…
…
…
…
ஒரு குடம் தண்ணீராவது கிடைக்காதா என்று
தெருத்தெருவாக அலையும்
சென்னை மக்களுக்கு எதிராக –
தண்ணி லாரிக்காக கொதிப்பில் தவித்திருக்கும்
தாய்மார்களுக்கு எதிராக –
ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு
குடிநீர் கொண்டு வருவதை அனுமதிக்க
மாட்டோம் என்றும்,
( அந்த தண்ணீர் உள்ளூரில் எடுக்கப்படுவதல்ல;
காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில்,
காவிரியிலிருந்து வருவது…)
( உள்ளூர் மக்கள் எந்தவித எதிர்ப்பையும்
தெரிவிக்காத நிலையிலேயே …)
– மீறி, தண்ணீர் எடுத்தால்
போராட்டம் நடத்துவோம் என்றும்,
அறிவித்து –
குடிக்கும் தண்ணீரில் கூட
அரசியல் செய்யும் –
இந்த மூஞ்சியை – இந்த வாயை –
…
…
…
இனி சென்னையில் பார்த்தால்,
சென்னை மக்கள்,
குறிப்பாக – தாய்மார்கள் –
எத்தகைய வரவேற்பு கொடுப்பார்களோ
என்பதை நினைக்கும்போது –
எனக்கு அர்விந்த் கெஜ்ரிவால் அவர்களின் –
ஆம் ஆத்மி கட்சியின் சின்னம்( logo )
நினைவிற்கு வருதை
தவிர்க்க முடியவில்லை….
.
————————————————————————————————————————————-
All governments miserably failed in water management,society also to be blamed for this situation
un-planned expansion,corruption at all levels.Always remember simple living-Noble thoughts
துரை முருகனுக்கு அவருடைய மகன் எம்.பி ஆவதற்கு எந்தப் பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்பதற்காகப் பேசியது. அப்புறம் இந்த வாயை வைத்துக்கொண்டு எந்த மூஞ்சியோடு கர்நாடகத்திலிருந்து காவிரி நீரைக் கேட்பார்? அதுவும் காவிரிக்கும் வேலூருக்கும் என்ன சம்பந்தம்? எதுக்கு காவிரி நீர் வேலூர்க்காரங்களுக்கு என்ற கேள்வி எழாதா? துரைமுருகன் சமீக கால உடல் நலமில்லாததால் மறை கழன்றுள்ளார்.
Water Managementக்கு முக்கியக் காரணம் கருணாநிதிதான். அவர்தான் ஓட்டுக்காகவும், தங்கள் கட்சிக்காரங்க மற்றும் தன் குடும்பம் பயன் பெறணும் என்று ஏரிகளைத் தூர்த்து அதில் வீடுகள் கோட்டங்கள் அமைத்தவர். இரண்டாவது அடையாறு ஆற்றின் கரை ஆக்கிரமிப்புக்கு முக்கிய காரணகர்த்தா (வாக்குகள் என்ற போர்வையில்). எப்போது எப்போது ஆற்றின் கரை ஆக்கிரமிப்புகளையோ இல்லை ஏரி ஆக்கிரமிப்புகளையோ அகற்ற அதிமுக அரசு முயல்கிறதோ அப்போது போராட்டத்தைத் தூண்டிவிட்டவர். அதனால் அதிமுக அரசும் ‘எக்கேடு கெட்டுப்போ’ என்று விட்டுவிட்டது. துரைமுருகன் திமுகவில் ஊறியவரல்லவா? அதனால் போராட்டத்தைத் தூண்டி எந்த நல்லதையும் செய்யவிடமாட்டார்.
இந்த அரசியல்வாதிகள் வீட்டில் உள்ள போர்வெல்லை முற்றிலும் மூடினால் ஒருவேளை அவர்களுக்கு தண்ணிக்கஷ்டம்னா என்ன என்று தெரியவரலாம்.
அய்யா ..! கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியின் தண்ணீர் சென்னைக்கு கொண்டுவர — ” பழைய வீராணம் திட்டம் ” இவரின் முன்னாள் தலைவர் காலத்தில் 1968 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டு பல்வேறு காரணங்களால் அது நிறைவேறவில்லை.என்பது உலகறிந்த விஷயம் — ! அதற்காக தயாரிக்கப்பட்ட குழாய்கள் சாலை ஓரங்களில் கிடந்து பல மக்களின் குடியிருப்புளாக மாறியிருந்த காட்சிகளை காணாத தமிழர்கள் இருக்க மாட்டார்கள் என்பது உண்மை வரலாறு …!!
பின் புதிய வீராணம் திட்டம் என்ற பெயரில் ஜெயலலிதா அவர்களால் கொண்டுவரப்பட்டு சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் குடிநீர் கொண்டு வரும் திட்டம் 2004 இல் குறிப்பிட்ட தேதியில் நிறைவடைந்து இன்றுவரை சென்னை மக்களின் தவிக்கிறவாய்க்கு ஓரளவு தண்ணீர் கிடைத்துக்கொண்டு இருக்கிறது .. .
தற்போது இந்த மூஞ்சி // ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு
குடிநீர் கொண்டு வருவதை அனுமதிக்க
மாட்டோம் // … என்று கூறுவதை கடலூர் மாவட்ட மக்களும் கூறினால் என்னவாகும் என்கிற அடிப்படை சிந்தனைகூட இல்லாத இவரெல்லாம் என்ன மனிதர் … ? கடலூர் மாவட்டத்திலும் தண்ணீர் பற்றாக்குறை இருக்கிறது .. மேலும் தற்போது ஹைடிரோகார்பன் போன்ற திட்டங்களை இங்கே புகுத்தி — இருக்கின்ற கொஞ்ச -நஞ்ச நிலத்தடி நீரும் காலியாகிவிடும் நிலைமையில் இம் மாவட்ட மக்கள் வீராணம் நீர் கொண்டுபோக தடுத்தால் என்னவாகும் என்பதை கருத்தில் கொள்ளாத இவர்கள் தான் — மக்கள் தொண்டர்கள் …?
” வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் ” என்று மனம் உருகிய வள்ளலார் அவதரித்த ஊரின் வழியே தான் புதிய வீராணம் திட்ட குழாய்கள் செல்லுகின்றன — அவர் வழி வந்த எம் மாவட்ட மக்கள் ” மேக்கப் மூஞ்சிக் காரரரைப்போல ” தடை விதிக்க மாட்டார்கள் என்று நம்புவோமாக …!!!
அய்யா ..! கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியின் தண்ணீர் சென்னைக்கு கொண்டுவர — ” பழைய வீராணம் திட்டம் ” இவரின் முன்னாள் தலைவர் காலத்தில் 1968 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டு பல்வேறு காரணங்களால் அது நிறைவேறவில்லை.என்பது உலகறிந்த விஷயம் — ! அதற்காக தயாரிக்கப்பட்ட குழாய்கள் சாலை ஓரங்களில் கிடந்து பல மக்களின் குடியிருப்புளாக மாறியிருந்த காட்சிகளை காணாத தமிழர்கள் இருக்க மாட்டார்கள் என்பது உண்மை வரலாறு …
பின் புதிய வீராணம் திட்டம் என்ற பெயரில் ஜெயலலிதா அவர்களால் கொண்டுவரப்பட்டு சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் குடிநீர் கொண்டு வரும் திட்டம் 2004 இல் குறிப்பிட்ட தேதியில் நிறைவடைந்து இன்றுவரை சென்னை மக்களின் தவிக்கிறவாய்க்கு ஓரளவு தண்ணீர் கிடைத்துக்கொண்டு இருக்கிறது .. .
தற்போது இந்த மூஞ்சி // ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு
குடிநீர் கொண்டு வருவதை அனுமதிக்க
மாட்டோம் // … என்று கூறுவதை கடலூர் மாவட்ட மக்களும் கூறினால் என்னவாகும் என்கிற அடிப்படை சிந்தனைகூட இல்லாத இவரெல்லாம் என்ன மனிதர் … ? கடலூர் மாவட்டத்திலும் தண்ணீர் பற்றாக்குறை இருக்கிறது .. மேலும் தற்போது ஹைடிரோகார்பன் போன்ற திட்டங்களை இங்கே புகுத்தி — இருக்கின்ற கொஞ்ச -நஞ்ச நிலத்தடி நீரும் காலியாகிவிடும் நிலைமையில் இம் மாவட்ட மக்கள் வீராணம் நீர் கொண்டுபோக தடுத்தால் என்னவாகும் என்பதை கருத்தில் கொள்ளாத இவர்கள் தான் — மக்கள் தொண்டர்கள் …?
” வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் ” என்று மனம் உருகிய வள்ளலார் அவதரித்த ஊரின் வழியே தான் புதிய வீராணம் திட்ட குழாய்கள் செல்லுகின்றன — அவர் வழி வந்த எம் மாவட்ட மக்கள் ” மேக்கப் மூஞ்சிக் காரரரைப்போல ” தடை விதிக்க மாட்டார்கள் என்று நம்புவோமாக …!!!
ஆம் ஆத்மி கட்சியின் சின்னம் “துடைப்பக்கட்டை’ ;
ஆனால், இதைவிட இன்னமும் சிறப்பாக
“செருப்பை” லோகோவாக கொண்ட கட்சி எதுவும் இல்லையா ?
இருந்தால் அதை உதாரணமாகச் சொல்லலாமே
என்று தான் கேட்டேன்.
அய்யா ..! எங்கே போகிறோம் — என்ன செய்யப் போகிறோம் … ” தண்ணீர் யுத்தம் ” ஆரம்பம் ஆகிவிட்டதா …? நாடு முழுக்க இந்த பிரச்னை தலைவிரித்து ஆடுகிறது .. பரிகாரம் தேட மனம் இல்லாதவர்கள் மேலும் — மேலும் நிலத்தடி நீரை பற்றாக்குறையாக்கும் திட்டங்களை உட்புகுத்தி இந்தியா ஒளிர்கிறது என்று கூறுவது ..?
” மனம் உள்ளவர்களின் ” மனம் பதைக்கும் ஒரு செய்தி :–
// தண்ணி இல்லாம எங்க வீட்டு குலசாமி அங்க கருவாடா வண்டீல போகுதுய்யா..! கதறும் விவசாயிகள் // https://tamil.goodreturns.in/news/2019/06/20/water-scarcity-a-fish-says-that-today-we-died-due-to-water-scarcity-tomorrow-you-and-your-children/articlecontent-pf77187-014950.html இன்று – எங்க வீட்டு குலசாமி ” என்கின்றவர்களே இந்த நிலைக்கு ஆளானால் — வாரிப்போக யார் இருக்க போகிறார்கள் … ?
“அருவி: mineral water நிறுவனம் இவருடையதா?