிறார்கள் என்பது வெளிப்படையாக தெரியும்போது அதென்ன பொறுத்திருந்து பார்க்கலாம். ?
  கண்கெட்ட பிரகு சூர்ய நமஸ்காரமா ? நாமெல்லாரும் என்ன சூடு சொரணை இல்லாதவர்களா ? அவர்கள் என்ன வேண்டுமானாலும் அறிவிப்பு செய்வார்கள் நாம் பார்த்து, பொறுத்து காத்திருக்க வேண்டுமா ?

  • raj சொல்கிறார்:

   உங்கள் உண்மையான கருத்து என்ன என்பதை கடைசி வரி அல்லது பாரா மட்டுமே காட்டும். – 👌👌👌

 3. venkat சொல்கிறார்:

  I can’t say if this is good or bad. But one thing I can say for certain… All practical questions raised by KM sir would be debated by the implementation team, which will have IAS officers I am sure they will address all of these basic questions. They may not make it 100% fool proof… just like GST, it will come with flaws and get fixed over a period of time.

  Give some credit to deserving officers! even if they are not as intelligent and smart as KM sir, they would not be dumb. Its shear arrogance on our part to start with the assumption that others are idiots.

  I very well remember KM sir, making sarcastic comments about one of the ministers ( I think it is Piyush Goyal ) when he made announcements about electric vehicles. Today, I can say with certanity that charging infrastructure is being set up all over the country. In a matter of few years from now you will all malls, apartment buildings, gas stations having EV charges. Tenders are floated by various organizations to set this infra. Once this infra is ready, it is a matter of time before you see Electric vehicles plying our roads. Like any big implementation, vision comes first… implementation next… I give full credit to this government for the great vision to transform this country. Needless to say, they fail badly in the implementation. Even if they are 40% successful, its still a great achievement.

  The same thing about waterways, small airports, payment banks, bankruptcy laws etc.,

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வெங்கட்,

   நான் உங்கள் வழக்கம் பற்றி பல தடவை
   இங்கே எழுதி விட்டேன்.

   நீங்கள் இங்கே எதையாவது எழுதுகிறீர்கள்.
   அதைத்தொடர்ந்து நான் விளக்கமாக பதிலெழுதி,
   உங்கள் மறுமொழியை கேட்டால் – ஓடி விடுகிறீர்கள்.

   மீண்டும் எப்போதாவது பாஜகவைப்பற்றி எழுதும்போது
   மட்டும் தான் – துள்ளி குதித்துக் கொண்டு
   ஓடி வருகிறீர்கள்.

   எல்லா விவாதங்களிலும் கலந்துகொள்ளுங்கள் சார்.
   உங்களுக்கு பாஜகவை விட்டால் வேறு எதிலும்
   இண்டரெஸ்டே இல்லையா…?

   Now –

   // Its shear arrogance on our part to start with
   the assumption that others are idiots. //

   நீங்கள் உங்களைப்பற்றி மட்டும் தான் சொல்லிக் கொள்ள
   முடியும்.. OUR என்று எல்லாரையும் ஏன் இழுக்கிறீர்கள்…?

   நான் இந்த இடுகையில் வலியுறுத்தி எழுதியது,
   மத்திய அரசு, மாநில அரசின் உரிமைகளில்
   தலையிடுவது பற்றி.
   ஆனால் நீங்கள் எங்கெங்கோ எலெக்ட்ரிக் வெஹிகிளில்
   ப்யூஸ் போனதைப்பற்றியெல்லாம் எழுதுகிறீர்கள்… !!

   சப்ஜெக்டுக்கு வாங்க சார்….!

   பீஹார்காரர்களுக்கெல்லாம் தமிழ்நாடு அரசு
   subsidy கொடுக்க வேண்டும் என்பது தான்
   உங்கள் அபிப்பிராயமா…? அதைச் சொல்லி விட்டு
   போங்களேன்…

   எப்படியும், நான் என்ன கேட்டாலும் நீங்கள் திரும்ப வந்து
   பதில் சொல்லப்போவதில்லை (அடுத்த தடவை நான் பாஜகவை
   பற்றி எழுதும் வரை…)

   என்ன இருந்தாலும் உங்கள் கட்சி கொடுத்து வைத்த கட்சி…
   என்ன செய்தாலும் – கண்ணைமூடிக்கொண்டு
   ஜால்ரா போடத்தான் எத்தனை பேர்…!!!

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • Siva சொல்கிறார்:

    என்னவோ பீகாரிகள் எல்லாம் ரேசன் வாங்க உடனே டிரைன் பிடித்து இங்கே வந்து வாங்கிக் கொண்டு திரும்ப பீகார் போய்விடுவார்கள் என்பது போல சொல்லுகிறீர்கள்.

    தமிழகத்தில் வேலை செய்யும் பீகாரிகளுக்கு தமிழக அரசு மானியம் கொடுப்பதில் என்ன தவறு? அவர்களும் தமிழக எக்கானமிக்கு பங்களிப்பு செய்கிறார்கள் அல்லவா? மேலு்ம் அதென்ன பீகாரிகள் மட்டும்? ஏற்கனவே 2011 – நிலவரப்படி தமிழகத்தில் 83 லட்சம் பிற மாநிலத்தவர் (பெரும்பாலும் தெலுங்கு, கன்னடம்) வசிக்கிறார்கள். இ்வர்களுக்கு ரேசன் நிறுத்தப்பட வேண்டுமா? அதே போல ஏறத்தாழ ஒரு கோடி தமிழர்கள் பிற மாநிலங்களில் வசிக்கிறார்கள் (பிகாரில் 1000 பேர்). இவர்களுக்கு அம்மாநில அரசுகள் மானிய ரேசன் கொடுப்பதா வேணாமா?

    ஏழைகள் வேறு இடங்களில் சில மாதம்தான் தங்கி வேலை செய்யும் போது அங்கு ரேசன் கார்டு வாங்கும் தொல்லை இல்லாமல் சில மாதம் ரேசனில் வாங்கி சாப்பிட்ட வேண்டும், அவர்களை பட்டினி கிடக்க விடக்கூடாது என்பதே இதன் நோக்கம். ரேசனில் வாங்கி தின்போர் பெரும்பாலும் ஏழைகள். அவர்களுக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்வதுதான் சரி. இந்தியாவில் 2.5 கோடி மக்கள் தினமும் 3 வேளை உணவு சாப்பிடுவதில்லை. ஆகவே இந்திய அரசு கொண்டு வந்த National Food Security Act, 2013 ன் ஒரு அங்கமே இது. ஆம், இது காங்கிரஸ் ஆட்சியில் வந்த திட்டம் (Its is pet project of Sonia Gandhi- Wikipedia).

    இதன் இன்னொரு நன்மை, மாநிலத்திற்குள் வேலை செய்ய வேறு ஊருக்கு செல்லும் பலருக்கும் நல்லது. தென் தமிழக ஏழை ஒருவர் சென்னைக்கு சில மாதம் வேலைக்கு போனால் அவர் ரேசன் கார்டு வாங்க எவ்வளவு அலை வேண்டியிருக்கும்? கார்டு கிடைப்பதற்குள் அவர் ஊருக்கே திரும்ப வேண்டியிருக்கும்.

    இந்தியா உணவு கிடைப்பதை உறுதி செய்வதில் 74 வது இடத்தில் இருக்கிறது, இது கேவலமானது. அவர் எந்த மாநிலத்தவர் ஆயினும் சக இந்திய ஏழைகளுக்கு உணவளிப்பது ஒன்றும் தவறு கிடையாது.

 4. Ramnath சொல்கிறார்:

  Siva,

  ஓ அப்படியா ;
  அதென்னவோ பாஜக காரர்களுக்கு மட்டும் தான்
  அதுவும் மோடி அரசு வந்த பிறகு தான்
  இந்த மாதிரி எண்ணம் எல்லாம் உதிக்கிறது.
  வாழ்க மோடீஜி. வாழ்க அமீத்ஜி.

  கிடக்கிறார்கள் சிறுமதிக்காரர்கள்.
  நீங்கள் தொடருங்கள் அய்யா.

  • Siva சொல்கிறார்:

   ராம்நாத், என்ன ரம்நாத் ஆன போது படித்தீர்களா?

   இது சோனியா அம்மையாரின் திட்டம், பிஜேபி அரசு அமுல் படுத்துகிறது என்று என்று தெளிவாக எழுதியுள்ளேனே. அதாவது காங்கிரஸ் அரசின் ஆதார் போன்ற பல திட்டங்களை பிஜேபி தன்னுடயைது போல் ஸீன் போட்டாலும் இவை எல்லாம் காங்கிரஸ் திட்டங்களே. ஆகவே சோனியா வாழ்க என்றுதான் இந்த திட்டத்தை பொறுத்த வரையில் சொல்ல வேண்டும்…

   இதைச் சொன்னால் உடனே என்னை பாஜக ஆள் என முத்திரை குத்துகிறீர்கள். பிஜேபி அரசு என்ன செய்தாலும் எதிர்த்து போராளியாக மெயின்டெய்ன் செய்ய வேண்டிய முட்டாள்தனத்தை நான் செய்யப்போவதில்லை. அதை தொழில் முறையாக வைத்து பல பேர் அலைகிறார்கள் தமிழ்நாட்டில்.

   காங்கிரஸ் கொண்டுவந்த பல நலத்திட்டங்களை பிஜேபி எதிர்த்தது, பின்பு ஆட்சிக்கு வந்ததும் அவற்றை அமுல் படுத்துகிறது. திமுக தங்கள் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்த ஒரே ரேசன் கார்டை இப்போது எதிர்க்கிறது, ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்ப்பது போல. அப்படி அவர்கள் நடித்து அதிகாரத்தை கைப்பற்றுகிறார்கள், அது அரசியல்.

   நான் சாதாரண குடிமகன் எந்த அரசின் திட்டமானலும் நல்லது என்றால் ஆதரவு, இல்லையெனில் ஆதரவு.

   ஆனால் காமை சாரைப் போல் மாநில சுயாட்சி பற்றியெல்லாம் எனக்கு கவலையில்ல. பாரதி சொன்னது போல தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்… அந்த தனியொருவன் பீகாரி என்றபோதும்!

   • Siva சொல்கிறார்:

    கரக்சன் – இல்லையெனில் எதிர்ப்பு

   • Ramnath சொல்கிறார்:

    .

    சிவா,

    ரம் குடித்து போதை ஏற்றிக்கொள்வது
    உங்கள் பழக்கமாக இருக்கலாம். எனக்கு எந்த
    போதையும் தேவையில்லை.
    இதை சோனியா அம்மையாரின் திட்டம் என்று
    சொல்வது அரைகுறை அறிவு. அவர் கொண்டு வந்தது
    உணவு பாதுகாப்பு சட்டம் பற்றிய ஒரு திட்டமே.

    ‘ஒரே நாடு – ஒரே மொழி, இனம், மதம், கட்சி, தலைவன்
    etc. etc…….போன்ற கழிசடைத்திட்டங்கள் எல்லாம்
    உங்கள் ஆசாமிகளால் தான் இப்போது கொண்டு வரப்பட்டுக் கொண்டிருக்கிறது.
    இந்த திட்டங்கள் எல்லாம் இதுவரை ஆட்சி செய்தவர்களின்
    மூளையில் உதிக்காதவை.\

    இடுகையை முழுவதுமாக மீண்டும் ஒருமுறை
    எந்தவித கட்சி “போதை”யும் இல்லாமல் படித்தீர்கள்
    என்றால், காவிரிமைந்தன் சார், மாநில உரிமைகளை
    மத்திய அரசு பிடுங்கிக்கொள்வது பற்றித்தான்
    வலியுறுத்துகிறார் என்பது புரியலாம்.

    உங்களுக்கு ஏற்பட்ட “போதை”யில் (அது எந்த போதையாக
    இருந்தாலும் சரி) கா.மை.சாரின் இடுகையின் கடைசி பத்தி
    உங்கள் மண்டையில் ஏறவே இல்லை என்று தெரிகிறது.

    மீண்டும் அதை இங்கே படித்து தெளியுங்கள் :

    // மற்ற மாநிலங்களின் தலையில் கையை வைக்காமல்,
    மத்திய அரசின் மூலம், நேரடியாக
    இத்தகைய இடம்பெயரும் தொழிலாளர்களுக்கு
    எதாவது உதவி செய்ய முடியுமா என்று யோசிக்கட்டும்.//

    இப்போதைய ஆட்சி என்ன செய்தாலும்
    அது சரியாகத் தான் இருக்கும் என்று
    கண்களை மூடிக்கொண்டு ‘ஜைங்க் சக்’
    போடுபவர்களை யார் என்ன சொல்லி கன்வின்ஸ்
    செய்ய முடியும் ?

 5. venkat சொல்கிறார்:

  I had very high opinion on you ( KM Sir ) when you quoted kanchi mahaperiyava several times here…. advice religious tolerance etc., that gave me an impression that you bat for universal citizen concept – that all are child of same god regardless of country, caste and religion. At least I strongly believe in that.

  Very sad to see you argue for not feeding Biharis. Do you think your mentor Bharathiyar would approve your stand?

  At least with in India, let us break the wall of barriers in the name of language, race etc., etc.,

  Coming back to the subject, up till 20 years back mobility of Indians across state was very limited to central govt., employees to few upper class exemptions. Last 20 years has broken this barriers, students from one state go to other for studies, low level labors move, graduates and employed category people move across the country. In such environment, it is the duty of government to facilitate such moves as seamless as possible. Thanks to Passport/Pan/Aadhar your identity follows you, thanks to core banking your bank account follows you, if ration card is converted to a national ID then your social benefits will follow you. This sounds very logical to me… regardless of which government

  Have a good day ahead.I pray almighty that you get ‘visala parvai’

 6. Ramnath சொல்கிறார்:

  venkat

  I PRAY GOD THE ALMIGHTY THAT YOU COME OUT OF THE
  CLUTCH OF CRUEL ” bjp paarvai”
  Wishing you all success in your efforts in this direction.

 7. Prabhu Ram சொல்கிறார்:

  Mr.Venkat,

  // I had very high opinion on you ( KM Sir ) when you quoted kanchi mahaperiyava several times here…. advice religious tolerance etc., that gave me an impression that you bat for universal citizen concept – that all are child of same god regardless of country, caste and religion. At least I strongly believe in that. //

  We believe there is no change in the stance of Mr.Kavirimainthan
  and HE deserves this opinion on him for ever.

  The change in approach is required in YOUR VIEWS only.
  You have a CLOSED and NARROW approach because of your bjp affiliation.
  Shed it and you will find that your earlier opinion still holds good.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.