அம்பை’யின் சிறுகதை – பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர் ….!!!


புகழ்பெற்ற மூத்த எழுத்தாளர்களின் நல்ல சிறுகதைகளை
அவ்வப்போது விமரிசனம் தளத்தில் பதிவு செய்து,
இந்த காலத்து வாசகர்களுக்கு அவர்களின் எழுத்தை
பழக்கம் செய்து வைக்க வேண்டும் என்பது என் விருப்பம்…

அவ்வப்போது, தகுந்த இடைவெளிகளில் ஏற்கெனவே
அதைச்செய்தும் வருகிறேன்.

இன்று புகழ்பெற்ற எழுத்தாளர் –
அம்பை (இயற்பெயர் – சி. எஸ். லட்சுமி ) அவர்களின்
சிறுகதைத்தொகுப்பிலிருந்து ஒரு சிறுகதை …

கதைக்குள் போகும் முன்னர் –
அம்பை அவர்களைப்பற்றிய ஒரு சிறு அறிமுகம் –

அம்பை (Ambai) என்கிற சி. எஸ். லக்ஷ்மி
(C. S. Lakshmi, பிறப்பு:1944) தமிழின் சிறந்த பெண் படைப்பாளிகளுள்
ஒருவர். 1960-களின் பிற்பகுதியில் எழுதத் ​தொடங்கியவர்.

​பெண் நிலை நோக்கினை வெளிப்படுத்தும் வகைமையிலான தமிழ்ச்
சிறுகதைகளின் முன்னோடி. பல பெண் படைப்பாளிகள் தொடச்
சிரமப்படும் விடயங்களை சர்வ சாதாரணமாக தொட்டுச் சென்றவர்.
உறவு, காதல், திருமணம், அரசியல், இசை என்று பல்வேறு
பரிமாணங்களைத் தொட்டவர்.

பெண்களின் வாழ்க்கையை அதுவும் சுயசிந்தனை கொண்ட
படித்த பெண்களை மிக இயல்பாக படைத்தவர். தமிழகத்தின்
எல்லை கடந்த நிலப்பகுதிகளையும் களனாகக் கொண்ட
இவரது கதைகளில் ​பெண்களின் உறவுச் சிக்கல்கள், பிரச்சனைகள்,
குழப்பங்கள், கோபதாபங்கள், சமரசங்கள் யாவும் கிண்டலான
தொனியில் கலாபூர்வமாக வெளிப்படுகின்றன.

இவர் ”SPARROW” (Sound and Picture Archives for Research on Women)
என்ற அமைப்பை நிறுவி அதன் இயக்குநராக செயல்பட்டு வருகிறார்.

டாக்டர் சி. எஸ். லட்சுமி (Dr. C. S. Lakshmi) என்ற தன்னுடைய
இயற்பெயரில் தி இந்து, தி எக்னாமிக்ஸ் அண்ட்
பொலிடிக்கல் வீக்லி, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு அவ்வப்போது எழுதுவதும் உண்டு.

———————————————————————————
..

..

..

..

..

..

.
—————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to அம்பை’யின் சிறுகதை – பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர் ….!!!

 1. Raghuraman சொல்கிறார்:

  Sir,

  Wow. What a flow. Current day authors do not write like this. Got a satisfaction of reading a novel.

  Thanks for the post.

 2. புவியரசு சொல்கிறார்:

  எனக்கும் கூட இந்த நடையும், எழுத்தும் மிகவும் பிடிக்கிறது.
  ரகுராமன் சொல்வது போல், இப்போது எழுதுபவர்கள் இவ்வளவு
  ஆழமாக கதாபாத்திரங்களின் உணர்வுகளை சித்தரிப்பதில்லை.
  இந்த கதையை இங்கே பதிந்து, பலரும் ரசிக்க உதவியதற்கு நன்றி.

 3. Subramanian சொல்கிறார்:

  வயதான காலத்தில், கணவனை இழந்து விட்ட ஒரு பெண்ணின்
  மனோபாவங்களையும், அவள் அந்த இழப்பை எப்படி ஈடுகட்டிக்கொண்டு,
  தன்னை தொடர்ந்து செயல்பட வைத்துக் கொள்கிறாள் என்பதையும் அழகாக எடுத்துச் சொல்கிறார் அம்பை. பொதுவாகவே, பெண்கள் இத்தகைய சூழ்நிலைகளிலிருந்து ஓரளவு சீக்கிரமாகவே விடுபட்டு எழுந்து வந்து விடுகிறார்கள்.

  ஆனால், மனைவியை இழந்த கணவனின் பாடு தான் மிகவும் துன்பமயமானது.
  முற்றிலும், எல்லாவற்றிற்கும், துணைவியையே நம்பியிருந்து விடும் ஒரு ஆண்
  அந்த பெண் துணையை இழக்க நேரும்போது படும் துன்பம் சொல்லவியலாது.

  கே.எம்.சார் – அத்தகைய கதை எதையாவது நீங்கள் படித்திருந்தால்,
  இங்கே பதிவு செய்யுங்களேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.