கனிமொழி, தயாநிதி மாறன் – நடத்திய ” சென்னையை அதிர வைத்த ” போராட்டம்…!!!


திருமதி கனிமொழியும், திருவாளர் தயாநிதியும் சேர்ந்து
இன்று சென்னையை அதிர வைக்கும் போராட்டம் ஒன்றினை
நடத்தினர்…

அது பற்றிய செய்திகளும், புகைப்படங்களும் கீழே –

தலைப்புச் செய்தி –

“குடிநீருக்காக.. சென்னையை அதிர வைத்த திமுக போராட்டம்..
கனிமொழி, தயாநிதிமாறன் களத்தில் குதித்தனர் – ”

————–

அதே செய்தியின் இறுதியில் அதே நிறுவனம்
கொடுத்திருக்கும் தகவலின்படி –
கலந்துகொண்டோரின் எண்ணிக்கை – 500 … 🙂 🙂 🙂

————-

திருவாளர் தயாநிதி மாறனின் தொகுதிக்கு உட்பட்ட
பிராட்வே’யில் துவங்கி – முத்தியால்பேட்டையில்
முடிவடைந்த – 500 பேர் கொண்ட
திமுகவினரின் அந்த ஊர்வலத்திற்கு பெயர் –
“சென்னையை அதிர வைத்த திமுக போராட்டம்…”

கீழே – மேற்படி செய்திக்கு ஆதாரமான புகைப்படங்கள் –

கூட்டத்தில் எவ்வளவு பேர் கலந்துகொண்டனர் என்பதை இந்த புகைப்படமே தெளிவாக காட்டுகிறது…!!!

—————————————————–

வாழ்க செய்தி நிறுவனங்கள்…!!!

( மேற்படி செய்தியை (…? ) போடுவதற்கு
ஆன, செலவு விவரங்களையும் தெளிவாக
அறிவித்து விட்டால், எதிர்காலத்தில் இத்தகைய
வசதிகளை பயன்படுத்திக்கொள்ள விரும்புவோர்க்கு
உதவியாக இருக்கும்…!!!

சம்பந்தப்பட்டவர்கள் தயவு கூர்வார்களா…? )

.
———————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to கனிமொழி, தயாநிதி மாறன் – நடத்திய ” சென்னையை அதிர வைத்த ” போராட்டம்…!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  ஒன் இந்தியாவைப் பற்றி நான் சொன்னபோது பலர் மறுத்தனர்.

  அவங்க பெரும்பாலும் பணம் வாங்கிக்கொண்ட விளம்பரங்களை செய்திகளாகப் போடுகிறார்கள். பாருங்க..நாடாளுமன்றத்துல ‘தமிழக அரசு ஊழல் அரசு’ என்று (நாடாளுமன்றத்துல இந்த மாதிரி பேசக்கூடாது என்பதே தெரியாத) ஜாமீன்ல இருக்கிற தயாநிதி மாறன் சொன்னதை, ‘நாடாளுமன்றத்தை அதிரவைத்த தயாநிதி மாறன்’ என்று செய்தியாக ஒரு வாரத்துக்குமேல் வைத்திருக்கிறார்கள். இதற்கு எவ்வளவு வாங்கினார்களோ.

  ‘தமிழ்’ ‘தமிழ்’ என்று பேசுகின்ற திமுகவினருக்கு ‘தமிழ்’ கொஞ்சம்கூடத் தெரியாது. அவங்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஹிந்திதான். அவங்க எங்க தமிழ் படிச்சிருக்கப் போறாங்க? சந்தேகம் இருந்தால் ‘கண்டனம்’ எப்படி எழுதறதுன்னு கூடத் தெரியாத கனிமொழி, மாறனிடம் கேட்டுப்பாருங்கள்.

  இன்னொன்று, தயாநிதி மாறனின் போராட்டத்துக்கு திமுக ஆட்கள் வந்திருக்க மாட்டார்கள் (மாறன், கனிமொழி பெயர் பெறுவதை த ள ப தி விரும்புவாரா? அவரே ஏற்கனவே சபரீசனை ராஜ்ஜிய சபாவுக்கு அனுப்பவும் உதயநிதியை இளைஞர் அணித் தலைவராக ஆக்குவதற்கும் திட்டம் போட்டுக்கொண்டிருக்கார். அதுனாலதான் உடைந்த பிறப்புகள் இந்தப் போராட்டத்துக்கு வரலை.

 2. புதியவன் சொல்கிறார்:

  ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு – இதன் சாதக பாதகங்கள் என்ன என்ன? இதைப் பற்றி எழுதுங்கள் கா.மை. சார்.

  https://minnambalam.com/k/2019/06/30/3

  வை.கோ இதனை எதிர்ப்பதால், இது நாட்டுக்கு ரொம்ப நல்ல திட்டம் என்று மனதில் படுகிறது. போலி ரேஷன் கார்டுகள் இல்லாமல் போவதால், வை.கோவுக்கு அல்லது அவரது ஆட்களுக்கு ஏதேனும் பாதிப்பு இருக்குமோ என்றும் தோன்றுகிறது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புதியவன்,

   நீங்கள் வைகோ அவர்களை வைத்து இந்த திட்டத்தை
   மதிப்பிடாதீர்கள். இது உண்மையிலேயே மிக மிக மோசமான
   ஒரு திட்டம். நான் இது குறித்து தனியே விவரமாக எழுதுகிறேன்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. கிரி சொல்கிறார்:

  சார் ஒன் இந்தியா திமுக கட்டுப்பாட்டில் உள்ள தளம். சபரீசன் தான் அதை இயக்குகிறார்.

  திமுக செய்தி என்றால், அதிர்ந்தது, வெடித்தது, சுளீர், பளீர் என்று வார்த்தைகளை போட்டு அவர்கள் எழுதுவார்கள்.

  நான் இத்தளம் பார்ப்பதை நிறுத்தி 15 மாதங்கள் ஆகிறது.

  ரஜினி குறித்து உண்மைக்கு புறம்பான செய்திகளை, வெறுப்புணர்வை கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாத செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வந்ததால், படிப்பதை நிறுத்தி விட்டேன்.

  ஊடக தர்மம் என்ற ஒன்றை மிக மோசமாக சிதைத்து வருவதில், இத்தளம் இணையத்தில் முதலிடம்.

  • arul சொல்கிறார்:

   yes Giri. I stopped nearly 2 years ago itself

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   கிரி,

   //சார் ஒன் இந்தியா திமுக கட்டுப்பாட்டில் உள்ள தளம்.
   சபரீசன் தான் அதை இயக்குகிறார். //

   நீங்கள் சொல்வது சரியாக இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன
   ஆனால், நான் இதை உறுதி செய்து கொள்ள விரும்புகிறேன்.
   இது குறித்து மேலதிக தகவல்கள், ஆதாரங்கள் எதாவது
   கிடைக்கிறதா பாருங்களேன்…

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 4. tamilmani சொல்கிறார்:

  தமிழகத்தில் ஒன் இந்தியா போன்ற வலைத்தளங்கள், நியூஸ் seven ,
  தந்தி டிவி ,சன் டிவி, சத்தியம் , புதிய தலைமுறை டிவி ஆகியன திமுகவின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன . திமுக மற்றும் ஸ்டாலின் நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் பிஜேபி என்ன நல்லது செய்தாலும் இவற்றில் காண்பிக்கப்படமாட்டாது. அதிமுகவில் நடக்கும் சிறு சிறு குழப்பங்களை கூடஊதி பெரிதாக்கி கலந்துரையாடல் நடத்துவார்கள்.,
  இவற்றின் நெறியாளர்கள் மோடி மற்றும் அதிமுக எதிர்ப்பாளர்கள். அவர்களின் வன்மத்தை நிகழ்ச்சியின் ஊடாகவே நீங்கள் பார்க்கலாம் கருத்துரையாளர்களும்
  அப்படியே. இப்படி ஒரு biased journalism தமிழ்நாட்டின் ஒரு சாபக்கேடு.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.