கற்பனை, ஆர்வம், திறமை….


நல்ல கற்பனை வளம், ஆர்வம்,
தன் துறையில் திறமை –
உடையவர்களுக்கு –
இடம் ஒரு பொருட்டா என்ன…?

சுவர் இருந்தால் தான் சித்திரம்,
கல் இருந்தால் தான் சிற்பம் –
என்பதெல்லாம் இவர்கள் விஷயத்தில்
செல்லுபடி ஆகவில்லையே….!!!

அற்புதமான ஒரு “ஷோ” பார்க்க
வாருங்கள்…..

.
—————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to கற்பனை, ஆர்வம், திறமை….

  1. புதியவன் சொல்கிறார்:

    நெல்லை அருகே கிருஷ்ணாபுரம் என்றொரு இடத்தில் கோவில் இருக்கிறது. அது சிற்பங்களுக்குப் பெயர் போனது. நான் நெல்லையில் வசித்துவந்தபோது, கேள்விப்பட்டிருந்தாலும் போய்ப்பார்க்காத இடம். சென்ற வருடத்தில் அங்கு சென்று பார்த்தேன்.

    சிற்பங்கள், கல்லில் செதுக்கியவை. பார்க்க மிக மிக அழகாக இருக்கும். நான் சென்றது இரவு 6:30 மணிக்கு. அங்குள்ள ஒரு சிற்பத்தைத்தான் ஓவியர் சில்பி அவர்களின் ஓவியப் புத்தகத்திலிருந்து நான் எங்கள் கல்லூரி ஆண்டுவிழா மலருக்கு வரைந்திருந்தேன். அந்தச் சிற்பத்தை நேரடியாகக் கண்டபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. அங்கு இருந்த வயதானவரிடம் சிற்பங்களை விளக்கச் சொன்னேன். ஒவ்வொரு கற்சிற்பத்திலும் விரல் நரம்புகள், விலா எலும்புகள் என்று பல்வேறுபட்ட சிறப்புகளை அவர் நிறைவாகச் சொன்னார். அங்கிருந்த ஒரு சிற்பத்தில் வில்லும், கையில் அம்பும் இருக்கும் சிற்பத்தைக் காண்பித்து, இங்கு வந்த பார்வையாளர்களில் ஒருவர் இதனை ஒடித்துவிட்டார். அதிலிருந்து சிற்பங்களை கூண்டுக்குள் வைத்திருக்கிறோம் என்றார். அதுமட்டுமல்ல, என் காலத்துக்கு அப்புறம், இதன் சிறப்புகளைச் சொல்ல இங்கு ஆட்களே கிடையாது என்றார். கிட்டத்தட்ட இதே காலத்தில் திருக்குறுங்குடி தலத்தில் உள்ள மண்டபத்திலும் அத்தகைய சிற்பங்கள் அதே சிற்பியால் செதுக்கப்பட்டிருக்கவேண்டும்.

    இவர் செதுக்கியிருப்பது மரத்தில். ரொம்ப அழகாக இருக்கிறது. இவருடைய கலை இவருக்கு நிறைய வருமானமும் பெற்றுத்தரும். இதைவிடச் சிறப்பானவை என்று சொல்லவேண்டுமென்றால், மஹாபலிபுரத்தில் இருக்கும் பாறைகளில் வடித்த சிற்பங்கள் மற்றும் கிருஷ்ணாபுரச் சிற்பங்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.