” விநாச காலே – விபரீத புத்தி “….


ஃபாசிஸம் என்றால் என்ன….?
ஆங்கில அகராதி சொல்கிறது –

A governmental system led by a dictator having complete power, forcibly
suppressing opposition and criticism, regimenting all industry, commerce, etc., and emphasizing an aggressive nationalism and often racism.
———-
..

..

1975 ஜூன் 25, நாட்டில் எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 79 வயது முதியவர், மூத்த தலைவர் திரு.மொரார்ஜி தேசாய், நள்ளிரவில், அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்…. அவரை போலீசார் சிறைக்கு அழைத்துச்செல்ல கிளம்பியபோது, வெளியே காத்திருந்த செய்தியாளர்கள் மொரார்ஜியிடம் நாட்டின் நிலை குறித்து அவரது கருத்தை கேட்டனர்… மொரார்ஜி தேசாய் சொன்ன ஒரே வார்த்தை…

“விநாச காலே – விபரீத புத்தி ”

( கெட்ட காலம் வந்து விட்டால், மனிதருக்கு புத்தி கெட்டுபோய் விபரீத
முறைகளில் செயல்படத்துவங்கி விடுவார்கள்… )

இந்தியா இன்னும் ஜனநாயக நாடாகத்தான் இருக்கிறது என்று நாம் அனைவரும் நம்புகிறோம். இந்த ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க இந்தியர்கள் எந்த தியாகத்தையும் செய்யலாம்.

“பாசிச ஆட்சி ஒழிக” என்று சொன்னதற்காக ஒரு 22 வயது பெண் மீது போலீசில் புகார் கொடுத்து, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அவரை கைது செய்து சிறையில் அடைக்கச் செய்வதன் மூலம் –

தபாஜக தலைவர், மொரார்ஜியின் வார்த்தைகளுக்கு மீண்டும் உயிர்ப்பு
கொடுத்திருக்கிறார்….அந்தப் பெண் சொன்ன வார்த்தைகள் உண்மை தான் என்பதை தன்னையும் அறியாமல் நிரூபிக்கவும் முயற்சிக்கிறார்….

“விநாச காலே – விபரீத புத்தி ”

.
——————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

21 Responses to ” விநாச காலே – விபரீத புத்தி “….

  1. புதியவன் சொல்கிறார்:

    கா.மை. சார்… உங்கள் கருத்திலிருந்து நான் மாறுபடுகிறேன். இது தமிழிசை சம்பந்தப்பட்ட விஷயம் என்பதனால் அல்ல. எந்தக் கருத்தையும் சொல்வதற்கு ஒரு முறை இருக்கிறது. விளம்பரத்துக்கும் சுய நலத்துக்காகவும் சொல்லும்போது, அதன் விளைவுகளை வீரமாகச் சந்திக்கத் தயாராக இருக்கவேண்டும்.

    தமிழிசை நேரடியாகச் சம்பந்தப்படாவிட்டாலும், காவல்துறை, செலெக்டிவ் ஆக சுறுசுறுப்பு நடவடிக்கை எடுப்பது வருத்தத்துக்குரியதுதான்.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      புதியவன்,

      இதை விளம்பரம் என்றும் சுயநலம் என்றும் எப்படி உங்களால் பார்க்க முடிகிறது ?

      அந்தப் பெண் தூத்துக்குடியை சேர்ந்தவர். அண்மையில் தூத்துக்குடியில் மிகப்பெரிய கலவரம் நடந்தது.
      பொதுமக்களில் பலர் பாதிக்கப்பட்டனர்… பல உயிர்கள் காவு கொடுக்கப்பட்டன… இவையெல்லாம் அவர் மனதை பாதித்திருக்கலாமே என்று ஏன் உங்களால் யோசிக்க முடியவில்லை…?

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  2. பிங்குபாக்: ” விநாச காலே – விபரீத புத்தி “…. – TamilBlogs

  3. தமிழன் சொல்கிறார்:

    இதுல இன்னொரு கோணம் இருக்கா? கனடா சிடிசன்ஷிப் வாங்க, இதை காரணமாகக் காட்டினால் (அகதி என்பதுபோல், அல்லது அரசு அடக்குமுறை என்பதுபோல்) சுலபமாகக் கிட்டும். அதற்கான திட்டமா என்பதையும் கவனிக்கவேண்டும். அதற்காகத்தான் அவரது அப்பா உடனேயே தன்னுடைய சாதியைக் குறிப்பிட்டு கடிதம் எழுதினாரா? உடனே இது அரசியலாக்கப்பட வேண்டும் என்பதற்காக? சில வாரங்கள் பொறுத்திருந்தால் உண்மை வெளிவந்துவிடும். தமிழிசை அவர்கள் சொன்னதாக நான் படித்தது, ‘இதை மேடை போட்டுப் பேசு, அதை விமரிசிக்கலாம். அதற்காக பயணம் செய்யும்போது என்னிடம் வந்து சண்டை போடுவதை எப்படிப் பொறுத்துக்கொள்வது’ என்றுதான். இப்போதெல்லாம் செய்தித் தளங்கள், தங்கள் அஜெண்டாவை முன்னிட்டே செய்தியை முன்னிறுத்துவதால் கொஞ்சம் காத்திருந்து பார்ப்பது நல்லது என்று நினைக்கிறேன்.

    • Ram சொல்கிறார்:

      புதியவன், தமிழன்

      ஒரே நபர் இரண்டு பெயர்களில் எழுதுவது எந்த லாபத்தைக் கருதி என்று
      முதலில் விளக்குவீர்களா ?

    • Sharron சொல்கிறார்:

      Mr Thamilan it is not necessary for that girl to act like this to get Canadian citizenship. It is very easy to get citizenship there now. Moreover that girl is doing PhD. Court case will bring some trouble now. By considering that girl’s future, court released her in bail. Really we have to appreciate the court only.

    • Sharron சொல்கிறார்:

      Please don’t bring the caste and religion. Skilled people will get Citizenship.

    • Sharron சொல்கிறார்:

      In foreign countries when the politicians come to shopping centre, train stations,,,,,,,like the public places, every citizen has the right to question them or to yell at them to show their anger. Immediately the police will remove the person from there and the politician too will smile and go. That’s it. Politicians are human too. They are not Gods.

      • Ram சொல்கிறார்:

        High Time Mr.PUTHIYAVAN should explain his stand and clarify.

      • தமிழன் சொல்கிறார்:

        ஷாரன் – உங்கள் கருத்துக்களைப் படித்தேன். நான் சாதி, மதத்தை இங்கு கொண்டுவரவில்லை. ஆனால் கடிதத்தில் சாதியைக் குறிப்பிட்டுள்ளது அந்தப் பெண்ணின் அப்பா. (இத்தனைக்கும் அவர் ஒரு மருத்துவர்). நடந்த நிகழ்வு திட்டமிட்டுச் செய்யப்பட்டது. நான் ‘சுயநலம்’தான் இதனைச் செய்யவைத்திருக்கும் என்று நம்புகிறேன் (வேறு காரணங்களை இட்டுக்கட்ட இப்போது விரும்பவில்லை ஆனால் காலம் அதனைக் காட்டிக்கொடுக்கும்.)

        காத்திருப்போம். நமக்கு உண்மை வெளியாகும்.

        மேலை நாட்டு அரசியலை நான் ஓரளவு அறிவேன். அங்கு மக்களுக்காக அரசியல் கட்சிகளும் தலைவர்களும். They are accountable to every citizen. தமிழகத்தின் அரசியல் எப்போதும், அதிலும் 60களுக்குப் பிறகு மக்களுக்காக இருந்ததே கிடையாது.

        தமிழிசை என்பதற்காக நான் இதனை எழுதவில்லை. தமிழகத்தில் சின்னஞ் சிறு கட்சித் தலைவர்களைக்கூட பொதுமக்கள் கேள்வி கேட்டுவிட முடியாது
        (எலெக்‌ஷன் நேரம் தவிர, அதுவும் ரிஸ்க்தான் ஹாஹா), அவர்கள் கூட்டத்தில். அது பூவை மூர்த்தி கட்சியானாலும் சரி, கிருஷ்ணசாமி கட்சியானாலும் சரி). தற்போது இந்த நிகழ்வு அரசியலாக்கப்படுகிறது, வாக்கு அறுவடை செய்யலாம் என்ற நம்பிக்கையில்.

  4. Ram சொல்கிறார்:

    புதியவன்

    // விளம்பரத்துக்கும் சுய நலத்துக்காகவும் சொல்லும்போது //

    சர் இதை எப்படி கண்டுபிடித்தீர்களோ ?
    பாஜக உறுப்பினர் அட்டை வைத்திருக்கிறீர்களோ ?
    அந்த பெண் “பாஜக பாசிச ஆட்சி ஒழிக” என்று தானே சொன்னதாக தெரிகிறது.
    பின் தமிழிசை எப்படி பாதிக்கப்பட்டார் ?
    தமிழிசை தான் பாஜக பாசிச ஆட்சியா ?

  5. Selvarajan சொல்கிறார்:

    தனி நபர் நேரிடையான தாக்குதல் இல்லை எனும் பாேது தமிழிசையின் செயல் …? கப்பலேறுகிறது மானம் என்று கூறவது உண்டு …இதில் ” விமானமேறிய மானமாகிவிட்டது ” என்பதுதான் …. …நல்ல விளம்பரமாக்கி விட்டார் தமிழிசை …!

  6. Sridhar சொல்கிறார்:

    One more karuveppillai for the politicians.

  7. tamilmani சொல்கிறார்:

    In an oraganised place anybody can protest, But an aircraft is a private place where one have to
    follow the rules and laws of civil aviation. You cannot just standup and protest against a particular individual or party when neutral passengers are around ..I think there is a propaganda is going on in Tamilnadu against BJP by minority religions and anti BJP outfits to disturb law and order. This drama was planned and executed to create some unrest in the Thoothukudi region. Had the samething happened to some other politicians will they keep quiet?

  8. Karthikeyan Palanisamy சொல்கிறார்:

    விமான பயணிகள் நெறிகாட்டு விதிமுறைகள் படி, பிரிவு 4.9 d மற்றும் 4.10 ன் படி அர்த்தமற்ற சைகைகள் செய்தல்கோஷம் எழுப்புதல் , பயணிகளின் அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் போன்றவை தண்டனைக்குரிய குற்றமாகும்.

  9. Karthikeyan Palanisamy சொல்கிறார்:

    நான் பாஜாக இல்லை சராசரி தமிழன்

    தங்களிடம் இருந்து இப்படி ஒரு பதிவு வரும் என எதிர் பார்க்கவில்லை

    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

    மெய்ப்பொருள் காண்ப தறிவு.

    இந்த குறளை மனதிற் கொண்டு எதிர்காலத்தில் பதிவுகள் இடுவீர்கள் என் எதிர் பார்க்கும் உங்கள் வாசகன்

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      கார்த்திகேயன்,

      அந்த மெய்ப்பொருளை காணும் அறிவு இல்லாமல் தான் இத்தனை நாட்களாக நான் எழுதி வருகிறேன் என்று
      நினைக்கிறீர்களா…?

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  10. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    சில விவரங்களை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்….

    1) இந்த சம்பவம் நடந்தபோது விமானம் பறந்து கொண்டிருக்கவில்லை.
    தூத்துக்குடியை ஏற்கெனவே அடைந்து, நின்று, பயணிகள் இறங்கி வெளியே
    போய்க்கொண்டிருந்தபோது நடந்தது. சில பயணிகள் ஏற்கெனவே வெளியேறி விட்டனர்.

    2) அந்த பெண், தன் சீட்டை விட்டு நகரவே இல்லை. தபாஜக தலைவியைப் தனிப்பட்ட முறையில் திட்டவில்லை… பயமுறுத்தவில்லை. அவர் பெயரைக்கூட உச்சரிக்கவில்லை. அவரைத்தொடவும் இல்லை.. அவரிடம் ஏதும் பேசவும் இல்லை.

    3) தபாஜக அவரைக் கடந்து செல்லும்போது, பொதுவாக, “ஃபாசிச பாஜக அரசு ஒழிக” என்று கூறி இருக்கிறார். இது தபாஜக தலைவியை எப்படி பாதிக்கும்…? தபாஜக தலைவி தான் மத்திய பாஜக அரசா…?

    4) கீழே இறங்கிச் சென்ற தபாஜக, இந்த பெண் வரும் வரையில் அங்கேயே காத்திருந்து, அவர் வந்தவுடன், அவரிடம் நீ எப்படிச் சொல்லலாம் என்று வாக்குவாதம் செய்திருக்கிறார்… பதிலுக்கு அந்தப்பெண் அப்படித்தான் சொல்வேன் என்று கூறி இருக்கிறார்… இங்கே, பிரச்சினையை துவக்கியது
    யார்…? இது குறித்த விவரமான வீடியோக்கள் தொலைக்காட்சிகளிலேயே
    வெளிவந்தன… அவற்றை பார்த்தாலே விவரம் புரியும்.

    5) விமானத்திற்குள் நடக்கும் எந்த சம்பவத்திற்கும், விமான கேப்டன் பைலட்
    தான் பொறுப்பு. தவறாக எதாவது நடந்திருந்தால், அவர் தனது ஃப்ளைட்
    ரிப்போர்ட்டில் கொடுத்திருக்க வேண்டும்…. அவர் எதையும் ரிப்போர்ட்
    செய்யவில்லை…

    6) நடந்த சம்பவம் விதிகளுக்கு முரணானது என்றால், விமான சிப்பந்திகளே
    முதலில் அந்தப் பெண்ணை எச்சரிக்கை செய்திருப்பார்கள்… அத்தகைய விபரீத சூழ்நிலை எதுவும் அங்கே இல்லை. நடந்தது முக்கியத்துவம்
    ஏதும் இல்லாத ஒரு மிகச்சாதாரண சம்பவம்… தூத்துக்குடியை சேர்ந்த
    அந்த பெண்ணுக்கு தபாஜகவை கண்டதும் எல்லாவற்றிற்கும் இவர்கள்
    கட்சி தானே காரணம் என்று மனக்குமுறல்…. just a ventilation –
    அதை உரக்க வெளிப்படுத்தி இருக்கிறார்.

    7) இந்த மாதிரி பல சம்பவங்கள் விமான பயணங்களில் நடக்கின்றன.
    குடித்துவிட்டு, சக பயணிகளிடமும், விமான பணிப்பெண்களிடமும்
    தவறாக நடந்துகொள்ளும் பயணிகள் கூட உண்டு. அத்தகையோரை, கடுமையாக எச்சரிப்பதும் உண்டு. அதற்கும் அடங்காதவர்களை, விமானம் தரையிறங்கியதும், விமான ஊழியர்களே, காவல் துறையிடம் ஒப்படைத்து விடுவதும் உண்டு.

    சில சமயங்களில், விமானம் நின்ற பிறகு, லக்கேஜை எடுக்கும்போது,
    சக பயணிகளுக்கிடையே கூட கடுமையான மோதல்களை நானே பார்த்திருக்கிறேன். விமான ஊழியர்கள் வந்து பிரித்து விடுவார்கள்.
    இதற்கெல்லாம் police complaint கொடுத்தால், வேலைக்கு ஆகாது
    என்று அவர்களுக்கே நடைமுறை அனுபவங்கள் உண்டு.

    8) எனவே, தான் விமான ஊழியர்கள் இதை சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை…. ஆனால், தபாஜகவுக்கு ஈகோ பிரச்சினை. அவர்கள் ரிப்போர்ட் எதுவும் கொடுக்கவில்லை என்றதும், இப்போது பாஜக அந்த தனியார் விமான கம்பெனி மீதே DGCA -வுக்கு புகார் கொடுத்து அழுத்தம் கொடுத்திருக்கிறது…

    9) இந்த சம்பவம், நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது, இந்த
    குற்றச்சாட்டுகள் எதுவும் நிற்காது….

    10) ஆனால், அந்த பெண்ணுக்கு தவறு நிகழ்ந்ததை நீதிமன்ற விடுதலை சரி செய்து விட முடியாது.

    11) அரசியலுக்கு வருபவர்கள் எல்லாரும் –
    பொதுத்தொண்டு செய்யவா வருகிறார்கள்…?
    பதவிக்காக வருபவர்கள் எத்தனை பேர்…?
    புகழுக்காக வருபவர்கள் எத்தனை பேர்…?
    பணத்திற்காக வருபவர்கள் எத்தனை பேர்..?
    சுயலாபத்தை எதிர்பார்த்து அரசியலுக்கு வருபவர்கள் –
    மக்கள் re-act செய்யும்போது பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

    ———————————————
    இதை நண்பர் sharron மேலே தனது பின்னூட்டத்தில் மிகத்தெளிவாக
    எடுத்துக் காட்டி இருக்கிறார் :-

    In foreign countries when the politicians come to shopping centre, train stations,,,,,,,like the public places, every citizen has the right to question them or to yell at them to show their anger. Immediately the police will remove the person from there and the politician too will smile and go. That’s it. Politicians are human too. They are not Gods.
    ——————————————–

    12) மத்திய அரசை எதிர்த்து யாராவது குரல் கொடுத்தால், அவர்கள்
    கைது செய்யப்படுவார்கள்; சிறையில் தள்ளப்படுவார்கள் என்றால் –
    அது ஃபாசிஸம் அல்லாமல் வேறு என்ன…?

    13) நான் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை. ஆனால், மத்திய அரசை பலமுறை விமரிசித்து இந்த வலைத்தளத்தில் நான் எழுதி இருக்கிறேன்…. அதற்காக – என்னை கைது செய்து சிறையில்
    அடைத்தால் வாசக நண்பர்கள் அதனை ஏற்று, வரவேற்பீர்களா…?

    14 இன்று நாம் அனுபவிப்பது, நம் முன்னோர்கள் அரும்பாடு பட்டு பெற்ற சுதந்திரம்… எந்த விலை கொடுத்தாவது நாம் இந்த சுதந்திரத்தை காக்க வேண்டும்… அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் அது கொண்டு செல்லப்பட வேண்டும்… அது நமது உரிமை… அது நமது பொறுப்பு. அதை உணர்ந்து,
    ஆதரித்து எழுதிய நண்பர்களுக்கு என் நன்றியும், வாழ்த்துகளும்.

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • Karthikeyan Palanisamy சொல்கிறார்:

      சரிங்க புகார் கொடுக்கும் போது சாதியின் பெயரை சேர்க்க வேண்டிய அவசியம் என்ன
      அந்த பெண் விமானத்தில் ஏறுவதற்கு முன் ட்விட்டில் பகர்ந்த செய்தியை படித்தார்களா

  11. மெய்ப்பொருள் சொல்கிறார்:

    தமிழிசை ஒரு கட்சி தலைமை ஏற்க தகுதி அற்றவர் என்பது
    தெளிவாகிறது . தமிழிசைக்கு ஆதரவாக பேசும் பா ஜ க
    தலைவர்களும் தங்கள் முகத்தில் கரியை பூசிக் கொள்கிறார்கள் .

    பெண் போலீஸ் தமிழிசையிடம் ‘ அது சின்ன பெண்
    எதோ தெரியாமல் பேசி விட்டது ‘ என்று சொல்கிறார் .
    அது போல் போயிருந்தால் விவகாரம் ஆகியிருக்காது .

  12. அரவிந்தன் சொல்கிறார்:

    திரு. காவிரிமைந்தன்

    மிகுந்த பொறுப்புணர்வுடன் இந்த விஷயத்தை அலசி இருக்கிறீர்கள்.
    நான் உங்கள் கருத்தை அப்படியே ஏற்கிறேன்.
    இந்த பிரச்சினை இப்படி வெடித்ததற்கு காரணமே
    திருமதி தமிழிசையின் EGO தான் என்பதே உண்மை.
    ஒரு பக்குவமான தலைவராக இருந்தால் –
    மேலே நண்பர் ( Sharron ) சொன்னது போல் அந்த பெண் சொன்னதை
    just like that -IGNORE – செய்து விட்டு ஒரு புன்னகையுடன் கடந்து போயிருப்பார்.
    தமிழகத்தில் மட்டுமல்ல இதன் விளைவுகள் டெல்லி வரை தெரிகிறது.
    டெல்லி சேனல்கள் கிழி கிழியென்று கிழிக்கின்றன.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.