இனி – வங்கிகளில் பணத்தை போடவும் GST, எடுக்கவும் GST ….!!!


நாம் எதாவது பனாமா ரிபப்ளிக்’கில் வாழ்கிறோமோ
என்று திடீரென்று சந்தேகம் வந்து விட்டது…
கண்களைக் கசக்கிக் கொண்டு மீண்டும் படித்தேன்…
உண்மையான செய்தி தான்…!!!

நண்பர்களும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய
ஒரு செய்தி –

( எனக்குத் தெரிந்து, இது குறித்து அதிகாரபூர்வமாக
பத்திரிகைச் செய்தி எதுவும் இதுவரை
வெளியிடப்படவில்லை…!!! –

– ஆனால், பனாமா ரிபப்ளிக்’கில், பொது மக்களுக்கு
எதையும் சொல்லி விட்டுத்தான் செய்ய வேண்டும் என்கிற
அவசியம் இல்லையே…!!! )

—————————-
( https://business.dinamalar.com/news_details.asp?News_id=45123 )

கனரா வங்கியில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையின் விபரம்:

ஜூலை முதல், சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு உட்பட
பல்வேறு கணக்குகளில், மாதத்திற்கு
மூன்று முறை மட்டுமே, 50 ஆயிரம் ரூபாய் வரை
இலவசமாக பணம் செலுத்த முடியும். அதற்கு மேல்
செலுத்தினால், 50 ரூபாயும், அதற்கான, ஜி.எஸ்.டி.,யும்
பிடித்தம் செய்யப்படும்.

( நம் கணக்கில் நாம் பணம் போட்டாலே
அதற்கு GST கட்ட வேண்டும்…
அதே பணத்தை மீண்டும் எடுக்கும்போதும் –
மீண்டும் GST கட்ட வேண்டும்… )

மேலும், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம்
செலுத்தும் –

ஒவ்வொரு முறையும்,
குறைந்தபட்சம், 50 ரூபாயும்,
அதிகபட்சமாக 5,000 ரூபாயும்,
அதற்கான, ஜி.எஸ்.டி.,யும் பிடித்தம் செய்யப்படும்.
( ஆறுதல் செய்தி – அதிக பட்ச GST லிமிட்
5000 ரூபாய் தானாம்…!!! )

இதே போன்று, வங்கி கிளையில் சேமிப்பு
கணக்கிலிருந்து, ஐந்து முறை மட்டுமே
இலவசமாக பணம் எடுக்க முடியும்.

அதற்கு மேல், ஒவ்வொரு முறைக்கும்,
100 ரூபாயும், ஜி.எஸ்.டி.,யும் பிடித்தம் செய்யப்படும்.
நடப்பு கணக்கில், 5 லட்சம் ரூபாய் வரை மட்டுமே
இலவசமாக பணம் எடுக்க முடியும்.

அதற்கு மேல் பணம் எடுக்கும் ஒவ்வொரு
தொகைக்கும், குறைந்தபட்சம் 1,000 முதல்
அதிகபட்சம், 10 ஆயிரம் ரூபாயும்,
ஜி.எஸ்.டி.,யும் பிடித்தம் செய்யப்படும். இவ்வாறு
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஆறுதல் வாபஸ் – நடப்புக் கணக்கில்
GST limit 10,000 ரூபாய்…!!! )

.
—————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

23 Responses to இனி – வங்கிகளில் பணத்தை போடவும் GST, எடுக்கவும் GST ….!!!

 1. Subramanian சொல்கிறார்:

  இது சட்ட விரோதமில்லையா ?
  இப்படிச் செய்ய இவர்களுக்கு அதிகாரம் இருக்கிறதா ?

 2. Prabhu Ram சொல்கிறார்:

  இந்த அரசாங்கத்தின் குறிக்கோள் –
  சேமிப்புக்கு என்று எவனும் வங்கிப்பக்கம் போகக்கூடாது.
  அத்தனை சேமிப்புகளும் ம்யூச்சுவல் ஃபண்டுகளுக்கும்,
  ஷேற் மார்க்கெட்டுக்கும் தான் போக வேண்டும்.
  நடுத்தர வர்க்கத்து மக்கள் ஷேர்மார்க்கெட்டில் பணம் போட்டு
  சூதாடி நாசமாகப் போக வேண்டும்.

 3. Selvarajan சொல்கிறார்:

  பணத்தை போடவும் — எடுக்கவும் மட்டும்தானா …. அதற்கு ஒருபக்கம் ஸ்டேட்மென்ட் கேட்டால் அதற்கும் : — // வங்கி சேமிப்புக்கு கணக்கின் பரிவர்த்தனைக்கு அறிக்கைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி : வாடிக்கையாளர்கள் அதிருப்தி // https://tamil.thehindu.com/tamilnadu/article27823221.ece .. இதுவும் நல்லாத்தான் இருக்கு — 100 நாட்களுக்குள் இன்னும் நிறைய மக்கள் நலத்திட்டங்களை எதிர்பார்க்கலாம் … நிதிப்பற்றாக்குறையில் அரசு தள்ளாடுகிறது என்றும் அதை நிவர்த்திக்க காரியம், ஆற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாரோ நவீன நிதியமைச்சர் …?

 4. கிரி சொல்கிறார்:

  சார் NEFT IMPS RTGS போன்றவற்றின் கட்டணங்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளன. பண பரிவர்த்தனை தவிர்த்து மின்னணு பரிவர்த்தனை மூலம் அனைத்தும் நடக்க இது போல செய்யப்படுகிறது.

  பண பரிவர்த்தனை மூலம் கணக்கில் வராத பணம் புழங்குவதால், மின்னணு பரிவர்த்தனை மூலம் குறைக்க முயற்சிக்கிறார்கள்.

  இதற்கான கட்டணத்தை குறைக்க RBI பரிசீலிக்கலாம்.

 5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  கிரி,

  பண பரிவர்த்தனை வங்கியின் மூலம் நடைபெற்றால்,
  அது எப்படி கணக்கில் வராத பணமாக இருக்க முடியும்..?

  வங்கிக்கணக்குடன், ஆதார், பான் நம்பர்கள் ஏற்கெனவே
  இணைக்கப்பட்டுள்ளன. பான் நம்பரை வைத்து தான்
  வருமான வரி கணக்குகள், அறிக்கைகள், தணிக்கைகள்
  அனைத்தும் மேற்கொள்ளப்படுகின்றன.

  எனவே, வங்கியின் மூலம் நடைபெறும்
  எந்த பண பரிவர்த்தனையும் automatic -ஆக கணக்கில்
  வந்து விடும். வருமான வரித்துறையின் பார்வைக்கு
  கொண்டு வரப்பட்டு விடும். நான் ஏற்கெனவே
  இதை உறுதி செய்துகொண்டு விட்டேன். எனவே அது சரியான
  காரணமாக இருக்க முடியாது.

  மேலும், வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்களில்
  எவ்வளவு பேரால் மின்னணு பணபரிவர்த்தனைகள்
  மூலம் பணம் போட, எடுக்க, மாற்ற முடியும் ?

  IT, வர்த்தகத் துறைகளில் ஈடுபட்டிருக்கும்,
  நன்கு அனுபவப்பட்ட, நடுத்தர வயது
  மக்களுக்கு வேண்டுமானால் இது சாத்தியப்படலாம்.
  நடுத்தர, அடித்தட்டு மக்கள் இதனை வழக்கத்தில்
  கொள்வது நடைமுறை சாத்தியமா…?

  முக்கியமாக, மின்னணு பரிவர்த்தனை மூலம்,
  ரொக்கப்பணத்தை எப்படி டெபாசிட் செய்ய முடியும்….?

  மேலும், முக்கியமாக ஒரு விஷயம்…
  நம் பணத்தை, நாமே – வங்கியில் போடவோ, எடுக்கவோ –
  எதற்காக GST கட்ட வேண்டும்…?

  யோசியுங்கள்…

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  • கிரி சொல்கிறார்:

   “பண பரிவர்த்தனை வங்கியின் மூலம் நடைபெற்றால், அது எப்படி கணக்கில் வராத பணமாக இருக்க முடியும்..?”

   சார் நான் வங்கியில் நடைபெறுவதைப் பற்றிக் கூறவில்லை.

   மின்னணு பரிவர்த்தனை நேரடி பண பரிவர்த்தனையை சில்லறை விற்பனை, தொழில், சொத்து வாங்குதல் என்று அனைத்து இடங்களிலும் தடுக்கிறது.

   எடுத்துக்காட்டுக்கு பள்ளிக் கட்டணம் செலுத்துவது நம்மால் லஞ்சப்பணத்தில் / கணக்கில் வராத பணத்தில் கூட செலுத்த முடியும்.

   ஆனால், அதே பள்ளிக்கட்டணம் பணத்தை பற்று அட்டை வழியாக கட்டும் போதோ, NEFT வழியாக கட்டும் போதோ கணக்கில் வந்து விடுகிறது.

   பள்ளியும் ஏமாற்ற முடியாது, நுகர்வோரும் தன்னுடைய பணத்தை கணக்கில் காட்டிய பணமாக செலுத்த வேண்டியது வரும்.

   இதையே குறிப்பிட்டேன்.

   அரசாங்கம் சொல்வது பணத்தை மின்னணு பரிவர்த்தனை வழியாக செய்தால், கள்ளப்பணம் உள்ளே நுழைய முடியாது என்பதை. அது உண்மை தானே சார்.

   பணத்தை எடுப்பதே எதோ ஒன்றுக்கு கொடுப்பதற்கு தானே!.. அதை மின்னணு பரிவர்த்தனை வழியாக செய் என்று கூறுகிறார்கள்.

   எதிர்காலத்தில் பண பரிவர்த்தனை இருக்காது சார், மிகக் குறைந்து விடும். அனைத்துமே மின்னணு பரிவர்த்தனையாக தான் இருக்கும், இது தான் நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது.

   “IT, வர்த்தகத் துறைகளில் ஈடுபட்டிருக்கும்,நன்கு அனுபவப்பட்ட, நடுத்தர வயது மக்களுக்கு வேண்டுமானால் இது சாத்தியப்படலாம்.
   நடுத்தர, அடித்தட்டு மக்கள் இதனை வழக்கத்தில் கொள்வது நடைமுறை சாத்தியமா…?”

   இதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை சார். இதில் உள்ள பிரச்சனைகளை அரசு களைய வேண்டும். வேறு சில சலுகைகளை / வாய்ப்புகளை கொடுக்கலாம்.

   “முக்கியமாக, மின்னணு பரிவர்த்தனை மூலம், ரொக்கப்பணத்தை எப்படி டெபாசிட் செய்ய முடியும்….?”

   அரசாங்கத்தின் நோக்கமே ரொக்கப்பணத்தின் பயன்பாட்டை குறைப்பது தான். மின்னணு பரிவர்த்தனை வழியாக செய்தால், உங்களுக்கு ரொக்கத்தை செலுத்த வேண்டிய தேவையே இருக்காது.

   உங்க கைகளுக்கு ரொக்கமாக வராமல் உங்கள் கணக்குக்கு நேரடியாக சென்று விடும். Virtual பணமாகத்தான் இருக்கும்.

   தற்போது இது கடினமாக இருந்தாலும், எதிர்காலம் ரொக்கமாக இருக்காது. மக்கள் வங்கிக்கு செல்வதே குறைந்து விடும். இதெல்லாம் உடனே நடக்கப்போவதில்லை ஆனால், நிச்சயம் நடக்கும்.

   “நம் பணத்தை, நாமே – வங்கியில் போடவோ, எடுக்கவோ – எதற்காக GST கட்ட வேண்டும்…?”

   நியாயமான கேள்வி சார். வங்கி சேவைக்கு GST என்பது ஏற்றுக்கொள்ளும்படியில்லை. இதற்கு மட்டுமல்ல மின்னணு பரிவதனைக்கு கூட சில குறிப்பிட்ட சேவைகளில் GST வசூலிக்கிறார்கள்.

   இதை வங்கிகள் அவர்களது சேவைக்காக வசூலிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அரசாங்கம் GST யை விலக்கு அளிக்க வேண்டும்.

 6. Traffic Ramasway சொல்கிறார்:

  sir this is bank service charge. They are not charging GST for your money.

  • RobinRaj சொல்கிறார்:

   Banks are already making money from SB a/cs, they do not need a service charge. Remember, our interest rates are high. For instance, SB a/c earns 4% whereas interest on any loan from bank is minimum 8.5%. Whatever the interest amount a saving a/c earns, bank earns at least an equal amount.

 7. venkat சொல்கிறார்:

  it is ‘banana republic’ not panama republic!
  Besides, I welcome this initiative. This will encourage more people to credit and debit transaction electronically. This is not an initiative for abolishing black money. It is addressing paper money printing issue…
  1. printing and handling paper money is a huge expense to government. by limiting currency in circulation we can avoid those printing and distribution over head.
  2. counterfeit currency circulation which is a national security threat will be eliminated.

  yesterday, the guy who repaired my AC accepted payment Rs.3000 via BHIM. otherwise i would have given him a check. He thanked me that he can use his time for productive activities that going to bank or atm to deposit check. most importantnly, the money was available immediatly.

  its a good move

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வெங்கட்,

   This is not an initiative for abolishing black money.
   It is addressing paper money printing issue…

   – என்று யாராவது உங்களுக்காக
   தனியாக அறிவித்திருக்கிறார்களா …?

   சரி – இவ்வளவு முக்கியமான ஒரு விஷயம் பற்றி,
   பொறுப்பானவர்களிடமிருந்து ஏன் எந்த ஒரு
   பத்திரிகைச் செய்தியும் வெளியிடப்படவில்லை.
   வங்கி நோட்டீஸ் போர்டை பார்த்து தான்
   தெரிந்து கொள்ள வேண்டிய விஷயமா இது ?

   நண்பர் புவியரசு கேட்ட ஒரு கேள்வி எனக்கும் உண்டு –

   electronic transfer மூலமாக கையிலிருக்கும் கேஷை
   எப்படி வங்கிக் கணக்கில் போடுவது என்கிற
   வித்தையை இந்த தளத்தின் வாசகர்களுக்காக
   சொல்லிக் கொடுங்களேன்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • Selvarajan சொல்கிறார்:

    அய்யா…! அந்த யாம் மேற்காேள் காட்டிய இந்து செய்தியில் இரணடே நண்பரகள் தான் கமெண்ட் பாேட முடிந்தது அதன் பிறகு // Comments are now closed. // என்று பதிவாக்கி விட்டார்கள் .. இவர்களது செயல்களுக்கு யாரும் கருத்தே கூற கூடாது என்கிற நிலை இப்படி இருக்கும் பாேது // இவ்வளவு முக்கியமான ஒரு விஷயம் பற்றி,
    பொறுப்பானவர்களிடமிருந்து ஏன் எந்த ஒரு
    பத்திரிகைச் செய்தியும் வெளியிடப்படவில்லை.// என்று நீங்கள் கேட்பது …?

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     செல்வராஜன்,

     காத்திருப்போம்….
     திருவாளர் வெங்கட் – இதற்கும் சேர்த்து
     விளக்கம் தருவார் என்று எதிர்பார்த்து…..!!!!

     .
     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

     • venkat சொல்கிறார்:

      why would some one should give explanation for this. Bank’s are institution. They change their pricing policy as a routine process. They have different ways of informing their customers about their pricing policy changes… Some send letters to customers, some keep boards in their branches and so on…

      This is just a pricing change on which few banks have decided and acted. This is not a government policy decision.

      Move on… ukkanthu unkanthu thappu kandu pidikartheergal!

   • புதியவன் சொல்கிறார்:

    வெங்கட் – Banks are institution – அவங்களுக்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை என்று எப்படிச் சொல்லுவீங்க? நீங்க ஐசிஐசிஐயைச் சொன்னால் அதில் அர்த்தம் இருக்கு. எஸ்.பி.ஐ என்பது அரசுடமையாக்கப்பட்ட வங்கி. அதில் ஒன்றைச் செய்தால், அதுக்குக் காரணம் பிரதமர் தலைமையிலான மத்திய அரசுதான். பாஜக தான் அதற்குப் பொறுப்பு. அதாவது மோடி அவர்கள்தான் இந்த உத்தரவைப் பிறப்பித்ததற்கான காரணம். It is as simple as that. இப்போ தனியார் வங்கிகள், ‘மக்கள் தங்களிடம் பணம் போட்டால் வருடத்துக்கு 10% வட்டியாக எடுத்துக்கொள்வோம்-பணத்தைப் பாதுகாக்கும் செர்வீசுக்காக என்று சொன்னால், அதனை யாரும் கேட்கமுடியாது. ஆனால் அரசுடமையாக்கப்பட்ட வங்கி இந்த மாதிரிச் செய்தால், அது பாஜக அல்லது அப்போதைய மத்திய அரசு, கட்சி செய்ததாகத்தான் அர்த்தம். அதன் விளைவை அந்தக் கட்சியும் அதன் தலைமையும் அனுபவித்துத்தான் ஆகவேண்டும்.

 8. புவியரசு சொல்கிறார்:

  Venkat I have 4 things to say:

  1) // it is ‘banana republic’ not panama republic! //

  உங்கள் அதிபுத்திசாலித்தனம் மெச்சப்படுகிறது.
  அதே சமயம்

  it should be CHEQUE and NOT Check.

  2) // printing and handling paper money is a huge expense to government. //

  டிமானடைசேஷன்போது புது ரூபாய் நோட்டுகளை
  அச்சடிக்க எத்தனை கோடி ரூபாய் தண்டமானது
  என்று உங்கள் சங்கி-பிங்கி களிடம்
  கேட்டுக்கொண்டு வந்து, தெரிந்தால் இங்கே சொல்லவும்.

  3) // yesterday, the guy who repaired my AC accepted payment Rs.3000 via BHIM. //

  இங்கே வரும் யாருக்கும் காதில் பூ சுற்றிக்கொள்கிற வழக்கம் இல்லை.

  4) // its a good move//

  நல்ல கருங்கல் சுவராகப் பார்த்து முட்டிக்கொள்ளவும்.

  • புவியரசு சொல்கிறார்:

   venkat,

   // ukkanthu unkanthu thappu kandu pidikartheergal! //

   appo ovvoru idama thedi thedi
   onga maathiri
   modi bajanai paadalaamaa ?

 9. புவியரசு சொல்கிறார்:

  வெங்கட்

  இன்னொன்று கேட்க மறந்து விட்டேன்;

  எனக்கு 60,000 ரூபாய் வங்கியில், என் கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும். Electronic transaction மூலம் எப்படி டெபாசிட் செய்யலாம் என்று
  உங்கள் பிரகாசமான புத்திக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்.

 10. venkat சொல்கிறார்:

  think about it..why would you have Rs.60K in hand unless you print your own money. Somebody would have given this to you as salary, rent etc., If that somebody, unless they print their own money, should withdraw from bank and give you cash. If that person transfers money driectly into your bank account, why would you have 60K cash???

  This change will not come over night. 10 years ago we were using only check ( check is american usage of word Cheque ) and DD.Now we use NEFT and RTGS for most of our payments. Checks will not die but it will come down to negligible amount. Thru these initiative, perhaps in 15-20 years our next generation won’t need to transact with paper money.

  100-200 years ago, or before paper money was invented we were using gold and silver for exchanging values, then came paper money, then came instruments like check and DD. In our generation we are migrating to next mode- which is digital

  Change is the only permanent thing. Accept it and move on.

 11. venkat சொல்கிறார்:

  why would some one should give explanation for this. Bank’s are institution. They change their pricing policy as a routine process. They have different ways of informing their customers about their pricing policy changes… Some send letters to customers, some keep boards in their branches and so on…

  This is just a pricing change on which few banks have decided and acted. This is not a government policy decision.

  Move on… ukkanthu unkanthu thappu kandu pidikartheergal!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வெங்கட்,

   விவாதங்களை நான் வரவேற்பவன்…
   ஆனால், கிறுக்குப் பிடித்து தான் பிடித்த
   முயலுக்கு மூன்றே கால் என்று சாதிக்கும்
   விதண்டாவாதிகளை நான் encourage செய்வதில்லை

   பூனை தன் கண்களை மூடிக்கொண்டால் பூலோகமே
   இருண்டு போய் விட்டதாக நினைத்துக் கொள்ளுமாம்.
   தங்களின் இஷ்டதெய்வம் ஆட்சியில் இருக்கும்போது
   தவறே நிகழாது… நடப்பதெல்லாம் சரியே என்று
   நினைத்து, குறை சொல்பவர்களை எல்லாம்
   எதிர்க்கிறது ஒரு பஜனைக் கூட்டம்.

   நான் அந்த வங்கியின் வாடிக்கையாளன்.
   அந்த வங்கியில் இருக்கும் குறைபாடுகளை
   என் வலைத்தளத்தில் எடுத்துச் சொல்ல எனக்கு
   எல்லாவித உரிமைகளும் உண்டு.

   பாஜக/மோடிஜி பஜனை பாடுபவர்களுக்கு
   இதில் என்ன ஆட்சேபணை…?
   நான் உங்கள் இஷ்டதெய்வத்தைப்பற்றி எதாவது
   எழுதியிருந்தேனா என்ன…?
   நீங்கள் ஏன், எதற்காக குறுக்கே வருகிறீர்கள்…?
   குற்றமுள்ள மனது குறுகுறுக்கிறதா…?

   – ‘check’ is american usage of word Cheque –

   ஓ நீங்கள் அமெரிக்க பழக்க, வழக்கத்தை தான்
   ஏற்றுக் கொள்பவர் என்று சொல்கிறீர்களா…?
   அமெரிக்காவில் மாட்டுக்கறி சகஜமாமே…!!!
   அதையும் சகஜமாக ஏற்றுக்கொள்வீர்களோ ..?

   – why would you have Rs.60K in hand
   unless you print your own money –

   // unless you print your own money -//
   இது உங்கள் திமிரைக் காட்டுகிறது.
   இந்த திமிர் இங்கே உங்களுக்கு எப்படி,
   எதனால், ஏன் வந்தது…? பரமசிவன் கழுத்தில்
   இருக்கும் பாம்பு என்று நினைத்துக் கொள்கிறீர்களா…?
   பாம்பு எங்கே இருந்தாலென்ன ? நான் இதை
   எதிர்கொள்ளாமல் விடலாமா ?

   – ஓகே – பணம் தேவையென்றால்
   சொந்தமாக அச்சடித்துக் கொள்வது தான்
   உங்கள் வழக்கம் என்று இப்போது
   தெரிந்து கொண்டேன்.
   உங்கள் அரசு… அவர்கள் செய்வதை
   உரிமையுடன் நீங்களும் செய்யலாம்..
   ஆனால், அதையே நானும் செய்ய முடியுமா…?
   உள்ளே தள்ளி விடுவார்களே…!

   – If that person transfers money driectly
   into your bank account, why would you have
   60K cash???

   நான் என் மனைவியின் வளையல்களை
   அடமானம் வைத்து பணம் வாங்கி வந்தேன்…

   அந்த அடகுக்கடை சேட்ஜி –
   – அவரும் குஜராத்திக்காரர் தான் –
   பிடித்தம் எல்லாம் கழித்துக்கொண்டு,
   மீதி பணத்தை, கேஷாகத்தான் கொடுப்பேன்
   என்று சொல்லி விட்டார்…

   உங்களுக்கு தெரிந்த குஜராத்தி அடகு கடைக்காரர்
   யாராவது செக் (cheque) ஆக கொடுப்பவர்
   இருந்தால் சொல்லுங்களேன்… எதிர்காலத்திற்கு
   உதவும்.

   – perhaps in 15-20 years our next generation
   won’t need to transact with paper money. –

   உங்கள் favourite country – அதான் அமெரிக்கா,
   நம்மை விட 50 வருடங்கள் முன்னேறிய நாடு.
   அங்கே இன்னமும் பேப்பர் கரன்சி புழக்கத்தை விட்டு
   போகவில்லையே ஏன் என்று கண்டு பிடியுங்களேன்.

   இந்த வலைத்தளத்தில், நான் பாசிடிவ்’வாக
   25 இடுகைகள் எழுதினால், இடையே ஒரு
   நெகடிவ் இடுகையும் வரலாம்… ஆனால் நீங்கள்
   எப்படி மற்ற அத்தனை இடுகைகளிலும் எந்தவித
   பின்னூட்டமும் போடாமல், எந்தவித விவாதங்களிலும்
   கலந்து கொள்ளாமல் – உங்கள் “இஷ்டதெய்வம்”
   சம்பந்தப்பட்டது என்றால் மட்டும்
   டக்கென்று வந்து குதித்து விடுகிறீர்களே – எப்படி … ?

   -Change is the only permanent thing.
   Accept it and move on –

   உண்மை – அந்த “change” -க்காக தானே சார் எல்லாருமே
   காத்திருக்கிறார்கள்…!!!

   போங்க சார் போங்க – மெனக்கெட்டு, அலைந்து-திரிந்து,
   யாருக்கோ ஜால்ரா போடறதை விட்டு விட்டு,
   வீட்டில் – பெண்டாட்டி, பிள்ளைகளுக்காவது உதவியாக,
   ஒத்தாசையாக இருக்க முயற்சி செய்யுங்கள்…

   ஊருக்குத்தான் உபயோகம் இல்லையென்றாலும் –
   அவர்களாவது சந்தோஷமாக இருக்கட்டும் …

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 12. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  கா மை சார் ,
  வங்கிகளில் வாராக்கடன்கள் அதிகமாகி விட்டது .
  நட்டக்கணக்கை சரி செய்யத்தான் இது போன்ற நடவடிக்கைகள் .
  திரு ராம . வீரப்பன் சொன்னது போல ” காலத்தின் கட்டாயம் “

 13. prabhuram1Pr சொல்கிறார்:

  இன்று, ஹரியானாவில்,
  மத்திய அமைச்சர் அமீத் ஷா பங்கேற்ற
  யோகா நிகழ்ச்சியில், சீனாவிலிருந்து
  இறக்குமதி செய்யப்பட்டயோகா MAT–களை
  யோகா செய்ய வந்த “யோகி”கள், அடிதடி செய்து.
  அள்ளிக்கொண்டுபோன கண்கொள்ளா காட்சி:

 14. புதியவன் சொல்கிறார்:

  பயணங்களால் நிறைய இடுகைகள் இன்னும் படிக்கலை. கண்ணுல, வஉசி, மாணவர்கள் போர்வையில் இருக்கிற காவாலிக்கூட்டம் இடுகைகள் பார்த்தேன். இன்னும் படிக்கணும். அதுக்குள்ள இந்த ஜி.எஸ்.டி இடுகை பார்த்தேன்.

  கிரி மற்றும் வெங்கட் சொல்றதுல இருக்கிற விஷயங்கள் யோசிக்க வைக்குது. நல்லா படிச்சுட்டு எழுதறேன். அதுக்கு முன்னால ரெண்டு பாயிண்ட்ஸ் சொல்லலாம்னு நினைக்கிறேன்.
  1. மக்கள் எல்லோரும் அக்கவுண்டபிள் ஆகணும். உண்மை. அதுக்கு முன்னால, வாராக் கடன்கள் கொடுத்த வங்கித் தலைவர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஓய்வூதியத்தை நிறுத்திவைத்து, முழுக் கடனும் வசூல் ஆகும்வரை வங்கிப் பணத்தைச் சேமித்து, இருக்கும் எதிர்கால ‘அடுத்தவன் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே” என்று இருக்கும் அதிகாரிகளின் சம்பளத்தைக் கொடுக்கலாம்.
  2. மோடி, பாஜக ஒன்றைப் புரிந்துகொள்ளணும். மனுசனுக்கு முதலில் உணவு, உடை, அப்புறம் இருப்பிடம், அதற்கு அப்புறம்தான் மதம். சும்மா, வங்கி வேறு, அது ஒரு இன்ஸ்டிடியூஷன், அரசு வேறு என்றெல்லாம் ஜிங் சக் பேசக்கூடாது. மக்கள் பணத்தை, கயவாளிகளுக்கு (மால்யா போன்று) கொடுத்து வாராக் கடன்கள் ஆக்க யார் இந்த இன்ஸ்டிடியூஷன்களுக்கு அதிகாரம் கொடுத்தது? மந்திரிகள், அரசியல்வாதிகள் சொன்னா எவன் பணத்தையோ எடுத்து எவனுக்கோ வாரி வழங்குவார்களா?

  பணம் அக்கவுண்டபிலிட்டி இருக்கணும்னு தோன்றினா, முதலில் பஞ்சப் பரதேசிகள் வங்கியில் போடும் 2000, 3000 ரூபாயில் கையை வைக்கவேண்டாம். அவனுக்கு ஒரு நாளில் கிடைக்கும் 500 ரூபாயை வைத்து எப்படி குடும்பத்தினரின் வயித்தைக் கழுவுவது, அவங்களுக்குத் தேவையான Basic Needsக்கு என்ன பண்ணுவது என்று யோசிப்பதிலேயே ஆயுள் போகிறது. ரியல் எஸ்டேட்டில், அது சம்பந்தமான தொழில்களில் லட்சக்கணக்கான கருப்புப் பணம் புகுந்து விளையாடுகிறது. அதை நோக்கி கவனம் திரும்பட்டும்.

  நாங்க Inventory Control பற்றி, கணிணி ப்ரோக்ராம்லாம் எழுதற காலத்துலயே சொல்லுவோம். 20% பொருட்கள் 80% வேல்யூ. அதனால, 80% பொருட்களில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு (அதாவது எங்களைப் போல பஞ்சப் பரதேசிகளை), 20% மேல்தட்டினர், அரசியல்வாதிகள் (கவுன்சிலரிலிருந்து ஆரம்பித்து) கழுத்தைப் பிடியுங்கள். இதனை, ‘குருவி மூளை’ உள்ள நானே சொல்லும்போது, பெத்தப் பெரிய படிப்புப் படித்த அதிகாரிகளுக்குத் தெரியாதா?

  பாஜகவை தேர்ந்தெடுத்தது, அவங்க ஏதோ ‘அஸ்திவாரம் போட்டிருக்காங்க ஐந்து வருஷமா’, இனி கடகடவென கட்டிடம் எழும்பி, நமக்கெல்லாம் நல்ல காலம் பொறக்கப்போவுதுன்னு நம்பின எளிய மக்கள். பாஜகவைத் தேர்ந்தெடுத்தது மல்லையாக்கள் இல்லை. அதுனால, அந்த 80% பஞ்சப் பரதேசிகளுக்கு நல்லது செய்ய மெனக்கிடட்டும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.