“குஜராத்” ஸ்பெஷலிஸ்ட் – சிபிஐ ஸ்பெஷல் டைரக்டர் மீதே 3 கோடி லஞ்ச வழக்கு…


1984-பேட்ச் – குஜராத் கேடர் ஐ.பி.எஸ்.அதிகாரி, ராகேஷ் அஸ்தானா,
மோடிஜி குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது, அவரது நேரடி
நிர்வாகத்தின் கீழ், குஜராத்தில் பல முக்கியமான பொறுப்புகளை முன்னாளில் நிர்வகித்திருக்கிறார்…வடோதரா, சூரத் ஆகிய நகரங்களில் போலீஸ் கமிஷனராகவும், முக்கியமாக, குஜராத்தில் – 2002-ல் கோத்ரா ரெயில் எரிப்பு சம்பந்தப்பட்ட வழக்குகளில் ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷனுக்கு பொறுப்பாளராகவும் செயலாற்றி இருக்கிறார்…

பின்னர், மோடிஜி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, இவரும் டெல்லியில்
சி.பி.ஐ. இயக்குநராக நியமிக்கப்பட்டார். அப்போது இவரது நியமனத்தை
குறைகூறி பல புகார்கள் எழுந்தன. ஆனால், மத்திய அரசு அவற்றை
பொருட்படுத்தவில்லை.

சிபிஐ டைரக்டராக இருந்த ரஞ்சித் சின்ஹா, பதவிஓய்வு பெற்றபோது, மத்திய அரசு பல கடின முயற்சிகளை மேற்கொண்டும்( ..!!! ),
அந்த பதவிக்கு பொருத்தமான நபர் கிடைக்காததால்(…!!! ),
துணை இயக்குநர் பதவியிலிருந்த அஸ்தானா-வே, சி.பி.ஐ. தலைவராக, தற்காலிக உயர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்….

பின்னர் திரு.அலோக் வர்மா என்கிற “பொருத்தமான நபர்” கண்டுபிடிக்கப்பட்டு, சிபிஐ டைரக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
திரு.அஸ்தானா, ஸ்பெஷல் டைரக்டர் என்கிற பதவியுடன், டைரக்டருக்கு அடுத்த, இரண்டாம் நிலை பொறுப்பை வகித்தார்.

அதிகாரப் போட்டி…இருவருக்கும் ஒத்துப் போகவில்லை. சில மாதங்களுக்கு முன்னர், இரண்டாம் நிலையிலிருந்த அஸ்தானா, முதல் நிலையிலிருந்த தனது boss மீதே லஞ்சப் புகார் எழுப்பினார். சுமார் 10 வழக்குகளில் அவர் லஞ்சம் வாங்கி இருப்பதாக எழுத்து மூலம் புகார் கொடுத்தார்.

இதன் பிறகு இருவருக்குமிடையே பனிப்போர் சூடானது.

தற்போது, சிபிஐ தனது நிர்வாகத்தில் 2-வது நிலையிலுள்ள அதிகாரியான அஸ்தானா மீதே 3 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக FIR பதிவு செய்துள்ளது… பிரபல meat exporter-உம் பல குற்ற வழக்குகளில் சிக்கி இருப்பவருமான மொய்ன் குரேஷி என்கிற கோடீஸ்வர வர்த்தகரிடம், அவரை வழக்குகளிலிருந்து தப்புவிக்க உதவுவதற்காக, இந்த லஞ்சத்தை பெற்றதாக குற்றச்சாட்டு…

இதில் இன்னொரு விசேஷம், இவருக்கு உதவியாக இருந்ததாக,
பிரதமர் அலுவலகத்தின் கண்ட்ரோலில் உள்ள ‘ரா’ உளவு நிறுவனத்தை
சேர்ந்த இன்னொரு காவல்துறை அதிகாரி மீதும் FIR பதிவு செய்யப்பட்டு
உள்ளது….

இந்த விவகாரங்கள் செய்தி நிறுவனங்களின் மூலம் செய்தியாகவே வெளிவந்து விட்டபோதும் மத்திய அரசு இதுவரை, அதிகாரபூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இன்னமும் suspend செய்யப்படவில்லை; இது வரை கைது நடவடிக்கையும் இல்லை….!!!

மத்திய அரசின், முக்கிய பதவிகளில், தேடித்தேடி, வேண்டப்பட்ட அதிகாரிகளை குஜராத்திலிருந்து கொண்டு வந்து நிரப்பியதன் விளைவு என்னவென்பது இப்போது தான் பொதுவெளியில் தெரியத் துவங்கி இருக்கிறது….

————

கீழே இது குறித்து Indian Express ஆங்கில நாளிதழில் வெளிவந்திருக்கும்
செய்தி கீழே –

https://indianexpress.com/article/india/cbi-names-its-no-2-asthana-as-
accused-no-1-in-bribery-case-lens-on-raw-official-5410941/

——————-

CBI names its No. 2 Asthana as accused No. 1 in bribery case; lens on RAW
official…

In a development with wide ramifications, the Central Bureau of Investigation
(CBI) has booked its Special Director Rakesh Asthana in a bribery scandal,
naming him as an accused in an FIR filed earlier this week. Asthana is No. 2 in
the CBI hierarchy.

The FIR has also named Samant Kumar Goel, Special Director of India’s
external intelligence agency (R&AW), but not as an accused. CBI filed the FIR
on Tuesday. It named Asthana as Accused Number 1 for demanding and taking bribe from a businessman who was under investigation in the Moin Qureshi corruption case by a special investigation team (SIT) headed by Asthana.

According to sources, CBI has put telephone intercepts, WhatsApp messages,
money trail and a statement before the magistrate under Section 164. Text
messages sent to Asthana seeking a reaction went unanswered. Exposing
faultlines within, the CBI on September 21, had said that it had informed the
Central Vigilance Commission (CVC) that it was investigating Asthana in six
cases of corruption. The CBI has also said Asthana was maligning Director
Alok Verma’s image and trying to “intimidate” officials by sending a
“frivolous” complaint to the CVC against Verma.

————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to “குஜராத்” ஸ்பெஷலிஸ்ட் – சிபிஐ ஸ்பெஷல் டைரக்டர் மீதே 3 கோடி லஞ்ச வழக்கு…

  1. அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

    இவர்களின் counterpart தான் ஆ.ராசா, மாறன் சகோதரர்களின் வழக்குகளையும்
    நடத்தி இருக்கிறார்கள். மொய்ன் குரேஷிக்கு மூன்று கோடி பேரம் என்றால்,
    இவர்களிடம் எத்தனை கோடி கைமாறியதோ ? இந்த வழக்குகள் கீழ்கோர்ட்டுகளில்
    சிபியை தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தவறிவிட்டது என்று கூறி நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டன. கோடிகள் கைமாறினால், வழக்குகள் அதற்கு தகுந்த மாதிரி தானே முன்னெடுத்துச் செல்லப்படும் ?
    பி.எம்.ஓ. இதற்கு இன்னமும் எந்தவித விளக்கமும் தரவில்லை போலிருக்கிறதே ?

  2. Mani's avatar Mani சொல்கிறார்:

    ஆயுள் பூராவும் அரசாங்க உத்தியோகத்தில் இருந்தாலும், இந்த அளவு துட்டு
    சம்பாதிக்க முடியுமா ? இன்றைய நாட்களில் 100 க்கு 99 பேர் இப்படித்தான் நினைக்கிறார்கள். புலனாய்வுத்துறை, நீதித்துறை போன்ற முக்கியமான இடங்களில் பணிசெய்ய வேண்டியவர்களை தேர்ந்தெடுக்கும்போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆனால், இங்கேயுள்ள அரசியல்வாதிகள் நேர்மையான அதிகாரிகளை தேடுவதில்லையே. தனக்கு வேண்டப்பட்டவர்களையும், மனசாட்சியே இன்றி, தான் சொல்வதை அப்படியே செய்பவர்களையும் தானே பொறுக்கியெடுத்து நியமிக்கிறார்கள் ? இவர் வித்தியாசமானவர், நல்லவர் என்று நினைத்து நினைத்து நாம் தான் ஏமாந்து போகிறோம்.

  3. அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

    இந்த பிரச்சினை பற்றி ராகுல் காந்தி பேசியிருப்பது
    ( இன்றைய தினமலரில் வெளிவந்திருக்கிறது) –

    குஜராத்தில், 2002-ல் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து நடந்த வன்முறைகள் குறித்த சிறப்பு விசாரணைக் குழுவின் தலவராக இருந்தவர் தான்
    அஸ்தானா.

    அப்போதைய குஜராத் முதல்வரும், தர்போதைய பிரதமருமான மோடிக்கு மிகவும் நெருக்கமானவர். அதனால் தான், சிபி ஐயில் உயர்பதவிக்கு அஸ்தானா வந்தார். தற்போது லஞ்சப்புகாரில் சிக்கியுள்ளார்.

    இந்த பிரதமரின் கீழ்தான், சிபியை என்பது அரசியல் பழிவாங்கும் ஆயுதமாக மாறியது. தற்போது, அந்த அமைப்புக்குள்ளேயே அதிகார மோதல் நடக்கிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.