ராஜ ராஜன் ….


அரசியலில் புகழ்பெற ஆயிரம் வழிகள் இருக்கின்றன…
அதில் மிகச்சுலபமான வழி – ஒரு குறுக்கு வழி,
சமூகத்தில், மக்கள் மனதில் – உயர்ந்த இடம் பெற்றுள்ள
புகழ்பெற்ற மாமனிதர்களை – எந்தவித அடிப்படை
ஆதாரங்களோ, உண்மைகளோ இன்றி –
தூற்றுவது, அவதூறு கூறுவது …

உலகமே வியந்து பாராட்டும்,
ஒரு தமிழன் – மாபெரும் சோழ மாமன்னன் –
ராஜ ராஜனைப்பற்றி, குறுகிய அரசியல் காரணமாக
அண்மையில், இப்படி ஒரு அவதூறு கிளப்பப்பட்டபோது,
மனதில் மிகப்பெரிய சோகம் எழுந்தது… !

இதற்கு யார் சரியாக விளக்கம் கூறப்போகிறார்கள் என்று
நினைத்திருந்தபோது –

அவசியம் பரந்த அளவில் எடுத்துச்செல்லப்பட
வேண்டிய செய்திகளை உள்ளடக்கிய இந்த காணொளியை
கண்டேன்….

எடுத்துக்கொண்ட பொருளை, யார் மனமும் புண்படாமல்,
மிகத்தெளிவாக எடுத்துச் சொல்லும் ராஜ்மோகனுக்கு
நமது பாராட்டுகள் …

தமிழர்கள் அனைவரும் அவசியம் காணவேண்டிய
ஒரு காணொளி –

.
—————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to ராஜ ராஜன் ….

 1. புதியவன் சொல்கிறார்:

  1. மேலே இருக்கும் கல் ஒற்றைக் கல் கிடையாது. அது பல கற்களின் கூட்டு.
  2. இவர் சொன்னதுபோல தஞ்சைப் பெரியகோவில் உலக அதிசயம்தான். அந்தக் கோவிலுக்குப் போய் சிற்பங்களைப் பார்க்கும்போது மனது சிலிர்ப்பதை உணரமுடியும். ராஜராஜனின் கல்வெட்டில் அவரது பெயரைப் பார்த்ததும் நான் மிகவும் சிலிர்ப்படைந்தேன். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ராஜராஜன் தொட்ட கல், அவன் சென்ற வாயிலில் நான் நிற்கிறேன் என்பதே பெரிய பெருமிதமாக இருந்தது.

  எதையேனும் உளறினால் பெரிய ஆளாகிவிடலாம், பேசுபொருளாகிவிடலாம் என்று பா.ரஞ்சித் எண்ணிப் பேசியதை, கவனிக்காது கடந்துபோகுதலே சரியான பதிலாக இருக்கும். இவர்கள் புகழுக்காக உளறும் நவீன கோயபல்ஸுகள்.

 2. புவியரசு சொல்கிறார்:

  ஆயிரம் வருடம் தாண்டியும் அழியாப்புகழ் பெற்ற
  ஒரு தமிழ் மன்னனை இகழ்ந்து பேச இவருக்கென்ன தகுதி
  இருக்கிறது ?
  அப்படியென்ன உலகப் புகழ் பெற்ற
  சரித்திர ஆராய்ச்சியாளரா ?
  கல்வியிற்சிறந்த மேதையா ?
  அனுபவத்தில் மூத்த கல்வியாளரா ?
  ஒன்றிரண்டு திரைப்படங்களை எடுத்து வெற்றி கண்டுவிட்டால்,
  உலகுக்கே அறிவுரை கூறும் தகுதி இவருக்கு வந்து விட்டதா ?
  தேவையற்ற பேச்சுகளை தவிர்க்க வேண்டும் பா.ரஞ்சித்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.