இதை – சொல்லிக் கொடுத்தவரையா அல்லது செய்பவரையா … யாரை பாராட்டுவீர்கள்…?அடடா … எவ்வளவு க்யூட்…!
எத்தனை அழகாகச் செய்கிறது…!!

நீங்கள் யாரைப் பாராட்டுவீர்கள் –
சொல்லிக் கொடுத்த ஆசாமியையா
அல்லது செய்து காட்டும் வாயில்லாத
அந்த ஜீவனையா …?

இரண்டாவதிற்கே என் ஓட்டு…!!!

.
————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to இதை – சொல்லிக் கொடுத்தவரையா அல்லது செய்பவரையா … யாரை பாராட்டுவீர்கள்…?

 1. Prabhu Ram சொல்கிறார்:

  இன்று, ஹரியானாவில்,
  மத்திய அமைச்சர் அமீத் ஷா பங்கேற்ற
  யோகா நிகழ்ச்சியில், சீனாவிலிருந்து
  இறக்குமதி செய்யப்பட்டயோகா MAT–களை
  யோகா செய்ய வந்த “யோகி”கள், அடிதடி செய்து.
  அள்ளிக்கொண்டுபோன கண்கொள்ளா காட்சி:

  • புதியவன் சொல்கிறார்:

   //யோகா செய்ய வந்த “யோகி”கள்// – யோகா செய்யவந்தா யோகிகள். கோவிலைப் பார்க்க வந்தா கடவுள்கள், ஸ்கூலில் நுழைந்தால் பேராசிரியர்கள்……. இந்த நம்முடைய மெண்டாலிட்டினாலத்தான், நடிகர்கள் தாங்கள் நாடாள வந்தவர்கள், நம் ரசிகர்கள் நம்மை ஆராதிக்கவும் அடிமையாகவும் பிறப்பெடுத்தவர்கள் என்று நம்பறாங்க.

   பொதுவா இந்தியர்களுக்கு ஓசில எது வந்தாலும், அதுல எனக்கும் ரெண்டு வேணும்னு அடிதடில இறங்குவாங்க. தமிழக அரசு 1000 ரூபாய் ஒரு ரேஷன் கார்டுக்கு என்று சொன்னபோது, ரோடு முழுக்க மக்கள் வெள்ளம். 2000 ரூபாய் கொடுக்க அப்ளிகேஷன் கொடுத்தபோது அடிதடி. நம்ம மக்கள் எண்ணம் இப்படி இருக்கும்போது யாரை நொந்துகொள்வது? இந்தமாதிரி எண்ணம் இல்லாம இருக்கறவங்களை இந்தியாவில் தேடுவது சுலபமல்ல. நம் இந்திய முறைப்படி, இந்தக் கூட்டத்துக்கு வந்தவங்க கடைசில யோகா மேட்டை எடுத்துக்கிட்டுப் போகலாம்னு சொல்லியிருப்பாங்க.

   “இறக்குமதி செய்யப்பட்ட யோகா மேட்” – ஒவ்வொரு இந்தியனும் வாழ்வது இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை வைத்துத்தான். அவை இல்லை என்றால், அவன் வாழ்வே ஸ்தம்பித்துவிடும். எது விற்குமோ, அதை உடனே மிகக் குறைந்த விலையில், மாஸ் ப்ரொடக்‌ஷன் செய்வதில், சைனாவை யாருமே உலகத்தில் மிஞ்ச முடியாது. அவர்கள் தயாரிக்காதது அம்மா, அப்பா மட்டும்தான். இப்போ புதிதாக, ‘மனைவி ரோபோட்-பொம்மை மனைவி’ பெருமளவு தயாரிக்கறாங்க. அது அவங்க நாட்டுலயே பிரச்சனை உண்டுபண்ணுவதால் அரசாங்கம் அதை உருவாக்குவதைக் கட்டுப்படுத்துகிறது. ஆனால், வெளிநாடுகளில் (குறிப்பாக இந்தியாவில்) அவைகளுக்கு வரவேற்பு உண்டு என்றால் குறைந்த விலையில் மாஸ் ப்ரொடக்‌ஷன் செய்வார்கள். இந்தியாவினால் அப்படிச் செய்ய முடிவதில்லை. அவ்வளவுதான் மேட்டர்.

   அதுனால இந்தச் செய்தியில் எந்தப் புதுமையும் இல்லை.

 2. புதியவன் சொல்கிறார்:

  கா.மை. சார்…இந்த நிகழ்ச்சியில் மட்டுமல்ல, நிறைய இடங்களில் (நிகழ்ச்சிகளில்) நாயைப் பழக்கி பல வேலைகளைச் செய்யச் சொல்லுவதைப் பார்த்திருக்கிறேன். நாயை ஓரளவு பழக்கிவிட முடியும். பூனையை அவ்வாறு பழக்க முடியாது. (அப்படியும் ஓரிருவர் பூனையைப் பழக்கி இந்த நிகழ்ச்சியிலேயே அதனைக் காண்பித்திருக்கிறார்கள்).

  அதனால், ‘திறமை’ கண்டு வியக்கவேண்டும் என்றால், அது நாயின் திறமையைத்தான். ஆட்டுவித்தவர் திறமையை அல்ல. இதே வேலையை பூனை செய்தால், அது ஆட்டுவித்தவர் திறமை என்று சொல்லலாம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.