கடவுள் எங்கே இருக்கிறார்…? (இன்றைய சுவாரஸ்யம்…)


கடவுள் கிட்ட பேசணும்… எந்த மொழியிலே பேசறது…
அவர் எங்கே இருக்கிறார்…?

தென் கச்சி சுவாமிநாதன் சுவாரஸ்யமான
குட்டி குட்டி கதைகளை / செய்திகளை
சொல்வதில் சமர்த்தர்.

அவர் சொல்லும் ஒரு குட்டிக் கதை … அவரது வார்த்தைகளிலேயே –

————

ஒரு ஆசிரமம் .அங்கே ஒரு குருநாதர் இருந்தார்,
அவரை தேடிகிட்டு போனான் ஒருத்தன். குருநாதர் அவனை நிமிர்ந்து பார்த்தார்

உனக்கு என்ன வேணும் ? ன்னு கேட்டார்

ஐயா நான் கடவுளை பார்க்கணும்’ ன்னு சொன்னான்.

அதுக்கு ஏன் என்னை தேடிகிட்டு வந்தே ? ன்னு கேட்டார்

விவரம் தெரிஞ்சுகிட்டு போகலாம் ன்னு வந்தேன்..
கடவுளை எப்படி பார்க்கிறது ..
எப்படி அவரோட பேசறது ? எந்த மொழியில பேசணும் ?
இதெல்லாம் தெரிஞ்சுகிட்டு போகலாம்’ ன்னு வந்தேன்’ .. ன்னு சொன்னான்.

சரி புறப்படு’ ன்னார்

எங்கே ? ன்னான்

இங்கே இருக்கிற சீடர்கள் சில பேரை பார்த்துட்டு
வரலாம் .. வா — அப்படின்னு சொல்லி அவனை அழைச்சிட்டு புறப்பட்டார் .

இவன் அவர் பின்னாடியே போனான்.
அங்கே ஒரு மரத்தடியில் இரண்டு சீடர்கள் உக்கார்ந்து பேசிகிட்டு இருந்தாங்க

அவங்களை சுட்டி காட்டி , ” அதோ பார் அவங்க
என்ன செஞ்சுகிட்டுருக்காங்க ?
அப்படி’ ன்னு கேட்டார்

ஒருத்தன் இன்னொருவன் கிட்ட பேசிகிட்டு
இருக்கான் ! ன்னான்.

அடுத்தபடியா இன்னொரு மரத்தடியில்
ஒரு சீடன் , தனியா உக்கார்ந்து இருக்கான்

அவனை சுட்டி காட்டி ,” அதோ பார் அவன்
என்ன செஞ்சிகிட்டு இருக்கான் ? ன்னு கேட்டார்

அவன் என்ன சும்மாதான் இருக்கான் – அப்படின்னான்

குருநாதர் சிரிச்சி கிட்டே விளக்கம் கொடுத்தார்

முதல் மரத்தடியிலே பாத்தியே ..
அங்கே ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு பேசி கொண்டிருந்தான்

“இரண்டாவது ஒரு மரத்தடியிலே பாத்தியே
அங்கே ஒரு மனிதன் கடவுளோடு பேசி கொண்டிருக்கிறான் ” – அப்படின்னார்

இதை கேட்டதும் இவன்
இன்னும் குழம்பி போயிட்டான்

என்ன சொல்றிங்க ? ன்னான்

அவர் சொன்னார் :

” இதோ பாருப்பா .. ஒரு மனிதன்
இன்னொரு மனிதனோடு பேசணும்’ னா
அதுக்கு மொழிதான் தொடர்பு சாதனம் .

ஒரு மனிதன் கடவுளோடு தொடர்பு
கொள்ள அதுக்கு ” மௌனம் ” தான்
தொடர்பு சாதனம் .

அதனாலே நீ கடவுளோட தொடர்பு
கொள்ள விரும்பினால் மௌனமாக இரு ..

மனிதனோட தொடர்பு கொள்ள
விரும்பினால் நீ பேசு .. அப்படின்னார் .

வந்தவன் யோசிக்க ஆரம்பிச்சான்.
கடவுளோடு எந்த மொழியிலே
பேசணும்ங்கறதையும் புரிஞ்சுகிட்டான்.
அந்த கடவுள் தனக்குள்ளே இருக்கிற
ஓர் உண்மை – அப்படிங்கிறதையும் புரிஞ்சுகிட்டான் .

ஓஷோ என்ன சொல்றார் தெரியுமா ?

” நீ பிறந்த பொது மௌனத்தை தான்
உலகத்துக்கு கொண்டு வந்தாய் .
மொழி உனக்கு தரப்பட்டது .சமூகத்துடன் பழகுவதற்கு அது ஓர் அன்பளிப்பு.
அது ஓர் கருவி . அது ஓர் சாதனம் .
ஆனால் மௌனம் இந்த உலகத்துக்கு
நீ கொண்டு வந்தது . அந்த மௌனத்தை
நீ மீண்டும் அடைய முயற்சி செய் ….
அதுதான் நீ மீண்டும் குழந்தை ஆவதற்கு வழி….

மகான்கள் என்ன சொல்றாங்க தெரியுமா ?
உண்மையான வெறுமை தன்மை தான் கடவுள்.
அந்த கடவுளோடு பேச விரும்புகிறவர்கள்
கற்று கொள்ள வேண்டிய மொழி மௌனம்.
இதுதான் மகான்கள் தங்கள் அனுபவத்தில்
உணர்ந்து நமக்கு சொல்லியிருக்கிற உண்மை.
இதை பற்றி கொஞ்சம் சிந்திக்க வேண்டியது
நமது கடமை .

——————————————————
இது போனஸ் –

நம்ம ஆள் ஒருத்தர் கடவுளை
பார்க்கணும்னு ஆசைப்பட்டார்

நான் உங்களுக்கு கடவுளை காட்றேன்னு
சொன்னங்க அவங்க மனைவி .

நாலு நாள் அவனை பட்டினி போட்டாங்க …
கணவனுக்கு சாப்பாடே கிடையாது.

அஞ்சாவது நாள் அவரை உக்கார வச்சி
இலையை போட்டு சாப்பாடு போட்டாங்க …
பட்டினி கிடந்தவர் சாப்பாட்டை பார்த்தார் .

” நான் கடவுளை பார்த்திட்டேன்’ னு கத்தினார் .

எங்கே ? ன்னாங்க அந்த அம்மா .

“இதோ இந்த சாப்பாடு தான்
இப்ப எனக்கு கடவுள் !”
அப்படின்னு சொல்லிபுட்டு அவசர அவசரமா சாப்பிட ஆரம்பிச்சார் அவர்… 🙂 🙂 🙂

.
————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

17 Responses to கடவுள் எங்கே இருக்கிறார்…? (இன்றைய சுவாரஸ்யம்…)

 1. அறிவழகு சொல்கிறார்:

  நான் பரிந்து கொண்டதை சொல்கிறேன்.

  கடவுளிடம் பேசும் மொழி மெளனம்…?. தெரியல.

  மெளனம், சக மனிதர்களிடம் பேசாது இருப்பது. கடவுளிடம்….!!?

  மெளனமாக‌ இருந்தால் அவரிடம் எதை கேட்பது, இறைஞ்சுவது, தியானிப்பது.

  நம் தேவையை கடவுளிடம் மட்டும் தான் இறைஞ்ச வேண்டும். எனில், மெளனமாக இருந்து எதை கேட்பது.

  அவர் எல்லாம் அரிந்தவர், ஆகவே மெனமாக இருந்தாலே நம் தேவையை அறிந்து கொடுப்பார் என்ற சிந்தனையின் வெளிப்பாடாக இருக்கும் என்று கருதுகிறேன்.

  மெளனம் பல நன்மைகளை தரும் என்பது வேறு, இறைவனிடம் பேசும் மொழி என்பது வேறு என்று என் சிற்றறிவுக்கு படுகிறது, தெறிந்தவர்கள் விளக்கமாக சொன்னால் நல்லது.

  அப்போ தியானம்….? எந்த மொழியில்…? மொழியில்லா தியானமா? எப்படி…?

  மெளனமாக தியானம், சக மனிதர்களிடம் பேச்சை நிறுத்தி கடவுளை அவரவர் மொழியில் கடவுள் கற்று தந்த மொழியில்.

  இது நான் புரிந்துகொண்டிருப்பது.

  இறைவன் மொழிக்கு அப்பாற்பட்டவன். அவன் நம் உள்ளத்தில், சிந்தையில் தோன்றுவதற்கு முன்பே நம் எண்ணங்களை அதாவது நாம் என்ன கேட்க, சிந்திக்க விளைகிறோம் என்பதை அறிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவன். அவன் தான் இறைவன்.

  இறைவனே நன்கு அறிந்தவன்.

  • அறிவழகு சொல்கிறார்:

   மேலும், மனதை மொழியற்று வெறுமையாக எந்த சிந்தனையும் இல்லாமல் நிலை நிறுத்த முடியுமா…? நான் அறிந்த வரையில் ஒருமை படுத்த முடியும். அதுவும் சில நிமிடங்கள் தான். அது இயலபாக‌ அலைபாயும் தன்மை கொண்டது. அப்படி தான் மனிதன் படைக்கபட்டிருக்கிறான்.

   அப்படி அலைபாயும் எண்ணங்களுக்காக அவன் தண்டிக்கப்படமாட்டான் என்பது எனது புரிதல். ஏனென்றால், அவனுக்கு அதை அடக்கியாளும் ஆற்றல் கொடுக்கபடவில்லை. அப்படி அதை அடக்கிவிட்டேன் என்று யார் சொன்னாலும் சுத்த பேத்தலாக தான் இருக்கும்.

   இறைவன் கொடுக்காத ஒன்றை பெற்றுவிட்டேன் என்று சொல்வதை வேறு என்ன சொல்ல.

 2. Selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! // கடவுள் கிட்ட பேசணும்… எந்த மொழியிலே பேசறது…
  அவர் எங்கே இருக்கிறார்…? // ….. தத்துவமேதை பெர்னாட்ஷா ஒருமுறை, தனக்கு 25 மொழிகள் தெரியும் என்று பெருமையோடு சொல்லிக் கொண்டார்.மற்றவர்கள் எப்படி என்று விசாரிக்க, ‘ஆமாம்! என்னால் 25 மொழிகளில் மௌனமாக இருக்கமுடியும்!’ என்றார் –அவர் குறும்பாக….!!
  ‘மௌனம் சர்வார்த்த சாதகம்’ என்கிறது சம்ஸ்கிருதம். மௌனத்தால் எல்லாவற்றையும் சாதிக்கலாம்… … !
  ரமணா மகரிஷி கூறுகிறார் : ” Silence is truth ,Silence is bliss , Silence is peace , And hence silence is the self ” மௌனம் என்பது பற்றி நமது சித்தர்கள் — மகான்கள் என்று நிறைய கூறியிருக்கிறார்கள் — வாய் மூடி பேசாமல் இருப்பதல்ல உண்மையான மௌனம் — மனதோடு உரை நிகழ்த்த வேண்டும் — அப்படித்தானே …?

  • அறிவழகு சொல்கிறார்:

   நண்ப செல்வராஜன்,

   நான் வாதம் செய்யவில்லை. உண்மையில் விளக்கம் வேண்டி தான் கேட்கிறேன். தவ‌றாக நினைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். கா.மை. ஐயாவுக்கும் இந்த வேண்டுகோள்.

   //வாய் மூடி பேசாமல் இருப்பதல்ல உண்மையான மௌனம் — மனதோடு உரை நிகழ்த்த வேண்டும் //

   மனதோடு எப்படி உறையாற்றுவது. அதற்கு அவரவர் மொழி அவசியம் இல்லையா. மனதோடு மொழியற்று எப்படி உரையாற்றுவது. அதற்கு பொருள் என்னவாக இருக்கும். மொழி சக மனிதர்களிடம் தொடர்பு ஊடகமாக இருந்தாலும், எண்ணம் என்பது அந்த ஊடக மொழி பொருளாக அன்றி பொருளற்று இருக்க முடியுமா…? எனக்கு உண்மையில் விளங்கவில்லை.

   சரி, மனதோடு மொழியற்று உரையாடுவதவே கொண்டாலும், அது கடவுளோடு உரையாடியதாக கொள்ளமுடியுமா?

   விளக்கவும்.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    அறிவழகு,

    யோசிக்கத் தூண்டுவது தான் இந்த இடுகையின் நோக்கம்.
    இன்னும் கொஞ்சம் யோசியுங்கள்…
    விடையை நீங்களே கண்டு விடுவீர்கள்….!

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

 3. அறிவழகு சொல்கிறார்:

  நண்ப கா.மை. ஐயா, செல்வராஜன்,

  ///மகான்கள் என்ன சொல்றாங்க தெரியுமா ?
  உண்மையான வெறுமை தன்மை தான் கடவுள்.
  அந்த கடவுளோடு பேச விரும்புகிறவர்கள்
  கற்று கொள்ள வேண்டிய மொழி மௌனம்.
  இதுதான் மகான்கள் தங்கள் அனுபவத்தில்
  உணர்ந்து நமக்கு சொல்லியிருக்கிற உண்மை.///

  ”உண்மையான வெறுமை தன்மை தான் கடவுள்” எனில், கடவுள் என்பது வெறுமை, சூனியம்? அதாவது, ஒன்றும் இல்லாததா கடவுள். எப்படி…?

  இந்த தவறான புரிதல் தான் கடவுள் மறுப்பாளர்களும் அரிவியளாலர்களும் கடவுள் இல்லை என்றார்களோ…!? தெரியாது.

  ‘கடவுள்’ என்று புரிந்து கொள்வதற்குமே அந்த வார்த்தை, மொழி அவசியாகிறது. வெறுமை, சூனியம் என்பதற்கும் கூட.

  அந்த வெறுமைக்கு சூனியத்துக்கு அதாவது ஒன்றும் இல்லாததற்கு ஆற்றல், வலிமை எப்படி இருக்கும்.

  நாம் எங்கேயோ தவறுகிறோம்.

  இறைவன் இந்த அண்ட சராசரத்தையும் படைத்தவன், நாம் அனைவரையும் உட்பட. அவன் இந்த அண்ட சராசரத்தையும் விட பெரியவன். அறிவால் ஆற்றலால் ஏன் உருவத்தால் கூட. அதனால் தான் யாரும் அவனை இந்த பிறவியில் பார்க்க முடியாது. நாடியோருக்கு மறுமையில் காட்சி தருகிறான்.

  ஆக, அவனுக்கு உருவம் உண்டு. அவன் வெறுமையோ சூனியமோ நிச்சயம் இல்லை.

  அவனை அறிந்து கொள்ளும் பொறுட்டே வேதங்களை அருளியுள்ளான். நாம் அனைவரும் வேதங்களை அறிந்து, அதில் அவன் தன்னை எப்படி தன் படைப்புகளான நாம் அறிந்துகொள்ள வேனும் என்று விரும்புகிறானோ அப்படியே அறிந்துகொள்வோம்.

  மனிதர்களின் சொந்த கற்பனைகளும் கதையாடல்களும் உதவாது என்பது என் தாழ்மையான கருத்து.

  • Selvarajan சொல்கிறார்:

   நண்பரே ….! // மனதோடு எப்படி உறையாற்றுவது. அதற்கு அவரவர் மொழி அவசியம் இல்லையா. மனதோடு மொழியற்று எப்படி உரையாற்றுவது. // கண்டிப்பாக அவரவர் மொழி அவசியம் தான் .. அப்படி மனதோடு உங்களின் மொழியோடு உரையாற்றிப் பாருங்கள் — உண்மைகள் புரியும் — !

   இது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல — ஒரு சில வரிகளிலோ – பக்கங்களிலோ விளக்கம் கொடுத்து விட கூடியதும் அல்ல — இதைப்பற்றி ஓரளவு உள்வாங்கிக்கொள்ள பலர் பலவிதமாக நிறைய கூறியிருக்கிறார்கள் … அதில் ரமணமஹரிஷியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலால் தெளிவு ஏற்பட

   // பகவான் எல்லோருடைய பிரச்னைகளையும் தீர்த்தாரா?

   ஆமாம், பிரச்னை என்று யார் சொல்வது என்று கேட்டார்.

   ‘‘நான்தான் சொல்கிறேன்’’ என்று பதில் வந்தது.

   ‘‘அந்த நான் யார் என்று பார்’’ என்று திருப்பிக் கேட்டு மடக்கினார்.

   ஒரு கணம் இந்த பதிலைக் கேட்டவர்கள் திகைத்தார்கள். என்ன இது? நான் யார் என்று எப்படி என்னையே கேட்டுக் கொள்வது என்று குழம்பினார்கள். மீண்டும் பகவானை பார்த்தார்கள்.

   ‘‘பகவானே, நான் யார் என்று எப்படி கேட்டுக் கொள்வது’’ என்று புரியாது கேட்டபோது அழகாக பகவான் விளக்கினார்.

   ‘‘நான்… நான்… நான்… என்று சொல்கிறாய் அல்லவா. அந்த நான் யார்? என்று சற்று உள்ளே பாரேன். இந்த நான் எனும் எண்ண விருத்தி எங்கிருந்து வருகிறது என்று கவனத்தை உள்முகமாகத் திருப்பேன். இந்த உடலை நான் என்று சொன்னால் தூக்கத்தில் உடலைக் குறித்த நினைவு இல்லையே. ஆனால், சுகமாகத் தூங்கினேன் என்று மறுநாள் சொல்கிறாய். அப்போது இந்த தூக்கத்தை யார் அனுபவித்தது. விழித்திருக்கும்போதும் இந்த நான் உள்ளது. உடலும், உலகமும் மறைந்த தூக்கத்திலும் இந்த நான் என்பது இருக்கிறது. எனவே, இந்த நான் எனும் உணர்வு எங்கு உற்பத்தியாகிறது என்று தேடினால் மெல்ல இந்த நான் தன்னுடைய பிறப்பிடமான ஆத்மாவிற்குள் சென்று ஒடுங்கும்’’ என்று விளக்கினார்… // முழுவதும் வாசிக்க :– https://swasthiktv.com/naan-naan-naan-endra-soluku-vilakam-koorum-bhakavaan-sri-ramana-maharishi/ … நான் யார் என்று அறிய ” ஐயே! யதிசுலபம் ஆன்மவித்தை
   ஐயே! யதிசுலபம். ” என்று பகவான் கூறிவிட்டார் ஆனால் அறிய முற்படும் போது அது எவ்வளவு சிரமம் என்பது புரியும் …!

   ஐயே! யதிசுலபம் ஆன்மவித்தை
   ஐயே! யதிசுலபம். என்கிற பாடலின் விளக்கத்தை அறிய : http://www.sriramana.org/tamilparayana/songsone.php?dayno=3&sonsubtno=3&men=1 மனதோடு அவரவர் மொழியில் உரையாற்றயே தீர வேண்டும் … மெளனமாக ..!!!

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    செல்வராஜன்,

    அருமையான பின்னூட்டம்.
    இந்த மாதிரி கருத்தூட்டம் உடைய பின்னூட்டங்கள்
    இடுகையில் கூறப்படும் விஷயங்களுக்கு கூடுதலாக
    value addition தருகின்றன.

    மிக்க நன்றி.

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

   • அறிவழகு சொல்கிறார்:

    நன்றி நண்ப செல்வராஜன்.

    ஐயாவின் இடுகையின் மையகரு கடவுடளோடு உரையாடும்/தொடர்பு கொள்ளும் மொழி பற்றியது.

    அது மனதோடு உரையாடும் மொழியாக திரும்பி இப்பொது,

    ‘நான் யார்’ என்பதை அறியும் விடயமாக திசை மாறிவிட்டது.

    நீங்கள் மனதோடு உரையாட மொழி தேவை என்று ஆமோதித்தது கண்டு மீண்டும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    ஆக, கடவுடளோடு உரையாட/தொடர்பு கொள்ள மொழி அவசியமாக இருக்கிறது என்று நான் தெரிவித்த கருத்து அப்படியே இருக்கின்றது என்று புரிந்துகொள்ள‌லாமா…?

    • Selvarajan சொல்கிறார்:

     நண்பரே …! கடவுளோடு உரையாட சத்தம் போட்டு — பஜனை பாடி — மந்திரங்களை வாயால் சொல்வதைப்பற்றியே எண்ணிக் கொண்டு இருப்பதற்கும் — மௌனமாக மனதோடு உரையாற்றுவதற்கும் — நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன — அய்யா .. கூறியுள்ளது // மகான்கள் என்ன சொல்றாங்க தெரியுமா ?
     உண்மையான வெறுமை தன்மை தான் கடவுள்.
     அந்த கடவுளோடு பேச விரும்புகிறவர்கள்
     கற்று கொள்ள வேண்டிய மொழி மௌனம்.
     இதுதான் மகான்கள் தங்கள் அனுபவத்தில்
     உணர்ந்து நமக்கு சொல்லியிருக்கிற உண்மை.
     இதை பற்றி கொஞ்சம் சிந்திக்க வேண்டியது
     நமது கடமை .// என்று கூறியிருப்பதற்கு தான் என்னுடைய முதல் பின்னூட்டத்தில் // வாய் மூடி பேசாமல் இருப்பதல்ல உண்மையான மௌனம் — மனதோடு உரை நிகழ்த்த வேண்டும் — அப்படித்தானே …? // என்ற கேள்வியை எழுப்பி இருந்ததற்கு திரு கா.மை அவர்கள்தான் பதில் கூற வேண்டும் …!

     மேலும் மனதோடு உரை நிகழ்த்த ஆரம்பித்தவுடன் மனதிடம் எப்படி பேசுவார்கள் — என்ன கேள்வியை எழுப்புவார்கள் என்பது அவரவர்களைப் பொறுத்தது …” நான் யார்” என்று கேட்டால் தான் அனைத்திற்கும் விடை கிடைக்கும் என்பது தான் மௌனத்தின் ஆரம்பம் என்பதற்காக அந்த மேற்கோளை குறிப்பிட்டேனே தவிர திசை மாற்ற அல்ல … ! கடவுளோடு வாயால் பேசவும் — மௌனமமாக மனதோடு உரையாற்றவும் என்னைப் பொறுத்தவரை ஏதோ ஒரு தெரிந்த மொழி அவசியம் தான் — வேண்டுமானால் கண்ணை மூடிக்கொண்டு — மௌனமாக இருந்து –புறத்தே கையை ஆட்டி சைகை மூலம் கூட பேச விருப்பம் உள்ளவர்கள் பேசலாம் .. இதற்கு மேலும் விளக்கம் வேண்டின் நான் எனது பின்னூட்டத்தில் கேட்டிருந்த ” அப்படித்தானே ..? ” என்பதற்கு திரு கா.மை தான் பதிலளிக்க வேண்டும் … ! அதே போல

     உங்களின் // ஆக, கடவுடளோடு உரையாட/தொடர்பு கொள்ள மொழி அவசியமாக இருக்கிறது என்று நான் தெரிவித்த கருத்து அப்படியே இருக்கின்றது என்று புரிந்துகொள்ள‌லாமா…? // என்பதற்கும் அவர்தான் பதில் கூற வேண்டும் — யாம் மனதோடு உரை நிகழ்த்தும் ரகத்தை சேர்ந்தவன் என்பதில் மாற்றுக் கருத்து இல்லாதவன் …!!!

     • அறிவழகு சொல்கிறார்:

      மிக்க நன்றி நண்ப,

      ///கடவுளோடு வாயால் பேசவும் — மௌனமமாக மனதோடு உரையாற்றவும் என்னைப் பொறுத்தவரை ஏதோ ஒரு தெரிந்த மொழி அவசியம் தான்///

      என்று மீண்டும் உறுதிபடுத்தியமைக்கு.

      இந்த உரையாடல் மிகவும் ஆரோக்கியமாக செல்வது கண்டு மிக்க மகிழ்ச்சி.

 4. palaniappan சொல்கிறார்:

  thanks for all

 5. Selvarajan சொல்கிறார்:

  அய்யா …! மனதோடு தெரிந்த மொழியில் உரையாடி –உரையாடி –அது சிறிது ..சிறிதாக குறைந்து ஒரு ” ஒடுக்கத்திற்கு ” செல்லும் நிலையே // உண்மையான வெறுமை தன்மை { அதுவே } தான் கடவுள் // ..அதோடு அப்போது நாம் இருக்கிற நிலைதான் – உண்மையான மௌனம் –சமாதி நிலை என்பது எமது கருத்து …. !

  எளிதாக எழுதி — பேசி –பிரசங்கம் செய்து விடலாம் …ஆனால் அந்த ஒடுக்கம் என்கிற நிலையை எட்ட எதை கைக்கொள்ள வேண்டும் என்பதற்கான விடை தான் ரமணர் கூறிய ” நான் யார் ” என்கிற கேள்வியை நமக்குள் கேட்டு விவாதிப்பது — உன்னையறிதல் தான் முதல் படி என்று கூறாத சித்தர்களோ — ஞானிகளோ –மகான்களோ — பெரும்பாலும் இல்லை என்பது தான் உண்மை …. ! மனதோடு உரையாடி ” ஒடுக்கத்தை ” நாடுவோம் …!!!

  • அறிவழகு சொல்கிறார்:

   நண்ப செல்வராஜன்,

   பொதுவாக தாங்கள் பின்னூட்டங்களுக்கு பதில் தராதவர், அதை நீங்கள் ஏற்கனவே சொல்லியும் இருக்கிறீர்கள். இருந்தும் என்னுடைய பின்னூட்டங்களுக்கு பொறுப்பாக பதில் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.

   இந்த நம் உரையாடலில் மேலும் பல கேள்விகள் எனக்கு இருக்கின்றன. அவைகளை கேட்டால் நம்பிக்கை கொண்டவர்கள் உங்களை போன்றவர்களை புண்படுத்தி விடுமோ என்று பயம் வருகிறது.

   ஆகவே, இது போல் பொது வெளியில் உரையாற்றுவதில் உள்ள பல சாதக பாதகங்களை கருத்தில் கொண்டும்,

   அவரவர் நம்பிக்கையை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்பதை உணர்ந்தும் , தங்கள் பதில்களுக்கும் கா.மை. ஐயாவுக்கும் இந்த சமயத்தில் மீண்டும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

   • Selvarajan சொல்கிறார்:

    நண்பரே அறிவழகு … ! // நம்பிக்கை கொண்டவர்கள் உங்களை போன்றவர்களை புண்படுத்தி விடுமோ என்று பயம் வருகிறது.// எம்மை பாேன்றவர்களை புண்படுத்தி விடுமாே எனறால் ஏதாே ஒரு பூடகமான வயைறைக்குள் எம்மை திணிக்க தாங்கள் முயல வேண்டாம் என்றும் … யாரும் யாரையும் புண்படுத்த முடியாது என்றும் // அவரவர் நம்பிக்கையை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்பதை உணர்ந்தும் , // அப்படி தாங்கள் உணர்ந்து இருந்தால் நான் திரு .கா.மை. அவர்களிடம் கேட்ட கேள்விக்குள் நுழைந்திருக்க கூடாது என்பதும் தான் என் நிலைப்பாடு .. எமது நம்பிக்கை எத்தகையது ..எதை சார்ந்தது என்பதை அறிந்தவன் யானே ..தவிர மற்றவர்கள் அதை தீர்மானிக்க முடியாது …. இனி உங்களுடன் தாெடர என்னை நிர்ப்பந்திக்க வேண்டாம் என்று நண்பனாக கேட்டுக் காெள்கிறேன் …!!!

 6. அ.பெ.கௌதமன் சொல்கிறார்:

  வாழ்க. வையகம் !வாழ்க வளமுடன் !அன்பர்களே “வாழ்க. வளமுடன் “(மன வள கலை மன்றம்)சேருங்கள்.வேதாத்தியம் படியுங்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.