பாராளுமன்றத்தில் ஜொலிக்கும் புதிய நம்பிக்கை நட்சத்திரம்…!!!


பாராளுமன்றத்தின் உப்பு சப்பற்ற உரைகளுக்கிடையே,
திடீரென்று ஒரு உற்சாகம் தோன்றியது.
வங்கத்திலிருந்து வந்திருக்கும் புதிய நட்சத்திரம்
மஹுவா மொய்த்ரா-வின் (Mahua Moitra)அனல் பறக்கும்
உரை…(முதல் முறை எம்.பி. )

இரண்டு முக்கிய காரணங்களுக்காக இதை
பாராட்டுகிறேன். ஹிந்தி வெறியர்களின் தொடர்
பிதற்றல்களுக்கிடையே – ஆங்கிலத்தில், மிகத்தெளிவான,
அழகான, உணர்வுபூர்வமான ஒரு உரை.

பலர் பல மணி நேரங்கள் பேசியும் தெளிவு படுத்தாத
சில விஷயங்களை பத்தே நிமிட உரையில் – யாருக்கும்
புரியும் நடையில் தெரிய வைத்தமை…

கீழே – பாராளுமன்றத்தில் மஹுவா மொய்த்ரா-வின்
10 நிமிட உரை….

பிரதான எதிர்க்கட்சித்தலைவரின் உரையை விட,
திரினமூல் உறுப்பினரான இவரது உரையே சிறப்பாக
இருந்தது என்று நிச்சயமாக கூறலாம்…

….

….

பத்தே நிமிடங்கள் தான்…
இரண்டாவது முறையும் கேட்டால் பல உண்மைகள் –
உரக்க, உரைக்கப்படுவது விளங்கும்.

சுருக்கமாக ஆங்கிலத்தில் –

– in a rebuke to the governing party, she listed these seven
“danger signs of early fascism”:

“There is a powerful and continuing nationalism that is searing
into our national fabric,” she said. “It is superficial,
it is xenophobic and it is narrow. It’s the lust to
divide and not the desire to unite.”

She pointed to a “resounding disdain for human rights”,
which she said had led to a 10-fold increase in the number of
hate crimes between 2014 and 2019.

Ms Moitra criticised the government for its “unimaginable
subjugation and control of mass media”. She said India’s
TV channels spend “the majority of airtime
broadcasting propaganda for the ruling party”.

She attacked the government for what she said was an
“obsession with national security”. An “atmosphere of fear”
pervaded the country, with new enemies being created every day.

“The government and religion are now intertwined.
Do I even need to speak about this? Need I remind you that
we have redefined what it means to be a citizen?” she demanded,
saying laws had been amended to target Muslims.

She said “a complete disdain for intellectuals and the arts”
and “the repression of all dissent” was the most dangerous
sign of all – and it was “pushing India back to the Dark Ages”.

The last sign is , Ms Moitra said, the “erosion of independence
in our electoral system”.

.
—————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to பாராளுமன்றத்தில் ஜொலிக்கும் புதிய நம்பிக்கை நட்சத்திரம்…!!!

 1. புவியரசு சொல்கிறார்:

  இந்த செய்தி பிபிசி செய்தித்தளத்திலும்
  வெளிவந்திருக்கிறது –

  “பா.ஜ.க ஆட்சியில் ஃபாசிசத்தின் அறிகுறிகள்” –
  பிரபலமான திரிணாமூல் எம்.பி-யின் முதல்
  நாடாளுமன்ற உரை

  ————-

  தனது நாடாளுமன்ற கன்னிப் பேச்சின் மூலம்
  ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்க
  வைத்திருக்கிறார் திரிணாமூல் காங்கிரஸ்
  கட்சியின் மக்களவை உறுப்பினர் மவுவா மெளத்திரா.
  இந்த ஆண்டின் சிறந்த பேச்சு இதுவென
  சமூக ஊடகங்களில் அவரது நாடாளுமன்ற பேச்சை
  கொண்டாடுகிறார்கள்.

  ஃபாசிசத்தின் ஆரம்பகால அறிகுறிகள் தெரிவதாகவும்,
  இந்திய அரசமைப்பு சட்டம் அச்சுறுத்தலில் உள்ளதாகவும்
  அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

  பா.ஜ.கவின் பெரும் வெற்றியை கொண்டாடிய
  அவர், ஃபாசிசத்தின் ஏழு அறிகுறிகள் தெரிவதாக கூறினார்.

  பா.ஜ.கவின் பெரும் வெற்றி, எதிர்ப்பு குரல்களும்
  கேட்கப்பட வேண்டும் என்பதை அவசியமாக்குகிறது
  என்றும் அவர் குறிப்பிட்டார்.

 2. venkat சொல்கிறார்:

  Bold speech.

 3. Ramnath சொல்கிறார்:

  மிக நன்றாக, தெளிவான உச்சரிப்புடன் பேசுகிறார்.
  பாராளுமன்றத்தை முழுவதுமாக “இந்தி”யே ஆக்கிரமிப்பு
  செய்து விட்ட நிலையில், இவரது ஆங்கிலம் அமிர்தமாக
  இருக்கிறது. பாராட்டுக்குரியவர். பாராட்டப்பட வேண்டியவர்.

 4. புதியவன் சொல்கிறார்:

  உருப்படியான உரை என்று என் மனதுக்குப் படுகிறது. நியாயமான அனைத்து எதிர்கட்சிக் குரல்களும் பாஜகவினால், மத்திய அரசால் கேட்கப்படவேண்டும்.

  1. //powerful and continuing nationalism// lust to divide and not the desire to unite. – இதில் உண்மை இருக்கிறது.

  2. number of hate crimes between 2014 and 2019 – இதில் உண்மை உள்ளது. ‘தடி’ எடுத்தவன் ‘இந்து’மதக் காப்பாளன்’ என்ற பெயரில் ‘தண்டல்காரன்’ஆக ஆகியிருக்கிறான். இதனை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும். ‘மாட்டிறைச்சி’ வைத்திருந்தான் என்ற கொலை, இவன் ‘இஸ்லாமியன்’ என்பதனால் ஆட்களைவைத்து அடக்குவோம் என்ற வெறிச்செயல் – இவைகளை முளையிலேயே கிள்ளவேண்டும். மோடி அரசு செயலில் இதுவரை இதனைக் காட்டவில்லை. ஒரு மாதம் கழித்து அல்லது ஏதோ ஒரு பேட்டியில் ‘நான் இதனை ஆதரிக்கவில்லை, இது என்னை வருத்தமுறச் செய்கிறது’ என்று சொல்வதில் அர்த்தம் இல்லை.

  3. the majority of airtime broadcasting propaganda for the ruling party – இதை நான் ஏற்கவில்லை. ஆளும் கட்சியை விமர்சித்துத்தான் நிறைய விவாதங்களை நான் பார்க்கிறேன் (ஒரு சில சேனல்களைத் தவிர). அதனால்தான் தேர்தலின்போது நமோ டிவி வந்தது. விமர்சிப்பதையும் Propagandaவில் சேர்த்துவிட முடியாது.

  4. //“obsession with national security”// – இதனையும் நான் ஏற்கவில்லை. புலவாமா தாக்குதலில் Swiftஆக, இந்திய இஸ்லாமியர்கள் என்ன நினைத்துக் கொள்வார்களோ, அவர்கள் வாக்குகளை இழந்துவிடுவோமே என்ற கற்பனை பயம் காங்கிரஸைப்போல் இல்லாமல் பாஜக அரசு செயலில் இறங்கியது. அதே சமயம், தேர்தல் காலப் பேச்சுகளில், மோடி ‘தான் தாக்குதலில் செயல்படச் சொன்னதுபோலவும், போரைப் பற்றி டிரமாடிக்காகப் பேசியவைகள் அனைத்தும்’ வெறும் படிப்பறிவில்லாத மக்களிடம் தான் செய்த செயலைக் கொண்டுபோய்ச் சேர்க்கத்தான் பேசியது என்றே நான் கருதுகிறேன்.

  5. “The government and religion are now intertwined – இதில் உண்மை இருக்கிறது. திருனாமுல் அரசு இஸ்லாமிய வாக்குகளுக்காக இந்திய இறையாண்மையைப் பற்றிக் கவலைப்படாமல் பணிந்து போவது போல, காங்கிரஸ், திமுக போன்ற அரசுகள் சிறுபான்மையினரின் வாக்குகளுக்காக பெரும்பான்மைக்கு எதிராக நடந்துகொள்வதுபோல, பாஜக அரசின் பிம்பம் ‘இது இந்து அரசு’ என்றவாறு வெளிப்படுகிறது. அதில் நான் எந்தத் தவறையும் காணவில்லை. ஆனால் அந்த அரசு ‘இந்து’ சமயத்திடம் மட்டும் உள்ள முக்கிய பிரின்சிபிளான, அனைத்து மதத்தினரையும் அரவணைத்துச் செல்லவேண்டும் என்பதை, அரசு பிரதிபலிக்க வேண்டும்.

  6. “a complete disdain for intellectuals and the arts” and “the repression of all dissent” – இதில் எம்.பி சொல்லும் கருத்தை மனம் ஏற்கிறது. அதே சமயம், அந்த இண்டெலெக்சுவல்ஸ், காங்கிரஸ் சார்பாக பேசுவதாகவும் என் மனதுக்குத் தோன்றுகிறது. கேரளாவில், இண்டெலெக்சுவல்கள் கருத்துக்கு மக்கள் மிகுந்த மதிப்பு கொடுப்பார்கள். ஒட்டு மொத்த இந்தியாவில் அந்த அளவு மக்கள் மனம் வளர்ச்சி பெற வில்லை என்று நினைக்கிறேன். Intellectuals கருத்து நாட்டுக்கு மிக முக்கியம். அதற்கான முக்கியத்துவத்தை அரசு கொடுக்கவேண்டும் (விளம்பரத்துக்காக அல்லது ஒரு மத சார்பான கருத்துக்களைத் தவிர)

  7. “erosion of independence in our electoral system”. – இது பல வருடங்களாகவே இருக்கிறது. எப்போது சேஷன் காலத்துக்குப் பிறகு மூன்று தலைமை, அதில் தங்கள் ஆட்களைப் போடுவது என்று காங்கிரஸ் ஆரம்பித்ததோ அப்போதே தேர்தல் கமிஷனின் தரம் குறைய ஆரம்பித்துவிட்டது. அது தொடர்கிறது. அவ்வளவுதான்.

  மஹூவா மொய்த்ரா பாராட்டுக்குரிய பாராளுமன்ற நம்பிக்கை நட்சத்திரம். இவரைப்போன்று உருப்படியாக பேசுபவர்களை, மன்றம் அனுமதிக்கவேண்டும். சம்பந்தமில்லாமல் ‘தமிழக அரசு ஊழல்’ என்று உளருகின்ற ஊழல்வாதிகளை, திகார் ஜெயில் சாதனையாளர்களை அல்ல.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புதியவன்,

   ஓரளவு ( …!!!) நியாயமாகவே எழுதி இருக்கிறீர்கள்…!!!

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 5. Subramanian சொல்கிறார்:

  // People who have lived in this country for 50 years are having to show a piece of paper to show that they are Indians. In a country where ministers cannot produce degrees to prove that they graduated from college, you expect dispossessed people to show papers, to show that they belong to this country?”

  Fantastic speech for a first time Parliament Member.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.