வியப்பானது….!!!


விஷ நீரை அருந்தி மயங்கிக்கிடந்த சகோதரர்கள்
நால்வரையும் தருமன் மீட்க முனைந்தபோது,
யட்சன், தருமனிடம் – முதலில் என் கேள்விகளுக்கு
சரியான பதில்களைச் சொல்லி விட்டு, பிறகு
உன் தம்பிகளை மீட்டுச் செல் என்கிறான்.

அதில் பல கேள்விகளுக்கு ஊடாக யட்சன் கேட்ட
இந்த கேள்வியும், அதற்கு தர்மன் சொன்ன பதிலும்
இந்த சமயத்தில், என் நினைவிற்கு வருகின்றன…

—————

– எது வியப்பானது…?

நாள்தோறும் பலர் இறப்பதைக் கண்ட போதும்..
தனக்கு மரணம் இல்லையென்று மனிதன்
கருதுகின்றானே அதுதான் வியப்பானது….

———————

கிரேசி மோகன் – இன்று மதியம்
காலமானார் என்கிற செய்தியை கேட்டதும்
முதலில் நான் திகைத்தாலும்,

பிறகு நினைவில் வந்தது –
இந்த கேள்வியும் பதிலும் தான்.

பிறந்தவர் எவரும் ஒருநாள் போய்த்தானே
ஆக வேண்டும்…? எனவே மரணம் என்பது உடனடியாக
அதிர்ச்சியை கொடுத்தாலும் –

பல வருடங்கள்
முன்னரே நாம் தெரிந்து வைத்திருக்கும்
ஒரு உண்மை தானே அது …

எது நல்ல சாவு…?

நோய்வாய்ப்பட்டு, நீண்ட காலம் படுக்கையில் கிடந்து
தனக்கும், பிறருக்கும் தொந்திரவாக இல்லாமல்,
திடீரென்று உயிர் பிரிகிறதே – அவர்கள் எல்லாம்
கொடுத்து வைத்தவர்கள்…

உற்ற சொந்தங்களுக்கும், நெருங்கிப் பழகியவர்களுக்கும்,
பிரிவு தாங்கொணா வருத்தத்தை கொடுக்கும் என்பது
உண்மையே…

ஆனால், அல்லல்படாமல் – அந்த உயிர்
அமைதியாகப் பிரிந்தது என்றால் –
அதுவும் ஒரு விதத்தில் ஆறுதலே.

1977-78 ல், திருச்சியில், நான் பணிபுரிந்த இடத்தில்,
ஒரு விழாவை முன்னிட்டு, மோகன் குழுவினரின்
(அப்போது எஸ்.வி.சேகரும் அவரும் இணைந்து
இருந்தனர்….நாடகப்ரியா என்று நினைக்கிறேன்…)
“கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்” என்கிற நாடகத்தை
மேடையேற்றினோம்…

அப்போது விழாக்குழுவின் சார்பாக நான்
மோகன் குழுவினருடன் இணைந்து பணியாற்றும்
அனுபவம் கிடைத்தது. அப்போது தான், அந்தக் குழு
மெல்ல மெல்ல புகழ்பெற ஆரம்பித்திருந்தது.

அன்று பார்த்த அதே எளிமையையும்,
கலகலப்பையும் – 40 ஆண்டுகளுக்குப் பிறகும் ,
நாடக உலகிலும், திரையுலகிலும்
மிக உயர்ந்த ஒரு இடத்திற்குச் சென்ற பிறகும்
அவரிடம் காண முடிந்தது அவரது
மிகச்சிறப்பான குணம்.

அற்புதமான நகைச்சுவை உணர்வு கொண்டவர்.
அவரது சிரித்த முகத்தை நம்மால் மறக்கவே முடியாது.

நல்ல கலைஞர்களுக்கு மறைவே கிடையாது.
அவர்கள் என்றும் நம் நினைவில் இருப்பார்கள்..
கிரேசி மோகனும் நம் உள்ளத்தில் எப்போதும் வாழ்வார்.

.
———————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to வியப்பானது….!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  நல்ல கலைஞர் கிரேசி மோகன் அவர்கள். அவரது நாடகங்கள் அனேகமா வாரம் ஓரிரு முறை கேட்பேன். சில மாதங்களுக்கு முன், அவரது ட்ரூப் சீனு மறைந்தார். இப்போ கிரேசி. மிகத் திறமையானவர்.

  ஒவ்வொருவரும் அவங்க அவங்க ஸ்டேஷன் வந்ததும் இறங்கித்தான் ஆகவேண்டும். சட் என்று அவர் ஸ்டேஷன் வந்துவிட்டது. அதனாலென்ன…அவரை நினைவுகூறத்தக்க அளவில் நிறைய நாடகங்கள், காணொளிகள், நகைச்சுவைக் காட்சிகள் கொடுத்துவிட்டுத்தானே போயிருக்கிறார்.

  அவரது ஆன்மா சாந்தி அடைவதாக. அவருடைய உறவினர்கள், நண்பர்கள், என்னைப்போல முகம் தெரியாத ஆயிரக்கணக்கான கிரேசி மோகன் ரசிகர்கள், அவர்களைப்போலவே பிரிவை எண்ணி மனது வருத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளட்டும்.

 2. D. Chandramouli சொல்கிறார்:

  When I think of Crazy Mohan, immediately I am struck by his utter simplicity. No air at all. Friendly type of conversation, about day to day happenings around us, his extraordinary and enjoyable witty word play – all these make Crazy, the Great. Somehow we feel sad that he passed away too soon. Crazy and Kamal paired extremely well to create memorable non-stopping comedies, the top most being “Munnadi Pinnadi” riotous dialogue. He was rightly proud of his joint family in this age. May his soul rest in peace.

 3. bandhu சொல்கிறார்:

  Sudden departure of Crazy Mohan is a huge loss for all of us. Unbelievable sense of humour and the comedy which did not have any double meaning nonsense.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.