பழி வாங்கப்படுகிறாரா நீதிபதி …?


கீழே தரப்பட்டிருப்பது – செய்தி மட்டுமே….!!!
இந்த செய்திக்கு விமரிசனம் எதுவும் தேவையில்லை
என்பது நம் கருத்து….

———————————————————————-

https://www.vikatan.com/news/india/160511-justice-kureshi-elevation-stopped-modi-and-sha-reason.html

வெளியிடப்பட்ட நேரம்: 13:25 (27/06/2019)
————-
மோடி, அமித் ஷாவுக்கு எதிராகத் தீர்ப்பு…
பழிவாங்கப்படுகிறாரா நீதிபதி?

—-

நீதிபதி ஏ.கே.குரேஷி பிறப்பித்த உத்தரவால், அமித் ஷா
இரண்டு நாள்கள் சிறையில் இருந்தார். இதனால்தான்,
நீதிபதி குரேஷியைப் பழிவாங்குகிறார்கள் என்று
குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குஜராத் முதல்வராக நரேந்திர மோடியும் உள்துறை
அமைச்சராக அமித் ஷாவும் இருந்தபோது, அவர்கள்
இருவருக்கும் எதிராகத் தீர்ப்புகளை வழங்கிய நீதிபதி
ஏ.கே.குரேஷி இப்போது பழிவாங்கப்படுகிறார் என்று
குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குஜராத் மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய
ஏ.கே.குரேஷி, தற்போது மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக
இருக்கிறார்.

மூத்த நீதிபதியான இவரை, மத்தியப் பிரதேச உயர்
நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்றத்தின் ‘கொலீஜியம்’ பரிந்துரை செய்திருந்தது.

ஆனால், மத்தியில் மோடி அரசு இரண்டாவது முறையாக
ஆட்சியமைத்த பிறகு, அந்தப் பரிந்துரை நிறுத்திவைக்கப்பட்டது.
மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக
இருந்த எஸ்.கே.சேத், ஜூன் 9-ம் தேதி பணி ஓய்வுபெற்றார்.

அவருக்கு அடுத்தபடியாக, உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின்
பரிந்துரைப்படி, அந்தப் பதவியில் நீதிபதி ஏ.கே.குரேஷி
நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின்
‘ஆக்டிங்’ தலைமை நீதிபதியாக ரவி சங்கர் ஜா
தேர்வுசெய்யப்பட்டார்.

நீதிபதி ஏ.கே.குரேஷி பிறப்பித்த உத்தரவால், அமித் ஷா
இரண்டு நாள்கள் சிறையில் இருந்தார். இதனால்தான்,
நீதிபதி குரேஷியைப் பழிவாங்குகிறார்கள் என்று
குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தையொட்டி கடந்த திங்கள்கிழமை
குஜராத் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின்
பொதுக்குழு கூட்டம் கூடியது.

சங்கத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் அதில்
பங்கேற்றனர்.

அந்தக் கூட்டத்தில், “குஜராத் முதல்வராக இருந்த
நரேந்திர மோடிக்கும் உள்துறை அமைச்சராக இருந்த
அமித் ஷாவுக்கும் எதிராக நீதிபதி ஏ.கே.குரேஷி தீர்ப்புகள்
வழங்கியதன் காரணமாக, தற்போது அவரது
பதவி உயர்வை மத்திய அரசு நிறுத்தியுள்ளது” என்று
பகிரங்கமாகக் குற்றம்சாட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக
ஏ.கே.குரேஷியை நியமிக்கக் கோரும் தீர்மானமும்
நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி,
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்,
மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்
ஆகியோரை நேரில் சந்தித்து முறையிடுவது என்றும்
கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.

நீதிபதி குரேஷியின் நேர்மை மற்றும் தகுதி குறித்து
அவர்களிடம் எடுத்துச் சொல்லப்படும் என்றும், உடனடியாக
அவரை மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக
நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும் என்றும்
வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலாளர் பிரிதிவிராஜ் ஜடேஜா
தெரிவித்துள்ளார்.

ஏ.கே.குரேஷி குஜராத் உயர் நீதிமன்றத்தின்
மிக மூத்த நீதிபதி ஆவார்.

தற்போது மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாகப்
பணியாற்றிவருகிறார்.

.
—————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to பழி வாங்கப்படுகிறாரா நீதிபதி …?

 1. Prabhu Ram சொல்கிறார்:

  இவரது பதவி உயர்வை தடுத்து நிறுத்துவதன் மூலம்
  தங்கள் ஈகோவை திருப்தி செய்து கொள்கிறார்கள் போலும்.
  ஆனால், தங்கள் செயலின் மூலம் தாங்களே தேவையின்றீ
  ஒரு விவாதம் உருவாக காரணமாகி விட்டார்கள்.

  இந்த நீதிபதியின் பதவிஉயர்வை தடுத்து நிறுத்தியது
  தானே, மக்களும், மீடியாவும் மறந்து போயிருந்த ஒரு
  விஷயம் மீண்டும் விவாதத்திற்கு திரும்ப வழி கோலியிருக்கிறது ?

  சீரியசான விஷயம் இல்லையென்றாலும் கூட,
  சம்பந்தப்பட்டவர்களுக்கு இதைப்பற்றி மீண்டும் விவாதம்
  கிளம்புவதே ஒரு இழுக்கு தான்.
  “தன் வினை தன்னைச் சுடும்”

 2. Subramanian சொல்கிறார்:

  // People who have lived in this country for 50 years are having to show a piece of paper to show that they are Indians. In a country where ministers cannot produce degrees to prove that they graduated from college, you expect dispossessed people to show papers, to show that they belong to this country?” //

  Really Fantastic Speech for a first time Parliament Member.

 3. Subramanian சொல்கிறார்:

  Sorry – These remarks are meant for the earlier Blog.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.