ஐந்திலேயே வளைய வைக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ….!!!நேற்று வெளிவந்த ஒரு செய்தி –

சீன அதிபர் ஜி ஜின்பிங், கடந்த 3 மாதங்களாக,
மிகத்தீவிரமாக ஒரு திட்டத்தை கையில்
எடுத்திருக்கிறார்… கேட்கவே வித்தியாசமாக
இருக்கும்.

சீனாவை, கால் பந்தாட்டத்தில் உலகிலேயே
மிகச் சிறந்த நாடாக உருவாக்கத் திட்டமிட்டு,
மழலைப்பள்ளிகளிலேயே (கிண்டர் கார்டன்)
கால் பந்தாட்டத்தை அறிமுகப்படுத்தி,
குழந்தை கால் பந்தாட்டக்காரர்களை உருவாக்குவதில்
பெரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

முதல் பேட்சில் (first batch) –
ஷாங்காயில், காங்க்செங் கிண்டர்கார்டன் பள்ளியில்
5-6 வயதுடைய, 23 சிறார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு,
அவர்களுக்கு மிகச்சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு,
பயிற்சி அளிக்கப்படுகிறது…

……………….

Their heads soaked in sweat, a class of little boys practices
Lionel Messiesque stepovers at a kindergarten tucked
between residential tower blocks in Shanghai.

They do not know it, but they are a tiny part of President Xi Jinping’s
aggressive drive to make China a footballing superpower.

Mr.Xi’s ruling Communist Party is ploughing money into grassroots
football; but it went a step further in March when it announced a
pilot scheme of football focussed kindergartens.

…………………..

ஐந்து வயதிலிருந்தே இவர்களுக்கான பயிற்சிகள்
துவங்கப்பட்டு, 15 வயது ஆகும்போதே, உலகின்
தலைசிறந்த கால் பந்தாட்டக்காரர்களுக்கு ஈடான
திறனை இவர்கள் பெற வேண்டும் என்று
திட்டமிடப்பட்டுள்ளது.

கீழே – இந்த குழந்தைகளின் பயிற்சியும்,
நெளிவு-சுளிவுகளும் பார்க்கவே
எத்தகைய பிரமிப்பையும்,
பரவசத்தையும் தருகிறது – பாருங்கள்…!!!
( இந்த காணொளி எங்கே எடுக்கப்பட்டது
என்பது குறித்து தகவலில்லை…காணொளி உதவி –
– நண்பர் செல்வராஜனுக்கு நன்றி …)

.
————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to ஐந்திலேயே வளைய வைக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ….!!!

 1. Selvarajan சொல்கிறார்:

  அய்யா ..! இந்த குழந்தையின் பெயர் Syed Arat Hosseini என்பதாகும் இவர் அக்டொபர் 10 — 2013 ல் பிறந்தவர் ஈரானிய நாட்டை சேர்ந்தவர் .. இவர் ஜிம்னாட்டிக்ஸ் மற்றும் அக்ரோபாட்டிக்ஸ் போன்றவற்றில் தனது தந்தையால் பயிற்சி அளிக்கப்பட்டவர் .. அவரைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள :–
  http://arat.parsonline.com/en/who-arat-is
  https://www.instagram.com/arat.gym/?hl=en

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   நன்றி செல்வராஜன்.

   படங்களை பார்த்தேன்.. இந்தச் சிறுவன்
   அபூர்வப் பிறவி தான். எதிர்காலத்தில்
   சரித்திரம் படைப்பான்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.